Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்க்கதரிசனமற்ற முடிவுகளால் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ள இலங்கை அரசு

Featured Replies

தீர்க்கதரிசனமற்ற முடிவுகளால் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ள இலங்கை அரசு

 

 

625.500.560.350.160.300.053.800.900.160.

 
 

 

 

இன்­றைய அரசு பத­விக்கு வந்த நாள்­மு­தல் ஜெபிக்­கும் ஒரே மந்­தி­ரம் ‘‘விற்­பனை செய்­தல்’’ என்­ப­தா­கும்.

சில­வேளை இன்­றைய தலைமை அமைச்­சர் காலை­யில் படுக்­கை­யை­விட்டு எழு­வது, இன்று எதனை விற்­பனை செய்­ய­லாம் என்ற சிந்­த­னை­யு­ட­னேயே எனக்­கொள்ள முடி­கி­றது.

ஏனெ­னில் நாட்­டின் சகல பிரச்­சி­னை­க­ ளுக்­கும் எதை­யா­வது விற்­ப­தன் மூலமே தீர்­வு­காண இய­லு­மென தலைமை அமைச்­சர் நம்­பு­வ­தா­கத் தோன்­று­கி­றது.

 

அண்­மை­யில் ஒரு­நாள், நாட்­டின் பொரு­ளா­தா­ரம் 30வீதத்­தால் வீழ்ச்சி கண்­டுள்­ளது என வௌியான செய்­தியை முழு­நா­டுமே தெரிந்து கொண்­டது.
அத்­தோடு ரூபா­வின் பெறு­மதி பின்­ன­டைவு கண்­டி­ருப்­ப­தாக நாட்­டின் தலைமை அமைச்­சர் பகி­ரங்­க­மா­கவே கருத்து வௌிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.
ஆசிய வட்­டகை நாடு­க­ளில் விரை­வான பொரு­ளா­தார முன்­னேற்­றத்­தில் இரண்­டாம் இடத்தை ஈட்­டிய நிலை­யில் இயங்­கி­வந்த இலங்­கை­யின் ஆட்சி அதி­கா­ரத்தை, கூட்டு அரசு பொறுப்­றே்று மூன்­றரை ஆண்­டு­கள் ஓடிக் க­ழிந்­து­விட்ட நிலை­யி­லேயே, இன்று 30வீத பொரு­ளா­தார வீழ்ச்­சிக்கு நாடு­மு­கம் கொடுக்க நேர்ந்­துள்­ளது.

அந்த வகை­யில், 2014ஆம் ஆண்­டில் நாட்­டின் சக­ல­துறை பொரு­ளா­தார முன்­னேற்ற விட­யத்­தில், தென்­னா­சிய வட்­ட­கை­யில் இலங்கை முத­லா­வது அல்­லது இரண்­டா­வது இடத்தை வகித்து வந்­தது.

நாட்­டின் நிகர பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வேகம் 7வீதத்தை அண்­மித்­தி­ருந்­தது. அதே பொரு­ளா­தார நிலை இன்று 30வீதத்­தால் வீழ்ச்சி கண்­டுள்­ள­தாக தலைமை அமைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.

இது­வரை தம்மால் பயன்­ப­டுத்­தப்­ப­டாத திருக்­கை­வா­லால், நாலு சாத்­துச் சாத்­து­வ­தற்கு அர­ச­த­லை­வ­ருக்கு இவரை விடப்­பொ­ருத்­த­மான ஒரு­வ­ரைத் தேடிக்­கண்டு பிடிப்­பது சிர­ம­மா­ன­தாக அமை­யும்.

தமது அர­சி­னால் நாட்­டின் பொரு­ளா­தா­ரம்  நலி­வ­டை­யச் செய்­யப்­பட்­டதை  ஒப்­புக்­கொள்­கின்­றார் ரணில்

‘‘வாய் பொய் கூறி­னா­லும், நாக்கு ஒரு­போ­தும் பொய் பேசாது’’ என்ற பழைய முது­மொ­ழி­யொன்று வழக்­கில் உள்­ளது. அதன்­படி, தமது அர­சி­னால் நாட்­டின் பொரு­ளா­தா­ரம் நலி­வ­டை­யச் செய்­யப்­பட்­டது என்­ப­தைக் காலம் பிந்­தி­யா­வது தலைமை அமைச்­சர் பகி­ரங்­க­மாக ஒப்­புக்­கொள்­வது வர­வேற்­கப்­ப­ட­வேண்­டிய ஒன்­றா­ன­போ­தி­லும், மற்­றொரு வகை­யில், அது பயங்­க­ர­மா­ன­தொரு செய்­தி­யாக அமை­வது, தலைமை அமைச்­சர், அரசு எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு என்­ற­வ­கை­யில் சிறி­து­நேர தாம­தத்­தின் பின்­னர் தெரி­வித்த கருத்­தாக அமை­வ­தால் ஆகும்.

