Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகலா உணர்ச்சி வசப்பட்டார், அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறவில்லை…

Featured Replies

விஜயகலா உணர்ச்சி வசப்பட்டார், அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறவில்லை…

 
 

வை எல் எஸ் ஹமீட்:-

vijayakala-new.png?resize=800%2C530

 

சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு அரசியல் ரீதியில் கண்டனத்திற்குரியதா? என்பது ஒரு விடயம். அரசியலமைப்புச் சட்டத்தை அது மீறியிருக்கின்றதா? என்பது இன்னுமொரு விடயம். இன்று பலரும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்; என்று கோசமெழுப்புகின்றனர். இது தொடர்பாக பார்ப்போம்.

குறித்த பேச்சுத் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தப்படுகின்ற பிரதான சரத்துக்கள் 157A,161(d) (6 வது அரசியலமைப்புத் திருத்தம்) என்பனவாகும்.

இவை பிரதானமாக கூறுபவை என்ன? என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

157A(1) இன் பிரகாரம், இலங்கையிலிருந்தோ, வெளிநாட்டில் இருந்தோ நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரும் இலங்கை நிலப்பிராந்தியத்திற்குள் ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கவோ, நிதிவழங்கவோ, பிரச்சாரம் செய்யவோ, அல்லது அச்செயலை முன்கொண்டு செல்லவோ அல்லது அதற்கு தைரியம் அல்லது உற்சாகம் கொடுக்கவோ கூடாது.

இங்கு கவனிக்க வேண்டியது, இங்கு குறிப்பிடப்படுகின்ற செயல்களை ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்காக செய்யப்படுவதுதான் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதன் உப பிரிவு (2) ஒரு கட்சியோ அல்லது ஏதாவதொரு அமைப்போ ஒரு தனி நாட்டை உருவாக்குவதை தனது இலக்காகக் கொள்வதைத் தடைசெய்கிறது.

இதன் உப பிரிவு (3) யாராவது ஒருவர் மேற்படி முதலாம் பந்தியில் குறிப்பிடப்பட்டதற்கு முரணாக செயற்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றில் நிருபிக்கப்பட்டால் அவருக்குரிய தண்டனைகள் பற்றி குறிப்பிடுகின்றது.

a) ஏழு வருடத்திற்கு மேற்படாத காலத்திற்கு குடியுரிமை முடக்குதல்

b) அவருடைய குடும்ப வாழ்வுக்கு அவசியமானவை தவிர்த்து அவருடைய ஏனைய அசையும் அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்.

c) ஏழுவருடத்திற்கு மேற்படாத காலத்திற்கு குடியுரிமைக்கு உரித்தில்லாமலாக்குதல்

d) அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவோ, அரச உத்தியோகத்தவராகவோ ( சரத்து 165 இல் குறிப்பிடப்பட்ட) இருந்தால் அந்தப் பதவியை இழத்தல்

மேற்குறிப்பிடப்பட்டவர்கள் Seventh Shedule இல் குறிப்பிடப்பட்ட அதாவது அரசியலமைப்பைப் பேணிப்பாதுகாப்பேன் என்றும் ஒரு ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட ( சரத்து 157A(1) இல்) செயல்களைச் செய்யமாட்டேன் என்றும் சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும்; என்று 157A(7)(a) கூறுகின்றது.

இங்கு பிரதானமானது 157A(1) இல் குறிப்பிடப்பட்ட ஏதாவது செயல்கள் செய்யப்பட்டுள்ளதா?, அச்செயல்கள் ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்காகவா? என்பனவாகும். வேறு நோக்கங்களுக்காக செய்யப்படுகின்ற எந்தவொரு செயலையும் இந்த சரத்து தடைசெய்யவில்லை.

விஜயகலா மகேஸ்வரன் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்று பேசினார். புலிகள் இன்று இல்லை. அதேநேரம் அது தடைசெய்யப்பட்ட இயக்கமாகவும் தொடர்ந்தும் இருக்கின்றது. அதன் இலக்காக தனிநாடு இருந்தது. அது அரச உத்தியோகபூர்வ நிலைப்பாட்டின்படி ஒரு பயங்கரவாத இயக்கமாகவும் இருந்தது.

பிரதிஅமைச்சர் ‘ புலிகள் மீண்டும் வரவேண்டும்’ என்று கூறியதன்மூலம் புலிகள் தற்போது இல்லை என்கின்ற அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார். இந்த சரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரேயொரு கேள்வி அவர் புலிகளை மீண்டும் வரவேண்டும் என்று சொன்னது தனிநாட்டை உருவாக்குவதற்காகவா அல்லது வேறு ஏதாவது ஒரு நோக்கத்திற்காகவா?

