Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு சீனா பணமளித்தது - நியூ யார்க் டைம்ஸ்

Featured Replies

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 7.6 மில்லியன் டொலர் செலவிட்டது சீனா – அமெரிக்க ஊடகம்

 

Chinese-President-Xi-Jinping-Sri-Lanka-Pசிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் பரப்புரைகளுக்காக சீனா நிதி உதவிகளை வழங்கியது என்று ‘நியூயோர்க் ரைம்ஸ்’ வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவை கடன்பொறியில் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எவ்வாறு தன்வசப்படுத்தியது என்பதை விரிவாக ஆய்வு செய்து விவரித்துள்ளது இந்தக் கட்டுரை.

‘சீனாவுடன் மகிந்த ராஜபக்ச மிகநெருக்கமான உறவுகளை வைத்திருந்தார். 2015 அதிபர் தேர்தல் நெருங்கி வந்த போது,மகிந்த ராஜபக்ச வட்டத்தை நோக்கி பெருமளவு நிதி சீனாவினால் பாய்ச்சப்பட்டது.

குறைந்தபட்சம் 7.6 மில்லியன் டொலர் நிதி, சீனாவின் துறைமுக பொறியியல் கட்டுமான நிறுவனத்தின், ஸ்ரான்டட் சார்ட்டட் வங்கி கணக்கின் ஊடாக மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக்காக வழங்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

தேர்தலுக்கு 10 நாட்கள் முன்னதாக, 3.7 மில்லியன் டொலருக்கு காசோலை வழங்கப்பட்டது.

678,000 டொலர் பெறுமதியான ரிசேர்ட்கள் மற்றும், ஏனைய பரப்புரைப் பொருட்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன.

297,000 டொலருக்கு ஆதரவாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் (பெண்களுக்கான சேலைகள் உள்ளிட்ட) வாங்கப்பட்டன.

மகிந்தவுக்கு ஆதரவு அளித்த முக்கியமான பௌத்த பிக்குவுக்கு, 38,000 டொலர் வழங்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ வசிப்பிடமாக இருந்த அலரி மாளிகைக்கு 1.7 மில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு காசோலைகள் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டன.

இவற்றில் பெரும்பாலான கொடுப்பனவுகள், சீனாவின் துறைமுக பொறியியல் கட்டுமான நிறுவனத்தின் துணை கணக்குகளின் மூலமே வழங்கப்பட்டன.” என்றும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/06/27/news/31622

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்காகவென நாட்டுக்குள் வந்த பணம், தங்கு தடையின்றி மகிந்தவின் பிரச்சார நடவடிக்கைக்கா பாய்ந்தது. இதன்மூலம் தமது நிபந்தனைகள் அனைத்துக்கும் இலங்கை அரசை இணங்க வைத்து, இலங்கையை, இந்தியாவின் பிடிக்குள் இருந்து சீனா பக்கம் நகர்த்துவதில் பீகிங் வென்று இருந்தது என  நியூ யார்க் டைம்ஸ் எழுதி உள்ளது.

இந்த கொடுப்பனவுகள் குறித்த ஆவணங்களையும், காசோலைகளை, அரச விசாரணை செய்து தயாரித்த கோவைகளில் இருந்து நேரடியாக பார்வை இட்டதாக இப்பத்திரிகை சொல்கிறது.

இந்த துறைமுகம் வர்த்தக நோக்கம் கொணடதாக மட்டுமே இருப்பதாக சீன அதிகாரிகள் சொல்லி கொண்டிருந்த போதும், இதன் கேந்திர, புலனாய்வியல் முக்கியத்துவம் குறித்த அம்சங்களும் பேசுவார்த்தைகளில் இருந்தன என இலங்கை அதிகாரிகள் தெரிவித்தார்கள் என இந்த கட்டுரை எழுதிய மரியா அபி-ஹபீப் குறிப்பிடுகிறார்.

ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கிய ஒரு துறைமுக நிர்மாணத்துக்கான மென்கடன், இலங்கை அரசின் கடன் அடைக்கும் விருப்பத்துடன் பல நிபந்தனைக்கு இணங்கியதன் மூலம் சுமார் ஒரு பில்லியன் டொலர் கடனை துறைமுகத்தின் அதிக பங்குகளை வாங்கிய வகையில் சீனா முதலீட்டாளராக மாறியது. ஆயினும் இந்த முதலீட்டுக்கு மேலும், மிக அதிகமாக மேலதிக கடன் வாங்கிய வகையில் இலங்கை சீனாவுக்கு அதிக கடன் கொடுக்க வேண்டி உள்ளது. இந்த கடனானது சர்வதேச கடன்களுக்கான சாதாரண வட்டி வீதத்திலும் பார்க்க மிக மிக அதிகமானது என  நியூ யார்க் டைம்ஸ் சொல்கிறது.

Standard Started வங்கியின் சீன துறைமுக கணக்கில் இருந்து 7.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை ராஜபக்சவின் பிரச்சார செலவுகளுக்காக செலுத்தப் பட்டுள்ளது என அரச விசாரணை அறிக்கை தெரிவிப்பதை வாசித்ததாக இந்தப் பத்திரிகை தெரிவிக்கிறது.

தேர்தலுக்கு 10 நாளுக்கு முன்னர், 3.7 மில்லியன் காசோலையாக கொடுக்கப் பட் டது. 678,000 டொலர்கள் T Shirts தயாரிக்கவும், 297,000 டொலர்கள் அச்சு பதிப்பு வேலைகளுக்கும், பரிசுகளும், சேலைகள் வாங்கவும் கொடுக்கப் பட்டன.

மகிந்தவுக்கு ஆதரவு தந்த ஒரு முன்னணி புத்த பிக்குவுக்கு 37,000 டொலர்களும், அலரி மாளிகை செலவுகளுக்கு 1.7 மில்லியன் மில்லியன் காசோலையாக கொடுக்கப் பட் டது எனவும் சொல்கிறது அப்பத்திரிகை.

http://www.dailymirror.lk/article/Chinese-funds-financed-MR-s-election-campaign-NY-Times-151905.html

இதுல முக்கியமானது என்னவெனில், இருவர் இட்டுள்ள பின்நூட்டம்.

ஒருவர் சொல்கிறார் பணத்துக்காக தாயை கூட வியாபாரம் செய்யும் கூட்டம் என.. அதுக்கு இன்னொருவர் சொல்கிறார். சரிதான் இவளவு பில்லியன் பணத்தினை வைத்து ஆயுதத்துக்கு செலவழித்து, சண்டை பிடித்து அழிந்து போன பிரபாகரன் முழு முட்டாள் போல இருக்கிறதே.....

மிகவும் ஆழமான கருத்து.

பேசாமல், நமது சுதந்திரத்துக்கு, தனி நபர் பிரேரணை கொண்டு வந்து, சிங்கள mp மாரோட money டீல் போடலாம் போல இருக்கிறதே.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
மஹிந்தவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கு சீனா நிதி உதவி
 
 

image_397f710e7e.jpgகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனா நிதி உதவிகளை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளிடமிருந்து கடனைப் பெற்றுக்கொள்வதற்கான நெருக்கடி நிலைமைகளுக்கு இலங்கையை சிக்கவைத்து, சீனா எவ்வாறு அம்பாந்தோட்டை துறைமுகத்தை கைப்பற்றியது என்பதை விவரிக்கும் ‘நிவ்யோர் டைம்ஸ்’ பத்திரிகையின் கட்டுரை ஒன்றிலேயே மேற்படி தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைக்கொண்டிருந்த  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு, கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் செலவுகளுக்காக பாரிய நிதி தொகை ஒன்றை சீனா வழங்கியுள்ளதாக அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சுமார் 7.6 மில்லியன் டொலர் நிதி, சீனாவின் துறைமுக பொறியியல் கட்டுமான நிறுவனத்தின், ஸ்டேன்டர்ட் சார்ட்டட் வங்கி கணக்கின் ஊடாக  பணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு 10 நாட்கள் முன்பு, 3.7 மில்லியன் டொலருக்கு காசோலை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு,  அலரி மாளிகைக்கு 1.7 மில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு காசோலைகள் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலான கொடுப்பனவுகள், சீனாவின் துறைமுக பொறியியல் கட்டுமான நிறுவனத்தின் துணை கணக்குகளின் மூலமே வழங்கப்பட்டன.” என்றும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மஹிந்தவின்-ஜனாதிபதி-தேர்தல்-பிரசாரத்துக்கு-சீனா-நிதி-உதவி/175-218210

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.