Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

24cgqwo.png

 

 

சென்ற மாதம் மதுரைக்கருகே எங்கள் கிராமத்திற்கு சென்றபோது, ஊரின் எல்லையில் "டெய்ஸி டூரிங் டாக்கீஸ்" இருந்த இடத்தை கடந்து செல்லும்போது ஏதோ ஒரு இனிமையையும், சந்தோசத்தையும்  தொலைத்து விட்ட உணர்வு மேலோங்கியது.

அன்று 50 பைசா கொடுத்து 'டூரிங் டாக்கீஸில்' பார்த்த அனுபவமும், சந்தோசமும் இன்று சென்னையிலும், துபாயிலும் ஐமாக்ஸ்(IMAX) திரையரங்குகளில் டால்பி அட்மாஸ்(Dolby Atmos) தொழிற்நுட்பத்திலும் ஏற்படவில்லை.

'டூரிங் டாக்கீஸில்', நமக்கு விருப்பான கதாநாயகர்களின் படத்திற்கு சென்று மண் தரையில் ஆவலுடன் எப்போது படம் திரையில் தோன்றும் என உட்கார்ந்திருக்கையில், படம் போடப்போகிறார்கள்... என்ற முன்னறிப்பாக இந்த பிரபலமான "கம் செம்டம்பர்"(Come September) இசைத்தட்டை திரைக்குப்பின்னால் ஒலிக்கச் செய்வார்கள்.. விசில் சத்தம் காதைப் பிளக்கும்..

"கம் செம்டம்பர்" இசையொலி முடிந்தவுடன் படம் திரையில் தோன்றும்..

1940,1950 களில் பிறந்து வாழ்பவர்களின் பலரின் இதயத்தில் நீங்கா வரம் பெற்ற இசைக்கருவிகளின் துடிப்பு, இந்த இன்னிசை.. 5.gif

காலம், தொழிற்நுட்பங்கள் மாறலாம், ஆனால் முதலில் அனுபவித்த நினைவுகள் என்றும்  நம்மைவிட்டு அழியாது..!

நீங்களும் ரசியுங்களேன்..

 

touring+theater.jpg

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ராசவன்னியன் said:

24cgqwo.png

 

நானும் ரசித்தேன். பழங்கஞ்சியானாலும் அது இன்றும் பஞ்சாமிர்தம்.tw_heart:

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

  • Haha 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.