Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா இராணுவம் இலங்கைக்குவராது- ரணில்

Featured Replies

சீனா இராணுவம் இலங்கைக்குவராது- ரணில்

 

எம்.எம்.மின்ஹாஜ்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையினால் சீனாவின் இராணுவம் ஆக்கிரமிக்கும் என பலர் கூறுகின்றனர். என்றாலும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வணிக நோக்குடனே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதனால் சீன இராணுவம் இலங்கைக்கு வராது . அதன் ஆதிக்கமும் இருக்காது . எமது பாதுகாப்பு படையே அங்கு முகாமிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்

சீரழிந்த நாட்டை நாம் பொறுப்பேற்று ஜனநாயகம்  மனித உரிமை நிலை நாட்டினோம். இதன்ஊடாக இலங்கைக்கு இருந்த பிரதான சவாலை வெற்றிக்கொண்டோம். அதனை அடுத்து பொருளாதார ரீதியான சவால்களை வெற்றிக்கொள்ள முயற்சித்து வருகின்றோம். 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும். இந்து சமுத்திரத்தின் மையமாக இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருளாதார துறையில் முன்னேற்றம் காண வேண்டும். இதன்ஊடாக வெளிநாட்டு முதலீடுகளை நாம் அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க வேண்டும். ஆகவே இதற்கு தனியார் துறையின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். 

அத்துடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தை தற்போது சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளோம். நீர் தடாகமாக இருந்த துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையின் ஊடாக வளர்ச்சி அடைந்த துறைமுகமாக அதனை மாற்றி அமைக்கவுள்ளோம். அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி தற்போது கப்பல் வர ஆரம்பித்துள்ளன. அடுத்த வருடமாகும் போது இயக்கத்துடன் கூடிய துறைமுகமாக அது மாற்றம் காணும். 

என்றாலும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையினால் சீனாவின் இராணுவத்தினர் இலங்கை வந்தால் என்ன நடக்கும் என என்னிடம் ஒரு சிலர் தனிப்பட்ட ரீதியிலும் கேட்டனர்.அதற்கு அப்படி நடக்காது என்று கூறினேன். 

ranil.jpg

 

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வணிக நோக்குடனே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதனால் சீனா இராணுவம் இலங்கைக்கு வராது . தெற்கில் கடற்படை தளம் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படும். ஆகவே எமது பாதுகாப்பு படையினரே துறைமுகத்தில் முகாமிடுவர். சீனாவின் இராணுவத்தினால் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆகவே இந்த விடயத்தில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார்.

http://www.virakesari.lk/article/35748

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கட்டுமான பணிக்கு சீன ராணுவம் பல்வேறுபட்ட தொழிலாளர்களாக வந்துள்ள படியால், சீன ராணுவம் வர வேண்டிய அவசியம் இல்லை. ஆதலால் சீன ராணுவம் வராது, ஆனால் சீன  தொழிலாளர்கள் சீன ராணுவமா படி மாற்றம் செய்யப்பட முடியும்.

எனவே, சீன ராணுவம் எப்போது வெளியேறும் என்றே கேள்வி தொடுக்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜே ஆர் வளர்த்த செல்லக்குட்டி தான் ரணில். ஹிந்தியாவுக்கு சிங்களவனால தான் ஆப்பு. ஹிந்தியாவுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்.

சீன இராணுவம்.. ஏலவே பல ரூபங்களில் சொறீலங்காவுக்குள் வந்துவிட்டது. கச்சதீவில் கூட நிலை கொண்டிருந்தது.. மறந்திட்டுது போல. ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.