Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அச்­ச­மூட்­டும் அமெரிக்கா– சீனா வர்த்­த­கப் போர்!!

Featured Replies

அச்­ச­மூட்­டும் அமெரிக்கா– சீனா வர்த்­த­கப் போர்!!

 

 

cnn-image-of-trump-and-jinping-750x430.j

 
 

அமெ­ரிக்கா – சீனா இடை­யில் வர­லாற்­றில் என்­று­மில்­லாத அள­வுக்­குத் தீவி­ரம் பெற்­றுள்­ளது வர்த்­த­கப் போர். அடுத்து என்ன நடக்­குமோ என்­கிற வகை­யில் பதற்­றத்­தில் உறைந்­துள்­ளன உலக நாடு­கள். ஐக்­கிய நாடு­கள் சபை­கூட இதற்கு விதி­வி­லக்­கில்லை.

நேர­டித் தாக்­கு­தல்­கள்
கடந்த சில மாதங்­க­ளா­கக் காப்பு வரி­யைப் பரஸ்­ப­ரத் தாக்­கு­த­லுக்­கான ஆயு­த­மாக வைத்து எச்­ச­ரித்­துக்­கொண்­டி­ருந்த அமெ­ரிக்­கா­வும் சீனா­வும், தற்­போது வர்த்­த­கப் போரில் நேர­டி­யாக இறங்­கி­யி­ருக்­கின்­றன. இரு நாடு­க­ளும், இறக்­கு­ம­திப் பொருள்­கள் மீது 25சத­வீ­தம் காப்பு வரி­யைப் பரஸ்­ப­ரம் விதித்­துக்­கொண்­டுள்­ளன. இதன் மதிப்பு 3 ஆயி­ரத்து 400 கோடி அமெ­ரிக்க டொலர்­கள். ““பொரு­ளா­தார வர­லாற்­றி­லேயே இது­தான் மிகப் பெரிய வர்த்­த­கப் போர்’’ என்று சீனா வர்­ணிக்­கி­றது. உல­கம் இது­வரை பார்த்­துள்ள பெரிய போர்­க­ளை­விட இது ஒன்­றும் பெரி­தல்ல என்­றா­லும் உல­கப் பொரு­ளா­தா­ரத்­துக்­குக் கணி­ச­மான நாசத்தை விளை­விக்கக் கூடி­யது இது என்­ப­தில் சந்­தே­க­மில்லை.

ஆரம்­பித்­த­வர் ட்ரம்ப்
சீனத்­தி­லி­ருந்து இறக்­கு­ம­தி­யா­கும் சூரி­ய­ஒளி மின்­சா­ரத் தயா­ரிப்பு சாத­னங்­கள், சலவை இயந்­தி­ரங்­கள் ஆகி­ய­வற்­றின் மீது காப்பு வரியை விதித்த ட்ரம்ப், சீனத்­தின் அனைத்­துப் பொருள்­கள் மீதும் தொடர்ந்தும் வரி விதிக்­கப்­படும் என்றும் எச்­ச­ரித்­தி­ருக்­கி­றார். இதை ட்ரம்ப் ஆத­ர­வா­ளர்­கள் வேண்­டு­மா­னால் ரசிக்­கக்­கூ­டும். ஆனால், அமெ­ரிக்­கா­வி­டம் சீனா வாங்­கு­வது குறை­வா­க­வும், விற்­பது அதி­க­மா­க­வும் இருப்­ப­தால் வெளி­வர்த்­த­கப் பற்­றாக்­குறை அமெ­ரிக்­கா­வுக்கு அதி­க­ரித்­துக்­கொண்டே வரு­கி­றது. அமெ­ரிக்­கா­வுக்­குப் பதி­லடி தரும் வகை­யில், அங்­கி­ருந்து வரும் சோயா­பீன்ஸ், மோட்­டார் வாக­னங்­கள், உதி­ரி­பா­கங்­கள் போன்­ற ­வற்­றுக்கு சீனா­வும் காப்பு வரியை விதித்­தி­ருக்­கி­றது. இத­னால், அமெ­ரிக்­கா­வில் ஏரா­ள­மா­ன­வர்­கள் வேலை­யி­ழப்­பார்­கள். ஐரோப்­பிய ஒன்­றி­யம், மெக்­சிக்கோ, கனடா ஆகி­ய­வை­யும்­கூ­டப் பதி­ல­டி­யாக அமெ­ரிக்­கப் பொருள்­கள் மீது காப்பு வரி விதித்­துள்­ளன.

