Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒருவாரத்தில் எமக்கு

Featured Replies

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒருவாரத்தில் எமக்கு

city-01Page1Image0012-02e19f1c5aaf0319bd120b511d8f9e76227007e0.jpg

 

(ரொபட் அன்டனி)

இன்னுமொரு வாரத்தில் கூட்டு எதிரணி க்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்க வேண்டும். அந்த பதவியைப் பொறுப் பேற்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.இதுதொடர்பில் சபாநாயகர் என்ன முடிவை அறிவிக்கப் போகின்றார்  

என நாங்கள்  எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்று மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் பாராளுமன்றக்குழுத்தலைவரும் எம்.பி.யுமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.  

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார். அதன்படி இன்னும் ஒருவாரத்தில் எமக்கு சரியான தீர்மானம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமது அணிக்கு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கூட்டு எதிரணியின் பிரதிநிதிகள் தினேஷ் குணவர்த்தன தலைமையில் அண்மையில் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

அதுதொடர்பில் வினவியபோதே தினேஷ் குணவர்த்தன இந்த விடயத்தை குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற வகையில் கூட்டு எதிரணியிடம் 70 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கே வழங்கப்படவேண்டும். ஆனால் 16 உறுப்பினர்களை கொண்ட தமிழ்கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கினர்.

அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதொடர்பில் நாம் பலதடவை சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இதற்கு உரிய பதில்கள் கிடைக்காததால் அண்மையில் எனது தலைமையில் கூட்டு எதிரணியின் பிரதிநிதிகள் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்தனர்.

எமது கோரிக்கைக்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி தனது தீர்மானத்தை அறிவிப்பதாக உறுதியளித்திருக்கின்றார். அதன்படி ஒரு இன்னும் ஒருவார காலத்தில் கூட்டு எதிரணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என நம்புகின்றோம்.

கூட்டு எதிரணியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் என்ற ரீதியில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அலங்கரிப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். இன்னும் ஒருவாரகாலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எமது அணிக்கு சபாநாயகர் பெற்றுக்கொடுக்கவில்லையென்றால் அதற்கு அடுத்த கட்டமாக என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நாங்கள் தீர்மானம் எடுப்போம். எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கு உரித்தானது. அது எமக்கு கிடைத்தாகவேண்டும். அதில் விட்டுக்கொடுப்பை செய்ய நாம் தயாரில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-30#page-1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

கூட்டு எதிரணியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் என்ற ரீதியில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அலங்கரிப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.

இப்ப அந்த எதிர்க்கட்சி கதிரையிலை இருக்கிறவர் சும்மாதானே இருக்கிறார்.......நீங்களாவது அதிலையிருந்து பிரயோசனப்படுத்துங்கோ :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.