Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத­ல­மைச்­சரை விரட்­டி­ய­டிக்க புலி­க­ளின் பாணி தேவை­யாம்

Featured Replies

முத­ல­மைச்­சரை விரட்­டி­ய­டிக்க புலி­க­ளின் பாணி தேவை­யாம்

 
 
northern_provincial_council-720x480-1-1.

 

 

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரைப் பத­வி­யில் இருந்து நீக்­கு­வது குறித்த சர்ச்­சை­யால் நேற்­றைய சபை நட­வ­டிக்­கை­கள் சிறிது பர­ப­ரப்­ப­டைந்­தன.

வடக்கு அமைச்­ச­ரவை இயங்க முடி­யா­மல் முடங்­கிக் கிடக்­கும் நிலை­யில் அந்­தப் பிரச்­சி­னை­யைத் தீர்க்க நட­வ­டிக்கை எடுக்­கா­மல் இழுத்­த­டிக்­கும் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை அந்­தப் பத­வி­யில் இருந்து நீக்­கு­வ­து­தான் அதற்கு மாற்­று­வழி என்று தெரி­வித்­த­தன் மூலம் முத­ல­மைச் சரைப் பதவி நீக்­கு­வது குறித்த சர்ச்­சைக்கு தொடக்­க­மிட்­டார்.

இது போன்ற சம­யங்­க­ளின் மக்­க­ளாட்­சித் தத்­து­வத்­துக்கு மாறாக இருந்­தா­லும் விடு­த­லைப் புலி­கள் இயக்­கம் போன்று செயற்­ப­ட­வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

‘‘மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யாக விசு­வா­ச­மாக நடக்­காத சந்­தர்ப்­பங்­க­ளில் முக்­கிய முடி­வு­களை நாங்­கள் எடுக்­க­வேண்­டும். தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் சில தீர்­மா­னங்­களை இப்­ப­டி­யான சந்­தர்ப்­பங்­க­ளில் எடுத்­தி­ருக்­கின்­றார்­கள். மாத்­தை­யா­வுக்கு என்ன நடந்­தது? கரு­ணா­வுக்கு என்ன நடந்­தது? அந்­தத் தீர்­மா­னங்­கள் மக்­க­ளாட்­சிக்­குப் புறம்­பா­ன­வை­யாக இருக்­க­லாம். ஆனால் அப்­ப­டி­யான தீர்­மா­னங்­கள் சில இடங்­க­ளில் தேவைப்­ப­டு­கின்­றன’’ என்­றார் ஐ.அஸ்­மின்.

வடக்கு மாகாண சபை­யில் அமைச்­ச­ரவை தொடர்­பான சர்ச்சை எழுந்த போது விவா­தத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
எல்லா நேரத்­தி­லும் சுறு­சு­றுப்­பான – புத்­தி­சா­லித்­த­ன­மாக (ஸ்மாட்­டாக) இல்­லா­வி­டி­னும் சிக்­கல் நிறைந்த நேரங்­க­ளில் புத்­தி­சா­லித்­த­ன­மான தலை­மைத்­து­வம் தேவைப்­ப­டும்.

அமைச்­ச­ரவை இல்லை. அமைச்­ச­ர­வை­யின் தலை­வ­ரும் முத­ல­மைச்­ச­ரு­மா­ன­வர் பொறுப்­புச் சொல்ல வேண்­டிய சபைக்­குக் கட்­டு­ப­டு­கின்ற நிலை­யில் இல்லை. எனவே இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் புத்­தி­சா­லித்­த­ன­மான தலை­மைத்­து­வம் தேவைப்­ப­டு­கின்­றது. சபைக்­குக் கட்­டுப்­ப­டாத, சபைக்­குப் பொறுப்­புச் சொல்­லாத ஒரு முத­ல­மைச்­சர் எங்­க­ளுக்­குத் தேவையா என்­பது கேள்வி. அத­னைச் சபை தீர்­மா­னிக்­க­வேண்­டும். அந்­தத் தீர்­மா­னத்தை நீங்­கள் (அவைத் தலை­வர்) முன்­வைக்­க­லாம். இந்த விட­யத்­துக்கு என்ன முடி­வெ­டுக்­கப் போகின்­றோம்?

