Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்மீது பொய்க் குற்றச் சாட்டு போடுகிறார் அஸ்மின் – அனந்தி தெரிவிப்பு

Featured Replies

என்மீது பொய்க் குற்றச் சாட்டு போடுகிறார் அஸ்மின் – அனந்தி தெரிவிப்பு

 

 

download-17.jpg

 
 
 
 

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தன்மீது பொய்க் குற்றச் சாட்டு சுமத்துவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மகாணசபை அமர்வு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

அனந்தி சசிதரனிடம் துப்பாக்கி இருப்பதாக அயூப் அஸ்மின் கூறியிருந்தார்.

 

இது தொடர்பில், இன்று அனந்தி சசிதரனால் தன்னிலை விளக்கம் கொடுக்கப்பட்டது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே குழப்ப நிலையும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://newuthayan.com/story/11/என்மீது-பொய்க்-குற்றச்-சாட்டு-போடுகிறார்-அயூப்-அஸ்மின்-அனந்தி-தெரிவிப்பு.html

  • தொடங்கியவர்

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு என்னை பலியாக்குகின்றனர்: அனந்தி

 

 

ananthi-sasitharan-1-720x450.jpg

மாகாண சபைத் தேர்தலை இலக்காக கொண்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக தன்னை பலிக்கடாவாக மாற்றுவது வருத்தமளிப்பதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வடமாகாண சபையின் 128ஆவது அமர்வில் துப்பாக்கி விவகாரம் தொடர்பாக தன்னிலை விளக்கம் அளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தான் துப்பாக்கி வைத்துள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் கருத்து தனது சிறப்புரிமையை மீறும் செயல் என்ற பிரேரணையை சபையில் முன்வைக்க அனந்தி ஏற்கனவே அனுமதி கோரியிருந்தார்.

ஆனால் அதற்கான அனுமதி அவைத் தலைவரினால் மறுக்கப்பட்ட நிலையில், தன்னிலை விளக்கமளிக்க இன்று சபையில் அனுமதிக்கப்பட்டது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”அஸ்மினின் கூற்றின் மூலம் நான் ஒரு ஆயுததாரி, ஆயுதங்களில் விருப்பம் இருப்பவள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளேன்.

அதுமாத்திரமின்றி இதனை எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கருத்தாக பார்க்கின்றேன்.

சபையில் 37 ஆண் உறுப்பினர்களின் மத்தியில் ஒரே பெண் உறுப்பினராக நான் விளங்குகின்றேன். இந்த விடயத்தினை எதிரணியினர் கேட்டிருந்தால், அதற்குரிய பதிலை வழங்கியிருக்க முடியும். ஆனால், ஆளும் தரப்பினரே இவ்வாறு கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உறுப்பினர் அஸ்மின் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலும், எனக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையிலும் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளமை தொடர்பாக சபை அவரை கண்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இவ்விடயம் சபையில் ஆளும் தரப்பினரிடையே பெரும் வாக்குவாதங்களை ஏற்படுத்தி இருந்ததுடன், சபையில் பெரும் குழப்பநிலையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அரசியல்-காழ்ப்புணர்ச்சி/

  • தொடங்கியவர்

அனந்தி சசிதரனின் துப்பாக்கி விவகாரம் - சபையில் பெரும் அமளிதுமளி

அனந்தி சசிதரனின் துப்பாக்கி விவகாரம் - சபையில் பெரும் அமளிதுமளி

 

 
 
வடமாகாண சபையின் 128 ஆவது அமர்வு இன்று (26) அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் பேரவைச் செயலகத்தில் ஆரம்பமாகியது.

கடந்த 127 வது விசேட அமர்வின் போது, ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின் அயூப் வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் துப்பாக்கி வைத்திருக்கின்றார் என்ற கருத்தினை வெளியிட்டமை தொடர்பில் பல சர்ச்சைகள் இடம்பெற்று வந்த நிலையில், அமைச்சர் அனந்தி சசிதரன் துப்பாக்கி விடயம் தொடர்பாக தனது விளக்கத்தை அளிக்க சபையில் அனுமதி கேரியிருந்தார்.

அவைத் தலைவரினால் அனுமதி வழங்கப்பட்ட போது, அனந்தி சசிதரன் தனது விளக்கத்தை தெரிவித்த போது, உறுப்பினர் கேசவன் சயந்தன் குறுக்கிட்டு தனது கருத்தினை முன்வைத்ததால் சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.

