Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதலமைச்சரின் கோரிக்கை -உயர் நீதிமன்றில் நிராகரிப்பு!!

Featured Replies

வடக்கு முதலமைச்சரின் கோரிக்கை -உயர் நீதிமன்றில் நிராகரிப்பு!!

 
 
img_9153-1200x550-780x405.jpg
 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்க செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒத்திவைக்குமாறு,  அவரது சட்டத்தரணி கொழும்பு உயர் நீதிமன்றில் இன்று முன்வைத்த கோரிக்கை நீதியரசர் குழாமினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/story/12/வடக்கு-முதலமைச்சரின்-கோரிக்கை-உயர்-நீதிமன்றில்-நிராகரிப்பு.html

  • தொடங்கியவர்

விக்னேஸ்வரனுக்கு எதிரான விசாரணையை தடுக்க மறுப்பு

நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பான வழக்கில்

 
 
vikkines-2-600x382.jpg
 

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னுக்கு எதி­ராக மாகாண சபை உறுப்­பி­னர் பா.டெனீஸ் வ­ரன் தாக்­கல் செய்த நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை விசா­ரிப்­ப­தற்கு இடைக்­கா­லத் தடை விதிக்க விடுக்­கப்­பட்ட கோரிக்­கையை உயர் நீதி­மன்­றம் நிரா­க­ரித்­துள்­ளது.

வடக்கு மாகாண அமைச்­ச­ர­வை­யில் இருந்து தன்னை நீக்­கி­யதை எதிர்த்து டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் தாக்­கல் செய்த மனு­வில் நீதி­மன்­றம் கொடுத்த இடைக்­கால உத்­த­ரவை முத­ல­மைச்­சர் இது­வ­ரை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை.

இத­னை­ய­டுத்து அவ­ருக்கு எதி­ராக நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு ஒன்றை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் டெனீஸ்­வ­ரன் தாக்­கல் செய்­தார். அந்த வழக்கு நாளை வி◌சா­ர­ணைக்கு எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்த நிலை­யில், டெனீஸ்­வ­ரனை அமைச்­சர் பத­வி­யில் இருந்து தூக்­கி­ய­தற்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது. அந்த விழக்கை விசா­ரித்த நீதி­ய­ர­சர்­கள் ஆயத்­தில் இருந்­த­வ­ரான நீதி­ய­ர­சர் தெகி­தெ­னிய இந்த வழக்கை விசா­ரிப்­ப­தற்கு டெனீஸ்­வ­ரன் தரப்பு ஆட்­சே­பனை கிளப்­பி­யது.

தன்­னைப் பதவி நீக்­கி­ய­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்து டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் தாக்­கல் செய்த வழக்கை நிரா­க­ரித்த நீதி­ய­ர­சர்­கள் ஆயத்­தின் உறுப்­பி­ன­ராக இருந்­த­வர் தெகி­தெ­னிய. அந்த ஆயத்­தின் தீர்ப்பை எதிர்த்து மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­திற்­குச் சென்ற டெனீஸ்­வ­ர­னுக்கு ஆத­ர­வா­கத் தீர்ப்பு வழங்­கப்­பட்­டது. புதிய நீதி­ய­ர­சர்­கள் ஆயம் ஒன்­றின் முன்­பாக வழக்கை விசா­ரிக்­கு­மாறு உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. அதன்­ப­டியே வழக்­குத் தற்­போது நடை­பெற்று வரு­கின்­றது.

ஆனால், நேற்­றை­ய­தி­னம் மற்­றைய நீதி­ய­ர­சர்­கள் ஆயத்­தின் முன்­பாக வேறொரு முக்­கி­ய­மான வழக்கு இருந்­த­தன் கார­ண­மாக, டெனீஸ்­வ­ரன் வழக்கு நீதி­ய­ர­சர் தெகி­தெ­னிய இருந்த ஆயத்­தின் முன்­பாக விசா­ர­ணைக்கு வந்­தது. இத­னால் ஆட்­சே­பனை கிளப்­பப்­பட்­டது. இதை­ய­டுத்து வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

வழக்கை மிகக் குறு­கிய காலத்­திற்­குள் தவ­ணை­யி­டு­மாறு மன்­றில் கோரிக்கை வைத்­தார் முத­ல­மைச்­சர் தரப்பு வாதி­யான சட்­டத்­த­ரணி கன­க­ஈஸ்­வ­ரன். அதனை ஏற்று எதிர்­வ­ரும் 28ஆம் திக­திக்கு வழக்கு தவ­ணை­யி­டப்­பட்­டது.

இதற்­கி­டை­யில், இந்த வழக்கு முடி­யும் வரை­யில், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக இந்த நீதி­மன்­றின் இடைக்­கா­லக் கட்­ட­ளை­யின் அடிப்­ப­டை­யில் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை விசா­ரிப்­ப­தற்­குத் தடை விதிக்­கு­மாறு முத­ல­மைச்­ச­ரின் சட்­டத்­த­ரணி கோரி­னார். நீதி­ய­ர­சர்­கள் ஆயம் அதனை நிரா­க­ரித்­தது.

முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­கில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர்­க­ளான அனந்தி சசி­த­ரன், க.சிவ­நே­சன் ஆகி­யோர் நாளை மன்­றில் முன்­னி­லை­யா­வ­தற்­கான அழைப்­பா­ணை­கள் நீதி­மன்­றால் அனுப்­பப்­பட்­டுள்­ளன.

https://newuthayan.com/story/09/விக்னேஸ்வரனுக்கு-எதிரான-விசாரணையை-தடுக்க-மறுப்பு.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.