Jump to content

‘அலி­பாபா டாட் காம்’ நிறுவனர் ஜாக் மா ஓய்வு பெறுகிறார் சீனாவின், ‘நம்பர் – 1’ பணக்காரர்


Recommended Posts

large_1536433828.jpg

பீஜிங்:வலை­த­ளங்­களில் பல்­வேறு பொருட்­களை விற்­பனை செய்­யும், ‘அலி­பாபா டாட் காம்’ நிறுவ­னத்தை நிறு­விய, ஜாக் மா, நாளை, தன், 54வது பிறந்த நாளன்று, தலைமை செயல் அதி­காரி பத­வி­யில் இருந்து ஓய்வு பெறு­கி­றார்.


ஆங்­கில பேரா­சி­ரி­யர்

இவர், சீனா­வில், மிக­வும் ஏழ்­மை­யான குடும்­பத்­தில் பிறந்து, 20 ஆண்டு­களில், ‘நம்­பர் – 1’ பணக்­கா­ர­ராக உயர்ந்­த­வர். இவ­ரது தந்தை, மாதம், 40 டாலர் ஓய்­வூ­தி­யத்­தில், குடும்­பத்தை நடத்­தி­ய­வர்.ஹங்சோ ஆசி­ரி­யர் கல்லுா­ரி­யில் பட்­டக் கல்வி முடித்து, ஆங்­கில பேரா­சிரி­ய­ராக பணி­புரிந்து வந்த ஜாக் மாவுக்கு, இணை­யத்­தின் அறி­மு­கம், புதிய வாசலை திறந்­தது.
ஆசி­ரி­யர் பணியைஉதறி, பின் தன் வீட்­டி­லேயே, ஒரு கம்ப்­யூட்டர் உத­வி­யு­டன், வலை­தளத்தில், பொருட்­களை வாங்கி, விற்­கும் சிறிய நிறு­வ­னத்தை துவக்­கி­னார்.

அவர் மீதுள்ள நம்­பிக்­கை­யில், 1999ல், அமெ­ரிக்க துணி­கர முத­லீட்டு நிறு­வ­னம் ஒன்று, 60 ஆயிரம் டாலர் நிதி­யு­தவி அளித்­தது.இதை­ய­டுத்து, ஜாக் மா, நண்­பர்­கள் சில­ரு­டன் இணைந்து, ‘அலி­பாபா’ என்ற வலை­தள சந்தை நிறு­வ­னத்தை துவக்கி­னார்.அதில் இருந்து அவர் வாழ்க்­கையே மாறி­யது. இன்று, உல­கில் பெரும் வெற்றி பெற்ற சில நிறு­வ­னங்­க­ளுள் ஒன்­றாக, 42,088 கோடி டாலர்மதிப்­பு­டன், அலி­பாபா விளங்­கு­கிறது.

ஜாக் மாவின் சொத்து மதிப்பு, 3,660 கோடி டாலர், அதா­வது, 2.56 லட்­சம் கோடி ரூபாய்.ரிலை­யன்ஸ் தலை­வர் முகேஷ் அம்­பா­னிக்கு முன், ஆசி­யா­வின்,‘நம்­பர் – 1’ பணக்­கா­ரர் என்ற பெரு­மை­யும், ஜாக் மாவுக்கு கிடைத்­தது.


கல்வி

‘வெளிப்­ப­டைத் தன்மை, துணிச்­ச­லான முயற்சி, புது­மை­யான கண்­டு­பி­டிப்­பு­களில் உள்ள ஆர்­வம் ஆகி­யவை தான், ஜாக் மாவின் வெற்­றிக்கு கார­ணம்’ என, அவர் நண்பர்கள் கூறு­கின்­ற­னர்.
‘‘ஒரு­வர், சம்­பா­தித்த பணம் அவ­ருக்கு மட்­டு­மின்றி, சமு­தா­யத்­திற்­கும் பயன்­பட வேண்­டும்,’’ எனக் கூறும் ஜாக் மா,ஓய்­வுக்கு பின், கல்விமுன்­னேற்­றத்­திற்கு பாடு­பட திட்­ட­மிட்­டுள்­ளார்.

உள்­ளு­ணர்வு

முதன் முத­லாக, இணை­யம் பயன்­ப­டுத்­திய போதும், விசைப்­ப­ல­கையை தொட்­ட­போ­தும், அவற்­றில், உல­கையே மாற்­றக் கூடிய ஏதோ ஒரு சக்தி இருப்­ப­தாக, என் உள்­ளு­ணர்வு கூறி­யது.