இரண்டு சந்­தர்ப்­பங்­க­ளில் சபை ஏக­ம­ன­தா­கத் தீர்­மா­னம் எடுத்து முத­ல­மைச்­ச­ருக்கு அறி­வித்­துள்­ளது. தேநீர் கடை­யில் பேசு­ப­வர்­கள்­கூட அமைச்­ச­ரவை நிய­மிக்­கின்ற அதி­கா­ரம் யாருக்கு இருக்கு என்று தெளி­வா­கச் சொல்­கின்­றார்­கள்.

முத­ல­மைச்­சர்­தான் அமைச்­சர்­கள் யார் என்­பதை ஆளு­ந­ருக்கு அறி­விக்­க­வேண்­டும். இது எல்­லோ­ருக்­கும் தெரி­யும். காலம் கடத்தி ஒன்­றும் நடக்­க­வில்லை என்று விடக் கூடிய பிழை­யான முன்­னு­தா­ர­ணத்தை நோக்­கித்­தான் முத­ல­மைச்­சர் சென்று கொண்­டி­ருக்­கின்­றார். அப்­ப­டி­யாக இருந்­தால் இந்­தச் சபை­யின் விவா­தத்தை இன்­னொரு நிலைக்கு மாற்­றுங்­கள்.

மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யாக – விசு­வா­ச­மாக நடக்­காத சந்­தர்ப்­பங்­க­ளில் முக்­கிய முடி­வு­களை நாங்­கள் எடுக்­க­வேண்­டும். அப்­ப­டி­யான நில­மை­யில் நீங்­கள் (அவைத் தலை­வர்) புத்­தி­சா­லித்­த­ன­மான தலை­மைத்­து­வத்தை எடுங்­கள் – என்­றார்.

அவைத் தலை­வரோ, புத்­தி­சா­லித்­த­ன­மான தலை­மைத்­து­வத்தை எடுத்­துத்­தான் இந்த விட­யத்­தில் சம­ர­ச­மான போக்­கில் சென்று கொண்­டி­ருக்­கின்­றேன் – என்­றார். எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா, சம­ர­ச­மான போக்கு அல்ல சர­ணா­கதி என்று குறிப்­பிட்­டார். அவைத் தலை­வர் அதனை மறு­த­லித்­தார்.

அமைச்­சர் ஒரு­வரை நிய­மிக்­கும் ஆலோ­ச­னையை நீங்­கள் வழங்­க­லாமா? என்று அவைத் தலை­வ­ரி­டம் அஸ்­மின் கேள்வி எழுப்­பி­னார். இல்லை என்று அவைத் தலை­வர் பதி­ல­ளித்­தார். இந்­தச் சபை­யின் பெரும்­பான்மை நம்­பிக்­கை­யைப் பெற்ற முத­ல­மைச்­ச­ருக்­குத்­தான் அந்த அதி­கா­ரம் இருக்­கின்­றது. அவர் அத­னைச் செய்­ய­வில்லை என்­றால் அடுத்­தது என்ன? அந்­தப் பரிந்­து­ரையை மேற்­கொள்­ளக் கூடி­ய­வரை முத­ல­மைச்­ச­ராக்­கு­வ­து­தான் – என்­றார்.

https://newuthayan.com/story/10/முத­ல­மைச்­சரை-விரட்­டி­ய­டிக்க-புலி­க­ளின்-பாணி-தேவை­யாம்.html

  • தொடங்கியவர்

காலம் கடத்­தும் விக்­கியை தோலு­ரித்­துக் காட்­டுங்­கள்

முன்­னாள் அமைச்­சர் குரு­கு­ல­ராஜா சீற்­றம்

 
 
Kurukula-rajha-education-ministor-780x40
 
 
 

வடக்கு மாகாண அமைச்­ச­ர­வைக் குழப்­பத்தை தீர்க்­கா­மல் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் காலம் கடத்­து­கின்­றார். அது எல்­லோ­ருக்­கும் தெரி­யும். அதனை நாங்­கள் மக்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும். நாங்­கள் காலம் கடத்­த­வில்லை என்­ப­தை­யும் மக்­க­ளுக்­குச் சொல்­ல­வேண்­டும்.

