Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் கட்டினால் என்ன – வீடு கட்டப்பட வேண்டும் :

Featured Replies

யார் கட்டினால் என்ன – வீடு கட்டப்பட வேண்டும் :

suwaminathan.jpg?resize=800%2C666
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தை இந்தியா கட்டினால் என்ன சீனா கட்டினால் என்ன யப்பான் வந்து கட்டினால என்ன. எங்களுக்குத் தேவை வீடு கட்டப்படல் வேண்டும் என்பதே என மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்

 

ன்று 29-08-2018 கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட அவர் கிளிநொச்சி மாவடட்ச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

வீட்டுத்திட்டம் தொடர்பில் அமைச்சர் மனோகணேசனுக்கும் எனக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை இது தொடர்பில் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும். அது பிரதமரின் வீட்டத்திட்டம். எனக்குத் தரப்பட்ட வீட்டுத்திட்டத்தை நான் உரியமுறையில் செய்து வருகிறேன் எனத்தெரிவித்த அவர் மூன்று வருடங்களாக யார் வீடுகளை கட்டுவது என்பது தொடர்பில் கதைத்து கதைத்து ஒரு முடிவும் எட்டப்படாது இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான். எனவும் குறிப்பிட்டார்.

http://globaltamilnews.net/2018/93236/

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

மூன்று வருடங்களாக யார் வீடுகளை கட்டுவது என்பது தொடர்பில் கதைத்து கதைத்து ஒரு முடிவும் எட்டப்படாது இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான். எனவும் குறிப்பிட்டார்

ஐயா சுவாமிநாதன்  அவர்களே இது அடியேனுடைய ஒரு பரிந்துரை மட்டுமே.

CEE07683-4_E89-471_E-_A691-_B581_ECF34_C

 

Edited by Kavi arunasalam

  • தொடங்கியவர்

இந்­தி­யாவோ சீனாவோ ஜப்­பானோ எமக்கு வீடு­களைக் கட்­டினால் சரி

 

(கரைச்சி நிருபர் )

3 வரு­டத்தில் 17,000 வீடு­களை அமைத்­துள்­ள­தாக கூறு­கிறார் அமைச்சர் சுவா­மி­நாதன்பாதிக்­கப்­பட்­டுள்ள தமிழ் மக்­க­ளுக்­கான வீட்­டுத்­திட்­டத்தை இந்­தியா கட்டினால் என்ன சீனா கட்­டினால்  என்ன ஜப்பான் வந்து கட்­டினால்  என்ன?  

எங்­க­ளுக்குத் தேவை வீடு கட்­டப்­பட வேண்டும் என்­ப­தே­யாகும்  என்று மீள்­கு­டி­யேற்றம் புனர்­வாழ்வு வடக்கு அபி­வி­ருத்தி அமைச்சர் டிஎம் சுவா­மி­நாதன் தெரி­வித்தார்  

 கிளி­நொச்­சிக்கு நேற்று விஜயம் மேற்­கொண்ட அவர் கிளி­நொச்சி மாவடட் செய­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே இவ்­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில் 

வீட்­டுத்­திட்டம் தொடர்பில் அமைச்சர் மனோ கணே­ச­னுக்கும் எனக்கும் எவ்­வித பிரச்­சி­னையும் இல்லை. இது தொடர்பில் பிர­த­ம­ரி­டம்தான் கேட்க வேண்டும். அது பிர­த­மரின் வீட்­டத்­திட்டம். எனக்குத் தரப்­பட்ட வீட்­டுத்­திட்­டத்தை நான் உரி­ய­மு­றையில் செய்து வரு­கிறேன்.

மூன்று வரு­டங்­க­ளாக யார் வீடு­களை கட்­டு­வது என்­பது தொடர்பில் கதைத்து கதைத்து ஒரு முடிவும் எட்­டப்­ப­டாது இருக்­கி­றது. இதனால் பாதிக்­கப்­ப­டு­வது மக்­கள்தான்.

அண்மைக் காலங்­களில் காழ்ப்­பு­ணர்வு கொண்ட சில­ரினால் உண்­மைக்குப் புறம்­பான முறையில் எமது அமைச்சின் செயற்­பா­டுகள் விமர்­சிக்­கப்­ப­டு­வது நீங்கள் அறிந்­ததே. எனது அமைச்­சான மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு சார்ந்த அபி­வி­ருத்திச் செயற்­பா­டுகள் பற்றி நான் வழங்­க­வுள்ள புள்­ளி­வி­ப­ரங்கள் மூலம் நீங்கள் தெளி­வுற முடியும். வீட­மைப்­பாக இருக்­கட்டும், சேத­ம­டைந்த வீடு­களை புன­ர­மைப்புச் செய்­வ­தாக இருக்­கட்டும், சுகா­தாரம், குடிநீர், மின்­சாரம், உட்­கட்­ட­மைப்பு அத்­துடன் அடிப்­படை வச­தி­க­ளாக இருக்­கட்டும். இவை­ய­னைத்தும் பல­கோடி ரூபா நிதி­யீட்டில் கடந்த மூன்று வரு­டங்­களில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

