Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்

_15877_1530939537_vbg.jpg

அலை ஆடும் கடலோரம் நீர் சுமந்த தென்றலும் ஊர் நனைத்து வனம் புகும் காரும் இங்கே எங்கள் தலை துவட்டி செல்லும். காடும் மெல்ல பசுமை தந்திடும் பல பல அதிசயங்கள் நிறைந்த பூமி சம்பூரணம்.

இயற்கை துறைமுக மின்னொளியில் அலை எழுந்து சம்பூர் கரையோரத்தை மெல்ல முத்தமிடும் அழகை காணின் கொள்ளை போகாத உளம் உண்டோ!கடல் கரைபுரண்டு ஆர்பரித்தாலும் அங்காங்கே எழுந்திருக்கும் மலையன்னையால் வேகமும் தணிந்து அலையாத்தி காடுகளால்  அலையும் குளிர்ந்து பாதுகாப்பரண் கொண்ட மகத்தான ஊர் சம்பூர்.

மூதூர் கிழக்கே சகல வளமுங் குன்றாத கிராமம் சம்பூர். இங்கு கடலோடும் மக்களும், விவசாயம் செய்யும் மானிடர்களும் கால்நடை வளர்ப்போரும் என தனித்தமிழ் மக்கள் வாழும் இக்கிராமம் பல தமிழ்க்கிராம மக்களின் பாதுகாப்பரணாகவும் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு அறுபதிற்கும் மேற்பட்ட குளங்களோடு தொடர் காடுகளையும் கொண்டதாக அமைந்தமையினால், மக்கள் அரச பயங்கரவாத செயல்பாடுகளிலிருந்து தம்மை பாதுகாத்து கொண்டனர்.

1990 காலப்பகுதியில் தமிழர் வாழும் பகுதிகளில் சிறப்பாக கிழப்பகுதியில் அரச பயங்கரவாதமும் முஸ்லிம் தீவிரவாதமும் அப்பாவி தமிழர்களை மிக மிக மோசமாக படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என நீண்டு கொண்டே சென்றது தமிழினப்படுகொலைகள். இதற்கான காரணங்களையோ, நீதியையோ எந்த அரசும் சரி, மனிதவுரிமை அமைப்புக்களும் சரி வழங்க முன்வரவில்லை என்பது தமிழருக்கே கிடைத்த சாபம் என்றால் மாற்றுக்கருத்தில்லை.

அரச இயந்திர பயங்கரவாதமும் முஸ்லிம் தீவிரவாதமும் இணைந்து நடத்திய படுகொலையில் மிக முக்கியமான படுகொலை 07.07.1990 - 09.07.1990 எனும் மூன்று நாளில் ஏறத்தாழ நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் சம்பூர் மண்ணில் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தப்படுகொலையானது திட்டமிடப்பட்டு நிகழ்ததப்பட்டதோடு, ஒரு பழிவாங்கும் படலமாகவும் அமைந்தது எனலாம். அதாவது மூதூர் எனும் சிறுநகரை தமிழீழ இராணுவத்தினர் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தனர். இதை முறியடிக்க பாரிய நடவடிக்கை ஒன்றை சிங்கள அரசு மேற்கொண்ட போது அந்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து, அனைத்து படையினரையும் வெற்றி கொண்டனர். இதற்கு பழி தீர்க்கவே சிங்கள அரசு தன் முழுப்பலத்தையும் பயன்படுத்தி பாரிய படைநகர்வை சம்பூரை நோக்கி நகர்த்தி அப்பாவி தமிழர்களை படுகொலை செய்தது.

சம்பூர் படுகொலையின் போது பாடசாலை ஆசிரியர், பன்னிரண்டு வயது மாணவன் உட்பட பல மாணவர்கள், சேர்மன் ,பொலிஸ் உத்தியோகத்தர், பாலூட்டும் தாய் என பலரும் படுகொலை செய்யப்பட்டனர்.

சிங்கள அரசின் தமிழின அழிப்பானது தற்போதும் தொடர்நதவண்ணமே இருப்பதே பெருங் கொடுமை எனலாம். சம்பூரில் படுகொலையான மக்களை நினைவு கூர்ந்து ஒர் நடுகல் நட்டு வழிபடக்கூட அனுமதி மறுக்கப்படுவதே மிக மிக வேனை தரும் விடயமாகும்.