ஜாக் மா, நிறு­வ­னர், அலி­பாபா டாட் காம்

http://business.dinamalar.com/news_details.asp?News_id=43310

வர்த்தக சகாப்தம் முடிவுக்கு வருகிறது.. அலிபாபாவிலிருந்து விலகினார் ஜாக் மா!

வர்த்தக உலகத்தின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வரப்போவதாக ஊடகங்கள் அனுமானித்துக் கொண்டிருந்த நிலையில், ஆன் லைன் வர்த்தகத்தில் அனாயாசமான சாதனைகளை நிகழ்த்திய அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா பதவி விலகப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது உலகளவில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கோடீசுவர வர்த்தகராக அவதாரம் எடுத்துள்ள ஜாக் மா, அலிபாபா நிறுவன இயக்குநர்களில் ஒருவராகத் தொடர்வார் எனத் தெரிவித்துள்ள நியூயார்க் டைம்ஸ், நேரத்தையும், செல்வத்தையும் கல்வி அறக்கட்டளையில் செலவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

பிலà¯à®à¯à®à¯à®¸à¯ à®à®©à¯à®¤à®¾à®ªà®¿

பில்கேட்ஸ் அனுதாபி

ஜாக் மாவை அதிகம் கவர்ந்த மனிதர்களில் பில்கேட்சுக்கு எப்போதும் இடமுண்டு. பில்கேசிடம் கற்றுக்கொள்ள ஏராளமான நல்ல விஷயங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தாம் எப்போது பணக்காரனாகவே இருக்க முடியாது என்ற இயற்கையின் யதார்த்தத்தைப் புரிந்து வைத்துள்ள ஜாக், ஆனால் முன்னதாகவே ஓய்வு பெற முடியும் என்கிறார். மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்புவதாகவும், அலிபாபாவை விட அது நிறைவைத் தருவதாகவும் கூறியுள்ளார்.

தà¯à®£à®¿à®à®° à®®à¯à®¯à®±à¯à®à®¿

துணிகர முயற்சி

2013 ஆம் ஆண்டில் அலிபாபாவில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியேற்ற ஒரு ஆங்கில ஆசிரியரால், உலகச் சந்தையை வெல்ல முடிந்திருக்கிறது. ஆன்லைன் சில்லறை வர்த்தகம், ஹாலிவுட் திரைப்படம், பணப்பரிவர்த்தனைகளில் எடுத்த துணிகரமான முயற்சி ஒரே ஆண்டில் அலிபாபாவுக்கு 400 பில்லியன் டாலர்களை ஈட்டித் தந்தது.

à®à®¾à®à¯ மாவின௠à®à®µà®¤à®¾à®°à®®à¯

ஜாக் மாவின்

அவதாரம் 54 வயதை எட்டியுள்ள ஜாக் மா 40 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரராக வளர்ந்தார். ஏறக்குறைய ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்னர்த் தற்செயலாக அலிபாபா நிறுவனத்துக்குள் நுழைந்தார். இன்று சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட பெரிய முதலாளியாக வளர்ந்துள்ளார். இருப்பினும் அவர் பணத்தைப் பெரும் பொருட்டாகக் கருதியதில்லை.

வரà¯à®¤à¯à®¤à®à®¤à¯ தநà¯à®¤à®¿à®°à®®à¯

வர்த்தகத் தந்திரம்

ஜாக் மாவின் இந்த அதிர்ச்சிகரமான முடிவு அலிபாபா நிறுவன பங்குதாரர்களை அசைத்துப் பார்த்துள்ளது. நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துப் பேசிய ப்ரோக் சில்வர்ஸ், ஜாக் மாவின் வர்த்தகத் தந்திரம் நிறுவனத்தின் அடித்தளத்தை வலுவாக்கி இருப்பதாகக் கூறினார். இதேபோல் சீன நிறுவனங்களிலேயே அலிபாபாவின் நிர்வாகக் குழு வலுவானது என்றார்.

à®à®¾à®à¯ மா à®à®±à®à¯à®à®à¯à®à®³à¯

ஜாக் மா அறக்கட்டளை

பிரபலமான சில மனிதர்களைப் பயமுறுத்திய கல்வி ஜாக் மாவையும் விடவில்லை. சீனா தேசிய பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது 2 தேர்வுகளில் தோல்வியடைந்திருக்கிறார் ஜாக். தாம் நல்ல மாணவனாக இல்லையென்றாலும், முன்னேறியிருப்பதாகக் கூறுகிறார். எப்போதுமே தாம் கற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ஜாக் மா அறக்கட்டளை மூலம் சேவையைத் தொடங்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்.

