Jump to content

வேட்டையில் கிடைத்தது வேறொன்று!


Recommended Posts

பதியப்பட்டது
 
 
 
 
 
 
 
வேட்டையில் கிடைத்தது வேறொன்று!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
E_1533268754.jpeg
 
 

கோடையின் வெம்மையில் தகித்த இரவும், உளைச்சலில் தவித்த மனமும் அவனை ஒரு வழியாக்கியிருந்தன.
''இன்னிக்கு ரெண்டு இடம் போகணும்ன்னு சொன்னேல்ல...'' என்றபடி காபி கோப்பையை நீட்டினாள், அம்மா.
அமைதியாக அதை வாங்கிக் கொண்டான்.
அப்பா குளித்து முடித்து, தினசரியை வாசித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். அவன் பார்வையின் குறிப்பை அறிந்து, ''சுமதி வரன் விஷயமா, அயனாவரம் வரை போயிட்டு அப்படியே வேலைக்கு போறேன்னு சொன்னாரு உங்கப்பா...'' என்றாள்.
''வரனா... நம்ம சுமதிக்கா... அதுக்குள்ள என்னம்மா...'' என்றான். காபி இப்போது தொண்டையில் நின்றது.
''சுமதிக்கு, 23 வயசு முடியுது; அடுத்தது, சின்னவ இருக்கா... உங்கப்பாவுக்கு சர்வீஸ் முடிய இன்னும் ரெண்டு வருஷம்தானே இருக்குது... அதுக்குள்ள முடிச்சா, கொஞ்சம் செல்வாக்கா இருக்கும்ன்னு யோசிக்கிறாரு...'' என்றாள் அம்மா.
''ஏம்மா நான் இல்லயா... மூணு வருஷமா, ஐ.டி., கம்பெனில சம்பாதிச்சுகிட்டுதானே இருந்தேன்... இப்ப நிலைமை சரியில்ல; எங்க கம்பெனி மட்டும் இல்ல, நாடு பூரா ஏன் உலகம் பூரா இப்படித்தான் இருக்கு. ஆட்சி மாற்றம் வருது, புதுப்புது அதிபர்கள் வராங்க, புதுப்புது பாலிசியா மாத்தறாங்க; இப்ப, எனக்கு வேலையில்லாம போனதுக்கு கூட அதுதான் காரணம். நிச்சயமா, நல்ல வேலை கிடைக்கும்மா... நீயும், அப்பாவும் கவலைப்படாம இருந்தாலே போதும்,'' என்று எழுந்து, வேகமாக குளியலறைக்குள் நுழைந்தான், கதிர்.

 


காலம் இப்படியே போய் விடுமோ என்ற அச்சம், இப்போதெல்லாம் சாரைப் பாம்பு போல, அவன் மனதை பின்னுகிறது. நிரந்தரம் என்று நினைத்த வேலைக்கு வேட்டு வைத்து விட்டனர். உடலையும், உள்ளத்தையும் உருக்கி, உண்மையாகத் தான் உழைத்தான். பூத்துக் குலுங்கும் மஞ்சள் மரங்கள் சூழ இருக்கும், தன் கார்ப்பரேட் அலுவலகத்தின் உள்ளே நுழையும்போதே உற்சாகமாகத்தான் இருக்கும்.
ஒரு சிலரைப் போல், கூலிக்கு மாரடிக்கும் உத்யோகம் என்று அவன் நினைத்ததே இல்லை; கற்றுக்கொள்வதில் இயற்கையாகவே ஆர்வம். கூட இருப்பவர்களை விட இரண்டு படி மேலே இருக்க வேண்டும் என்கிற தன் முனைப்பு. அவனின் அத்தனை உழைப்பும், ஒரே நாளில் விழலுக்கு இறைத்த நீராகி போனது. என்ன... அவன் திறமைக்காக கூடுதலாக, மூன்று மாதம் நீட்டிப்பு கொடுத்து, வீட்டுக்கு அனுப்பி விட்டது.
அனுபவச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் என்று புகழாரம் சூட்டினர். அவற்றை வைத்து, கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறான். 'என்ன உலகம் இது... நேர்மைக்கும், திறமைக்கும் மதிப்பில்லை; காற்றின் அலட்டலுக்கு ஏற்றபடி ஆடும் வேப்ப மரக்கிளை போல, மத்திய தர வாழ்க்கை. வயதான பெற்றோர், பருவ விளம்பில் நிற்கும் தங்கைகள் என்று கயிற்றை வைத்து கட்டிப்போட்ட வாழ்க்கை; உழைக்க தயாராக இருந்தும், வாய்ப்பே தராத வாழ்க்கை...' அவன் மனம், உலைக்களனாக கொதித்தது.