சம்பூர் படுகொலை போல் எத்தனையோ அப்பாவி தமிழர் படுகொலைகள் மூடி மறைக்கப்பட்டவண்ணம் உள்ளன. இவற்றை வெளிக்கொணர்ந்து தகுந்த நீதியை பெற்றுக் கொடுக்கவேண்டியது ஊடகங்களின் தலையாய கடமையாகும்.

எனவே படிகொலையான மக்களுக்கான நீதி கிடைக்கவும், அவர்களை நினைத்து நடுகல் நட்டு வழிபடவும் சுமந்திர காற்றை சுவாசிக்கவும் உலக மனிதாபிமான அரசுகள் உதவ்வேண்டும் என்ற மிகப்பெரிய ஆற்றுப்படுத்தை எதிர்தோக்கியவாறு இன்றைய தமிழர் சமூகம் காத்திருக்கின்றது என்பதே மறுக்கப்படாத உண்மையாகும்.

ஞா. ரேணுகாசன்

_____________________________________________________________________

நடுகல் வழிபாடு ஒன்றே துயரத்தோடு வாழும் தமிழுருக்கு சிறந்த ஆற்றுப்படுத்தல் *********************************************
சங்ககால இலக்கியங்கள் யாவும் காதல், வீரம் மற்றும் கொடை பற்றி சிறப்பாக பாடியிருந்த போதும், வீரத்திற்காக பலதரப்பட்ட பாக்கள் பாடப்பட்டன. அதனடிப்படையில் களத்தில் வீரமரணம் தழுவிய வீரனின் நினைவாக ஒர் புனிதமான இடத்தில் ஒரு கல்லை நட்டு, அந்த மாவீரனை நினைத்துருகுவதோடு, படையலிட்டு வணங்கியதாகவும் அக்கால இலக்கியங்கள் விளக்குகின்றன. அகநானூறு, புறநானூறு என்பன இவ்வழிபாட்டை சிறப்பித்து பின்வருமாறு விளக்குகின்றது.

.  “நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்  தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்”  (அக நானூறு – 35)     

“நெடு நிலை நடுகல் நாட்பலிக் கூட்டும்  சுரனிடை விலங்கிய மரனோங்கு இயவு”  (அக நானூறு – 289)     

“மரல்வகுத்துத் தொடுத்த செம்பூங் கண்ணியொடு  அணிமயிற் பீலிசூட்டிப் பெயர் பொறித்து  இனி நட்டனரே கல்லும்”  (புற நானூறு – 264)  

இதன் தொடர்ச்சியாகவே ஈழவிடுதலை போராட்டத்திலும் வீரமரணம் அடைந்த மாவீர்களுக்கு நடுகல் நட்டு வழிபட்டமை குறிப்பிடத்தக்கது.  

சங்ககால இலக்கியங்கள் வீர புருசர்களை சிறப்பித்து பாடினாலும், ஈழத்தில் சிங்க அரச பயங்கரவாத்த்தால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நினைத்து நினைவுக்கல் நட்டு வழிபடுதலும் எம் உறவுகளின் பிரிவால் வாடும் மக்களை ஆற்றுப்படுத்தலும் ஒருவகை வழிபாடே எனலாம்.

சம்பூர் பெருநிலப்பரப்பில் 07.07.1990 இல் நடந்தேறிய அப்பாவி தமிழர்களின் படுகொலையை எண்ணிகையில் இன்றும் அந்த மரணவலி நெஞ்சத்தை நசுக்குகிறது. ஒன்றுமறியாத மக்கள், தாம் எதற்காக கொல்லப்படுகிறோம் என அறியாத மக்களின் அவலச்சாவுக்கு எங்கு போனாலும் நீதி இல்லாது நீண்டு செல்லும் துயரம் மிக கொடியது.

சம்பூர் பெருநிலப்பரப்பு பல கிராம மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த தாய்நிலம். இங்கு ஒருவேளை உணவுண்டாலும் நிம்மதியான வாழ்வை சுவாசித்த மக்களுக்கு இடி வீழ்ந்தது போல் கொடும் இடுக்கன் படை கொண்டு பலியெடுக்க வந்தான். தடுத்திட முடியாத மக்கள் காடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

மூன்று நாள் சாப்பாடு தண்ணீரின்றிய அவல வாழ்வில், அவலமிகு சாவும் எம்மை சூழ்ந்தே நசுக்கியது. சிங்கள பௌத்த இராணுவத்தோடு முஸ்லீம் தீவிரவாத இயக்கமும் இணைந்து அப்பாவி தமிழர்களை படுகொலை செய்தனர். இது வரைக்கும் அதற்கான நீதி எம்மக்களுக்கு கிடைக்கவில்லை.