‘‘அப்­ப­டி­யா­னால் நாங்­கள் இவற்­றை­யும் விற்­று­வி­டு­வோமே!’’ என தலைமை அமைச்­சர் வௌியிட்ட கருத்தை கேட்­க­வும், பார்க்­க­வும் பல­ரால் முடிந்­தது.

இந்­தத் தடவை எதனை விற்­பனை செய்­யத் தலைமை அமைச்­சர் திட்­ட­மி­டு­கி­றார் என்­பது குறித்­துத் தௌிவு இல்­லா­த­போ­தி­லும், தலைமை அமைச்­ச­ரது நீண்ட விற்­ப­னைப் பொருள்­க­ளது பட்­டி­யலை நோக்­கும்­போது, எந்­த­வொரு தேசிய சொத்­தை­யும் பாது­காக்க அர­சி­டம் உறு­திப்­பாடு இல்லை என்­பதை நாட்­டின் பொது­மக்­கள் தற்­போதே உணர்ந்து கொண்­டுள்­ள­னர்.

இலங்­கைக்கு இரண்­டா­வ­தா­ன­தொரு பன்னாட்டு வானூர்தி நிலை­யத்­தின் தேவையை உணர்ந்­து­கொண்ட முத­லா­வது அரசு, மகிந்த ராஜ­பக்­ச­வின் அர­சல்ல.
அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்திட்டம் போன்று மத்­தள வானூர்தி நி­லை­ய­த்திட்டமும் பல அர­சு­க­ளால் வெறும் வாய்ப்­பேச்­சு­டன் மட்­டும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த திட்­ட­ங்களாக இருந்­த­ போ­தி­லும், கடந்த அர­சின் நிர்­வா­கத்­தின் கீழ் அவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன.

நாட்டை முன்­னேற்ற நினைக்­கும்  அர­சுக்கு புரிந்­து­ணர்­வும்  வேலைத் திட்­ட­மும் அவ­சி­யம்

ஒரு­நாட்டை முன்­னேற்ற வேண்­டு­மா­னால், அந்த நாட்டை நிர்­வ­கிக்­கும் அர­சுக்கு புரிந்­து­ணர்­வும் சரி­யான வேலைத் திட்­ட­மும் இருத்­தல் அவ­சி­ய­மா­கும். தமக்­கென புரிந்­து­ணர்­வும் திட்­ட­மும் இல்­லாது, மற்­ற­வர்­கள் மீது குறை­கூ­று­வ­தன் மூலம் கால­நே­ரத்தை வீண் விர­யம் செய்­வ­தற்கு அரசு என்று ஒன்று தேவை­யில்லை.

கடந்த மகிந்த அர­சின் வச­மி­ருந்த திட்­டத்­தின் ஒரு அம்­ச­மாக அமைந்­த­தன் கார­ண­மா­கவே, அன்று இலங்­கையை தென் ஆசிய வட்­ட­கை­யில் கடல் மற்­றும் வான் பய­ணத்­தின் கேந்­திர நிலை­ய­மாக ஆக்­கும் நோக்­கு­ட­னேயே மத்­தள வானூர்தி நிலை­யம் உரு­வாக்­கப்­பட்­டது.

அம்­பாந்­தோட்டை சுற்­றா­டலை பன்­னாட்டு துறை­முக வச­தி­கொண்ட தொழில் நக­ர­மாக ஆக்­கும்­போது அதன் அரு­கில் வானூர்தி நிலை­ய­மொன்­றும் அமைக்­கப்­ப­டல் அவ­சி­யம் என்­பதை உணர்ந்­து­கொள்ள பெரும் வர்த்­தக அறிவு எது­வும் தேவைப்­ப­டாது.

உரிய சுற்­றுச்­சூ­ழல், நில அமைவு என்­பவை முறைப்­ப­டி­ஆய்வு செய்­யப்­பட்ட பின்­னரே மத்­த­ள­வில் வானூர்தி நிலை­யம் அமைக்க முடிவு மேற்­கொள்­ளப்­பட்­டது.

