Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்

Featured Replies

அதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்

 

 

suma-3-720x450.png

வடக்கில் அதிகரித்துவரும் வன்முறைகளுக்கு முடிவுகட்ட சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் முறையாக மாகாண சபைக்கு பகிரப்பட வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் வடக்கு விஜயத்தை தொடர்ந்தும் யாழில் வன்முறைகள் தொடர்கின்றமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டுமாயின் இந்த பிரதேசத்தில் பேசப்படுகின்ற மொழியை தங்களது தாய்மொழியாகக் கொண்டவர்கள் இங்கே பொலிஸ் கடமையில் ஈடுபட வேண்டும். இல்லாவிடில் வன்முறைகளை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான விடயமாக அமையும்.

ஆனால், இந்த நடைமுறைகள் ஏற்படுத்தப்படும்வரை வடக்கில் தொடரும் வன்முறைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எனவே, மத்திய அரசாங்கம் விரைந்து இது தொடர்பாக உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்” என்றும் தெரிவித்தார்

http://athavannews.com/அதிகாரப்-பகிர்வே-வடக்கின/

  • தொடங்கியவர்

சுமந்திரன் சொன்ன சில முக்கிய விடயங்கள்!

காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் அமர்வுகளில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் பெருமளவில் பங்கெடுத்திருக்கின்றார்கள். அதேபோல் சில காணாமல்போனவர்களின் உறவினர்கள் அதனை எதிர்த்து போராட்டங்களை நடாத்தியுள்ளதுடன், பகிஸ்கரிப்பும் செய்துள்ளார்கள்.

அந்த சிலருடைய மன நிலைப்பாட்டை நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆனாலும் கூட தற்போதிருக்கும் நிலையில் நடைமுறைச்சாத்தியமானதும், சட்டரீதியானதுமான முறையாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமே இருக்கின்றது.

மேற்கண்டவாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். காணாமல்போனவர்கள் அலுவலகம் குறித்து நேற்று சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் சில இடங்களில் பகிஷ்கரித்திருக்கின்றார்கள்.

ஆனாலும் பெருமளவு உறவுகள் அலுவலகத்தின் அமர்வுகளில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். பகிஷ்கரிக்கிறவர்களின் மனநிலையை நாங்கள் நன்றாகவே உணர்ந்து கொள்கிறோம். ஆனாலும் இப்போதுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை கையாளுவதற்கு இந்த அலுவலகமே நடைமுறைச்சாத்தியமானது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்பதுபோல் பட்டியல் கொடுப்பதோ? சில இடங்களை காண்பிப்பதோ சாத்தியமற்றது. அதனை நாங்கள் கேட்டாலும் கூட உண்மையை தருவார்கள் என்றோ, உண்மையான இடங்களை காண்பிப்பார்கள் என்றோ எந்த உத்தரவாதமும் இல்லை. ஆகவே நடைமுறைச்சாத்தியமானதும், சட்டபூர்வமானதுமான இந்த அலுவலகமே சிறந்தது.

வடமாகாண அமைச்சர் சபை தொடர்பாக,

வடமாகாண அமைச்சர் சபை குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மிக தெளிவாக விடயங்களை கூறியுள்ளது. அதில் யாருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது?

யாருக்கு அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் உள்ளது? என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதலமைச்சருக்கே அந்த அதிகாரங்கள் உள்ளது. இது முதலமைச்சருக்கு தெரியாமல் இல்லை. ஆனால் தமக்கு தெரியாததுபோல் பாசாங்கு செய்வதாலேயே இவ்வளவு பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன.

எனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருக்கும் விடயங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்தினால் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும். மாகாணசபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக அமைச்சர் அனந்தி முறைப்பாடு தொடர்பாக..

மாகாணசபையில் பேச்சு சுதந்திரம் உள்ளமை சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயம் அங்கு பேசப்படும் விடயங்கள் தொடர்பாக விமர்சிப்பதற்கோ, அதை குறித்து விசாரிப்பதற்கோ எவருக்கும் அதிகாரம் கிடையாது.

யாழ்.குடாநாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தொடர்பாக

இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த மாகாணசபைக்கு சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் பூரணமாக பகிரப்படவேண்டும். மேலும் இந்த பிரதேசத்தில் பேசப்படும் மொழியை தமது சொந்த மொழியாக கொண்டவர்கள் பொலிஸ் சேவையில் ஈடுபடவேண்டும்.

அவ்வாறு இருந்தால் ம ட்டுமே குற்றங்களை குறைக்க இயலும். இல்லையேல் குற்றங்களை குறைப்பது கஸ்டமானதொரு விடயமாகும்.

ஆனால் அவ்வாறு எல்லாம் நடப்பதற்காக பார்த்துக் கொண்டிருக்க இயலாது. சட்டம் ஒழுங்கு மத்திய அரசாங்கத்தின் கைகளில் இருக்கும் நிலையில் அவர்கள் அதனை சரியாக நடைமுறைப்படுத்தவேண்டும். இந்த விடயம் தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அதனாலேயே சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் இங்கே வந்தார்கள். ஆனாலும் ஒன்றும் முடிந்தபாடில்லை. ஆகவே இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்போம். பிரதமருடனும் இந்த விடயம் தொடர்பாக நாங்கள் பேசுவோம் என்றார்.

 

http://www.tamilwin.com/politics/01/188721?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டுமாயின் இந்த பிரதேசத்தில் பேசப்படுகின்ற மொழியை தங்களது தாய்மொழியாகக் கொண்டவர்கள் இங்கே பொலிஸ் கடமையில் ஈடுபட வேண்டும். இல்லாவிடில் வன்முறைகளை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான விடயமாக அமையும்.

இதே கருத்தை தான் விக்கி அவர்களும் சொன்னார்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.