Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: வடக்கு-கிழக்கில் போராட்டங்கள்!

Featured Replies

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: வடக்கு-கிழக்கில் போராட்டங்கள்!

 

 

missing-person-in-srilanka-720x450.jpg

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்படும் நிலையில், வடக்கு கிழக்கில் இருவேறு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்திலும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அம்பாறையிலும் இருவேறு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

அத்தோடு, இம்முறை சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைசார் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள வாகன தொடரணி நேற்று முன்தினம் கொழும்பில் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது. இன்று குறித்த பேரணி யாழ்ப்பாணம் சென்றடையவுள்ளதோடு, அங்கு மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யுத்த காலத்திலும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி, தென்னிலங்கையிலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். யுத்தம் நிறைவடைந்து 9 வருடங்கள் கடக்கின்ற நிலையிலும், காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற நிலையறியாது அவர்களது உறவினர்கள் தவிக்கின்றனர்.

குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் கையளிக்கப்பட்ட பலரின் நிலை குறித்து அரசாங்கம் எவ்வித பதிலையும் வழங்கவில்லை. இந்நிலையில், காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 500 நாட்களையும் கடந்துவிட்டது. தமது உறவினர்களுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளாக அமைந்துள்ளது.

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் தினமான இன்று சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதோடு, இவ்விடத்தை சர்வதேசம் மிகப் பாரதூரமான பிரச்சினையாக கவனத்திற்கொண்டு தீர்வை பெற்றுத்தர வேண்டுமென உறவினர்களை இழந்தவர்கள் கோருகின்றனர்.

http://athavannews.com/காணாமல்-ஆக்கப்பட்டோர்-வ-5/

  • தொடங்கியவர்

சர்வதேச காணாமல்போனோர் தினத்த‍ை முன்னிட்டு திருக்கோவிலில் கவனயீர்ப்பு பேரணி

 

 
 

இலங்கை அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் சபையும் வடகிழக்கு மகாணங்களை உள்ளடக்கிய எட்டு மாவட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை விரைவில் வழங்குமாறு வலியுறுத்தி இன்று காலை திருக்கோவிலில் கவனயீர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

thirukkovil2.jpg

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இடம்பெற்ற இந்த பேரணியானது, தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை முன்னெடுக்கப்பட்டது

இப் பேரணியில் கலந்துகொண்டாவர்கள், அலுவலகத்தின் ஊடாக எந்தவொரு நன்மையும் இல்லை. தொடர்ந்தும் எங்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் ஜனாதிபதியும், நல்லாட்சி அரசும் ஈடுபடாது காணாமல்போன எமது கணவன், பிள்ளைகள், உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா?அல்லது இல்லாது போனதற்கான காரணங்களை விரைவில் வெளியிடுவதுடன் இந்த கண்ணீர் போராட்டத்திற்கான முடிவையும் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

thirukkovil1.jpg

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டே குறித்த பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/39412

  • தொடங்கியவர்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி

 

 
 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று, மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

mannar2.jpg

இந்த பேரணியில், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, அருட்தந்தையர்கள், மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

mannar4.jpg

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் காலை 10.30 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணி, மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் எங்கே?, வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே?, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே?, இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் எங்கே?, ஜனாதிபதியே இன்னும் ஏன் மௌனம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் எத்தனை காலத்திற்கு என பல்வேறு வசனங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பி எதிர்ப்பினை வெளியிட்டனர்.

mannar1.jpg

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தையர்களான பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்  மற்றும் நிகால் ஜிம்பிறவுண் அடிகளார் ஆகிய இருவரது படங்களையும் ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

mannar3.jpg

அதன் பின்னர் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸுடம் மகஜர் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/39419

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.