Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..

Featured Replies

விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

Mullai-meeting1.jpg?resize=800%2C533

 

முல்லைத்தீவு மாவட்டத்தை விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே பலர் பயன்படுத்துவதாகவும்  எமது மாவட்டம் அபிவிருத்தி அடைவதை அவர்கள் விரும்பாது இருப்பதாகவும் முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

வடமாகாண ஆளுநருக்கும் முல்லைதீவு அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (10) முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றும் போது ஒன்றியத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம், யாழ் பல்கலைக்கழகத்தின் மீன்பிடிப்பீடம், என்பனவற்றினை அமைப்பதற்கான முன்ஏற்பாடுகள் இடம்பெற்றபோதும் தமிழ் அரசியல் காற்புணர்ச்சி காரணமாக அது தாமதப்படுத்தப்படுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்களின்போது தமது ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அழைக்கப்படுவது இல்லை என்றும். தமது ஒன்றியம் அதில் கலந்து கொண்டால் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டிவிடும் என்ற அச்சம் காரணமாக எம்மை அழைக்க வேண்டாம் என சில அரசியல்வாதிகள் அரச உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் இதனால் தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Mullai-meeting2.jpg?resize=800%2C533

முல்லைத்தீவு நகரில் வைத்தியசாலை ஒன்று இருக்கின்றபோதும் அதில் வைத்தியர்கள் வருவதில்லை பல கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இரண்டு பேருந்துகளை பெற்று எமது மக்கள் தமது மருத்துவ தேவைகளை நிறைவு செய்து வருகின்றார்கள். அது மிகவும் வேதனைக்கு உரியது. ஒரு மனிதன் வாழ்வதற்கு மருத்துவம் இன்றி அமையாதது. எனவே முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள வைத்தியசாலையில் முன்னர் இருந்ததுபோல் வசதிகளை ஏற்படுத்தி மக்கள் பயன்பெற ஆளுநர் மத்திய அரசு ஊடாக ஆவண செய்ய வேண்டும்.

வட்டுவால் பாலம் பாரியளவில் பழுதடைந்துள்ளது அதனை உடனடியாக திருத்தி அமைத்து மக்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். வடக்கு கிழக்கை இணைக்கும் கொக்கிளாய் பாலம் அகலாமக்கப்பட்டு புதிதாக அமைப்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி மேலும் வலுவடைய கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இறுதி யுத்தத்தில் பாரிய அழிவினை சந்தித்த முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையில் இருக்கின்ற 25 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இங்குள்ள மக்கள் யுத்தத்தில் பல இன்னல்களை அனுபவித்தவர்கள். அந்த மக்களின் அபிவிருத்தி, மாவட்டத்தின் அபிவிருத்தி என்பன எமது நாட்டில் இன்றய கட்டாய தேவையாக இருக்கின்றது என்று தெரிவித்தனர்.

அவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கும் முகமாக கருத்து தெரிவித்த ஆளுனர் , ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களின் வடக்கு அபிவிருத்தி செயலணியின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நான் உறுப்பினராக இருப்பதன் காரணமாக முல்லைத்தீவு ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கு செவி சாய்த்து உங்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவேன் என்று ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

அத்துடன் ஏற்கனவே செயலணியின் செயலாளர் சிவஞானசோதி அவர்கள் முல்லைத்தீவு வீதிகள் பாலங்கள் பலவற்றினை அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடக்கியிருப்பதாகவும் அதற்கு மேலதிகமாக தங்களின் சர்வதேச விளையாட்டு மைதானம் மீன்பிடித்துறை பீடம் என்பனவற்றினை அமைப்பதற்கு ஜனாதிபதியுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பில், ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், உதவிச் செயலாளர் ஏ.எக்ஸ் செல்வநாயகம், இணைப்பு செயலாளர் சுந்தரம் டிவகல்லாலா, உட்பட முல்லை அபிவிருத்தி ஒன்றியத்தின் பிரதிநிதிகளான எம்.டி.விக்டர், எஸ்.ராஜேஸ்வரன், ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அன்டனி குறூஸ், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Mullai-meeting3.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/91127/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்களின்போது தமது ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அழைக்கப்படுவது இல்லை என்றும். தமது ஒன்றியம் அதில் கலந்து கொண்டால் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டிவிடும் என்ற அச்சம் காரணமாக எம்மை அழைக்க வேண்டாம் என சில அரசியல்வாதிகள் அரச உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் இதனால் தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இங்கும் தென்னமரவாடி யில் பாரிய அபிவிருத்தியை செய்கிறம் என்று தமிழரசு ஆள் கனடாவில் இருந்து வருபவர் சொல்லி கருத்தாடல் செய்தவர் அப்ப வாயால் வடை சுட்டு இருக்கிறார் போல் இருக்கிறது .இவையளை சொல்லி குற்றமில்லை  டிசைன் அப்படி .

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

இங்கும் தென்னமரவாடி யில் பாரிய அபிவிருத்தியை செய்கிறம் என்று தமிழரசு ஆள் கனடாவில் இருந்து வருபவர் சொல்லி கருத்தாடல் செய்தவர் அப்ப வாயால் வடை சுட்டு இருக்கிறார் போல் இருக்கிறது .இவையளை சொல்லி குற்றமில்லை  டிசைன் அப்படி .

எல்லாரும்... சம்பந்தனின்  பாசறையில், வளர்ந்தவர்கள் என்றால்... "டிசைன்" ஒரே மாதிரி தானே... இருக்கும்.  :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைதீவு மட்டுமில்லை....வடகிழக்கு மாகாணங்கள் இப்ப ஆகா ஓகோ எண்டு இருக்குது எண்டு ஆரும் இஞ்சைவந்து புலுடா விட்டால் முகத்திலை காறித்துப்புவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2009க்கு பிறகு அரசியலாய் வெட்டுவம் புடுங்குவம் எண்ட ஆக்களை காணேல்லை....... ஆயுதத்திலையிருந்து வழுக்கி அரசியலக்கு விழுந்த கட்சிகளும் ஒரு மண்ணாங்கட்டியும் செய்ததாய் தெரியேல்லை....எல்லாரும் பெரிய பெரிய வாகனங்களிலை ஓடிக்கொண்டு திரியுறாங்கள். கேள்வி கேட்டால் வாள்வெட்டு தம்பிமார் அடுத்தநிமிசம்  வேலையை பிரிச்சுக்கொண்டு வந்து நிப்பினம்.

சிங்களம் எமக்கு துரோகம் செய்வதை நிறுத்தி விட்டார்கள். எம்மவர்களே எமக்கு துரோகம் செய்கின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.