Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கியைச் சந்திக்க அழைக்கிறார் சம்பந்தன்

Featured Replies

விக்கியைச் சந்திக்க அழைக்கிறார் சம்பந்தன்

 

sampanthan-vigneswaran-300x199.jpg“உடனடியாக ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க நான் நினைக்கவில்லை. புதிய கட்சியை தொடங்குவது எனது வயதில் மிகவும் இலகுவானதாக இருக்காது இது கலந்துரையாடல்களாகத் தான் சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எவ்வாறாயினும், பிந்திய நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டாம் என்றும், தமது கட்சியுடன் இணைந்திருக்குமாறும் அவர் என்னிடம் கேட்கக் கூடும். அது எமக்குத் தெரியாது.” என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா போன்ற சில புறச் சக்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனவா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன்,

அது உண்மையாக இருக்கலாம். என்னுடன் அதுபற்றிக் கலந்துரையாடப்படவில்லை. ஆனால் அது உண்மையாக இருக்கக் கூடும்.

ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கலாம். இது எல்லாமே, மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்பதை சார்ந்திருக்கிறது.

நான் ஒன்றையும் மறைக்கவில்லை. எனது நிலைப்பாடு என்னவென்றால், சமஸ்டியைக் கோரியே நாங்கள் பதவிக்கு வந்திருக்கிறோம். சமஸ்டியைக் கோரும் நிலையில் மாற்றம் செய்வதானால்,  நாங்கள் மீண்டும் மக்களிடம் சென்று அவர்களின் ஆணையைப் பெற வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/09/03/news/32681

  • தொடங்கியவர்

விக்னேஸ்வரனை 7ஆம் திகதி சந்திக்க சம்பந்தன் வேண்டுகோள்: புதிய கட்சியை தொடங்கவேண்டாம் என்று அவர் கேட்கக்கூடும் என்கிறார் முதலமைச்சர்

 

 
 

விக்னேஸ்வரனை 7ஆம் திகதி சந்திக்க சம்பந்தன் வேண்டுகோள்: புதிய கட்சியை தொடங்கவேண்டாம் என்று அவர் கேட்கக்கூடும் என்கிறார் முதலமைச்சர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வி அடைந்துவிட்டதாகவும் தமிழ் தேசிய அரசியலின் புதிய தலைமை பாத்திரத்தை வகிக்க தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிவித்திருக்கும் நிலையில் அவசர அவசரமாக அவரை சந்திப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

எதிர்வரும் 7 ஆம் திகதி முதலமைச்சரை சந்திப்பதற்கு சம்பந்தன் கேட்டிருப்பதாக ஆங்கில நாளேடான டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு சம்பந்தன் கேட்டிருப்பதாக டெய்லி மிரர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள விக்னேஸ்வரன் புதிய கட்சி ஒன்றை அமைக்க வேண்டாம் என்றும் தமது கட்சியுடன் இணைந்திருக்குமாறும் சம்பந்தன் தன்னிடம் கேட்கக்கூடும் என்றும் கூறியுள்ள விக்னேஸ்வரன் எவ்வாறெனினும் எது பற்றியும் தனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

புதிய கட்சி ஒன்றை தொடங்குவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த வயதில் புயஹியா கட்சி ஒன்றை தொடங்குவது இலேசான விடயமல்ல என்றும் ஆனால் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன என்றும் கூறினார்.

தமிழ் தேசிய  கூட்டமைப்பு பிளவடையாமல் இருக்க வேண்டும் இந்தியா போன்ற சில வெளிச்சக்திகள் கேட்டுள்ளனவா என்று கேட்டதற்கு அது உண்மையாக இருக்கக்கூடும் என்றும் ஆனால் தான் இதுதொடர்பில் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் கூறினார். அவர்கள் ஒற்றுமையை விரும்பலாம் ஆனால் மக்கள் எவ்வாறு ஏமாற்றபப்டுகிறார்கள் என்பதிலேயே இது தங்கி இருக்கிறது என்று விக்னேஸ்வரன் மேலும் பதிலளித்தார்.

” நான் எதையும் மறைக்கவில்லை. சமஷ்டி அடிப்படையில் தீர்வை பெற்றுக்கொள்ளவே நாம் முயல்கிறோம். இதைத் தான் நாம் கேட்டிருக்கிறோம். இது மாற்றப்பபடவேண்டும் என்றால் நாம் எமது மக்களிடம் மீண்டும் சென்று அவர்களின் அனுமதி பெறவேண்டும் ” என்று விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

http://www.samakalam.com/செய்திகள்/விக்னேஸ்வரனை-7ஆம்-திகதி-ச/

  • தொடங்கியவர்

விக்கியை சந்திப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை – விரைவில் என்கின்றார் சம்பந்தன்!

 

 

cv-wigneswaran-sambanthan.jpg

வடக்கு முதலமைச்சருடனான சந்திப்பு தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எதிர்வரும் 7 ஆம் திகதி நாங்கள் இருவரும் சந்திக்க உள்ளதாக ஊடகங்கள் மூலமே தான் அறிவதாகவும் கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாண முதலமைச்சர் என்னைச் சந்திப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளார் இருப்பினும் நாங்கள் சந்திப்பதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இந்நிலையில் சி.வி.விக்னேஸ்வரன் விரும்பும் நேரத்தில் என்னைச் சந்தித்துக் கொள்ளலாம் என சம்பந்தன் கூறினார்.

கடந்த சில நாட்களாக விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது, முதலமைச்சர் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பில் மீண்டும் போட்டியிட மாட்டார் என பல செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

http://athavannews.com/விக்கியை-சந்திப்பது-தொடர/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.