 

காப்பு வரி­யென்­பது தற்­காப்பு அல்­ல
உல­கம் சுருங்­கி­விட்ட நிலை­யில் எந்த நாடும் தனக்­குப் பாதிப்பு இல்­லா­மல் காப்பு வரி விதித்­துப் பிழைத்­துக்­கொள்ள முடி­யாது. வரி­வி­திப்­ப­தால் பொருள்­க­ளின் விலை உயர்ந்து நுகர்­வோ­ ருக்­குச் சுமை­யைக் கூட்­டும் என்­ப­து­டன், உற்­பத்­தி­யில் ஈடு­ப­டும் தொழில்­மு­னை­வோர்­க­ளுக்கு உற்­பத்­திச் செல­வும் அதி­க­ரிக்­கும். அது அவர்­க­ளு­டைய இலா­பத்­தை­யும் ஏற்­று­ம­தி­யை­யும் விற்­ப­னை­ யை­யும் சரித்­து­வி­டும். பல இறக்­கு­ம­தி­கள் அத்­தி­யா­வ­சி­ய­மா­னவை. அவற்­றுக்­குத் தடை விதித்­தாலோ, அதி­க­மாக வரி விதித்­தாலோ வர்த்­த­கச் சங்­கி­லியே அறு­பட்­டு­வி­டும். உலக வர்த்­த­கத்­தில் ஏதே­னும் பிரச்­சினை என்­றால் அதை உரிய அமைப்பு மத்­தி­யஸ்­தம் செய்து தீர்த்­து­வந்­தது.

இப்­போது அந்த விதி­களை மதிக்­கா­மல் நேர­டி­யா­கக் காப்பு வரி விதித்து களத்­தில் மோதிக்­கொண்­டால் உலக வர்த்­த­கம் சுருங்­கி­வி­டும். அது உற்­பத்தி, வேலை­வாய்ப்பு, வரு­மா­னம் என்று எல்­லா­வற்­றை­யும் பாதிக்­கும்.

இந்­நிலை தொடர்ந்­தால் வர்த்­த­கத்­தைப் பெருக்க என்ன செய்­ய­லாம் என்று யோசிக்­கும் பல நாடு­கள், தங்­க­ளு­டைய செலா­வ­ணி­யின் மாற்று மதிப்­பைத் தாங்­க­ளா­கவே குறைத்­துக்­கொள்­ள­வும் முன்­வ­ர­லாம். தொடக்­கத்­தில் இது ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு உத­வி­யாக இருந்­தா­லும், பிறகு அனை­வ­ருக்­குமே ஆபத்­தாக முடி­யும். மிக­வும் மெது­வா­கத்­தான் மீண்­டு­வ­ரு­கி­றது உல­கப் பொரு­ளா­தா­ரம். அதற்­குள் இப்­ப­டித் தேவை­யற்ற அதிர்ச்­சி­களை அர­சி­யல் உள்­நோக்­கத்­து­டன் அளித்­தால் பொரு­ளா­தா­ரத்­தால் அதைத் தாங்­கவே முடி­யாது!

http://newuthayan.com/story/11/அச்­ச­மூட்­டும்-அமெரிக்கா-சீனா-வர்த்­த­கப்-போர்.html

  • தொடங்கியவர்
மேற்கத்தேய பொருளாதாரக் கொள்கைகளில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு
 
 

