Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலஞ்சத்துக்கு எதிராக மரத்தில் ஏறி முதியவர் போராட்டம் – கிளிநொச்சியில் பரபரப்பு!!

Featured Replies

இலஞ்சத்துக்கு எதிராக மரத்தில் ஏறி முதியவர் போராட்டம் – கிளிநொச்சியில் பரபரப்பு!!

 

 

 
IMG_3857-780x405.jpg

 

 

பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் இன்று கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த நிலையில், அவர்கள் முன்னிலையில் முதியவர் ஒருவர் இலஞ்சத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

கிளிநொச்சியில் பொலிஸார் ஒருவர் இலஞ்சம் பெறுவதாகக் குற்றஞ்சாட்டி முதியவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்காக அடிக்கல் நடும் நிகழ்வுக்காக வருகை தந்திருந்த பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

இதன் போது மேடையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், நீதிபதிகள் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ் மா அதிபர், ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அத் தருணத்தில் மேடைக்கு நேர் எதிராக ஏ9 பிராதான வீதியின் ஓரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில் இருந்து முதியவர் கையில் ஒரு பதாகையை வைத்துக்கொண்டு உரத்த குரலில் சத்திமிட்டுக் கொண்டிருந்தார்.

உடனடியாக விரைந்த பொலிஸார் முதியவருடன் பேசி அவரை மரத்தில் இருந்து கீழே இறக்கினர். அவரை சமரசம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

IMG_4183.jpgIMG_4174.jpgIMG_4173.jpgIMG_3870.jpgIMG_3865.jpgIMG_3859.jpg

https://newuthayan.com/story/12/இலஞ்சத்துக்கு-எதிராக-மரத்தில்-ஏறி-முதியவர்-போராட்டம்-கிளிநொச்சியில்-பரபரப்பு.html

  • தொடங்கியவர்

இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறியவர் சிறைக்கு – இலஞ்சம் பெற்றவர் நெடுந்தீவிற்கு…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

IMG_4183.jpg?resize=800%2C533

 

காவற்துறையினர் இலஞ்சம் பெறுகின்றனர் எனத் தெரிவித்து மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று 03-09-2018 காலை ஒன்பது முப்பது மணிக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற வேளை . மேடைக்கு நேர் எதிராக ஏ9 பிராதான வீதியின் ஓரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில் இருந்து முதியவர் கையில் ஒரு பதாகையை வைத்துக்கொண்டு உரத்த குரலில் சத்திமிட்டுக்கொண்டிந்தார்

இதனை கையில் வைத்திருந்த முதியவர் காவற்துறையினர் இலஞ்சம் வாங்குவதாகவும், குறிப்பாக கிளிநொச்சி காவற்துறை நிலையத்தில் உள்ள ( ஒருவரின் பெயரை குறிப்பிட்டு) அவர் இலஞ்சம் பெறுவதாகவும் தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்

போராட்டம் நடத்திய அந்த முதியவரை காவற்துறையினர் நேற்று (03.09.18) கைது செய்துள்ளனர் நீதிமன்றத்தை அவமதித்ததுடன் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையுறு வழங்கியமை என்ற குற்றச் சாட்டிலையே குறித்த முதியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் முதியவரை இன்று(04) நீதவான் நீதிமன்றில் முற்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

மேலும் கிளிநொச்சி காவற்துறையினர் நிலையத்தில் உள்ள காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் (போராட்டம் நடத்திய முதியவர் குறிப்பிட்ட) இலஞ்சம் பெறுவதாகவும் முதியவரால் தெரிவிக்கப்பட்டதனை அடுத்து அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் றோசான் பெர்னாண்டோவினால் குறித்த காவற்துறை உத்தியோகத்தர் எவ்வித விசாரணைகளும் இன்றி இன்று காலை நெடுந்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.

http://globaltamilnews.net/2018/94140/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.