அவர் ‘ தனிநாட்டை உருவாக்குவதற்காகத்தான் புலிகள் மீண்டும் வரவேண்டும்’ என்று சொல்லியிருந்தால் அடுத்து எழுகின்ற கேள்விகள் அவரது அந்தக்கூற்று “ குறித்த சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, support, espouse, promote, encourage, advocate என்ற ஏதாவது ஒரு சொல்லுக்குள் வருகின்றதா? என்று பார்க்கப்படவேண்டும்.

அவருடைய பேச்சு ‘தனிநாட்டை உருவாக்குவதற்காக அல்ல’ என்றால் அதற்குமேல் செல்வதற்கு எதுவுமில்லை. சிறு குழந்தைக்கும் தெரியும், தனிநாட்டை உருவாக்கும் நோக்கில் அவர் அவ்வாறு பேசவில்லை என்பது.

அவருடைய பேச்சு வடக்கில் இன்று சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கின்ற நிலை, குறிப்பாக பெண்களுக்கு நிலவுகின்ற பாதுகாப்பற்ற தன்மை போன்றவற்றினால் ஏற்பட்ட கவலையில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வார்த்தைகள்.

அரசியல்ரீதியாக அவருடைய பேச்சு ஏற்புடையதா? என்பது வேறாக ஆராயப்படவேண்டிய கேள்வியாகும். ஆனால் அரசியலமைப்பை மீறினாரா? தனிநாடு பெறுவது ஐ தே கட்சியின் அங்கத்தவரான அவரது நோக்கமா? இல்லையென்றால் அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறவில்லை.

http://globaltamilnews.net/2018/86647/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள கட்சிகளின் அரசியலமைப்பு சட்ட மொழி பெயர்ப்பு  தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒரே  மாதிரி இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.

  • தொடங்கியவர்

"இலங்கை அமைச்சரின் புலிகளுக்கு ஆதரவான கருத்து அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறவில்லை"

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், புலிகள் அமைப்பு தொடர்பாகத் தெரிவித்த கருத்து, அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதொரு விடயமல்ல என்று, இலங்கையின் அரசியல் ஆய்வாளரும், சட்டமாணியுமான வை.எல்.எஸ். ஹமீட் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

இலங்கைபடத்தின் காப்புரிமைMARK WILSON

"தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீளவும் உருவாக வேண்டும்" என்று, சர்ச்சைக்குரிய கருத்தொன்றினைத் தெரிவித்த விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்கிற கோஷங்கள் எழுந்துள்ள நிலையிலேயே, வை.எல்.எஸ். ஹமீட் இந்த வாதத்தினை முன்வைத்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர் பதவியை வகித்த விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது; "விடுதலைப் புலிகள் அமைப்பு மீளவும் உருவாக வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் 06 வயதுடைய பாடசாலைச் சிறுமியொருவர் அண்மையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையினை சுட்டிக்காட்டிப் பேசிய அமைச்சர் விஜயகலா; "நாங்கள் நிம்மதியாக வீதியில் நடமாட வேண்டுமாக இருந்தால், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் சென்று - மீண்டும் வீடு திரும்ப வேண்டுமாக இருந்தால், வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் கைகள் ஓங்க வேண்டும்" என்றும் தனது உரையில் கூறியிருந்தார்.

இலங்கைபடத்தின் காப்புரிமைTWITTER

இதனையடுத்து, விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் பாரிய கண்டனங்கள் எழுந்தன. இதன் காரணமாக, விஜயகலாவின் அமைச்சர் பதவியைப் பறிக்குமாறு அவரின் கட்சித் தலைவரும் பிரதம மந்திரியுமான ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையினை அடுத்து, தான் வகித்த ராஜாங்க அமைச்சர் பதவியினை விஜயகலா ராஜிநாமா செய்தார்.

இருந்தபோதும், இலங்கை அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு, மீண்டும் உருவாக வேண்டும் என்று கூறிய, விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்று, கணிசமான அரசியல்வாதிகள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, விஜயகலாவின் சர்ச்சைக்குரிய அந்தப் பேச்சு - அரசியலமைப்பு சட்டத்தை மீறவில்லை என்றும், அதனால் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையினை பறிக்க முடியாது என்றும் வை.எல்.எஸ். ஹமீட் கூறியுள்ளார்.