- ஜனகன் முத்துக்குமார்

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜீன்-க்ளூட் ஜுங்கருக்கும் இடையேயான சந்திப்புக்குப் பின், ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தேவையான சோயா அவரை, திரவப் பெற்றோலிய எரிவாயு என்பவற்றை, ஐ.அமெரிக்காவிடம் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் கொள்வனவு செய்வதாகவும், அதற்குப் பதிலாக ஐ.அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய வாகன இறக்குமதிக்கான தீர்வையை 20 சதவீதத்தால் அதிகரித்தலை நிறுத்திவைத்தல் என்பன, உடன்பாடாக எட்டப்பட்டிருந்தன. இது, தற்காலிகமாகவே ஐரோப்பிய ஒன்றியம் - ஐ.அமெரிக்கா இடையிலான வர்த்தக நிலைமைகளைச் சீர்செய்வதற்கான ஒரு முனைப்பாகப் பார்க்கப்படுவதுடன், அத்திலாந்திக் கூட்டணி இன்னும் வர்த்தக யுகத்தில் தமது நிலையான இருப்பைப் பேண இது உதவும் எனவுமே கருதப்படுகின்றது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த ஐ.அமெரிக்க - ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும், இதன்படி, கைத்தொழில் பொருட்களுக்கான வியாபாரத் தீர்வை தொடர்பாக இருதரப்பு ஒப்பந்தமொன்று ஏற்படுத்தப்படும் எனவும், குறித்தஒப்பந்தத்தின்அடிப்படையில், உலக வர்த்தக அமைப்பில் (WTO) சீனாவும் சேர்த்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

குறித்த அமைப்பில் சீனாவைச் சேர்ப்பதற்கான காரணங்களில், ஐ.அமெரிக்க வர்த்தக தூதர் தூதர் டென்னிஸ் ஷியாவின் கூற்றுப்படி, “சீனாவின் சீர்குலைக்கும் பொருளாதார மாதிரி” உலக வர்த்தக அமைப்பின் ஏனைய அனைத்து உறுப்பினர்களுக்கும் மிகப்பெரிய பொருளாதார அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன், சீனா, குறித்த பொருளாதார நலன்களைப் பெறுவதற்கு கையாளும் முறைமைகள், வர்த்தகச் சட்டதிட்டங்களுக்கு முரணானவை என்பதே ஆகும். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியே, சீனாவின் அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக அமைக்கும் இந்நிலையில், பல சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை சீனா மீறுவதன் மூலம், அதன் வணிக - வர்த்தகக் கொள்கையை விரிவுபடுத்துகின்றது எனவும், தூதர் ஷியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், 2005 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதியில், சீனா தனது முரண்பாடான வர்த்தகக் கொள்கை மூலமாகவே, உலகின் 2ஆவது பெரிய பொருளாதார நாடாக விருத்தியடைந்ததும், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதத்தையும் தக்கவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஐ.அமெரிக்காவுக்குச் சார்பாக ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியவை, சீனாவுக்கு எதிரான ஒருமித்த கருத்தை WTOஇல் ஆதரித்துள்ளதுடன், சீன அரச நிறுவனங்களின் “வர்த்தகத்தைச் சிதைக்கும்” நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய தொழிற்றுறைத் தீர்வைகளை வழங்குவதற்கு, WTO விதிகளில் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் பிரேரணையை முன்வைத்துள்ளமை அவதானிக்கத்தக்கது.

