Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கிழவனின் கதை

Featured Replies

எண்பது வயது வயோதிபர் அவர். பாப் எட்மன்ட்ஸ் என்பது அவரது பெயர். எந்த வகையில் பார்த்தாலும் அவர் ஒரு சாதாரண மனிதர். இன்னும் சொல்வதானால் இற்றைக்கு எட்டு மாதங்களிற்கு முன்னர் வரை அவர் பற்றி எந்தவொரு பரபரப்பும் இருந்ததில்லை. இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாப், கனடா முழவதும் தெரியப்பட்ட ஒரு பிரபலம் ஆனார். எப்படி?

பாப்பிற்கு கிடைத்த ஒரு பரிசினை ஒரு இளம் தம்பதியர் கையகப்படுத்திக் கொண்டமைதான் பாப்பின் பெயரறிமுகத்திற்கான காரணம். நடந்தது இது தான்:

கனடாவின் ஒரு அதிஸ்ர லாப சீட்டிழுப்பில் பாப்பிற்கு 250,000 டொலர்கள் பரிசு கிடைத்தது. எனினும் வயோதிபரான பாப்பை ஏமாற்றி, அவரிற்கு இந்த அதிஸ்ர சீட்டினை விற்ற கடைக்காரர்கள் பரிசைத் தாம் சுருட்டிக் கொண்டார்கள். சற்று நாட்களில் பாப்பிற்கு தான் ஏமாற்றப்பட்டுள்ளது ஒருவாறு தெரியவர அவர் லொத்தரி கூட்டுத்தாபனத்திற்குத் தனது நிலைமையைக் கூறினார். எனினும் மிகப்பெரும் பலம் வாய்ந்த லொத்தரிக் கூட்டுத் தாபனம், இந்த அல்ப்ப 250,000 விடயத்தினால் தமது பெயரில் மக்கள் கொண்டுள்ள நம்பகத் தன்மையினைக் கேள்விக்குறியாக்கத் தயாராக இருக்கவில்லை. எனவே எந்த வகையிலும் கனேடியர் மத்தியில் பிரபலமில்லாத இந்த எண்பது வயதுக் கிழவரைப் பொய்யர் என கூட்டுத் தாபனம் ஒதுக்கி விட்டது. லொத்தரிக் கூட்டுத் தாபனம் சற்றுமே எதிர்பாராத விதத்தில் இங்கு தான் விடயமே சூடுபிடிக்கத் தொடங்கியது.

இறக்கின்ற வயதில் தனது இறமையைக் கறைப்படுத்தித் தன்னை பொய்யர் என்று கூறி விட்டார்களே என்று கிழவர் பொருமத் தொடங்கினார். தான் பொய்யர் அல்ல என நிரூபிக்கத் தனது வயதிற்கு வியப்பூட்டும் வேகத்தில் செயற்படத் தொடங்கினார். பணம் தொலைந்தது பெரிய கவலை இல்லை ஆனால் எனது பெயர் காக்கப்படவேண்டும் என எந்த வகையிலும் பலமற்ற ஒரு சீவன் முனைந்தமையானது கனேடிய ஊடகங்களின் கவனத்தைப் பிடித்தது. எங்கு பார்த்தாலும் பாப் எட்மன்ண்ட்சின் புராணம் ஒலிக்கத் தொடங்கியது.

தமது அலட்சியத்தால் ஒரு பூதத்தைத் தட்டி எழுப்பி விட்டோமோ எனப் பயந்த லொத்தரிக் கூட்டுத்தாபனம் விழித்துக் கொண்டு செயற்பட்டது. சீட்டினை விற்ற கடைக்காரத் தம்பதியரின் குற்றமும் நிரூபிக்கப்பட்டு, கிழவர் நிரபராதி எனவும் அறிவிக்கப்பட்டது. கடைக்காரத் தம்பதியர் தமது கடையையும் விற்று விட்டு வேறு நகரத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். ஆனால் கதை அத்தோடு நிற்கவில்லை.

