"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 117
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 117 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது மகா பரிநிர்வாணமும்"
இந்திய மற்றும் பிற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட சில கீழே தரப்பட்டுள்ளது.
இந்திய மொழியான சமசுகிருதத்தில் எழுதப்பட்ட அசோகாவதானம் [Ashokavadana], அசோகரின் அருமை, பெருமைகளை விவரிக்கும் நூலாகும். அசோகாவதானத்தின் பல பதிப்புகள் இன்று காணப்படுகின்றன. அவை கி.பி 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரையிலானவை ஆகும். எனினும் சில பாதிப்புகளின் உரையின் வடிவத்தின் படி, கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது.இருப்பினும் அதன் வாய்மொழி தோற்றம் கி மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இது அசோகரின் வாழ்க்கையைப் பற்றியது. புத்தர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பாடலிபுத்திரத்தில் அசோகர் மன்னனாக வருவார் என்று புத்தரே தனது முதன்மையான சீடர் ஆனந்தரிடம் முன்னதாகவே கூறியதாக அசோகாவதானத்தில் கூறப்பட்டுள்ளது? இது புத்தர் பிறந்த நாட்டில், அன்று நிலவிய கதைகளினதும் மற்றும் எழுதப்பட்ட செய்திகளினதும் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டது. எனினும் புத்தர் முன்னறிவித்தல் ["to foretell"] போன்றவற்றை நம்பாதவர் அல்லது எதிர்ப்பவர் ஆகும்.
எனவே, இதன்படி, புத்தர் கி.மு 369 ஆம் ஆண்டு அல்லது அந்த நேரத்தில் மகாபரிநிர்வாணம் அடைந்திருக்க வேண்டும். புத்தரின் மரணத்திற்கும் அசோகரின் முடிசூட்டு விழாவிற்கும் இடையிலான காலத்தை 100 ஆண்டுகள் என்று பயன்படுத்தும்போது, அதாவது அசோகர் கி.மு 269 இல் அரசரானார், எனவே, கி.மு 269 + 100 ஆண்டுகள் = கி.மு 369. இது குறுகிய பாரம்பரியம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது இலங்கை நாளாகமங்களில் கொடுக்கப்பட்டுள்ள 218 ஆண்டுகளால் கணிக்கப்படும் மகாபரிநிர்வாண காலத்தை விடக் [269 + 218 ஆண்டுகள் = கி.மு 487] குறைவு என்பதால் ஆகும். இது வடக்கு பாரம்பரியம் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் 100 ஆண்டுகள் இந்தியாவிலிருந்து, அதாவது இலங்கைக்கு வடக்கே இருந்து வருகிறது. 218 ஆண்டுகள் என்று பயன்படுத்தும்போது, அது நீண்ட பாரம்பரியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தெற்கே உள்ள இலங்கையில் இருந்து வந்ததால், நீண்ட பாரம்பரியம், தெற்கு பாரம்பரியம் என்றும் அழைக்கப்படுகிறது. புத்தர் இந்தியாவில் பிறந்ததால், அவர் பிறந்த இடத்திலிருந்து அல்லது பிறந்த மண்ணுக்கு அருகிலுள்ள இந்தியாவின் பகுதிகளிலிருந்து வரும் எந்தத் தகவலையும் அதிகம் நம்பக்கூடியதாக இருக்கும். அதேவேளை, இலங்கை போன்ற தொலைதூர இடத்திலிருந்து அழகாகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் எழுதப்படுள்ளதால், அதை மிகவும் துல்லியமான செய்தி என்று நாம் முடிவுகட்டிட முடியாது என்பதே உண்மையாகும், காரணம் புத்தர் இந்தியாவை விட்டு எங்கும் போகவில்லை.
மன்னர் அசோகரின் முடிசூட்டு விழாவிற்கு 116, 118, 130, மற்றும் 218 என பல தேதிகள் சீனா மொழி நூல்களில் காணக்கூடியதாக உள்ளன. மேலும் 'Asoka the Buddhist Emperor of India, by Vincent A Smith, Third edition 1919' என்ற நூலில் பக்கம் 241 இல் உள்ள அடிக்குறிப்பில் 118 என கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத் தக்கது. இதன் அடிப்படையில் புத்தரின் மரணம் கிமு 387 [269 + 118] இல் இருக்க வேண்டும். சீனாவின் 218 புத்தகோசரின் சமந்தபசாதிகாவின் [Samantapasadika by Buddhaghosa] மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டது ஆகும். இவர் [புத்தகோசர்] கி.பி 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அறிஞர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானிகளில் காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் குறிப்பிடத்தக்கவர். இளமையில் இவர் வடமொழி வேதங்களை நன்கு கற்று பிறகு பௌத்த மதத்திற்கு மாறினார். மகத நாட்டில் அக்காலத்தில் வழக்கிலிருந்த பாளி மொழியில் இவர் புலமை பெற்றிருந்தார். இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றபின் இலங்கையில் உள்ள அநுராதபுரத்தில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.மேலும் அவர் இலங்கைக்கு வந்து விளக்கவுரைகளை மொழிபெயர்த்ததால், இலங்கை பாரம்பரியம் அவரின் செல்வாக்கால் பாதித்திருக்கலாம் என நம்புகிறேன். எனினும் மேற்கூறிய எந்த ஆண்டுகளிலும் அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. மற்றொரு ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் கோம்ப்ரிச் [Richard Gombrich], கிமு 404 தான் புத்தர் இறந்த ஆண்டாகக் கூறுகிறார், மேலும் அலெக்சாண்டர் வின்னே [Alexander Wynne] தனது "The Historical Authenticity of Early Buddhist Literature” என்ற கட்டுரையில் கிமு 404 ஆம் ஆண்டை புத்தர் இறந்த ஆண்டாக ஏற்றுக்கொள்கிறார் என்று கூறுகிறார்.
