Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கை நோக்கி நகரும் சர்வதேச மன்னிப்பு சபையின் பிரசார பேரணி

Featured Replies

வடக்கை நோக்கி நகரும் சர்வதேச மன்னிப்பு சபையின் பிரசார பேரணி

 

 

40307934_233485393958313_8913748518796001280_n-1-718x450.jpg

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கை மற்றும் பதிலை வலியுறுத்தி சர்வதேச மன்னிப்பு சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேரணி வடக்கை நோக்கி நகரவுள்ளது.

அதன்படி, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளை (வியாழக்கிழமை) குறித்த பிரசார பேரணி வடக்கு நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நடவடிக்கை மற்றும் பதிலை கோரியும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரமொன்று சிவில் சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் சர்வதேச மன்னிப்பு சபையினால் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பிரசாரத்தின் ஆரம்ப நிகழ்வு காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், அதில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது மூன்று கொள்கலன் லொறிகள், ’60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இதுவரை அதற்கு பதிலலிக்காமல் இருப்பது ஏன் ஜனாதிபதி?’ என்ற வாசகத்துடன் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

குறித்த கொள்கலன் லொறிகளானது நேற்று கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பயணித்திருந்த நிலையில், இன்றைய தினம் காலி, மாத்தறை நோக்கி பயணிக்கவுள்ளது. அதனை தொடர்ந்து நாளை குறித்த கொள்கலன் லொறிகள் வடக்கு நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://athavannews.com/வடக்கை-நோக்கி-நகரும்-சர்/

  • தொடங்கியவர்

ஜனாதிபதி அவர்களே இன்னும் ஏன் பதிலில்லை?

 

 
 

தென்னாசியாவில் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டடுள்ளவர்களின் குடும்பத்தவர்களிற்கு உரிய பதிலை  அரசாங்கங்கள் வழங்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதல் போன்ற ஈவிரக்கமற்ற தண்டனைகள் வேறு எவையும் இல்லை என சர்வதேச மன்னிப்பு சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர்  பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகளாலும் அல்லது அவர்களின் ஆதரவுடன் செயற்படுபவர்களாலும் மக்கள் அவர்களுடைய அன்புக்குரியவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்றனர் என மேலும் தெரிவித்துள்ள அவர் அந்தஅதிகாரிகள் தாங்கள் கடத்தப்பட்ட நபரை தடுத்து வைத்திருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனா மேலும் அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை தெரிவிக்க மறுக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக குடும்பங்கள் பெரும் துயரத்திற்குள் சிக்குகின்றன,மிகமோசமான விடயம் இடம்பெற்றுவிட்டதோ என்ற அச்சத்துடன் அவர்கள் நம்பிக்கையை இழந்துவிடாமலிருப்பதற்காக போராடுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலவருடங்களிற்கு அவர்கள் இந்த இக்கட்டான நிலைக்குள் சிக்கியிருக்கவேண்டியிருக்கும் எனவும் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

பலவந்தமாக காணாமல்போதல் என்ற விடயம் தென்னாசியாவில் மிகவும்  ஈவிரக்கமற்ற விதத்தில் இடம்பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் சில அரசாங்கங்கள் இந்த நடைமுறையை தொடர்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏனைய அரசாங்கங்கள் பல வருடங்களாக காத்திருப்பவர்களிற்கு உரிய பதிலை கொடுக்க தவறியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாசிய நாடுகள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதலை குற்றச்செயலாக அறிவித்து குற்றவாளிகளை பொறுப்புக்கூற செய்யவேண்டும் எனவும் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை தென்னாசிய நாடுகளில் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்கள் குறித்து பதிலகளை கோருவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றறை சர்வதேச மன்னிப்புச்சபை நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது.

60,000ற்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர் ஜனாதிபதி அவர்களே ஏன் இன்னமும் பதில் இல்லை என்ற பதாகைகளுடன் மூன்று கொள்கலன்கள் கொழும்பு நகரத்தை சுற்றி வந்தன.

amnest_5.jpg

இன்று காலி மாத்தறையை நோக்கி செல்லவுள்ள குறிப்பிட்ட கொள்கலன்கள் 30 திகதி வடக்கிற்கு செல்லவுள்ளன.

மேலும் காலிமுகத்திடலில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கலந்துகொண்ட நிகழ்வும் இடம்பெற்றது.

http://www.virakesari.lk/article/39362

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.