மறுபுறத்தில் ஐ.அமெரிக்கா, WTOஇல் சீனாவை இலக்காகக் கொண்டு, சீன நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய இரண்டு வர்த்தக முனைகளில் தனது வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்தத் தீர்மானித்தது. இந்த வர்த்தகப் போர், சீனாவின் நீண்டகாலப் பொருளாதார மட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கின்ற அதேவேளை, சீனா தனது தொழிற்சாலைகளை வடக்கு மலேஷியாவில் உள்ள பினாங்கு போன்ற வேறு இடங்களுக்கு மாற்றவும், இதனால் உற்பத்திச் சுங்க வரிகளைத் தவிர்ப்பதன் மூலம், உற்பத்திக்கான செலவில் அதிகப்படியான விலையைத் தவிர்க்கவும் குறித்த தொழிற்சாலைகள் முனைகின்றமை, சீனாவின் நேரடியான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானவையாக உள்ளன. இது, ஐ.அமெரிக்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஐக்கியப்பட்ட வர்த்தக ஒப்பந்தமொன்றை உருவாக்க முடியும் என்ற சீனாவின் நம்பிக்கையைத் தகர்த்துள்ளது. குறித்த நம்பிக்கையானது, சீனாவுக்கு பிரித்தானியாவால், முன்னதாக ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றுடன் இணைந்த, ஐ.அமெரிக்க தொழிற்ச்சந்தையை உள்வாங்காத ஒரு நிலையை கட்டியெழுப்ப வழங்கப்பட்டதாயினும், குறித்த இந்நிலையில், மேற்கத்தேய ஜனநாயகம் மீண்டும் தமது சொந்த நிகழ்ச்சிநிரலில் ஐ.அமெரிக்காவை உள்வாங்கியமை, சீனாவின் நீண்டகால ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பில் கொண்டிருந்த வர்த்தக நிலைப்பாட்டில் சறுக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார முன்னேற்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக, தனியார் துறையினது வளர்ச்சி, அரச துறையின் வெளிவிவகார பொருளாதார கொள்கைகள் என்பன அமைந்திருந்தன. உலகளாவியப் பொருளாதாரத்தில் நுழைவதற்கு சீனா, டெங் ஜியாவோபிங்கின் ஆலோசனைகளின் அடிப்படையில், தனது பொருளாதாரத்தை நான்கு தளங்களில் பேணியிருந்தது. அதன் அடிப்படையில் முதலாவதாக, கம்யூனிஸ முறையை உடைத்து, விவசாயிகளுக்குச் சொந்த நிலங்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன; நகர்ப்புற வணிக நடவடிக்கைகள் செழித்தோங்கியபோது, இரண்டாவது ஆரம்பமானது; மூன்றாவது தளமாக, சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை, தென்சீனக் கடலில் சீனா கொண்டுள்ள ஆக்கிரமிப்பாலும் அதிகாரத்தாலும் நிறுவப்பட்டிருந்தது. நான்காவதான தளம், உலக வர்த்தக அமைப்பில் சீனா இணைந்தபோது தொடங்கியது.

எது எவ்வாறாக இருந்தபோதிலும், சீனா, சர்வதேச விவகாரங்களில் குறைந்த சுயவிவரத்தை வைத்திருப்பதற்கான ஆலோசனையைப் புறக்கணித்து, அரசியல் தாராளமயமாக்கலில் ஈடுபட்டமையே, பெய்ஜிங்கின் அபாயகாரமான பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாகும். அரசாங்கத்தின் தலைமையிலான வளர்ச்சி மாதிரியைப் பொறுத்தவரையில், தனியார் துறை கட்டுப்படுத்தப்பட்ட போது, அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் முன்னேறின. இது, குறித்த காலத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடைசெய்ததுடன், இப்பொழுது, நடந்து வரும் வர்த்தக யுத்தம், மறுபுறத்தில் சீனாவைப் பலவீனப்படுத்தத் தொடங்கியுள்ளது.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மேற்கத்தேய-பொருளாதாரக்-கொள்கைகளில்-சீனாவுக்கு-எதிரான-நிலைப்பாடு/91-219946

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

அமெரிக்க சீன வணிகப்போர்

S-03Page1Image0001-e8cd0e58e77958ac45370d897330acd7dffccf01.jpg

 

சதீஷ் கிருஷ்­ண­பிள்ளை 

ஒரு போரில் சம்­பந்­தப்­பட்ட இரு தரப்­புக்கள். அவற்றின் சம­ரச முயற்­சிகள் தோல்­வியில் முடி­வ­டைந்­துள்­ளன.

இது பீரங்கிப் போரோ, அணு­வா­யுதப் போரோ அல்ல. வர்த்­தகப் போர். அமெ­ரிக்­காவும், சீனாவும் சம்­பந்­தப்­பட்ட போர்.