பரிசு கிடைப்பதற்கு முன்னரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாப் எட்மன்ண்ட்ஸ, தான் நிரபராதி என தீர்ப்பு வந்த மறு நாளே மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஏதோ ஒரு விளக்கங்களிற்கு அப்பாற்பட்ட மன தைரியம் அவரது வழக்கு முடியும் வரை அவரது நோயினைத் தலையெடுக்கவிடாது அமுக்கி வைத்திருந்தது போலவும், வழக்கு முடிந்தபின் அந்தத் விளக்கமுடியாத மன சக்திக்கான தேவை இல்லாது போனதால் வருத்தம் வலுப்பெற்றது போலவும் பாப்பின் உடல் நிலையில் ஏற்பட்ட திடீர் வெளிப்படை மாற்றம் வைத்தியர்கள் உட்பட அனைவரிற்கும் வியப்பளித்தது. இந்நிலையில, பாப்பிற்காக உழைத்த ஊடகக்காரர்களில் முதன்மையானர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பைச் சென்று பார்த்த போது அவர் அந்த ஊடகக்காரரிடம் சொன்னாராம் தன்னால் அந்த இளம் கடைக்காரத்தம்பதியர் அனுபவிக்கும் இன்னல்களை நினைத்துத் தான் மிகவும் சங்கடப் படுகின்றேன் என்று. அதன் பிறகு ஓரிரு நாட்களில் பாப் இறந்து போனார்.

ஊடகக் காரர்களிற்கு இப்போ புதிய முனை கிடைத்து விட்டது. பாப் என்ற "மனிதம" அவர் ஒரு உதாரண புருசர் என்று ஊடகக் காரர்கள் ஆரம்பித்து விட்டார்கள். மேலும் எவ்வாறு ஒரு சிம்பிளான மனிதர் பாப் என்றும், தனது நாணயத்தன்மையை எல்லாவற்றிற்கு மேலாகவும் மதித்தவர் பாப் என்றும் ஊடகங்கள் புகழாரம் சூட்டுகின்றன.

பாப்பின் கதையை முன்னெடுத்த முன்னணி ஊடகக் காரர் இன்று காலை சொல்கிறார் அண்மையில் தனது இளவயது மகன்களை தான் பாப்பினைப் பார்பதற்கு அழைத்துச் சென்றிருந்தாராம் ஏனெனில் பாப்பின் போராட்ட குணம், நியாத்தன்மை, மற்றும் சிம்பிளிசிற்றி தன்னை வெகுவாகக் கவர்ந்துள்ளதோடு தனது பையன்கள் வழர்ந்து பாப் போன்ற மனிதர்களாகவே வாழவேண்டும் எனத் தான் விரும்புகிறாராம் என்று.

எல்லாம் நல்லாத் தான் போகிறது. பாப் மதிக்கப்பட வேண்டியவர் தான். எனினும் இந்தப் பதிவினை நான் எழுத உண்மையில் காரணமானது என்னவெனில், தான் ஒரு பொய்யர் என்று அழைக்கப்பட்டதற்காக ஒரு வயோதிபர், வெள்ளை இனத்தவர், முன்னெடுக்கும் நியாயம் தேடும் முயற்சியைப் புரிந்து கொள்ளும் ஊடகங்கள், எங்கள் தலையில் குண்டுகளைக் கொட்டிவிட்டு எங்களையே பயங்கரவாதிகள் என்கிறார்கள் சிங்களவர்கள் என நாம் சொன்னால் கண்டு கொள்வதாய் இல்லை. பொய்யர் என்ற அவதூறுக்கு, "பயங்கரவாதிகள்", "வன்முறையாளர்கள்", "பிள்ளை பிடி காரர்கள்", "மனித உரிமை மதியாதோர்" என்பன எல்லாம் சற்றும் சளைத்தவை அல்ல. இவர்கள் நாளாந்தம் தெளிக்கும் எத்தனை அவதூறுகளைச் சுமந்தபடி எம்மவர்கள் நாளாந்தம் மடிந்து கொண்டிருக்கிறார்கள். எங்கள் மாவீரர்களை, மனிதத்திற்கு வரைவிலக்கணமானவர்களை, வருடத்தில் ஒரு தடவை நாங்கள் நினைவு கூர்வதற்கே இவர்கள் எத்தனை தடைகளைப் போட்டு எம்மை ஒடுக்கிறார்கள், எமது மண்டபங்களை ரத்துச் செய்கிறார்கள். எம்மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒடுக்குமறைக்கெதிராக, மனிதனின் ஆளுமையின் வரம்புகள் என இருந்த எல்லைகளை எல்லாம் விஞ்சி எமது தலைமை முன்னெடுக்கும் போராட்டமும் சாதாரணமானது அல்ல. ஆனால் இவர்களைப் பொறுத்தவரை யார் மீது அவதூறு, யார் போராடுகிறார்கள் என்பவை தான் முக்கியமே தவிர அவதூறு என்ன என்பதோ போராட்டம் எத்தகையது என்பதோ அல்ல.