இதற்கும் மேலாகப் பல்­வேறு நிவா­ர­ணங்கள், இழப்­பீ­டுகள், இலகு கடன் உத­விகள், விவ­சாயம், மீன்­பி­டித்­துறை, கால்­நடை வளர்ப்பு, சிறு கைத்­தொ­ழில்கள் போன்ற வாழ்­வா­தாரச் செயற்­றிட்­டங்­க­ளையும் முன்­னெ­டுப்­ப­தற்கு அவ­சி­ய­மான மூல­தனம், உப­க­ர­ணங்கள் ஆகி­ய­வற்­றையும் வழங்கி வட – கிழக்கு வாழ் மக்­க­ளது வாழ்க்­கை­யினை வளம்­பெறச் செய்­துள்­ளமை பதிவு செய்­த­தற்­கு­ரி­யது.

எனது அமைச்­சா­னது மீன்­பி­டித்­துறை அபி­வி­ருத்­திக்­காக வட கிழக்­கி­லுள்ள எட்டு மாவட்­டங்­களைச் சேர்ந்த மீன­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக மீன்­பிடி வலைகள், கட்­டு­ம­ரங்கள், தோணிகள், தெப்­பங்கள், வள்­ளங்கள் ஆகி­ய­வற்றை மாவட்டச் செய­லா­ள­ரி­னூ­டாக வழங்­கி­யு­த­வி­யுள்­ளது. இதன் பொருட்டு எனது அமைச்­சினால் ரூபா 30 கோடி செலவு செய்­யப்­பட்­டுள்­ளது.

 இவை யாவற்­றிற்கும் மேலாக யாழ். மாவட்­டத்தில் மானிப்பாய், சங்­கானை ஆகிய இரு பகு­தி­க­ளிலும் இரு சந்தைக் கட்­ட­டங்கள் ரூபா 110 மில்­லியன் செலவில் அமைக்­கப்­பட்டு பொது மக்­க­ளது பாவ­னைக்­காக விடப்­ப­ட­வுள்­ளது. கிளி­நொச்­சியில் தீக்­கி­ரை­யான சந்தைக் கட்­டடத் தொகு­தி­யினைத் துரி­த­மாக புன­ர­மைத்துக் கொடுத்­த­துடன் மீண்டும் அத்­த­கைய அனர்த்­தங்கள் நிகழ வாய்ப்­ப­ளிக்கா வண்ணம் தீய­ணைப்பு நிலை­யத்­தினை அமைத்­த­துடன் இயந்­தி­ரங்­க­ளையும் எனது அமைச்­சா­னது வழங்­கி­யுள்­ளது.

இதற்­காக ரூபா 97 மில்­லி­யனும் இச்­சம்­ப­வத்தில் பாதிப்­பிற்­குள்­ளான 122 பேருக்கு இழப்­பீட்­டினை வழங்­கு­வ­தற்­காக ரூபா 74 மில்­லி­யனும் செல­வி­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன் கிளி­நொச்சி மாவட்­டத்தில் சந்தைக் கட்­ட­டத்­தினை ஸ்தாபிப்­ப­தற்­கான ரூபா 767 மில்­லியன் செலவு மதிப்­பீட்­டு­ட­னான அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்றும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இம் மாவட்­டத்தைச் சேர்ந்த மாங்­குள நக­ரினை அபி­வி­ருத்தி செய்­த­துடன் கைத்­தொ­ழிற்­பேட்­டை­யொன்­றி­னையும் அமைப்­ப­தற்­கான திட்­டங்­களை வகுத்துச் செயற்­ப­டுத்தி வரு­கின்றோம். இதனைப் பூரணப்படுத்துவதற்காக மொத்தமாக ரூபா 500 மில்லியன் அமைச்சினால் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய யாவற்றினையும் கவனத்திற்கொண்டு பொதுமக்களாகிய நீங்கள் எனது அமைச்சு குறித்த விமர்சனங்கள் தொடர்பில் பரிசீலித்து பக்கசார்பற்ற தீர்மானத்திற்கு வருவீர்கள் என உறுதியாக நம்புகிறேன். எமது வெளிப்படையான செயற்பாடுகள் குறித்த புள்ளி விபரங்களைத் தங்களது பார்வைக்காகத் தருகிறேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-30#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.