அமெ­ரிக்க - சீன அதி­கா­ரிகள் கடந்த வாரம் பீஜிங் நகரில் கூடிப் பேசி­னார்கள். பேச்­சு­வார்த்­தையில் சாத­க­மான பெறு­பேறு இல்லை.

இரு பொரு­ளா­தார திமிங்­கி­லங்­களும் வரிந்து கட்­டிக்­கொண்டு அடுத்த கட்ட வர்த்­தக சண்­டையை ஆரம்­பித்­தன.

சண்­டையில் திமிங்­கி­லங்கள் காயம் அடை­யலாம். திமிங்­கி­லங்­க­ளுக்கு ஏற்­படும் வலியை விடவும், சண்­டையில் சிக்கி உயி­ரி­ழக்கும் நெத்­தலி மீன்­களின் இழப்­புகள் ஏராளம்.

இந்த சண்­டையின் பிர­தான ஆயு­தங்கள் இறக்­கு­மதி வரிகள். ஒரு நாட்டில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீது அடுத்த நாடு கூடுதல் வரி விதிக்கும். அதற்கு மற்­றைய நாடு பதி­லடி கொடுக்கும்.

கடந்த ஜூலை மாத முற்­ப­கு­தியில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவில் இருந்து தரு­விக்­கப்­படும் பொருட்கள் மீது இறக்­கு­மதி வரி விதித்தார். மொத்­த­மாக 34 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான பண்­டங்கள் மீது 25 சத­வீத வரி பிர­யோ­கிக்­கப்­பட்­டது.

இந்தப் பண்­டங்­களில் தொழிற்­சா­லை­களில் பயன்­ப­டுத்­தப்­படும் ரோபோக்கள் முதல் கார்கள் வரை­யி­லான பொருட்கள் அடங்கும். மொத்­த­மாக 800 பொருட்கள் மீது இறக்­கு­மதித் தீர்வை.

இதற்கு சீனாவும் பதி­லடி கொடுத்­தது. அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து தரு­விக்­கப்­படும் மச­கெண்ணெய் முதற்­கொண்டு சோயா அவரை வரை­யி­லான பொருட்கள் மீது சீனாவும் 25 சத­வீத இறக்­கு­மதித் தீர்­வையை விதித்­தது.

பீஜிங் நகரில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்த சமயம், அடுத்த கட்ட தீர்­வைகள் குறித்து அமெ­ரிக்கா அறி­வித்­தது. அதற்குப் பதி­லடி கொடுக்கும் விதத்தில் சீனாவும் 25 சத­வீத தீர்வை விதித்­தது.

இம்­முறை அமெ­ரிக்கா 279 வகை­யான பொருட்கள் மீது தீர்வை விதித்­தது. இவற்றில் கணி­னி­களைத் தயா­ரிக்­கப்­ப­யன்­படும் பொருட்கள், இர­சா­ய­னங்கள், ரயில் உப­க­ர­ணங்கள் போன்­றவை அடங்கும்.

இதற்கு பதி­லாக சீனா அறி­வித்த பட்­டி­யலில் 333 அமெ­ரிக்க உற்­பத்­திகள் உள்­ள­டங்கும். இதன் பிர­காரம், நிலக்­கரி, செம்பு, உலோக உற்­பத்­திகள், பஸ் வண்­டிகள், மருத்­துவ உப­க­ர­ணங்கள் போன்­ற­வையும் அடங்கும்.

இத்­த­கைய பின்­பு­லத்தில் வர்த்­தகப் போர் பற்­றியும், அது ஒட்­டு­மொத்த உலகப் பொரு­ளா­தா­ரத்தின் மீது செலுத்தும் தாக்கம் பற்­றியும் அறிய வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது.

  வர்த்­தகப் போர் என்றால் என்ன?