எங்கள் பக்க நியாயங்களை இவர்களிற்குக் கடிதம் எழுதி எம்மை நாமே மடையர் ஆக்காது, தாயகத்தில் எமது தலைமையின் கைகளைப் பலப்படுத்துவதே நாம் செய்யக் கூடிய நடைமுறைச் சாத்தியமான, விநயமான செயல் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு கட்டுரை இன்னுமொருவன்.

புலிகளின் வீரம் பற்றியே கதைக்கின்ற நாங்கள், அப்படி கதைக்கின்ற விடயத்தைச் சிங்கள தேசம் எவ்வாறு பயங்கரவாதமாகவோ, அல்லது, விடுதலைப்போரில்லை என்று காட்டுகின்ற நிலைக்கு எதிராக எம்மிடம் இருந்து முழுமையான எதிர்ப்புணர்வைக் கிளறவில்லை என்பது வருத்தமான ஒன்றே.

தமிழீழம் என்ற மண் அறிவிக்கப்படுகின்றபோது, ஏற்படுகின்ற துர்ப்பாக்கியம், அல்லது ஒத்திப் போகின்ற நிலைமைக்கு இதுவும் ஒரு காரணமாகும். விடுதலைப்புலிகள் பற்றிய அமெரிக்காவும் சரி, உலக நாடுகளும் சரி நட்புரீதியான அணுகுமுறையைச் செய்யாது இருப்பதற்கு அதன் சுயநல நோக்கம் என்று சொன்னாலும் கூட, மறுபக்கம் நாங்கள் கவனிக்காமல் விட்ட, பயங்கவாதப்பட்டியல் என்பதுமாகும்.

காலத்துக்கு காலம், நாங்கள் போராட்டத்தை நியாயப்படுத்தியும், தமிழரின் தேவைகள் குறித்தும் உலகத்திற்கு அறிவித்து வந்திருந்தோமானால், இன்றைக்கு இருக்கின்ற போரியல் நெருக்கடிகள் ஓரளவாவது, குறைவாக இருந்திருக்கும் என்பது உண்மை.

எனவே, எதிர்வரும் காலங்களில் தமிழீழப் போராட்டம் பற்றிய விழிப்புணர்வையும், அது தமிழ்மக்களின் சுதந்திரத்தை நோக்கிய ஒரு விடயமே என்பதை உலகத்திற்கு வலியுறுத்தி செல்வோம். ஏனென்றால் போராட்டம் எமக்கான ஒன்றே.

Edited by ஒற்றன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கருத்து.

எங்கள் பக்க நியாயங்களை இவர்களிற்குக் கடிதம் எழுதி எம்மை நாமே மடையர் ஆக்காது, தாயகத்தில் எமது தலைமையின் கைகளைப் பலப்படுத்துவதே நாம் செய்யக் கூடிய நடைமுறைச் சாத்தியமான, விநயமான செயல் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

எங்கள் பிரச்சாரத்தை திட்டமிட்டு செய்யவேண்டியது அவசியமாகும். கடிதம் எழுதுவதால் (பெட்டிசன் :lol: ) பிரயோசனம் இல்லை என்பது உண்மையே. ஆனால் நீங்கள் இன்னொரு பதிவில் சொன்னது போல உண்மைகளை உறைக்கக் கூடிய விதமாக எடுத்துக் கூற வேண்டும்.

