Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகிழக்கு பாடசாலைகளில் இருந்து இராணுவத்தை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு!

Featured Replies

வடகிழக்கு பாடசாலைகளில் இருந்து இராணுவத்தை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு!

 

 
 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாடசாலைகள் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்தால் அவற்றை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில்இ வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியின் இரண்டாவது கூட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் பல்வேறு அமைச்சர்கள்இ அமைச்சுக்களின் செயலாளர்கள்இ வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போதுஇ வடக்கு கிழக்கில் விடுவிக்கப்படாதுள்ள காணிகள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாகஇ இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த சிரேஷ்ட அரசாங்க அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இந்த காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி தலைமையில்இ தமிழ் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் பங்குபற்றுதலுடன் விசேட கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம்இ வடக்கு கிழக்கில் கைவிடப்பட்டுள்ள கைத்தொழில்களை மீள இயக்குவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ வடக்கு கிழக்கில் போதைப் பொருட்களின் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறுஇ ஜனாதிபதி காவற்துறையினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற வன்முறைகளை தடுப்பதற்கும்இ மக்களது சுமுகமான வாழ்க்கையை உறுதி செய்வதற்குமான நடவடிக்கைகளை துரிதமாகவும்இ விசேடமாகவும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம்இ இன்றையக் கூட்டத்தில் அதிகபடியான உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில்இ இடவசதி கருதிஇ அடுத்தக் கூட்டத்தை நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ம் திகதிஇ வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் 3ம் கட்ட கூட்டம் நடைபெறவுள்ளது.

இதேவேளைஇ இந்த செயலணிக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை.

எனினும்இ தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை தவிரஇ ஏனைய 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தவிரஇ அமைச்சர் மனோ கணேஷன்இ ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுடன்இ பிரதி அமைச்சர்களான அங்கஜன் ராமநாதன்இ காதர் மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

அடுத்தக் கூட்டத்தின் போது அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/105278

 

 

“வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பேன்”

President-Task-force1.jpg?resize=800%2C3

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எவ்வித பேதங்களும் இல்லை என்பதுடன் வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் அனுகூலங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பினை நிறைவேற்றுவேனென ஜனாதிபதி தெரிவித்தார்.

 

இதற்காக மாகாணங்களின் சகல மக்கள் பிரதிநிதிகளினதும் அதேபோன்று அரச உத்தியோகத்தினரின் ஒத்துழைப்பினையும் எதிர்பார்பாதாக இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடலின் போது ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களைப் போன்றே மக்களின் வாழ்வாதார மார்க்கங்களை அபிவிருத்தி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை முறையாகவும் துரிதமாகவும் செயற்படுத்துவதற்கு இதன்போது பணிப்புரை விடுத்த ஜனாதிபதி , அம்மக்களின் குடிநீர், சுகாதார, கல்வி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி முதற்தடவையாக ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்றதுடன், அப்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக இன்று மீளாய்வு செய்ய்ப்பட்டது.

President-Task-force2.jpg?resize=800%2C3

மன்னார் மாவட்டத்தில் மடு புண்ணிய பூமியில் குடிநீர் வசதியை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் அதன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் அபவிருத்தி, வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் அபிவிருத்தி, ஆனையிறவு மற்றும் குரஞ்சைத்தீவு உப்பளங்களின் அபிவிருத்தி, அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்தி மற்றும் வடக்கில் சிறு கைத்தொழில்களை வலுவூட்டவும் மறுசீரமைக்கவும் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்பட்டது.

மேலும் வட மாகாணத்தில் வன்முறை, போதைப்பொருள் பயன்பாடு ஆகியன அதிகரித்துச் செல்லல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை வினைத்திறனாக செயற்படுத்துமாறு ஜனாதிபதி  பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.

வீடமைப்பு, நீர் வழங்கல், சுகாதாரம் ஏற்பாடு மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க முப்படையினர் இணக்கம் தெரிவித்திருப்பதுடன், அவ்விடயம் தொடர்பிலும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

President-Task-force3.jpg?resize=800%2C3

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதான உபாய மார்க்க செயற்திட்டங்கள் தொடர்பாக பட்டிலொன்றினை முன்வைக்குமாறு சகல நிரல் அமைச்சுக்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கு தமது ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு ஜனாதிபதி  இதன்போது சகல மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.அதற்கமைய அந்த மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளும் முன்மொழிவுகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.

எதிர் கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கயந்த கருணாதில, டீ.எம்.சுவாமிநாதன், றவூப் ஹக்கீம் உள்ளிட்ட வடக்கு கிழ்க்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் பீ.சிவஞானசோதி, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் பிரதானிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018-08-27

http://globaltamilnews.net/2018/93006/

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.