பாளி நூற் சபை [Pali Text Society] தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் [T. W. Rhys Davids] என்பவரால் நிறுவப்பட்டது. அவர் இறந்தபோது, 'நிறுவனர் காலமானார் [‘Passing of the Founder’]' என்ற தலைப்பில் அவரைப் பற்றிய ஒரு கட்டுரை வெளியானது. அதன் 5வது பக்கத்தில் இவ்வாறு உள்ளது:
1877-ல் தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் Ancient Coins and Measures of Ceylon என்ற புத்தகத்தை எழுதினார். இதில், இலங்கை பழங்காலச் சம்பிரதாயங்களை அடிப்படையாக கொண்டு புத்தரின் இறப்பு ஆண்டு 412 கி.மு. காலமாக இருந்திருக்கலாம் என்று கூறினார். ஆனால், இதை பெரும்பாலும் அறிஞர்கள் ஏற்கவில்லை. பின்னாளில் தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸும் இந்த எண்ணத்தை கைவிட்டு விட்டார். என்றாலும் இதில் அவர் கூறிய 412 கி.மு. ஆண்டு, முன்பு குறிப்பிடப்பட்ட 404 கி.மு. ஆண்டுடன் நெருக்கமாக இருப்பதைக் காண்கிறோம்.
Part: 117 / APPENDIX – "The Buddha and his Mahaparinirvana"
The following are based on the Indian and other sources.
Ashokavadana was written in Sanskrit in the second century A.D., and it is about the life of Asoka. It is stated in the Ashokavadana that the Buddha himself predicted to his foremost disciple Ananda that Asoka would become the king in Pataliputra after one hundred years of his, the Buddha’s, death. This is based on the materials written in the country where the Buddha was born. As per this, the Buddha should have attained Mahaparinirvana on the year 369 B.C. or around that time. When 100 years are used for the time elapsed between the death of the Buddha and the coronation of Asoka, it is known as Shorter Tradition, as it is shorter than the 218 years that is given in the Chronicles of Ceylon. It is also known as Northern Tradition, as 100 years is from India, North of Sri Lanka. When 218 years are used, it is called the Longer Tradition. The Longer Tradition is also known as Southern Tradition, as it is from Ceylon which is south of India. Please note that Any information from the Buddha’s birth place should carry more weight. The record in a far away country might not carry more currency merely because it was written long ago in neat book form.
Chinese has many dates, 116, 118, 130, and 218 for King Asoka’s coronation. The year 118 for Asoka after the Buddha is given in the footnote on page 241 of Reference 'Asoka the Buddhist Emperor of India, by Vincent A Smith, Third edition 1919'. The Buddha’s death based on this should be about 387 B. C. The Chinese 218 is based on the translation of Samantapasadika by Buddhaghosa, and the Ceylonese tradition might have influenced him as he came to Lanka to translate the commentaries. There is no consensus among scholars regarding any of the above cited years. Another researcher, Richard Gombrich, states 404 B.C. as the probable year of the death of Buddha, and Alexander Wynne says in his essay “The Historical Authenticity of Early Buddhist Literature” that he too accepts the year 404 B.C. as the year on which Buddha died.
Pali Text Society was founded by T. W. Rhys Davids. When he died, there was an article on him with the title ‘Passing of the Founder’. One paragraph on the page 5 reads thus, ‘In 1877 he was ready with a treatise on the ‘Ancient Coins and Measures of Ceylon’, in which he endeavoured to fix the date of death of Gotama, by arguments founded on Sinhalese tradition, within a few years of 412 B. C. But this result did not win general acceptance and he himself abandoned it in later life’. This is very close to the year 404 B. C. proposed above, in the previous passage.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 118 தொடரும் / Will follow
துளி/DROP: 2062 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 117
https://www.facebook.com/groups/978753388866632/posts/34032940193021192/?
By
kandiah Thillaivinayagalingam ·
Archived
This topic is now archived and is closed to further replies.