Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் நீதிமன்ற தொகுதி

Featured Replies

கிளிநொச்சியில் நீதிமன்ற தொகுதி
 

image_5a1143f35f.jpg

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார், மு. தமிழ்ச்செல்வன்,எஸ்.என்.நிபோஜன்

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர். சட்டத்தரணி தலதா அத்துகோரலவின் அழைப்பின் பேரில், கிளிநொச்சியில் புதிய நீதிமன்றத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, பிரதம நீதியரசர் பியசாத் டெப் தலைமையில் இன்று (03) நாட்டப்பட்டது. 

மூன்று மாடிகளைக் கொண்ட மேற்படி கட்டடத்தொகுதிக்கு 380 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் மற்றும் நீதவான்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் இரண்டு, இந்த புதிய தொகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளன.

வட மாகாணத்தில் நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில், புதிய நீதிமன்றக்கட்டடத் தொகுதிகளின் நிர்மாணப்பணிகள், அடுத்தவருடம் நிறைவடையவிருக்கின்றன என  அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image_4f6b0bd410.jpg

http://www.tamilmirror.lk/வன்னி/கிளிநொச்சியில்-நீதிமன்ற-தொகுதி/72-221171

  • தொடங்கியவர்

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலாவால் அதிருப்தியடைந்த வடக்கு சட்டத்தரணிகள்

 

கிளிநொச்சி நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஒழுங்கமைப்பில் நீதி அமைச்சின் திடீர் தலையீட்டால் சட்டத்தரணிகள் கடும் விசனமடைந்துள்ளனர்.

நிகழ்விலிருந்து வெளியேற முடிவெடுத்த சட்டத்தரணிகள் பிரதம நீதியரசர் இந்த நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டதால் அவருக்கு மதிப்பளித்து அந்த முடிவைக் கைவிட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் மாகாண மேல் நீதிமன்றை உள்ளடக்கிய புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரல ஆகியோர் பிரதம அதிதிகளாகப் பங்கேற்று அடிக்கல்லை நட்டு வைத்துள்ளனர்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கிளிநொச்சி நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தினர் முன்னெடுத்தனர். அவர்களின் நிகழ்வு ஒழுங்குகளின் அடிப்படையிலேயே இன்றைய விழா இடம்பெற இருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நீதி அமைச்சரின் அழைப்பின் பேரில் நிகழ்வுக்கு வருகை தந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வருகையடுத்து நீதி அமைச்சின் திடீர் தலையீட்டால் நிகழ்வு ஒழுங்குகள் மாற்றியமைக்கப்பட்டன.

மங்கள விளக்கேற்றல் நிகழ்வு ஒழுங்கில் மூத்த தமிழ் நீதிபதியான யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் பெயரை நீக்கிவிட்டு அவரது இடத்துக்கு விஜயகலா மகேஸ்வரனை மங்கள விளக்கேற்றலுக்கு நீதி அமைச்சு அதிகாரிகள் அழைத்தனர்.

நீதி அமைச்சின் இந்த நடவடிக்கை சட்டத்தரணிகளை பெரிதும் பாதித்தது. இந்த நிகழ்வை அரசியல் நிகழ்வாக மாற்றியமைக்க நீதி அமைச்சு முயல்கிறதா என கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன், அடிக்கல் நாட்டும் நிகழ்வு நிறைவடைந்ததும் உரையாற்றுவோர் ஒழுங்கில் கிளிநொச்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணித் தலைவரை நீக்கிவிட்டு அவரது இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலாவின் பெயரை நீதி அமைச்சின் அதிகாரிகள் இணைத்துள்ளனர்.

இதனால் அதிருப்தியடைந்த சட்டத்தரணிகள், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றுவாராயின் நிகழ்விலிருந்து வெளியேறுவோம் என யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கத்திடம் எடுத்துரைத்துள்ளனர்.

சட்டத்தரணிகள் சங்கத் தலைவி இந்த விடயத்தை நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரலயிடம் எடுத்துக் கூறினார். சட்டத்தரணிகளின் இந்த வெளிப்பாடை மேலோட்டமாக எடுத்துக் கொண்ட நீதி அமைச்சர், “இனி இப்படியான நிகழ்வு வடக்கு, கிழக்கில் நடைபெறாதுதானே” என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார்.

இதைனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் பெயரை உரையாற்றுவோர் ஒழுங்கிலிருந்து நீக்குமாறு அதிகாரிகளை அமைச்சர் பணித்துள்ளார்.

அமைச்சரின் பொறுப்பற்ற பதிலில் அதிருப்தியடைந்த சட்டத்தரணிகள் நிகழ்விலிருந்து வெளியேற முடிவெடுத்த போதும், நாட்டின் நீதித் துறையின் தலைவர் பிரதம நீதியரசர் பங்கேற்றிருப்பதால் அவருக்கு மதிப்பளித்து நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்தாமல் முடிவைக் கைவிட்டனர் என குறிப்பிடப்படுகின்றது.

 

https://www.tamilwin.com/community/01/192486?ref=home-top-trending

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.