தற்­போ­தைய அரசு, குறித்த மத்­தள பிர­தே­சம் வானூர்தி நிலை­ய­மொன்றை உரு­வாக்­கத் தரம் வாய்ந்த இட­மாக அமை­ய­வில்லை எனக் கூறு­வதை நம்­பு­வோ­ரி­டம், அவர்­க­ளது அந்த வாதம் சரி­யா­ன­தா­யின், அந்த வானூர்தி நிலைய நிர்­வா­கத்தை பொறுப்­பேற்­ப­தற்கு இந்­தி­யா­வுக்­குப் பைத்­தி­யம் பிடித்­தி­ருக்­கக் கூடுமா?

என வினா எழுப்ப வேண்­டி­யுள்­ளது. உண்­மை­யில் இந்­தியா மத்­தள வானூர்தி நிலை­யத்­தின் முக்­கி­யத்­து ­வத்தை, பெறு­ம­தியை நன்கு உணர்ந்­துள்­ள­தா­கவே கொள்ள முடி­கி­றது.

அதே­வேளை, இன்­றைய ஆட்­சி­யா­ளர் தரப்­பின் இய­லாத்­த­னம் மற்­றும் பரந்த நோக்­கின்மை என்­பவை இந்­தி­யத் த­ரப்­புக்கு அதிர்ஷ்­டத்­தைக் கொண்டு வந்­துள்ளதாக­வும் கொள்­ள­மு­டி­கி­றது. அதே­வேளை, பூகோள அமை­வுக்­க­மைய முக்­கி­யத்­து­ வம் மிக்க இடத்­தில் அமைந்­துள்ள அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தின் நிர்­வா­ கத்­தைக் கைப்­பற்­றிக்­கொண்­டுள்ள சீனா­வுக்கு அது­வோர் அதிர்ஷ்­ட­வ­ச­மான வாய்ப்பு என்றே கொள்­ள­மு­டி­கி­றது.

அம்­பாந்­தோட்டை கைத்­தொ­ழில் நக­ரம் அமைக்­கப்­பட்ட பின்­னர், வரு­டா­வ­ரு­டம் இலட்­சக்­க­ணக்­கான வானூர்திப் பய­ணி­கள் அம்­பாந்­தோட்­டைக்கு பய­ணம் மேற்­கொள்வரென்ற எதிர்­பார்ப்பு நில­வு­கி­றது.
வர்த்­தக ரீதி­யான பய­ணங்­களை மேற்­கொள்­ப­வர்­கள் போன்றே, உல்­லா­சப் பய­ணி­க­ளா­க­வும் பெருந்­தொ­கை­யி­னர் அவ்­வி­தம் இலங்­கைக்கு வரக்­கூ­டும்.

கைத்­தொ­ழிற்­சா­லை­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் மூலப் பொருள்­கள் போன்றே, அங்கு உற்­பத்தி செய்­யப்­ப­டும் பொருள்­க­ளின் ஒரு பகுதி வானூர்தி மூலம் எடுத்­து­வ­ரப்­ப­ட­வும், எடுத்­துச் செல்­லப்­ப­ட­வும் வாய்ப்­ப­மை­யும்.
அதே­வேளை கட்­டு­நா­யக்க வானூர்தி நிலை­யத்­துக்­குப் பதி­லாக சில விமா­னப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள் மத்­தள வானூர்தி நிலை­ய­மூ­டாக தமது பய­ணி­கள் சேவையை ஒழுங்கு செய்­யக்­கூ­டும்.

மத்­தள வானூர்தி நிலைய  உரு­வாக்­கத்­தின் சாதக பாத­கங்­கள்

மத்­தள வானூர்தி நிலை­யத்­தைப் பயன்­ப­டுத்தி தற்­போது புதிய வானூர்தி போக்­கு­வ­ரத்து மார்க்­கங்­கள் சில ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

அவற்­றின் மூலம் ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து, இந்­தோ­னே­சியா, சிங்­கப்­பூர் மற்­றும் மலே ­சியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து ஐரோப்­பிய நாடு­கள் மற்­றும் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு வானூர்திப் பய­ணங்­களை மேற்­கொள்­வோர் பயண மார்க்­கத்­தில் குறை­வான தூரத்தை பய­ணிக்க நேர்­வ­தால், வானூர்திப் பய­ணக் கட்­ட­ணங்­க­ளும் குறை­வ­டைய வாய்ப்­ப­மை­யும்.

