Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

Featured Replies

[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007, 22:20 ஈழம்] [காவலூர் கவிதன்]

சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் அளவில் இடம்பெற்றதாக இராமேஸ்வரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் எதுவித முன்னெச்சரிக்கையோ அறிவிப்பையோ விடுக்காது, திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர்.

மீன்பிடித் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பகுதி சிறிலங்கா கடல் எல்லைக்கு உட்பட்டது என்றும், இருப்பினும் எச்சரிக்கை வழங்காது துப்பாக்கிச் சூட்டினை சிறிலங்காப் படையினர் நடத்தியது தவறு என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்தில் இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவர் கன்னியாகுமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவரில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய இருவரின் சடலங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கன்னியாகுமரிப் பகுதியில் பதற்றம் நிலவுவதாக தமிழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.eelampage.com/?cn=31281

Edited by Inathant

உயிரிழந்த மற்றும் தாக்குதலில் காயமடைந்த எமது இந்திய உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

மீண்டும் தமிழகமீனவர்கள் மூவர் சிங்கள பாசிச படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியிலும் நடக்கும் இத்தாக்குதலானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பெரியவிரிசலை ஏற்படுத்தப்போகிறதெனலாம், ராடர் விடயத்தில் விமானப்படையின் தேவையில்லாத அபாண்டமான பழியானது இந்தியாவின் ராணுவசாதனங்களின் நம்பகத்தன்மையை மறுபரிசீலனைக்கு இட்டுச்சென்றுள்ளது, போதாதற்கு சீனராடரை குறிப்பிட்டு காட்டியிருப்பது போன்றவைகளால் குழம்பியிருக்கும் இந்தியரசு; போர் தளபாடங்களை பாக்குநீரிணைக்கு நகர்த்தியிருப்பது, அளவுக்கு அதிகமான ராடர்களை பொருத்தியிருப்பது ஒன்றும் விடுதலைபுலிகளை கண்காணிக்கவல்ல, அமெரிக்கா இலங்கையில் ஒப்பந்தம் செய்தவுடனேயே ராடர் நிறுவுவதற்கு சந்தற்பம் பார்த்திருந்த இந்தியவரசுக்கு இலங்கையின் புலம்பல் வாய்ப்பளித்ததெனலாம். இதன் பின்ணணியில் தான் சாதாரண சயிக்கிள் குண்டு கடத்துபவர்களையெல்லாம் கைது செய்து இலங்கையரசுக்கு படம் காட்டி இலங்கையரசின் எதிர்ப்பின்றி தென்பகுதியை வடிவாகப் பலப்படுத்திவிட்டது. இனிமேல் மகிந்தா குளிப்பதையும் கூட இந்தியாவால் பார்க்கமுடியும். இதுக்குமடங்காவிட்டால் தட்டியிருத்தக்கூடும் (இலங்கையரசை)

இலங்கை கடற்படையினால் சுட்டுக்கொல்லப்பட்ட 4 தமிழக மீனவர்களுக்கும் எனது ஆழ்ந்த

அனுதாபங்கள்.

பார்த்தீர்களா? எங்கள் மக்களுக்கு இந்தியா உதவவில்லை என்று அங்கலாய்த்தோமே:

சொந்த மக்களையே இலங்கைக் கடற்படைக்கு நூற்நுக்கணக்கில் காவு கொடுத்து விட்டு

இலங்கையுடன் ஆரீயச் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

கடந்த வருடம் யப்பானிய மீனவர் ஒருவரை ரசியக் கடற்படை சுட்டுக் கொன்றதால் இரு

நாட்டினதுமே ராசதந்திர உறவுகள் சிக்கலுக்கு உள்ளானது. பின்பு மன்னிப்பு நட்டஈடு

என்று ஒருமாதிரியாகத் தீர்ந்தது. இதை இந்தியா பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக்

கூடாது.

பின் குறிப்பு: எனக்கு தமிழ்எழுத்துக்களை எப்படி தரவிறக்கம் செய்வதை அறிவித்ததுக்கு

உறவுகளுக்கு எனது நன்றிகள்

எனக்கு

சிங்களக் கடற்படை ஒடுக்கப்படும் வரை இந் நிகழ்வு தொடரத்தான் போகிறது.