வேதனையுடன், வேலை தேடும் வேட்டைக்கு கிளம்பினான், கதிர்.
வாசலுக்கு வந்து பைக்கை எடுத்தபோது, வேகமாக வந்த தங்கை, ''அண்ணா... ஒரு ஹெல்ப் ப்ளீஸ்...'' என்றாள்.
''சொல்லும்மா...''
''ஆபீஸ்ல ஒரு பெரிய பார்ட்டி; கேர்ள்ஸ் எல்லாம் ஒரே மாதிரி டிசைனர் புடவை வாங்கினோம்; இன்னும் பிளவுஸ் தைக்கல. கொஞ்சம் போற வழியில டெய்லர்கிட்ட கொடுக்க முடியுமாண்ணா...'' என்றாள், தயக்கத்துடன்!
''கொடும்மா...'' அமைதியாக வாங்கிக் கொண்டான்.
''தாங்க்ஸ்ணா... நாளைக்கு நைட்டே வேணும்ன்னு சொல்லிடுங்க; இதோ அளவு ஜாக்கெட்; இதுல போட் நெக் வைக்கணும்ன்னு மட்டும் சொன்னா போதும்.''
''சரிம்மா...'' என்று மெல்ல முறுவலித்து, கிளம்பினான்.
சிறிய கார்ப்பரேட் அலுவலகம் மாதிரி இருந்தது, அந்த தையல் கடை. ஆச்சரியத்துடன் சுற்றிலும் பார்வையை சுழல விட்டான், கதிர். சில்லென்று, ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட மினி ஹால்; அதில், அரை வட்ட மேசைக்கு பின், நளினமான புன்னகையுடன் அமர்ந்திருந்தாள், ஓர் இளம் பெண். அவள் எதிரில் நவீன கணினி கையடக்கமாக, 'பளிச்' சென்றிருந்தது. அழகான பாலிமர் எழுத்துகளில் பளிச்சிட்டது, 'ரிசப்ஷன்' என்ற போர்டு. பக்கவாட்டில் இரண்டு அறைகள்; தையல் இயந்திரங்கள் இயங்கும் சத்தம் மெலிதாக கேட்டது.


''என்ன சார் வேணும்...'' என்றாள், வரவேற்பு பெண்.
''அவசரமா ஒரு பிளவுஸ் தைக்கணும்... என் சிஸ்டர் கொடுத்தாங்க... நாளை மாலைக்குள்ள வேணும்,'' என்றான்.
''சாரி சார்... இன்னும் பத்து நாளைக்கு, அசையக் கூட முடியாத அளவுக்கு வேலை இருக்கு; அர்ஜென்ட் என்கிறதுக்கு சான்சே இல்ல.''
''என்ன மேடம் இப்படி சொல்றீங்க... ஒரு முக்கியமான பங்ஷன்...''
''மன்னிச்சுக்கங்க சார்... மூச்சு கூட விட முடியல; அவ்வளவு கமிட்மென்ட்ஸ். கொடுத்துட்டு போங்க; தர்மராஜ் சார் வந்தா சொல்றேன்!''
''யார் அவரு?''
''ஓனர்.''
''எப்ப வருவார்?''
''இப்ப வந்துடுவார்.''
உட்கார்ந்தான்; இளம்பெண்கள் கூட்டம் உற்சாகமாக வந்தது; தர்மராஜும் பின்னாலே வந்தான். தன் புது இன்னோவாவை ஓட்டுனரிடம் கொடுத்து, ஏதோ வேலை சொல்லி, உள்ளே வந்தான், தர்மராஜ்.
கதிருக்கு அவன் முகம் எங்கோ பார்த்தது போல் தோன்றியது. கூர்ந்து பார்த்தான். 'அட... இவன், சாந்தி காலனி தர்மா... பத்து வருஷத்துக்கு முன், தெரு கிரிக்கெட் உலகின் ராஜா. எத்தனை மேட்சுகள் இவனுடன் விளையாடி ஜெயித்தும், தோற்றும் இருக்கிறோம்...' என்று நினைத்தான்.
பிளஸ் 2 முடித்ததும், கதிரும், அவன் நண்பர்களும் பொறியியல் படிப்புக்கு போயினர். 'ஜஸ்ட் பாஸ்' வாங்கிய தர்மா, டிப்ளமோ படித்தான்.
''சார்... எனக்கு, 'பேக் நெக்ல' போ வரணும்; அப்புறம், கையில பேட்ச் ஒர்க்,'' என்றாள் ஓர் இளம்பெண், அவனிடம்!
''சரிம்மா செஞ்சுடலாம்.''


