Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்குக் கரைக்கு அப்பால் எண்ணெய் வள ஆய்வு ஆரம்பம்- அமெரிக்க நிறுவனத்திடம் கையளித்தது மைத்திரி-ரணில் அரசு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குக் கரைக்கு அப்பால் எண்ணெய் வள ஆய்வு ஆரம்பம்- அமெரிக்க நிறுவனத்திடம் கையளித்தது மைத்திரி-ரணில் அரசு?

 
 
 
 
 
main photo
 
 
check icon
 
 
pencil icon
 
i iconதிருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளன. பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்புத் துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் கிழக்குக் கரைக்கு அப்பால் அமைந்துள்ள JS5 மற்றும் JS6 ஆகிய வலயங்களில் ஐயாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குப் பயணம் செய்து, இந்தக் கப்பல் கடலடியில் உள்ள நில அதிர்வு அலைகளை ஆராயவுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளம் குறித்து ஆராய்வதற்காக Schlumberger என்ற பாரிய எண்ணெய் வயல் சேவை நிறுவனத்தின் கிளை நிறுவனமான Eastern Echo DMCC உடன் மே மாதம் இலங்கை ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது. 
 
இலங்கையின் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்சுனா ரணதுங்க மே மாதம் 30 ஆம் திகதி இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார்.

 

 

ஈழத் தமிழர்களின் கடற் பிரதேசங்கள் மற்றும் நிலங்களை இந்தியச் சாா்பு நிலை நாடுகளான அமெரிக்கா. ஜப்பான், ஆகிய நாடுகளிடம் மைத்திரி- ரணில் அரசாங்கம் கையளித்து வருகின்றது-- அவதானிகள்.

 

கிழக்கின் கடலில் எண்ணெய் வள ஆய்வு மட்டுமல்ல, இராணுவ ரீதியான கடற்படை உறவையும் அமெரிக்கா பலப்படுத்தியிருக்கிறதென்பதையும் இலங்கையின் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Schlumberger என்ற பாரிய எண்ணெய் வயல் சேவை இந்த நிறுவனம், தரவுகளைத் திரட்டி, அவற்றைபப் பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவுள்ளது. அதற்காக இரு பரிமான மற்றும் முப்பரிமான தரவுகளை அது திரட்டவுள்ளது.

இந்த ஆய்வுக்கு Eastern Echo DMCC நிறுவனம் ஐம்பது மில்லியன் டொலரை முதலிடுமெனவும், பல்வேறு முதலீட்டாளர்களுக்கு தரவுகளை விற்பனை செய்து அந்தப் பணத்தை மீளப் பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை நடவடிக்கைகள் இலங்கை அரசுடன் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்க நிறுவனத்தின் துணை நிறுவனமான Eastern Echo DMCC என்ற நிறுவனம் மத்தியகிழக்கில் டுபாயில் பதிவுசெய்யப்பட்டுள்ள நிறுவனமாகும்.

இன்று சனிக்கிழமை BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல் கொழும்புத் துறை முகத்திற்கு வரும் என்ற இந்த செய்தியை lankabusinessonline.com என்ற செய்தி இணையத்தளம் நேற்று வெள்ளி்க்கிழமை வெளியிட்டிருந்தது.

அதேவேளை, முல்லைத்தீவில் இருந்து கிழக்கு வரையான ஈழத் தமிழர்களின் கடற் பகுதியை அமெரிக்காவுக்கு தாரை வார்க்கின்றதா இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற தலைப்பில் கடந்த மே மாதம் கூர்மைச் செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இதேவேளை, அமெரிக்கக் கடற்படையின் விசேட படைப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக் கடற்படைக்கு கடந்த மாதம் திருகோணமலைத் துறைகத்தில் உள்ள இலங்கைக் கடற்படையின் பிரதான முகாமில் பயிற்சியளித்திருந்தது.

அதனையடுத்து அமெரிக்காவின் USS Anchorage கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை வருகை தந்துள்ளது. சுமாா் தொள்ளாயிரம் அமெரிக்கக் கடற்படை அதிகாரிகளும் கப்பலில் வந்திருந்தனர்.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்து, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலைத் துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டிருந்தார்.

ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவை கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) சென்ற புதன்கிழமை கையளித்திருந்தார்.

ஈழத் தமிழர்களின் கடற் பிரதேசங்கள் மற்றும் நிலங்களை இந்தியச் சாா்பு நிலை நாடுகளான அமெரிக்கா. ஜப்பான், ஆகிய நாடுகளிடம் மைத்திரி- ரணில் அரசாங்கம் கையளித்து வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை உடைக்கும் நோக்கிலும் தமிழ்த்தேசிய அரசியலை பலவீனப்படுத்தும் வகையிலும் துாரநோக்குச் சிந்தனையுடன் இலங்கை அரசு என்ற கட்டமைப்பு செயற்படுவதாகவும் அவதானிகள் கூறுகின்றனர்.

ஈழத் தமிழர் விடயத்தில் இலங்கை முப்படையினரை உள்ளடக்கிய, இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் இந்தப் பொறிமுறையைப் புரிந்து கொண்டு, மாற்று அரசியல் செயன்முறைகளை வகுக்கக் கூடியதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் அமையவில்லை என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=266

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.