மேலும் எமது பிரச்சாரம் வெறும் அரசியல் கட்சிகளை நோக்கியதாக மட்டும் இருக்காமல் மக்களை நோக்கியதாக இருக்கவேண்டும்.

பிரச்சாரம் செய்ய பலமான கட்டமைப்பு நிறுவவேண்டும். நெடுக தன்னார்வலர்களை நம்பியிருப்பதனால் தான் சொதப்பல்களும் திரிபுகளும் ஏற்படுகிறது. இதை விடுத்து தேவையானால் தொழில்ரீதியான அறிஞர்களை (அவர்கள் கட்டாயம் தமிழர்களாக இருக்கவேண்டுமென்பதில்லை) வேலைக்கமர்த்தி எமது பிரச்சாரங்களை திட்டமிட வேண்டும். தலைமையின் கைகளை பலப்படுத்தும் வேலைகளில் இதுவும் ஒன்றே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது முந்தைய பதிவின் தொடர்ச்ச்சி,

கனடாவில் கியூபெக் பிரிந்து செல்ல முற்பட்ட போது அவர்களுக்கெதிராக ஆயுதம் தூக்க முற்படவில்லை. மாறாக பில்லியன் கணக்கான ரூபாய்கள் பிரச்சாரத்திற்காக செலவிடப்பட்டது. அதே போல கனேடிய மக்களிடை தமிழீழம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்ட பிரச்சாரம் செய்யப்படுதல் அவசியம். இங்கு பிரச்சாரம் என வரும்போது ஒரு சிறுபான்மை இனமாக நாங்கள் என்னவிதமாக பிரச்சாரம் செய்யலாம் எது பலனளிக்கும் போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப செயல்படுவது அவசியமாகும்.

விடுதலைப்புலிகள் போரியலில் அதிநவீன வளர்ச்சியடைந்துவருவது கண்கூடு. அவர்களின் R&D (Research and development) அளவுக்கு இலங்கை அரசு செய்யவில்லை என்று சிஐஏ ரிப்போட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஞாபகம். வெளிநாடுகளில் பிரச்சாரம் என வரும்போதும் கூட R&D முக்கியம். ஏனென்றால் ஒரு போஸ்ட் 911 காலத்தில் ஒரு தனிநாடு நோக்கிய பாரம்பரிய பிரச்சாரங்கள் எடுபடாது போகும். எனவே காலத்திற்கேற்ப பிரச்சார யுக்திகளை மாற்றி வெற்றிகரமான ஒரு பிரச்சார யுத்தத்தை முன்னெடுப்பது தொடர்பாக உரியவர்கள் இன்னும் கவனத்தில் எடுக்கவில்லை என்றே தோன்றுகிறது.

பண்டிதரின் பிரச்சாரக் கருத்தை வரவேற்கிறேன், அத்துடன் கிழவனின் கதையில் கிழவன் போன்று தான் தமிழர் நிலைமை ஈழத்தில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் தான்..ஆனால் கிழவன் போன்று விடமுயற்சி செய்து எமக்கு எற்பட்ட பாதிப்புகளும், போராட்டத்தில் உள்ள நியாயங்கள் தொடர்ந்து வெவ்வேறு அணுகு முறைகள் மூலம் கொண்டுபோகப்படவேண்டும்.

உலகத்திலுள்ள எமது பிரச்சனைகளை விளங்கிய வெளினாட்டவர்கள் எல்லோரையும் ஒரு இடத்தில் கூட வைத்து அவர்கள் மூலம் விளக்கமில்லாத நாடுகள், ஊடகங்களுக்கு எடுத்து விளக்கப்பண்ணலாம்...

வெளி நாட்டுப்பத்திரிகைகளுகளில் நமது விளம்பரங்களை(பாதிப்புகள்,வரல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.