இவ்வாறான நிகழ்வுகளை ஏன் இலங்கையரசு செய்கின்றதென்பதை அனைவரும்

உணர்வார்கள். இந்நிலையினைக் கட்டுப்படுத்தி அறவேயில்லாது ஒழிக்க வேண்டு

மெனின் தமிழ்நாட்டு மக்களும் அரசியல் வாதிகளும் தொய்வுகளற்ற உறுதியான

நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசியல் தேவைகளுக்காக இம் மரணங்கள்

பாவிக்கப்படாது பாதிக்கப்பட்டவர்களுக்காக உண்மையானதொரு அரசியற் போராட்ட

வழிகளை முன்னெடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்களைச் சுடவேண்டிய அவசியம் இலங்கைக் கடற்படையினருக்கில்லை

என யாராவது இந்திய அரசியல்வாதிகள் யாராவது சொல்லிவிடப் போகிறார்கள்.

இறப்பவர்கள் தமிழர்களாக இருக்கும் வரைக்கும் அல்லது அரசியல் இலாப தேவை ஏற்படாத வரைக்கும் மத்திய அரசு இதில் தலையிடப் போவதில்லை என்பதை உறுதியாக நம்பலாம். அதுவரை நாம் இறப்பவர்களுக்காக அனுதாபப்பட மட்டுமே முடியும். தமிழ் எங்கள் உயிர் என்று தமிழ்நாட்டில் வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டிருப்பவர்களும் இதையேதான் செய்ய முடியும்.

சிங்களக் கடற்படை ஒடுக்கப்படும் வரை இந் நிகழ்வு தொடரத்தான் போகிறது.

இவ்வாறான நிகழ்வுகளை ஏன் இலங்கையரசு செய்கின்றதென்பதை அனைவரும்

உணர்வார்கள். இந்நிலையினைக் கட்டுப்படுத்தி அறவேயில்லாது ஒழிக்க வேண்டு

மெனின் தமிழ்நாட்டு மக்களும் அரசியல் வாதிகளும் தொய்வுகளற்ற உறுதியான

நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசியல் தேவைகளுக்காக இம் மரணங்கள்

பாவிக்கப்படாது பாதிக்கப்பட்டவர்களுக்காக உண்மையானதொரு அரசியற் போராட்ட

வழிகளை முன்னெடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்களைச் சுடவேண்டிய அவசியம் இலங்கைக் கடற்படையினருக்கில்லை

என யாராவது இந்திய அரசியல்வாதிகள் யாராவது சொல்லிவிடப் போகிறார்கள்.

நேடடியாவே சொல்லிவிடவும் அந்த அரசியல் வாதியும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி என்பதை

நேரடியாவே சொல்லிவிடவும் அந்த அரசியல் வாதியும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி என்பதை

சரியாகச் சொன்னீர்கள். A.K.பொய்யன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மீனவர்களைச் சுடவேண்டிய அவசியம் இலங்கைக் கடற்படையினருக்குக் கிடையாது என்று யாராவது மலையாள அரசியல் ஆலோசகரோ, துக்ளக் சோவோ, சுப்பிரமணிய சுவாமியோ அல்லது இந்து ராமோ எழுதத்தான் போகிறார்கள் அதை நாம் பார்க்கத்தான் போகிறோம். மொத்தத்தில் இங்கையின் வடபகுயிலிருந்து முற்றாக அடித்துத் துரத்தப்படும்வரை தமிழ்நாட்டு மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கப் போவதில்லை. இதையிட்டு இந்தியாவிலோ இலங்கையிலோ தமிழனைத்தவிர இந்தப் பார்ப்பனர்களோ அல்லது வேறு யாருமோ கவலைப்படப் போவதுமில்லை.

தமிழ் மீனவர்களைச் சுடவேண்டிய அவசியம் இலங்கைக் கடற்படையினருக்குக் கிடையாது என்று யாராவது மலையாள அரசியல் ஆலோசகரோ, துக்ளக் சோவோ, சுப்பிரமணிய சுவாமியோ அல்லது இந்து ராமோ எழுதத்தான் போகிறார்கள் அதை நாம் பார்க்கத்தான் போகிறோம். மொத்தத்தில் இங்கையின் வடபகுயிலிருந்து இலங்கைக்கடற்படையினர் முற்றாக அடித்துத் துரத்தப்படும்வரை தமிழ்நாட்டு மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கப் போவதில்லை. இதையிட்டு இந்தியாவிலோ இலங்கையிலோ தமிழனைத்தவிர இந்தப் பார்ப்பனர்களோ அல்லது வேறு யாருமோ கவலைப்படப் போவதுமில்லை.