இதன்போது, அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில், கடந்த 127 ஆவது அமர்வு டெனிஸ்வரனின் வழக்கு விசேட அமர்வு, அஸ்மின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று துப்பாக்கி பெற்றுள்ளதாக உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளார். நான் ஒரு ஆயுததாரி, ஆயுதங்களில் இருப்பம் இருப்பவள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

கையில் ஆயுதத்தினை வைத்திருப்பவளாக இருந்தால், ஆயுதம் வைத்திருப்பதற்கான அனுமதி தொடர்பான முழு ஆதாரங்களையும் சபையில் வெளியிட வேண்டும்.

எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உயிர் ஆபத்தினை ஏற்படுத்தும் கருத்தாக அதனை நான் பார்க்கின்றேன். சபையை மட்டுமல்ல உறுப்பினர் தவறாக வழி நடத்தியது, எனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உயிர் ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

இதனை சபை கண்டிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். அரசியல் பிரவேசம் நான் விரும்பிப் பெற்றுக்கொண்டதல்ல. அங்குள்ள சிலர் ஏற்றுக்கொண்டால் என்ன, ஏற்றுக்கொள்ளாவிடின் என்ன, அதிகபடியான வாக்குகளைப் பெற்று வடக்கு மாகாணத்தின் முதற் பெண்மணியாக இருக்கின்றேன்.

வரலாற்றுப் பதிவாக தன்னை அமைச்சராக முதலமைச்சர் நியமித்துள்ளார். ஒரு போராளியின் மனைவியாக பாதிக்கப்பட்ட பெண்ணாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை இலக்காக கொண்டு, தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக என்னை பலிக்காடாக மாற்றுவது மிகவும் வருந்தத்தக்கது.

போராட்டமும், ஆயுதம் என்பது எனக்குப் புதிய விடயம் அல்ல. நேரடியாவும் மறைமுகமாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகை இலங்கை அரசை எதிர்க்கின்றேன் என்றால், எனது பாதிப்பும், எனது மக்களின் பாதிப்பு, அரச உத்தியோகத்தர் காலப்பகுதியில் பாப்பரசர் வந்த போது, பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு 3 நாட்கள் சிறைச்சாலையில் இருந்தேன்.

1996 ஆம் ஆண்டு சூரியகதிர் நடவடிக்கையின் போதும், இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, இராணுவ முகாமில் சித்திரவதை அனுபவித்தேன். அரசினால் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டவள் என்ற வகையில், இந்த நாட்டின் மக்கள் பாதுகாப்பினை கோரும் நிலையில், சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையிலும், இவர் போன்ற உறுப்பினர்களிடம் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதங்களைக் கோர வேண்டிய நிலை இருக்கின்றது.

இதன்போது, அஸ்மினால் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதற்கான ஆதாரம் இருக்கின்றதா என அவைத்தலைவர் அனந்தி சசிதரனிடம் கேட்டார். வார்த்தைக்காக கதைக்க வேண்டாமென்றும் அவைத் தலைவர் அனந்தி சசிதரனைக் கடிந்துகொண்டார்.

உறுப்பினர் அஸ்மின் அயூப் இந்த கருத்தினைக் கூறியதன் நோக்கம் என்ன? என்ன பின்னணியில் என்னிடம் ஆயுதம் இருக்கின்றதாக உறுப்பினர் அஸ்மின் கூறினார் என்றும் சபையில் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார். அவ்வாறு ஆயுதம் வைத்திருக்கின்றேன் என்றால், அந்த ஆதாரத்தினை சபைக்கு வழங்காது, ஏன் அவ்வாறு தெரிவித்தார்.

இந்த கருத்து ஆபத்தினை ஏற்படுத்தும் கருத்து. இலங்கையின் சட்டத்தின் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுத் துப்பாக்கி வைத்துக் கொள்ளவதற்கான உரிமை இருக்கின்றது. ஆனால், உறுப்பினர் அஸ்மின் எந்த நோக்கத்தில் இந்த கருத்தனை தெரிவித்தார் என்பது மிகவும் சிக்கலான நிலமைக்கு தள்ளியுள்ளது.