இன்று ஒவ்­வொரு பொரு­ளா­தார வல்­ல­ரசும் சுய­நலம் மிக்­க­தாக மாறி­யுள்­ளன. வல்­ல­ரசு நாடுகள் தத்­த­மது கைத்­தொ­ழில்­களைப் பாது­காத்துக் கொள்­வதில் அதீத அக்­கறை செலுத்­து­கின்­றன.

இதற்­காக, அடுத்த நாடு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீது தீர்வை விதிக்­கின்­றன. இத்­த­கைய தீர்­வைகள் கார­ண­மாக உள்­நாட்டு சந்­தையில் இறக்­கு­மதிப் பொருட்­களின் விலை­களை அதி­க­ரிக்­கின்­றன.

தமது மக்கள் இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­களைத் தவிர்த்து, உள்­நாட்டுப் பொருட்­களை வாங்க வேண்டும் என்ற நோக்­கத்­துடன் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

ஒரு நாடு மற்­றைய நாட்டின் உற்­பத்­திகள் மீது இறக்­கு­மதி வரி விதிப்­ப­தாக கரு­துவோம். அந்த சம­யத்தில், பாதிக்­கப்­படும் நாடு பதி­லடி கொடுக்­கி­றது. எந்த நாடு இறக்­கு­மதி வரி விதித்­ததோ, அந்­நாட்டின் உற்­பத்­திகள் மீது பாதிக்­கப்­படும் நாடும் வரி விதிக்­கி­றது.

இவ்­வாறு மாறி மாறி விதிக்­கப்­படும் தீர்­வைகள் வர்த்­தகப் போருக்கு வித்­தி­டு­கின்­றன. இவை அர­சியல் நோக்கம் கரு­திய நட­வ­டிக்­கை­க­ளாக இருக்­கலாம். இதன்­மூலம் சக­லரும் பொரு­ளா­தார ரீதி­யாகப் பாதிக்­கப்­ப­டு­வ­தாக பொரு­ளா­தார நிபு­ணர்கள் கூறு­கி­றார்கள்.

அமெ­ரிக்­காவின் அடா­வ­டித்­தனம் ஏன்?

அர­சி­ய­லாக இருந்­தா­லென்ன, பொரு­ளா­தா­ர­மாக இருந்­தா­லென்ன, உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கம் விஸ்­த­ரிக்­கப்­பட்டு வரு­வது டொனால்ட் ட்ரம்­பிற்கு பிடிப்­ப­தில்லை. அவ­ருக்கு அர­சியல் காழ்ப்­பு­ணர்வு அதிகம்.

இருந்­த­போ­திலும், அமெ­ரிக்க – சீன வர்த்­தகப் போருக்கு அவர் பொரு­ளா­தார ரீதி­யான கார­ணங்­களைக் கூறு­கிறார். இரு தரப்பு வர்த்­தகம் நியாயம் அற்­றது என்­பது அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் வாத­மாகும்.

2016ஆம் ஆண்டில் சீனா­விற்கு விற்­பனை செய்­ததை விடவும், சீனா­விடம் இருந்து வாங்­கிய பொருட்கள் அதிகம் என டொனால்ட் ட்ரம்ப் கூறு­கிறார். இதில் அநீதி உள்­ளதால், வர்த்­தகப் போரை ஆரம்­பித்­த­தாக அவர் நியாயம் சொல்­கிறார்.

ட்ரம்ப் சிறந்த வர்த்­தகர். ஆனால், பொரு­ளா­தார நிபுணர் அல்ல. உணர்ச்சி வசப்­பட்டு அர­சியல் கார­ணி­களின் அடிப்­ப­டையில் பொரு­ளா­தார தீர்­மா­னங்­களை எடுப்­பவர். வர்த்­தகப் போரை வெல்ல முடியும் என்­பது அவரின் நம்­பிக்கை. இது குருட்­டுத்­த­ன­மா­னது என பொரு­ளியல் நிபு­ணர்கள் சுட்­டிக்­காட்­டு­கி­றார்கள்.