இறந்த அந்த உறவுகளின் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இது தெரியாமல் செய்யப்படும் கொலைகள் அல்ல தெரிந்தே சிரிலங்கா அரசின் அனுசரணையுடனே செய்யப்படுகிள்றது. இவர்களின் தந்திரம் எப்படியாவது இந்திய கடலோர காவல்படையை தமது தேவைகளுக்கு உபயோகித்துக் கொள்ளும் வழிமுறையே.கூட்டு ரோந்துக்கு வழிவகுக்கும் தந்திரம். தமிழன் தானே இறந்தது இரண்டு மூன்று நாளைக்கு தமிழக அரசியல் வாதிகள் தொண்டைகிழயக் கத்துவார்கள் பின் எலலாம் கப் சிப் மற்றும ஒரு அழிவு நடக்கும் வரை.

ஈழத்திலிருந்து

ஜானா

விடுங்கப்பா உலகடமிழர் டலைவர் டாக்குத்தர் கலைஞர் அறிக்கை விடுவார் மீனவர் கை பூபறிக்குமா என இப்படி ஏற்றிவிடு ஏற்றிவிட்டு அவர்கலையும் சமாதானபடுத்தி பலிகொடுத்து அதில் அரசியல் லாபம் தேடும் நடவடிக்கையே நடக்குது.இறந்த உறவுகள் ப்கோபாலபுரம் வீட்டில் வசித்தால் உண்மை தெரியும் ஆனால் ஏழை தமிழர்கள்தானே அவர்கள் இப்படி அறிக்கையாலும் குள்ள நரித்தனத்தாலும் ஏமாற்றி பிழைக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படை மீண்டும் வெறியாட்டம்: 4 மீனவர்கள் பரிதாப சாவுமீனவர்கள் கொந்தளிப்பு

Friday, 30 March 2007

ராமேஸ்வரம் மீனவர்களைக் கொன்று குவித்து ஓய்ந்துள்ள இலங்கை கடற்படை, தற்போது கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை குறி வைத்துள்ளது. இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேரும், கடற்படைக்குப் பயந்து கடலில் குதித்து இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ராமேஸ்வரம் பக்கம் தனது வாலை சுருட்டிக் கொண்ட இலங்கை கடற்படை தற்போது நாகர்கோவில் பக்கம் அதை நீட்ட ஆரம்பித்துள்ளது.

கடந்த 16ம் தேதி இரவிபுத்தன் துறையைச் சேர்ந்த மீனவர்களை நடுக் கடலில் மறித்து தாக்கி அனுப்பியது இலங்கை கடற்படை. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மீனவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நான்கு மீனவர்களின் உயிரை கடற்படை பறித்துள்ள அநியாய சம்பவம் நடந்துள்ளது.

குமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மார்ச் 23ம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். ரெக்ஸன் என்று பெயரிடப்பட்ட அந்தப் படகு சதீஷ் (26) என்பவருக்குச் சொந்தமானது. படகில், 9 பேர் இருந்தனர்.

புத்தளம் அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படை வந்தது. கடற்படையைப் பார்த்ததும் பயந்து போன சதீஷும் அவரது தம்பி ஜஸ்டினும் (24) கடலில் குதித்து விட்டனர்.

லைனஸ் (52) மற்றும் மரிய ஜான் (50) ஆகிய இருவரும் கடலில் குதிக்க முடியாமல் படகிலேயே இருந்து விட்டனர். அவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் வெறி கொண்டு கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் இருவரும் படகிலேய பரிதாபமாக இறந்து போனார்கள். படகில் இருந்த ஜேசுதாஸ் படுகாயமடைந்தார்.

கடலில் மூழ்கிய ஜஸ்டின், சதீஷ் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவர்களும் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரையும் இலங்கை வீரர்கள் தாறுமாறாக அடித்ததாகவும் கூறப்படுகிறது.

பலியான லைனஸ், மரிய ஜானின் உடல்கள் மற்றும் படுகாயமைடந்த ஜேசுதாஸ் ஆகியோரோடு மற்ற மீனவர்கள் கரைக்கு வந்து சேர்ந்தனர்.

இலங்கை கடற்படையின் வெறித் தாக்குதலுக்கு 4 மீனவர்கள் பலியான சம்பவம் குமரி மாவட்ட மீனவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீனவர் கிராமங்கள் அனைத்துமே பெரும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன.

கருணாநிதி விலக வேண்டும்

இந்த சம்பவம் குறித்து தேசிய மீனவர் சம்மேளனத் தலைவர் ஆண்டன் கோமஸ் கூறுகையில், மீனவர்களைக் காக்க தவறி விட்டார் தமிழக முதல்வர் கருணாநிதி. அவரால் எங்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் உடனடியாக பதவியிலிருந்து விலகி விட வேண்டும். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி இலங்கை கடற்படையிடம் சிக்கி தமிழக மீனவர்கள் உயிரை விடுவார்கள் என்று ஆவேசமாக கூறினார்.