அது­மட்­டு­மன்றி மத்­தள வானூர்தி நிலைய மார்க்­கத்­தைப் பயன்­ப­டுத்­தும் சகல வானூர்திகளும், அவை மத்­தள வானூர்தி நி­லை­யத்­தில் தரை இறங்­கா­வி­டி­னும், மத்­தள வானூர்தி நிலையச் சுற்­றா­ட­லில் பறப்பை மேற்­கொள்­வ­தன்­மூ­லம், இலங்­கை­யின் ஆகாய எல்­லைக்­குள் பறப்பை மேற்­கொள்­வ­தால் மத்­தள வானூர்தி நிலைய நிர்­வா­கத்­துக்கு அதற்­கான கட்­ட­ணத்­தைச் செலுத்த வேண்டி ஏற்­ப­டும்.

மத்­தள வானூர்தி நிலை­யம் நீண்­ட­கால பயன்­பாட்டை கருத்­தில் கொண்டே திட்­ட­மி­டப்­பட்டு நிர்­மா­ணிக்­கப்­பட்டு ள்ளது. உல­கின் மிகப் பெரிய வானூர்திகளைக் கூடத் தரை­யி­றக்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

தற்­போது முத­லா­வது கட்ட நிர்­மா­ணப் பணி­கள் பூர்த்­தி­யாக்­கப்­பட்­டுள்­ள­தோடு, வரு­ட­மொன்­றுக்கு பத்து இலட்­சம் பேர் வரை­யி­லான வானூர்திப் பய­ணி­கள் மத்­தள வானூர்தி நிலை­யம் ஊடா­கப் பய­ணிப்­பர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

எதிர்­கா­லத்­தில் இந்த வானூர்தி நிலை­யம் விஸ்­த­ரிக்­கப்­பட வேண்­டிய தேவை ஏற்­பட்­டால், பாதிப்பு எது­வு­மின்றி குறைந்த செல­வு­டன் மேல­திக நிர்­மா­ணப் பணி­களை மேற்­கொள்­ளத்­தக்க விதத்­தில் உரிய திட்­ட­மி­டல் செயற்­பா­டு­கள் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன.

எந்­த­வொரு வர்த்­தக நட­வ­டிக்­கைக்­கும் வர்த்­தக ரீதி­யி­லான திட்­ட­மி­டல் அவ­சி­ய­மா­கி­றது. அந்­த­வ­கை­யில் சில வானூர்தி பயண நிறு­வ­னங்­கள், மத்­தள விமான நிலைய நிர்­வா­கத்­து­டன் ஒப்­பந்­தங்­களை மேற்­கொண்­டுள்­ளன.

அம்­பாந்­தோட்டை தொழில் நக­ரம் உரு­வாக்­கப்­பட்டு முடிந்­த­வு­ட­னும், உல்­லா­சப் பய­ணத்­துறை அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­மி­டத்­தும், தேவை­யின் அதி­க­ரிப்­புக்­குச் சமாந்­த­ர­மாக, அவ்­வி­தம் மென்­மே­லும் வானூர்தி நிறு­வ­னங்­க­ ளு­டன் ஒப்­பந்­தங்­களை மேற்­கொள்­ளும் வாய்ப்­புக் கிட்­டும்.
ஆனால் கடந்த 2015ஆம் ஆண்­டின் அர­சி­யல் மாற்­றத்­தின் பின்­னர், குறித்த இந்த வர்த்­த­கத் திட்­டம் புற­மொ­துக்­கப்­பட்­டி­ருந்­தது. மத்­தள வானூர்தி நிலை­யக்­கட்­ட­டங்­கள் நெல் பாது­காத்து வைக்­கும் களஞ்­சி­யங்­க­ளாக கூட்டு அர­சால் மாற்­றப்­பட்­டன.

அந்த வகை­யில் புதி­தாக விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் தொடர்­பான ஒப்­பந்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­குப் பதி­லாக, ஒரு­சில வானூர்திப் பயண நிறு­வ­னங்­க­ளு­டன் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த ஒப்­பந்­தங்­கள் கைவி­டப்­பட நேர்ந்­தது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கம்– மத்­தள  வானூர்தி நிலை­யம் தொடர்­பில் ஒரே­வித கொள்கை  நிலைப்­பாட்­டைக் கடைக்­கொள்­ளும் அரசு

அந்­த­வ­கை­யில், அம்­பாந்­தோட்டை துறை­மு­க விட­யத்­தில் செயற்­பட்­டமை போன்று, மத்­தள வானூர்தி நிலைய விட­யத்­தி­லும், ரணி­லின் அரசு ஒரே வித­மான கொள்கை நிலைப்­பாட்­டையே கடைக்­கொண்­டது.