''கேரளா சாரிக்கு ஹை நேக் வைக்கணும்; இந்த லினன் சாரிக்கு டீப் பாட் நெக்,'' என்றாள் இன்னொருத்தி!
எல்லாவற்றையும் பொறுமையாக, நோட்டில் குறித்துக் கொண்டான், தர்மா.
''ஓகே... பேக் நெக் வித் போ தைக்க ஐநுாறு... பைப்பிங் லைனிங் மெட்டீரியல் எல்லாம் சேர்த்தா, ஆயிரம் ரூபாய் வரும். அப்புறம், இந்த கேரளா சாரிக்கு, ஹை நெக் வெச்சு, நெட்டட் கிளாத் போட்டாதான் நல்லா இருக்கும்; 1,200 ரூபாய். லினன் சாரிக்கு, பாட் நெக் வித் எம்பிராய்டரி செய்ய, 2,000 ரூபாய்,'' என்றவன், வரவேற்பு பெண்ணிடன், ''பில் கொடுத்துடும்மா...'' என்றான்.
''எம்பிராய்டரிக்கு கொஞ்சம் குறைக்கக் கூடாதா?'' என்றாள் ஒருத்தி.
''சாரிம்மா... எங்க பில் பக்கவா இருக்கும்; ஒரு பைசா கூட குறைக்க முடியாது.''
''சரி சார்... சொன்ன டேட்ல கொடுத்துடுவீங்கள்ல?''
''அதெல்லாம், 'கன்' மாதிரி கொடுத்துடுவோம்,'' என்று அவன் சிரிக்க, மகிழ்ச்சியுடன் வெளியேறியது, மலர் கூட்டம்.
இருக்கையில் இருந்து எழுந்து தர்மாவிடம் போனான், கதிர்.


''தர்மா... நான் யார்ன்னு தெரியுதா... கதிரவன்; ராம் நகர் கிரிக்கெட் டீம்,'' என்று புன்னகைத்தான்.
தர்மராஜின் முகம் மலர்ந்தது.
''கதிர் நீயா... வாப்பா வா வா... எவ்வளவு வருஷம் ஓடிப் போச்சு... நல்லா இருக்கியா?'' என்று கைப்பற்றி சிரித்தான்.
''அது இருக்கட்டும்; இதென்ன தேவலோகமா... நீ இங்க ராஜாவா... மினி, எம்.என்.சி., மாதிரி இருக்குப்பா உன் இடம். என் தங்கச்சி, இங்கதான் தைக்கணும்ன்னு கொடுத்து அனுப்புது. இவ்வளவு கூட்டம் வந்து, நீ சொல்ற பேச்சுக்கு மறு பேச்சில்லாம தலையாட்டிட்டு போகுது எப்படிப்பா...''
''அட அதெல்லாம் ஒண்ணுமில்ல; சும்மா அம்மாவுக்கு ஹெல்பா வீட்டுல தைக்க ஆரம்பிச்சு, அப்படியே இன்ட்ரஸ்ட் வந்து, முறையா கத்துக்கிட்டேன். அப்புறம், பேஷன், பத்திரிகை, யூ டியூப் அது இதுன்னு பார்த்து மெல்ல, 'டெவலப்' பண்ணிகிட்டேன். மெல்ல கூட்டம் வர ஆரம்பிச்சுது; பிரைடல் பிளவுஸ், லெஹங்கா அது இதுன்னு இப்போ இன்னும், 'இம்ப்ரூவ்' பண்ணிட்டேன்.''


''அற்புதம் தர்மா... உன் ஊதியத்தை நீ டிசைட் பண்றே; உன் திறமை எதுன்னு நீயே கண்டுபிடிச்சு அதை கடை விரிச்சு அழகா சர்வீஸ் பண்ணுற. பிரமாதம்; எனக்கு கண் திறந்த மாதிரி இருக்கு. வெப் டிசைனிங், சீக்குவல்னு எனக்கும் ஸ்பெஷல் புரோகிராம்லாம் தெரியும்; ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு செஞ்சு தரலாம். மெல்ல, ஆன் - லைன்ல சிறப்பான இடம் பிடிக்கலாம். வரேன்; ரொம்ப நன்றிப்பா,'' என்று தன்னை மறந்து படபடத்தான்.
''கதிரு, நீ சொல்றது பாதி புரியுது; ஆனா, ஒண்ணு சொல்றேன்... உன் தங்கச்சிக்கு இன்னிக்கே தெச்சு கொடுத்துடறேன்; சரியா, நண்பன் இல்லயா?'' என்று கூறி சிரித்தான் தர்மராஜ்.
''ஆனா, நீ, என் குரு,'' என்று கூறி சிரித்தான், கதிர்.

http://www.dinamalar.com/

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.