à®à®®à¯à®°à®¿à®à¯à®à®¾à®µà¯à®à¯ à®à®µà®°à¯à®¨à¯à®¤ à®à®¾à®à¯

அமெரிக்காவைக் கவர்ந்த ஜாக்

அலிபாபாவின் தலைவராக இருந்தபோது ஜாக் மாவின் வழிகாட்டல் உலகளாவிய வளர்ச்சிக்கு உதவியது. அவரது அபரிமிதமான வளர்ச்சியும் புத்திசாலித்தனமான உத்திகளும் அமெரிக்க அதிபரைக் கவர்ந்தது. அதனால் தேர்தல் முடிந்ததும் முதன் முதலாக ஜாக் மாவை சந்தித்தார் டொனால்டு டிரம்ப்.

முகேஷ் அம்பானி

ஆசிய கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து சில மாதங்கள் முன்பு முகேஷ் அம்பானி இவரைப் பின்னுக்கு தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.goodreturns.in/world/jack-ma-step-down-s-from-alibaba-goes-back-teaching-012577.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் அலிபாபா அமேசின் போன்றவை கடந்த இருபது  வருட காலத்திலை பல சிறிய பெரிய ஸ்டோர்களை அழித்துஒழிப்பு செய்த வரிசை பெரியது அதில்  (woolworths) வூல்வோர்த்  (Toys“R”Us) கொமெட் போன்ற மெகா ஜம்பவான்கலையே வீட்டுக்கு அனுப்பிய ஆட்கள் இன்னும் மிஞ்சி இருக்கும் pcவேர்ல்ட் காரீரிஸ் போன்றவை செக்மேட் புள்ளியில் நிக்கினம் . இந்த நேரம் இந்தாள் திரும்பவும் படிப்பிக்க போறன் எண்டு ஒத்தைக்காலில்  நிக்கிது என்னை பொறுத்தவரை உலகிலே மிகவும் கஷ்ட்டமான தொழில் பாடம் சொல்லி கொடுப்பது .? எதோ பிழையா நடக்கபோகுது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடும் பெண்களை அவர் மேளக்காரர் என்று அழைக்கவில்லை, சகாக்கள் என்று. அனால் இது பதியப்பட்டது, ஏறத்தாழ 75 - 100 வருடங்களின் பின். தடை செய்தது அங்கியேயராக இருக்க கூடும், பல சீர்திருத்தங்களை கொண்டுவந்ததாக இருக்கிறது. (மற்றது, ஆங்கிலேயர் அவர்களின் புரிதலில் பதிந்து இருப்பது; இலங்கை தமிழர்களை மலபார், மற்றும் முஸ்லிம்களை moors என்ரூ குறித்து போல.) அவர் இரு பகுதியையும் (ஆடும் பெண்கள், மேளக்காரர்) ஒரே மக்கள் கூட்டம் என்று அவரின் விளக்கம், அவர்கள் ஒன்றோடு ஒன்றாக தொழில் செய்வதால். கோயில்கள் பெரும்பணம் புழங்கும் இடமாக இருந்தன, மற்றது காலம் செல்ல மேளக்காரருடனும் உறவு வைத்து இருக்கலாம். அனல், நடந்தது சுருக்கமாக சொல்லியது, ஏனெனி அவர்களின்  விபச்சார அடையாளதை மறைப்பதற்கு ( கோயிலில் பிராமணர் பாதுகாப்பில் இருக்கும் வரையும் அது  விபச்சாரமாக நோக்கப்படவில்லை, பிராமணர் அவர்களை பெண் தெய்வமாக மட்டும் பாவித்தது என்பது நம்பக்கூடியது ஒன்றல்ல)     அப்படி ஒரு பிரிவு உருவாகியதை ஆங்கிலேயர் அறியாமல் இருந்து இருக்கலாம்.  70 - 80 ஆய்வுகளில் தான்  இந்த விடயம்  வெளியில் தெரிய வருகிறது,  ஆய்வு செய்தவர், ஏறத்தாழ மொத்தமாக 12-14 மாதங்கள், வேறு வேறு காலங்களில் அவர்களுடன் அவர்கள் வீட்டில் தங்கியிந்து தான் ஆய்வு நடந்தது.
    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.