சபையில் 37 ஆண் உறுப்பினர்களின் மத்தியில் ஒரு பெண் உறுப்பினராக இருப்பதுடன், இந்த விடயத்தினை எதிரணியினர் கேட்டிருந்தால், அதற்குரிய பதிலை வழங்கியிருக்க முடியும். ஆனால், ஆளும் தரப்பினரே இவ்வாறு கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. உறுப்பினர் அஸ்மின் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலும், எனக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளமை தொடர்பாக சபை கண்டிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இதன்போது, சபையில் தனது விளக்கத்தினை அளித்த உறுப்பினர் அஸ்மின் அயூப் தான் கூறிய விடயம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதன்போது, சபையில் கூறப்படும் விடயங்களை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாதென்றும், அந்த விடயங்களுக்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாதென்றும் அவைத்தலைவர் மன்றில் தெரிவித்ததுடன், இந்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் சபையில் தெரிவித்தார்.

ஆலவட்டம் வீச வேண்டுமென்ற அவசியமில்லை. துப்பாக்கி வேண்டுமென்ற கோரிய கோரிக்கை கடிதம். பிரதம செயலாளரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. தகவலறியும் சட்டத்தின் மூலம் பல விண்ணப்பங்களுக்கு பதில் கிடைக்கப்பட்டுள்ளது.

வலகம்பரை, பண்ணாகம், சுழிபுரம் என்ற விலாசத்திற்கு துப்பாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் பேசவில்லை. ஏன் அந்த அமர்வின் போது, நான் ஏன் இவற்றினை குறிப்பிட்டேன் என்பதே முக்கியமானது என அஸ்மின் சுட்டிக்காட்டினார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=104573

  • தொடங்கியவர்

 

அனந்தியின் கைத்துப்பாக்கி விவகாரத்தால் போர்க் களமான வடக்கு மாகாண சபை

 

அனந்திக்கு துப்பாக்கி வழங்கியமைக்கான ஆதாரம் உள்ளது:- அயூப் அஸ்மின்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நானும் துப்பாக்கி வைத்திருந்தேன்- சபையில் தெரிவித்தார் தவ­ரா­சா!!

asfafa.jpg
 
 

கடந்த பெப்­ர­வரி மாதம் வரை­யில் தான் கைத்­துப்­பாக்கி வைத்­தி­ருந்­தார் என்று நேற்­றுச் சபை­யில் தெரி­வித்­தார் வடக்கு மாகாண சபை எதிர்க் கட்­சித் தலை­வ­ரும் ஈபி­டிபி அமைப்­பின் முன்­னாள் உறுப்­பி­ன­ரு­மான சி.தவ­ராசா.

‘‘என்­னி­டம் கேட்­டி­ருந்­தால் நானே கைத்­துப்­பாக்­கி­யைத் தந்­தி­ருப்­பேன். கடந்த பெப்­ர­வரி மாதம்­தான் அத­னைத் திருப்­பிக் கொடுத்­தேன்’’ என்று அமைச்­சர் அனந்தி சசி­த­ர­னுக்­குத் தெரி­வித்­தார் அவர்.

வடக்கு மாகாண மக­ளிர் விவ­கார அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் கைத்­துப்­பாக்கி வைத்­தி­ருப்­ப­தாக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் அவர் தன்­னிலை விளக்­க­ம­ளித்­தார். இதன் பின்­னர் இடம்­பெற்ற விவா­தத்­தின்­ போதே தவ­ராசா மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

 

“பாது­காப்பு அமைச்­சின் அனு­ம­தி­யு­டன் துப்­பாக்கி வைத்­தி­ருக்­க­லாம். அதில் எந்­தப் பிழை­யும் இல்லை. என்­னி­டம் கேட்­டி­ருந்­தால் நானே கைத்­துப்­பாக்­கி­யைத் தந்­தி­ருப்­பேன். கடந்த பெப்­ர­வரி மாதம் ஆயு­தங்­களை ஒப்­ப­டைக்­க­வேண்­டும் என்று கூறிய பின்­னர், நான் எனது கைத்­துப்­பாக்­கியை ஒப்­ப­டைத்­து­விட்­டேன்’’ – என்­றார்.

http://newuthayan.com/story/09/நானும்-துப்பாக்கி-வைத்திருந்தேன்-சபையில்-தெரிவித்தார்-தவ­ரா­சா.html

