Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா பாணியில் யாழில் அரங்கேறிய வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்!

Featured Replies

சினிமா பாணியில் யாழில் அரங்கேறிய வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்!

 

 

IMG-bd43f5871fb27649bbd4d7cf6926feb6-V-720x450.jpg

வடக்கில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் தற்போது வீட்டை தீக்கிரையாக்கும் அளவிற்கு உச்சம் பெற்றுள்ளது.

சினிமா பாணியில் நேற்று (வியாழக்கிழமை) அரங்கேறிய வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசத்தில் யாழில் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வாள்கள் கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் யாழ். தாமரை வீதி வண்ணார் பண்ணையிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி, வீட்டை சேதப்படுத்தி பின்னர் பெற்றோல் குண்டை வீசியெறிந்து வீட்டை தீக்கிரையாக்கியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் ஆறு முதல் எட்டு பேர்வரையானோரை கொண்ட குழுவினர், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். ஆயுதங்களுடன் உள்நுழைந்தவர்களை கண்ட வீட்டார் அச்சத்தில் அலற, அவர்களை அச்சுறுத்திய வாள்வெட்டு குழுவினர் வீட்டிலிருந்த உபகரணங்களையும், வீட்டின் யன்னல் கதவுகளையும் உடைத்து நொறுக்கியுள்ளனர்.

பின்னர் வீட்டினுள் பெற்றோல் குண்டொன்றை வீசியெறிந்துள்ளனர். வீடு தீப்பற்றி எரிவரை கண்டு அயலவர்கள் அங்கு கூடியதையடுத்து வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சினிமா பாணியில் இடம்பெற்றிருந்த அவ்வளவு அட்டகாசங்களும் வெறும் 3 நிமிடங்களுக்குள்ளேயே அரங்கேறியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://athavannews.com/சினிமா-பாணியில்-யாழில்-அ/

  • தொடங்கியவர்

திட்டமிட்டு யாழ்ப்பாணம் சிதைக்கப்படுகிறதா? வாள் வீச்சுக் குழுவின் அட்டகாசம் தொடர்கிறது…

 

3 மோட்டார் சைக்ளில் வாள்கள், கம்பிகளுடன் 6 முதல் 8 பேர், வண்ணார் பண்ணை வீட்டில் புகுந்து அட்டூழியம்….

Jaffna-Vaalveddu.jpg?resize=720%2C450
வாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் சென்ற வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட்டின் கதவு, ஐன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கி பெற்றோல்க் குண்டை வீசி வீட்டைக் கொழுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

யாழ்ப்பாணம் தாமரை வீதி, வண்ணார் பண்ணையில் உள்ள வீடு ஒன்றிற்கு நேற்று (19.07.18) இரவு 8.30 மணி அளவில், மூன்று மோட்டார் சைக்கிளில் சுமார் 6 முதல் எட்டு பேர் வரையான வாள்வெட்டுக் குழுவினர் சென்றுள்ளனர். இதன் போது வீட்டில் பெற்றோரும் பிள்ளைகளும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆயினும் தமது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்த ஒரு குழுவினர் ஆயுதங்களுடன் வீட்டை அடித்து நொருக்கியவாறு உட்புகவதை அவதானித்து அவர்கள் கூக்குரலிட்டுக் கத்தியுள்ளனர்.

அவ்வாறு வீட்டுக்கார்ர்கள் கூக்குரலிட்ட போதிலும் வீட்டிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர் தம்மிடம் இருந்த வாள்கள் இரும்பு கம்பிகள் கோடாரிகளால் வீட்டின் கதவு, ஐன்னல், தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் அங்கிருந்த ஏனைய பொருட்கள் பலவற்றையும் அடித்து நொருக்கியுள்ளனர்.  இதன்போது வீட்டில் இருந்த பெண்மணி பொருட்கள் எதனையும் உடைக்க வேண்டாம் என கெஞ்சிக் கேட்டிருந்த போதிலும் அங்கிருந்த அனைத்துப் பொருட்களையும் தொடர்ச்சியாக அடித்து நொருக்கி உள்ளனர்.

இவ்வாறு அனைத்தையும் அடித்து நொருக்கி விட்டு வீட்டிற்குள் பெற்றோல் குண்டையும் வீசியுள்ளனர். இதனை அடுத்து வீடு பற்றி எரிய அயலவர்கள் ஓடி வர வாள்வெட்டுக் குழுவினர் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் வாள்வெட்டு குழுவின் இத்தகைய சம்பவம் தொடர்பாக யாழ். காவற்துறையினருக்கு  தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffna-Vaalveddu3.png?resize=647%2C435

http://globaltamilnews.net/2018/88515/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

சினிமா பாணியில் யாழில் அரங்கேறிய வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்!

ம்ம்ம் ... சினிமா பாணியில்...

சிங்கள சினிமாவாக இருக்குமோ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.