அது, முத­லா­வது வர்த்­தக ரீதி­யான செயற்­பா­டு­களை நலி­வ­டைய விட்டு, இரண்­டா­வ­தான திட்­டத்தை வௌித்­த­ரப்­புக்கு விற்­பனை செய்­த­மையை நியா­யப்­ப­டுத்­து­தல் ஆகும்.

அரசு கூறும் எந்­த­வொரு பொய்­யை­யும் உண்­மையெ நம்­பும் சிலர், மத்­தள வானூர்தி நிலை­யம் நாட்­டுக்கு பெரும் சுமை­யான, பெரி­ய­தொரு முத­லீ­டா­கு­மென நம்­பு­வது உண்­மை­யான அடிப்­ப­டைத் தக­வல்­களை அறி­யா­தி­ருப்­ப­த­னால் ஆகும்.

உண்­மை­யில் மத்­தள வானூர்தி நிலை­யம் உரு­வாக்­கப்­பட்­டது 30 பில்லியன் ரூபாக்­க­ ளுக்­குக் குறை­வான செல­வி­லேயே ஆகும்.

இன்­றைய கூட்டு அரசு பத­விக்­கு­வந்த பின்­னர் மேற்­கொண்ட இரண்டு தவ­றான முடி­வு­க­ளான துறை­முக நகர் உரு­வாக்­கும் திட்­டத்தை இடை­நி­றுத்தி வைத்­தமை மற்­றும் சிறி­லங்­கன் வானூர்திச் சேவை நிறு­வ­னத்­தால் கொள்­வ­னவு செய்­யப்­ப­ட­வி­ருந்த புதிய விமா­னங்­க­ளுக்­கான கொள்­வ­ன­வுக் கட்­ட­ளையை கைவிட்­டமை என்­ப­வற்­றின் மூலம் செலுத்­த­வேண்டி ஏற்­பட்ட நட்ட ஈட்­டுத் தொகை மட்­டும் 40 பில்­லி­யன் ரூபா வரை­யா­கு­மெ­னத் தெரிய வரு­கின்­றது.

நாட்­டின் சொத்­துக்­க­ளின் நிர்­வா­கத்தை வௌிநாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு கைய­ளித்து, அந்த நிறு­வ­னங்­கள் மூலம் அவை அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டும்­போது அது இலங்­கைக்கு இலா­ப­க­ர­மா­னது என்­ற­தொரு மாயைத் தோற்­றம் தலைமை அமைச்­சர் ரணி­லின் அர­சால் நாட்டு மக்­கள் மத்­தி­யில் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது.

ஆனால், அதற்­காக இந்த நிறு­வ­னங்­க­ளுக்கு பெரு­ம­ள­வி­லான வரிச்­ச­லுகை அர­சி­னால் வழங்­கப்­ப­டு­கி­றது என்­ப­தை­யும், அதன் கார­ண­மாக அடுத்த பரம்­ப­ரைக்­குக்­கூட இலங்கை அர­சின் இந்த வர்த்­தக முயற்­சி­யால் இலா­ப­மெ­து­வும் ஈட்­டத்­தக்க வாய்ப்பு இல்லை என்ற உண்­மை­யை­யும் அரசு பொது­மக்­க­ளுக்கு வௌிப்­ப­டுத்­தா­மல் மறைத்து விடு­கி­றது.

இவை மட்­டு­மன்றி, அண்­மை­யில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள சிங்­கப்­பூர் வர்்த்­தக ஒப்­பந்­தம் முதல் , மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள இந்­திய வர்த்­தக ஒப்­பந்­தம் வரை, நிர்­வாக அதி­கா­ரி­கள் தொடக்­கம் அந்­தத் திட்­டங்­க­ளில் கட­மை­யாற்­ற­வுள்ள கூலித்­தொ­ழி­லா ­ளர்­கள்­வரை, தத்­தம் நாட்­டுப் பிர­சை­கள் மத்­தி­யி­லி­ருந்தே நிய­ம­னம் செய்­வ­தற்­கான சலுகை இந்த வௌிநாட்டு நிறு­வ­
னங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால் இந்த நாட்­டின் இளை­ஞர் யுவ­தி­க­ளுக்கு குறித்த வௌிநாட்டு நிறு­வ­னங்­கள் மேற்­கொள்­ளும் வேலைத்­திட்­டங்­க­ளில் வேலை வாய்ப்­புப்­பெ­றும் சந்­தர்ப்­பம் கிட்­டாது போய்­வி­ட­வுள்­ளது.