இவ்­வாறு வடக்கு மாகாண முன்­னாள் கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராஜா தெரி­வித்­தார்.
வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் அமைச்­ச­ரவை தொடர்­பில் சர்ச்சை ஏற்­பட்­டது. இந்த விவா­தத்­தில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அவைத் தலை­வர் சம­ர­சம் என்ற சொல்­லைப் பயன்­ப­டுத்­தி­னீர்­கள். அமைச்­ச­ர­வையை விரை­வில் உரு­வாக்­குங்­கள் என்று இரண்டு தடவை நாங்­கள் தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யி­ருந்­தோம். முத­ல­மைச்­ச­ரு­டன் பேச்சு நடத்த இந்­தச் சபை நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்­றதா? யாரா­வது போய் சந்­தித்­துள்­ளார்­களா?

அமைச்­ச­ரவை இல்­லா­மல் மாகா­ண­சபை இயங்க முடி­யுமா? அவர்­க­ளின் அதி­கா­ரங்­கள் யாருக்­கா­வது கொடுக்­கப்­பட்­டுள்­ள­னவா? இந்த விட­யங்­க­ளி­லி­ருந்து தப்­பித்­துக் கொள்ள முடி­யாது. இந்த விட­யங்­க­ளில் நாங்­கள் மக்­க­ளுக்கு சரி­யான முடிவை வழங்க வேண்­டு­மா­னால், தொடர்ச்­சி­யாக இயங்க வேண்­டு­மா­னால் சம­ர­சத்­துக்­குப் போக வேண்­டி­யி­ருக்­கின்­றது. ஒரு இடத்­தில் முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது – – என்­றார்.

இந்த விவ­கா­ரத்­தில் உரை­யாற்­றிய எதிர்க்­கட்சி உறுப்­பி­னர் அப்­துல் நியாஸ் சீனி மொஹ­மட், அமைச்­ச­ர­வைக் குழப்­பம் தொடர்­பில் முத­ல­மைச்­ச­ரு­டன் நான் பேச்சு நடத்­தி­னேன். முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் விதித்­துள்ள நிபந்­த­னை­களை முத­ல­மைச்­சர் ஏற்­றுக்­கொண்­டால் இந்­தப் பிரச்­சி­னையை இல­கு­வா­கத் தீர்த்­துக்­கொள்­ள­லாம் என்று அவர் தெரி­வித்­தார். தனது நிபந்­த­னை­களை முத­ல­மைச்­சர் ஏற்­றுக்­கொண்­டால் நீதி­மன்­றக் கட்­ட­ளைப்­படி தான் பத­வி­யேற்­கா­மல் இருப்­ப­தற்­கும் தயார் என்று டெனீஸ்­வ­ரன் தெரி­வித்­தி­ருந்த கருத்­தை­யும் முன்­வைத்­தார்.

முத­ல­மைச்­சர் பொது­மன்­னிப்­புக் கோரு­வது, முன்­னாள் போரா­ளி­க­ளுக்கு தான் அமைச்­ச­ராக இருந்த காலத்­தில் முன்­னெ­டுத்த வாழ்­வா­தார வேலை­க­ளைத் தொடர்­வது, வடக்கு மாகா­ணத்­துக்­கான இணைந்த நேர அட்­ட­வ­ணையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது. இந்த மூன்று கோரிக்­கை­க­ளை­யும் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் ஏற்­றுக் கொண்­டால், பத­வி­யைத் துறப்­ப­தற்­குத் தயார் என்று கூறி­யி­ருந்­தார்.

முத­ல­மைச்­சர் பொது மன்­னிப்­புக் கோரும் விட­யத்தை வேண்­டு­மென்­றால் விட்­டு­வி­டு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். இது தொடர்­பில் முத­ல­மைச்­ச­ரு­டன் பேசி­னேன். அவர் இணக்­கத்­துக்கு வரு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் தென்­பட்­டன. இன்­னும் சில உறுப்­பி­னர்­கள் சேர்ந்து முத­ல­மைச்­ச­ரு­டன் பேசி­னால் இந்­தப் பிரச்­சி­னைக்கு முடிவு கட்­ட­லாம் – என்­றார்.

https://newuthayan.com/story/10/காலம்-கடத்­தும்-விக்­கியை-தோலு­ரித்­துக்-காட்­டுங்­கள்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.