உறவுகளை இழந்த மக்கள் இந்நாளில் படும்வேதனை சொல்லித்தீராத வலி, அவர்களை ஆற்றுப்படுத்த யாருமில்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை, இந்த உறவுகள் இன்றும் படுகொலை செய்யப்பட்ட தம் உறவுகளை ஏங்கி தேம்பி அழுதவண்ணமே உள்ளனர். இவர்களை ஆற்றுப்படுத்த ஓர் நினைவுத்தூபி அமைத்து சுதந்திரமாக விளக்கேற்றி வழிபட வழிசமைத்தல் தமிழர்களாகிய எமது கடமையல்லவா!

ஆயுதம் ஏந்தாத, எந்தவொரு புரட்சியிலும் ஈடுபடாத பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை தென்தமிழீழத்தில் அரச பயங்கரவாதமும், முஸ்லீம் தீவிரவாதமும் படுகொலை செய்ததும் 1990 காலப்பகுதிகளிலே எனலாம். இதுவரை 200 க்கும் மேற்பட்ட படுகொலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சிங்கள அரசாலும், அவர்களோடு இயங்கிய முஸ்லீம் தீவிரவாத அமைப்பாலும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கையை சரியாக கணக்கிட முடியாது, அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்த ஆவணமுமின்றி தமிழ் தாய் உறவுகள் 500 ஆவது நாளையும் தாண்டி போராடுகின்றார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை இந்த சிங்கள பௌத்த அரசு இவர்களை பாதுகாப்பாக வைத்திருக்காது என்பது கசப்பான உண்மை.

அண்மையில் மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர் மனித புதைகுழிகளில் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்ட உடல்கூறுகள் பேசினால் மட்டுமே! காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மை நிலை புரியும், இதைப்போல் தமிழர் வாழ்ந்த பகுதிகளில் பல மனித புதைகுழிகள் காணப்படலாம், இவற்றை மிக நுட்பமான முறையில் அகழ்வாராய்ச்சி செய்திட தமிழர் தரப்பிலும், அவர்களின் அரசியியலிலும் பலமற்ற தன்மையின் காரணமாகவே தமிழினம் இன்னமும் துன்பத்தில் வாழ்கின்றது.

உண்மையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் வரப்போவதில்லை, அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களை நினைத்து மனமாற அழுது, மனதில் குடிகொண்ட துன்பம் நீங்க தொழுதாலே! தமிழினம் சற்று அமைதிகொள்ளும். இன்றைய காலத்தில் தமிழின மக்களுக்கு உரிய முறையிலான ஆற்றுப்படுத்தல் இல்லாமலேயே! பல இன்னல்களுக்கும் தற்கொலைகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

தமிழின மக்கள் சொல்லொணா துயரை அனுபவித்த வண்ணமே உள்ளனர், அவற்றுக்கான தகுந்த நிவாரணத்தை வழங்கும் தகுதியில் சிங்கள பௌத்த அரசோ! அல்லது சர்வதேச அரசுகளோ! அல்லது தமிழர் தரப்பு அரசியியலோ! இல்லாமல் இருப்பது மிகுந்த கவலை தரும் விடயமாகும்.

சங்ககால தமிழர் மரபானது ஆற்றுப்படுத்தலை திறம்பட நிகழ்த்தி இச்சமூகத்தினரை ஆரோக்கியமான பாதையில் கொண்டு சென்றுள்ளது என்பது அக்கால பாக்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. எனவே நாமும் எமது உறவுகளை இழந்து வாழும் உறவுகளுக்காக ஆற்றுப்படுத்தல் எனும் புனிதமான செயலை முன்னெடுத்து நடுகல் வழிபாடு என்ற தொன்மை வழிபாட்டை திறம்பட செய்தலே எமது உறவுகளுக்கான ஆறுதலாக அமையும்.

 

http://www.battinaatham.net/description.php?art=15877

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.