Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படையினர் அதிரடி கடலட்டை பிடித்த 28 படகுகள் தடுத்து வைப்பு!!

Featured Replies

கடற்படையினர் அதிரடி கடலட்டை பிடித்த 28 படகுகள் தடுத்து வைப்பு!!

 

வடமராட்சி பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் இன்று காலை 28 படகுகள் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

படகுகளின் உரிமையாளர்கள் தென்னிலங்கைப் பகுதியைச் சேர்ந்தவர்களா? உள்ளூர் மீனவர்களுடையதா என தகவல்கள் வெளியாகவில்லை.

https://newuthayan.com/story/09/கடற்படையினர்-அதிரடி-கடலட்டை-பிடித்த-28-படகுகள்-தடுத்து-வைப்பு.html

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்.. வந்த உடன், எங்களுக்கு  அறிவிக்கவும். ?

  • தொடங்கியவர்

வடமராட்சியில் கடலட்டை பிடித்துக் கைதானோரை விடுவிக்க முயற்சியா?

20180818_130225-780x405.jpg

வடமராட்சி கிழக்கில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தனர் என்று கூறப்பட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு கடற்படையினர் முயற்சிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் இதுவரை ஒப்படைக்கப்படாத நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கடற்றொழில் அமைப்புக்களும், மீனவர்களும் கடற்படையினரின் முகாமுக்கு முன்பாகக் கூட ஆரம்பித்துள்ளதால் அங்கு சற்று இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

கடலட்டை பிடித்தவர்கள் அனுமதிப் பத்திரம் வைத்திருந்தனர் என்று தற்போது கூறப்படுகின்றது என்றும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் பிரதேச மீனவர்கள் கூறுகின்றனர்.

நீரியல்வளத் திணைக்கள அதிகாரிடம் கைது செய்யப்பட்டவர்களைக் கடற்படையினர் ஒப்படைக்கவில்லை. அதேவேளை, நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு காங்கேசன்துறைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

https://newuthayan.com/story/13/வடமராட்சியில்-கடலட்டை-பிடித்துக்-கைதானோரை-விடுவிக்க-முயற்சியா.html

  • தொடங்கியவர்

யாழ்.நாகர் கோவிலில் கைதான தென்னிலங்கை மீனவர்கள் சில மணி நேரத்தில் உடன் விடுதலை…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

release.jpg?resize=660%2C405

 

யாழ்.நாகர் கோவிலில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர் எனும் குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை சில மணி நேரத்தில் கடற்படை விடுவித்தது.

அது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.நாகர் கோவில் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்த 81 தென்பகுதி மீனவர்களை கைது செய்த கடற்படையினர் அவர்களின் 21 படகுகளையும் கைப்பற்றி இருந்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களிடம் கைப்பற்றப்பட படகுகளையும் கடற்படையினர் பருத்தித்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று தடுத்து வைத்திருந்தனர். அதன் பின்னர் சில மணிநேரம் கழித்து கைப்பற்ற பட்ட படகுகளையும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் கடற்படையினர் விடுவித்துள்ளனர். தென்னிலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டமையை அடுத்து பருத்தித்துறை மீனவர்கள் கடற்படை முகாம் முன்பாக கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

அதன் போது குறித்த மீனவர்களுடன் பேசிய கடற்படை அதிகாரி, குறித்த பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்வதற்கான அனுமதி உண்டு என யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்தே தாம் கைது செய்த மீனவர்களை விடுவித்தோம் என தெரிவித்தார். அதன்பின்னர் கடற்படை முகாம் முன்பாக கூடி தமது எதிர்ப்பை தெரிவித்த பருத்தித்துறை மீனவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.

http://globaltamilnews.net/2018/91929/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.