சண்­டைக்­காக வரி விதித்தல்

ஒரு நாட்­டுடன் சண்டை செய்­வ­தற்­காக ஒரு நாடு அடுத்த நாட்டின் இறக்­கு­மதிப் பொருட்கள் மீது தீர்வை விதிப்­ப­தா­னது, தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தடை­களைப் போன்­றது. இதன்­மூலம், பொருட்­களின் விலை இயல்­பாக அதி­க­ரித்து, ஒரு நாட்டின் பொரு­ளா­தாரம் இயல்­பாக பாதிக்­கப்­படும்.

அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில், அந்­நாட்­ட­வர்கள் பெரும்­பாலும் வெளி­நா­டு­களில் உற்­பத்தி செய்­யப்­பட்ட பொருட்­க­ளையே வாங்­கு­கி­றார்கள். அதிலும், சீனாவில் இருந்து இறக்­கு­ம­தி­யாகும் பொருட்கள் அதிகம்.

இங்கு இன்­னொரு விஷ­யமும் உள்­ளது. தமது நாட்டின் கணினி உற்­பத்தித் துறையைப் பாது­காக்க சீனாவில் இருந்து தரு­விக்­கப்­படும் கூடு­த­லான கணினி உற்­பத்திப் பொருட்கள் மீது தீர்வை விதிப்­ப­தாக

வைத்­துக்­கொள்வோம்.

இதன் கார­ண­மாக, அமெ­ரிக்க கணினி உற்­பத்­தித்­துறை சார்ந்த சில தொழில் வாய்ப்­புக்கள் பாது­காக்­கப்­ப­டலாம். ஆனால், சகல தொழில்­களும் பாது­காக்­கப்­பட மாட்­டாது. ஏனெனில், மூலப்­பொ­ருட்­களை வாங்க கம்­ப­னிகள் கூடுதல் பணம் செலுத்த வேண்­டி­ய­தாக இருக்கும்.

இதற்கு முன்னர் விதிக்­கப்­பட்ட தீர்­வைகள் கார­ண­மாக மது­சார உற்­பத்தி தொடக்கம் ஆடை உற்­பத்தி வரையில் பல துறைகள் பெரும் சவால்­களை எதிர்­கொள்­கின்­றன. மீண்டும் மீண்டும் வரி விதிப்­பதன் மூலம், கூடு­த­லான பாதிப்பு ஏற்­ப­டுமே தவிர, யாருக்கும் நன்மை கிடைக்கப் போவ­தில்லை.

இந்த விட­யத்தில் தாம் கையை சுட்டுக் கொண்­டதை ட்ரம்ப் அறிவார். வர்த்­தகப் போரால் பாதிப்­புக்­களை எதிர்­கொண்ட விவ­சா­யி­களை சிக்­கலில் இருந்து மீளச் செய்­வ­தற்­கான முயற்­சி­களை அவர் சூச­க­மான முறையில் ஆரம்­பித்­தி­ருக்­கிறார். விவ­சா­யி­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கு­வ­தற்­காக 12 பில்­லியன் டொலர் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

வணிகப் போர் உலகப் பொரு­ளா

­தா­ரத்தில் செலுத்தும் தாக்கம்

இந்த வணிகப் போர் உலக பொருளாதாரத்தின் மீது செலுத்தக்கூடிய நேரடித் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு காலம் செல்லக்கூடும். இருந்தபோதிலும், முதற்கட்ட தீர்வைகளைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பானிலும் எதிர்மறை சமிக்ஞைகள் தெரியத் தொடங்கின. கம்பனிகள் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டன.

இன்றைய உலகப் பொருளாதாரம் சிக்கலானது. அது சர்வதேச கம்பனிகளின் வலைப்பின்னலை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இந்த வலைப்பின்னலுக்குள் தமக்கு இடையில் வலுவான தொடர்புகளைக் கட்டியெழுப்ப கம்பனிகள் ஆண்டாண்டு காலம் பாடுபட்டன. இன்றைய வணிகப் போரில் பிணைப்புகள் தகர்ந்து விழுவதைத் தவிர்க்க முடியாது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-08-26#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.