“நான்பட்ட வலியை தற்போது அனந்தி உணர்ந்திருப்பார்”

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

Sathyalinkan-800x450.jpg

 

என் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவதற்கு காரணமாக இருந்த அமைச்சர் அனந்தி மீது இன்று குற்றச்சாட்டு சுமத்தப்படும்போது நான்பட்ட வலியை உணர்ந்திருப்பார். என மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாணசபை யின் 128வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அமைச்சர் அனந்தி சசிதரனின் ஆயுத விவகாரம் தொடர்பாக பேசப்படும்போதே சத்தியலிங்கம் அவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சராக இருந்த நான் அந்த அமைச்சு பதவியிலிருந்து விலகும்போது சுகாதார அமைச்சிலிருந்து கோவைகளை எடுத்து சென்றதாக பொய்யான குற்றச்சாட்டு ஒன்றினை முதலமைச்சருக்கு கூறியவர் அமைச்சர்  அனந்தி சசிதரனே. இன்று அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றது.

இங்கே அவர் மன வருத்தத்துடன் பேசுகிறார். அவருடைய மனவேதனையை நான் அறிந்து கொள்கிறேன். ஆனாலும் எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியபோது  அதனால் நான்பட்ட வலியை அமைச்சர் அனந்தி இப்போது உணர்ந்திருப்பார். உணரவேண்டும் என தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2018/89480/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உண்மை வெளி­வந்­த­போது -அமைதி காத்தார் அனந்தி!!

 

image7.jpg

 
 
 
 

கடந்த மாகாண சபைத் தேர்­த­லின்­போது போலி உத­யன் பத்­தி­ரி­கையை அப்­போ­தைய அர­சு­தான் வெளி­யிட்­டது என்று வடக்கு மாகாண சபை­யில் நேற்­றை­ய­தி­னம் மற்­றைய உறுப்­பி­னர்­கள் சொன்­ன­போது அதற்­குப் பதில் எது­வும் சொல்­லாது அமைதி காத்­தார் மாகாண அமைச்­சர் அனந்தி சசி­த­ரன்.

அந்­தப் போலிப் பத்­தி­ரி­கை­யைத் தனக்­கெ­தி­ராக உத­யன் பத்­தி­ரிகை நிறு­வ­னமே வெளி­யிட்­டது என்று பொய்­யான குற்­றச்­சாட்­டைத் அவர் தெரி­வித்து வந்­த­போ­தும் நேற்­றை­ய­தி­னம் மற்­றைய உறுப்­பி­னர்­கள் உண்­மை­யைச் சொன்­ன ­போது வாய்­பொத்­திப் பேசா­மல் இருந்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில், திரு­மதி அனந்தி சசி­த­ரன் மீது அஸ்­மின் குற்­றச்­சாட்டு முன்­வைத்­தார். 2013ஆம் ஆண்டு மாகா­ண­ச­பைத் தேர்­த­லின்­போது அனந்­தி­யின் வீடு தாக்­கப்­பட்­டமை, போலி உத­யன் பத்­தி­ரிகை வெளி­யி­டப்­பட்­டமை தொடர்­பில் அப்­போது பேசினார்.

 
 

இதற்­குப் பதி­ல­ளித்து உரை­யாற்­றிய ஆளும் கட்சி மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், தேர்­தல் காலத்­தின்­போது போலி உத­யன் பத்­தி­ரி­கையை வெளி­யிட்­டது அப்­போ­தைய அரசு என்று குறிப்­பிட்­டார்.

வடக்கு மாகாண மக­ளிர் விவ­கார அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன், தொலைக்­காட்சி நேர்­கா­ண­லி­லும் வேறு நேர்­கா­ணல்­க­ளி­லும் போலி உத­யன் பத்­தி­ரி­கையை வெளி­யிட்­டது, உத­யன் பத்­தி­ரிகை நிறு­வ­னம்­தான் என்று பொய் கூறி வந்­தி­ருந்­தார்.

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் நேற்று மேற்­கண்­ட­வாறு கூறும்­போது, திரு­மதி அனந்தி சசி­த­ரன் மௌன­மாக, மறுப்­புத் தெரி­விக்­கா­மல் இருந்­தார்

http://newuthayan.com/story/09/உண்மை-வெளி­வந்­த­போது-அமைதி-காத்தார்-அனந்தி.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.