அந்த வகை­யில் இந்த அர­சுத் தலை­வர்­க­ளது இத்­த­கைய ஏமாற்­றுக்­களை இனம் கண்டு தெரிந்து கொள்ள சாதா­ரண பொது­மக்­க­ளால் முடி­வ­தில்லை. இன்­றைய அர­சுத் தலை­வர்­கள் நாளாந்­தம் இந்த நாட்­டுக்­குச் செய்­யும் துரோ­கம் மிக­மி­கப் பார­தூ­ர­மா­னது.

நீர்­மூழ்­கிக் கப்­பற்­ப­டைப் போர்  இடம்­பெ­ற­லா­மென எதிர்வு கூறும் ரணில்

அண்­மை­யில் குறிப்­பிட்ட அரச நிகழ்­வொன்­றில் கலந்­து­கொண்டு கருத்­து­வௌி­யிட்ட தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, புது­மை­யான தக­வ­லொன்­றைத் தெரி­வித்­தி­ருந்­தார்.

மிகக்­கிட்­டிய எதிர்­கா­லத்­தில் இலங்­கையை சூழ­வுள்ள கடற்­பி­ராந்­தி­யத்­தில் இரு நாடுகளது நீர்­மூழ்­கிக் கப்­பல் படைப் பிரி­வு­கள் மத்தியில் போர் ஒன்று இடம்­பெற வாய்ப்­பி­ருப்­ப­தால், அதற்கு முகம் கொடுக்­கும் வகை­யில் எமது நாட்­டுத் துறை­மு­கங்­க­ளைப் பாது­காக்க அரசு கடற்­ப­டை­யி­ன­ருக்கு முன்­னு­ரிமை வழங்­க­வுள்­ள­தாக தலைமை அமைச்­சர் குறிப்­பிட்­டி­ ருந்­தார்.

இது விட­யத்­தில் எதிர்­கா­லத்­தில் இலங்­கை­யில் தமது முக்­கி­யத்­து­ வத்தை நிலை­நாட்ட சீனா­வும் இந்­தி­யா­வும் போரொன்­றில் ஈடு­பட வாய்ப்­புள்­ளது என்­ப­தையே தலைமை அமைச்­சர் இவ்­வி­தம் சொல்­லா­மல் சொல்­லி­யி­ருக்­கி­றார் எனக் கொள்ள முடி­கி­றது.

அந்த வகை­யில் தனது அண்டை நாடு­க­ளான இந்­தியா மற்­றும் சீனா­வு­டன் அர­சி­யல் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­திக் கொள்­ளாத இலங்­கையை, பன்­னாட்டு ரீதி­யி­லான போரொன்­றில் மாட்­டிக்­கொள்ள வைக்­கும் வகை­யில் ஆபத்து நிலை­யொன்றை உரு­வாக்கி வைத்­துள்­ள­வர்­கள் எவர் என்ற கேள்வி இங்கு எழு­கி­றது.

ஒன்­றுக்­கொன்று மிகக்­கு­று­கிய தூர இடை­வௌி­யில் அமைந்­துள்ள அம்­பாந்­தோட்டை துறை­மு­கம் மற்­றும் மத்­தள வானூர்தி நிலை­யம் என்­ப­வற்றை முறையே சீனா மற்­றும் இந்­தியா ஆகி­ய­வற்­றுக்கு நிர்­வ­கிக்க வழங்­கி­யுள்­ள­தன் மூலம் மோதல்­க­ளுக்­குத் தானே வழி­ய­மைத்­துக் கொடுத்­துள்­ளது இன்­றைய இலங்கை அரசு.

இன்­றைய அர­சின் தான்­தோன்­றித்­த­ன­மான இந்­தச் செயற்­பா­டு­கள் இலங்­கை­யின் எதிர்­கா­லத்­துக்கு எத்­த­கைய பார­தூ­ர­மான பாதிப்பை, அபா­யத்தை ஏற்­ப­டுத்­தப் போகின்­றன என்­பது குறித்­து தற்­போது எத­னை­யும் எதிர்­வு­கூற இய­லா­துள்­ளது.

http://newuthayan.com/story/09/தீர்க்கதரிசனமற்ற-முடிவுகளால்-சிக்கலில்-மாட்டிக்-கொண்டுள்ள-இலங்கை-அரசு.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.