Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற நிதிக்குழு யாழ்.மாவட்ட செயலகத்தில் முதல்தடவையாக கூடுகிறது…

Featured Replies

நாடாளுமன்ற நிதிக்குழு யாழ்.மாவட்ட செயலகத்தில் முதல்தடவையாக கூடுகிறது…

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

sumanthiran-mp.jpg?resize=640%2C480

 

வரவு செலவு திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்தறிவதற்காக நாடாளுமன்ற நிதிக்குழு நாளை திங்கள் கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் முதல்தடவையாக கூடவுள்ளதாக நிதிக்குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும், நிதிக்குழு தலைவருமான எம்.ஏ.சு மந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நாடாளுமன்றில் நிதிக்குழு, பொதுக்கணக்குகள் குழு, கோப் குழு என 3 குழுக்கள் உள்ளது. இதில் நிதிக்குழு புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த குழு வரவு செலவு திட்டத்திற்கு முன்னரும் பின்னருமான நிதி முன்மொழிவுகள் அமுலாக்கம் குறித்து அவதானிப்பதற்கான குழுவாகும்.

இந்த குழுவின் தலைவராக நான் இருக்கிறேன். இந்த குழு நாடாளுமன்றத்திற்கு உள்ளே கூட்டங்களை நடாத்தினாலும், வெளியே நடாத்தினாலும் அது பாராளுமன்ற கூட்டங்களாக அமையும்.

இதன்படி முதல்தடவையாக நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட்டங்களை நடாத்தவுள்ளது. இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டி மாவட்டத்தில் கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.  இதனை தொடர்ந்து நாளை திங்கள் கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில்  இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து மாத்தறை போன்ற இடங்களில் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் ஒரு திறந்த கூட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பு பொது அமைப்புக்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேபோல் பொதுமக்களும் இந்த கூட்டங்களில் கலந்து கொண்டு வரவு செலவு திட்டத்தில் இடம்பெறவுள்ள தமது தேவைகள் குறித்த கருத்துகளை கூறலாம். ஆலோசனைகளையும் வழங்கலாம்.

மேலும் இந்த கூட்டத்தில் நிதிக்குழு அங்கத்தவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய 7 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். விசேடமாக வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் திணைக்களம் சார் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/93745/

  • தொடங்கியவர்

நாடா­ளு­மன்ற நிதிக் குழுக் கூட்டம்- யாழ்ப்பாணத்தில்!!

 
 
20180903_103606-780x405.jpg
 

நாடா­ளு­மன்ற நிதிக் குழு­வின் கூட்­டம் முதன் முத­லாக நாடா­ளு­மன்­றத்­துக்கு வெளியே நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நாடா­ளு­மன்ற பொது­நி­திக் குழு­வின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப் பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன் மற்றும் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் உட்பட மாவட்டச் செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

நாடா­ளு­மன்­றத்­தில் நிதி விவ­கா­ரங்­க­ளைக் கையாள்­வ­தற்கு நியமிக்கப்பட்டுள்ள நாடா­ளு­மன்ற பொது நிதிக் குழு, இந்த ஆண்டு சமர்­பிக்­கப்­ப­ட­வுள்ள வரவு – செல­வுத் திட்­டத்தை ஆரா­ய்வதற்கான இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

20180903_1036120-Copy.jpg20180903_103600-Copy.jpg20180903_1036120.jpg

https://newuthayan.com/story/10/நாடா­ளு­மன்ற-நிதிக்-குழுக்-கூட்டம்-யாழ்ப்பாணத்தில்.html

  • தொடங்கியவர்
நாடாளுமன்ற நிதிக் குழுக் கூட்டம்
 

-எஸ்.நிதர்ஷன்

வரவு - செலவுத் திட்டங்களில் அரசாங்கம் உள்ளடக்கப்பட்டு நடைமுறைப்படுத்தாத விடயங்கள் தொடர்பிலும் அடுத்தாண்டு வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடகப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் பொது மக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் பாராளுமன்ற நிதிக் குழுவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் நாடாளுமன்ற நிதிக் குழுக் கூட்டம், யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மேற்படி குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன் போது, இந்தக் குழுவின் செயற்பாடுகள் மற்றும் கூட்டத்தை நடத்துவதன் நோக்கம் என்பன தொடர்பில் குழுவின் தலைவர் எடுத்துக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் எடுத்துக் கூறியிருந்தனர்.

இதில் மிக முக்கியமாக மாவட்டத்தில் மீள்குடியேற்றத்திற்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படுகின்ற நிதி கடந்த வருடத்திலும் விடவும் இந்த வருடம் பல மடங்கு குறைவாக ஒதுக்கப்பட்டிருந்ததால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள், பாதிப்புகள் என்பன தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆகவே, அடுத்த வருட ஒதுக்கீட்டில் இதனை அதிகரிக்க வேண்டுமென முன்வைத்த கோரிக்கையை சாதகமாகப் பரீசீலித்த மேற்படி குழுவானது இந்த விடயங்களை ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் போராளிகளை வேலைக்கு அமர்த்துவது சம்பந்தமாக, கடந்த வரவு –செலுவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனை சரியான முறையில் அமுல்படுத்தப்படாதமை குறித்து ஆராயப்பட்டு, அதற்கான மாற்று வழிகள் தொடர்பிலும் பரீசீலிக்கப்பட்டது.

மேலும், பெண்கள் சம்பந்தமாக பிரத்தியோகமாக திட்டங்கள் வரையப்பட வேண்டுமென்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது. அதே போன்று புகையிலை தடை செய்யப்படுவதால் அதனை நம்பியிருக்கின்ற 36 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் மாற்றுப் பயிர்ச்செய்கை தொடர்பிலும் பேசப்பட்டது.

இவ்வாறு வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசப்பட்டிருந்தன. அதே நேரம் வரவு - செலவுத் திட்டங்களில் முன்மொழியப்பட்டு அவை நடைமுறைப்ப்படுத்தப்படாமல் இருக்கின்ற விடயங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டன. ஆகவே, ஆடுத்த வரவு - செலவுத் திடத்தில் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு விசேட நீதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியில் மத்திய அரசாங்கம் தீர்மானித்ததையே செய்யுமாறு கூறுவதால் மாகாண சபையால் எதனையும் செய்ய மடியாதிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் பகிரப்பட்டிருக்கின்ற மாகாணத்தின் அதிகாரங்களில் மாகாணசபைக்கான நிதி அதிகாரங்களை அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் பறிப்பபதாகவும் இனிவரும் காலங்களில் அவ்வாறு நடக்காத வகையில் கொள்கை மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மாவட்டத்துகு தேவையான பல விடயங்கள் மற்றும் இருக்கின்ற பிரச்சனைகள் தொடர்பிலும் மக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு மேற்படி குழு தன்னுடைய சிபார்சுகளைச் செய்யுமென குழுவின் தலைவர் சுமந்திரன் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/நாடாளுமன்ற-நிதிக்-குழுக்-கூட்டம்/71-221196

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.