மத்திய அரசும், மாநில அரசும் மீனவர்களின் உயிரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை, அவர்கள் குறித்து அக்கறையோ, கவலையோ படவில்லை. வரிசையாக மீனவர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர், ஆனால் தமிழக அரசும், மத்திய அரசும் வாய் பொத்தி மெளனம் காத்துக் கொண்டிருப்பது மிகவும் மோசமானது என்றும் கோமஸ் கூறினார்.

ஈழத் தமிழர்களுக்காக இங்குள்ள அரசியல்வாதிகள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், கொந்தளிக்கிறார்கள், கோபப்படுகிறார்கள், போராட்டமும் நடத்துகிறார்கள்.

ஆனால் உள்ளூர்த் தமிழர்களின் உயிரை இலங்கை கடற்படை தனது இஷ்டத்துக்குப் பறித்துச் செல்வது குறித்து ஒரு அரசியல்வாதியும் உருப்படியாக நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது. மீனவர் சமுதாயம் வெடித்துப் பொங்கிக் கிளம்புவதற்குள் தமிழக அரசும், மத்திய அரசும் விரைவான நடவடிக்கையில் இறங்குவது நல்லது.

- சூரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த அந்த உறவுகளின் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இது தெரியாமல் செய்யப்படும் கொலைகள் அல்ல தெரிந்தே சிரிலங்கா அரசின் அனுசரணையுடனே செய்யப்படுகிள்றது. இவர்களின் தந்திரம் எப்படியாவது இந்திய கடலோர காவல்படையை தமது தேவைகளுக்கு உபயோகித்துக் கொள்ளும் வழிமுறையே.கூட்டு ரோந்துக்கு வழிவகுக்கும் தந்திரம். தமிழன் தானே இறந்தது இரண்டு மூன்று நாளைக்கு தமிழக அரசியல் வாதிகள் தொண்டைகிழயக் கத்துவார்கள் பின் எலலாம் கப் சிப் மற்றும ஒரு அழிவு நடக்கும் வரை.

ஈழத்திலிருந்து

ஜானா

முன்பே நான் சொன்னது போல் இந்தியாவுக்கு தமிழக மக்கள் ஈழத்தமிழர் என்ற பாகுபாடு கிடையாது. தமிழர் செத்தால் மத்திய அரசில் இருக்கும் மலையாளிகள் உள்ளிட்ட தமிழர் அல்லாத மந்திரிகளுக்கு ஏன் சில தமிழக மந்திரிகளுக்கும் மகிழ்ச்சி தான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மீனவர்களைப் பலிக்கடாக்களாக்கி வேறுவழியில்லாத புறச்சூழ்நிலையொன்றை உருவாக்கி எப்படியோ இந்திய இலங்கைக் கூட்டுக் கடல் ரோந்துக்கு வழிவகை பண்ணுறதுக்காக இந்தியப் புலனாய்வு அமைப்புகளின் அனுசரணையோடதான் இந்தப் படுகொலைகள் நடைபெறுகிறதோ தெரியாது. எப்படியோ சில பார்ப்பனர்களுடைய புலி எதிர்ப்புப் பிரச்சாரமும் இதுக்குத்

தூண்டுகோலாயிருக்கக்கூடும். பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில இலங்கை இந்திய அரசாங்கங்கள் வேறு வழியில்லாததால இந்திய மீனவர்களைக் காப்பாற்ற இந்த முடிவுக்கு வரவேண்டியிருக்குது என்று அந்தோனி அறிக்கைவிடப்போறாரோ தெரியாது. தமிழனுக்கு என்றொரு நாடு உருவாகுறத்தத் தடுக்கவேண்டுமெண்டிற கொள்கையோட பல தரப்புல இருந்தும் தமிழ் விரோதிகள் இந்தியாவுல செயல்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த படுகொலைகளுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுப்பிக்கக் கூடிய முறையில் பலதிட்டங்கள் இருக்கின்றன அதில் ஒன்றாக மக்கள் சக்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சினிமாத்துறை இதில் காலை வைக்கலாம். ஆனால் அந்த மேல்த்தட்டுக்களுக்கு இந்த அடித்தட்டு மக்களின் உழைப்பையே உரமாகக் கொண்ட அவர்களின் செல்வாக்குக்கு ஒரு கடைக்கண்பார்வை நன்றி செய்ய கூட மனம்வராது, எல்லாமே அரசியல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.