 

 

இது தொடர்பாக அவர் பிபிசி. தமிழுக்கு அரசியலமைப்பை ஆதாரங்காட்டி விளக்கமளிக்கையில்;

"விஜயகலாவின் அந்த உரைக்காக, அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட வேண்டுமானால், இலங்கை அரசியலமைப்பின் 157(அ) மற்றும் 161(ஈ) ஆகிய சரத்துக்களுடன் அவரின் உரையினை தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

157(அ) சரத்தின் 01ஆவது பிரிவு; 'இலங்கையிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரும் இலங்கை நிலப்பிராந்தியத்துக்குள் ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கவோ, நிதிவழங்கவோ, பிரசாரம் செய்யவோ, அல்லது அச்செயலை முன்கொண்டு செல்லவோ அல்லது அதற்கு தைரியம் அல்லது உற்சாகம் கொடுக்கவோ கூடாது' என்று கூறுகிறது.

அரசியலமைப்பின் மேற்படி சரத்தினை ஒருவர் மீறுவாறாராயின் அவருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனைகள் என்னவென்று, 157(அ) சரத்தின் 03ஆவது பிரிவு கூறுகிறது. அவை;

அ) ஏழு வருடத்துக்கு மேற்படாத காலத்துக்கு குடியுரிமை முடக்குதல்.

ஆ) அவருடைய குடும்ப வாழ்வுக்கு அவசியமானவை தவிர்த்து, அவருடைய ஏனைய அசையும் அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்.

இ) ஏழு வருடத்துக்கு மேற்படாத காலத்துக்கு குடியுரிமைக்கு உரித்தில்லாமல் ஆக்குதல்.

ஈ) அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அரச உத்தியோகத்தவராகவோ (அரசியலமைப்பின்165ஆம் சரத்தில் குறிப்பிட்டபடி) இருந்தால் அந்தப் பதவியை இழத்தல் வேண்டும்".

"இதன்படி, விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய உரைக்காக, அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டுமானால், அந்த உரையானது அரசியலமைப்பின் 157(அ) சரத்தினை மீறியிருக்க வேண்டும். அதாவது, இலங்கையினுள் ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கு விஜயகலாவின் உரை ஆதரவளித்திருக்க வேண்டும்.

ஆனால், 'விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்' என்று விஜயகலா கூறியமையானது, தனி நாடொன்றினை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்துக்காக அல்ல. சீரழிந்து போய் கிடக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கினை சீர்படுத்த வேண்டும் என்பதற்காகவே, 'விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும்' என, அவர் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் பார்த்தால், விஜயகலா மகேஸ்வரனின் உரை, அரசியலமைப்பை மீறவில்லை" என்று, வை.எல்.எஸ். ஹமீட் விபரித்தார்.

இலங்கைபடத்தின் காப்புரிமைAFP

அவர் மேலும் கூறுகையில்; "வேண்டுமானால், குற்றவியல் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை விசாரிக்க முடியும். ஆனால், விஜகலாவின் சர்ச்சைக்குரிய உரையானது, ஒரு குற்றச் செயலா என்கிற கேள்வியும் உள்ளது. ஒரு குற்றம் நடந்துள்ளதாக உறுதிப்படுத்த வேண்டுமாயின் - அங்கு குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதையும், அந்தச் செயல் - குற்ற மனதுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.

'ஹிட்லரைப்போல் மாறியாவது இந்த நாட்டைக் கட்டியெழுப்புங்கள்' என்று, பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளரும், மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷவிடம், பௌத்த பிக்கு ஒருவர், அண்மையில் வேண்டுகோளொன்றினை முன்வைத்திருந்தமையை இந்த இடத்தில் நினைவுபடுத்துல் பொருத்தமானதாகும்.

"ஹிட்லர் என்பவர் ஒரு சர்வதிகாரி, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த ஒருவராவார். அவ்வாறான ஹிட்லரைப் போல் மாறுமாறு பௌத்த பிக்கு கூறியமைக்கு அர்த்தம்; ஹிட்லரைப்போல் குற்றங்கள் செய்யுங்கள் என நாம் எடுத்துக் கொள்ள முடியுமா?" என்றும் ஹமீட் கேள்வியெழுப்பினார்.

மேலும், விஜயகலா மகேஸ்வரன் உணர்ச்சிவசப்பட்டு பேசிய ஒரு விடயத்தை, பலரும் சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பயன்படுத்தி வருவதாகவும், அரசியல் ஆய்வாளர் வை.எல்.எஸ். ஹமீட் சுட்டிக் காட்டினார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-44749488

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.