Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்குறள் அலசுவோமா?

Featured Replies

திருக்குறள் அலசுவோமா?

கள உறுப்பினர்களின் அனுபவ வாயில்களின் ஊடான ஒரு எளிய உரை

பொறாமையுடைமை

1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை, இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

இதன் உண்மையான பொருள் என்பது யாதெனில்,

தன்னைத்தோண்டுபவரினை தாங்கும் நிலம் போல, எம்மை இழிவாகப் பேசுபவரின் குற்றத்தை பொறுத்துக்கொள்வது மிகச் சிறந்த குணமாகும்.

உதாரணமா நேற்று புலிப்பாசறை மற்றவரின் மனதினை தாக்கும் விதத்தில் எழுதியிருந்தால் அதனை பொருத்துக்கொள்வதே உங்களின் மிகச் சிறந்த குணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருக்குறள் அலசுவோமா?

கள உறுப்பினர்களின் அனுபவ வாயில்களின் ஊடான ஒரு எளிய உரை

பொறாமையுடைமை

1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை, இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

இதன் உண்மையான பொருள் என்பது யாதெனில்,

தன்னைத்தோண்டுபவரினை தாங்கும் நிலம் போல, எம்மை இழிவாகப் பேசுபவரின் குற்றத்தை பொறுத்துக்கொள்வது மிகச் சிறந்த குணமாகும்.

உதாரணமா நேற்று புலிப்பாசறை மற்றவரின் மனதினை தாக்கும் விதத்தில் எழுதியிருந்தால் அதனை பொருத்துக்கொள்வதே உங்களின் மிகச் சிறந்த குணம்.

இப்படி சொல்லி சொல்லிதான் கரிநாயையும், ஒட்டுக்குழுக்களையும் தப்பி பிழைக்கவிட்டு இருக்கிறம். அன்று காக்கை வன்னியனுக்கு வெடி வைத்திருந்தால் இந்த ஒட்டுகுழுக்களின் பிறப்பிற்கு ஜீவஅனு கிடைத்திருக்காது. :angry: :angry: :angry: :lol:

  • தொடங்கியவர்

ஆகா பிரமாதம் பிரமாதம் எங்க வேற யாரும் என்னும் மேலால எடுத்து விடுங்க... :lol: .

  • தொடங்கியவர்

பொறையுடைமை குறள் 2

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை, மறத்தல் அதனினும் நன்று.

அதாவது

ஒருவர் செய்த தீமைகளைப் பொருத்துக் கொள்வது சிறந்தது, அதனிலும் மேலும் சிறந்தது அந்தத் தீமைகளை அடியோடு மறந்து விடுவது.

இப்ப பாருங்க சித்தன் என்னை மன்னித்து என்னைத்தாக்காது கருத்தெளிதியுள்ளார். என்னைத்தாக்காது எழுதியது அவர் ஒரு சிறந்த தமிழர் என திருக்குறளின் படி எடுத்துக்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொறையுடைமை குறள் 2

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை, மறத்தல் அதனினும் நன்று.

அதாவது

ஒருவர் செய்த தீமைகளைப் பொருத்துக் கொள்வது சிறந்தது, அதனிலும் மேலும் சிறந்தது அந்தத் தீமைகளை அடியோடு மறந்து விடுவது.

இப்ப பாருங்க சித்தன் என்னை மன்னித்து என்னைத்தாக்காது கருத்தெளிதியுள்ளார். என்னைத்தாக்காது எழுதியது அவர் ஒரு சிறந்த தமிழர் என திருக்குறளின் படி எடுத்துக்கொள்ளலாம்.

அதே திருவள்ளுவர் இப்படியும் எழுதியுள்ளார்

"என்னை முன் நில்லமின் தெய்விர் பலர் என்னை

முன்நின்று கல்நின் றவர்"

பகைவரே என்னுடைய தலைவன் முன் எதிர்த்து நிற்காதிர்கள்;என்னுடைய எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவா நின்றவர் பலர்.

இரண்டையும் ஒரு மனிதன் கடைபிடிப்பது கஷ்டம் தானே :rolleyes::o

  • கருத்துக்கள உறவுகள்

சில திருக்குறளில் எனக்கும் உடன்பாடும் இல்லை.

அவற்றை தேடி எடுத்துக் கொண்டு வருவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில திருக்குறளில் எனக்கும் உடன்பாடும் இல்லை.

அவற்றை தேடி எடுத்துக் கொண்டு வருவன்

ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்திற்கு பொருத்தமானதாகவே வைத்து ஆராயவேண்டுமே தவிர, பொதுப்படைான ஆராய்வு சரியானதல்ல.

பழமொழிகளும், ஒன்றுக்கொன்று நேர்எதிரான அர்த்தங்களைக் கொண்டுள்ளன. அது சந்தர்ப்பக் கருத்துக்கு மட்டுமே பொருந்துபவன.

அதற்குச் சிலர் நல்ல உதாரணம் கூறுவார்கள்.

வைத்தியன் கத்தியால், உடலை வெட்டுவதற்கும், கொலைகாரன் கத்தியால் உடலை வெட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் போன்றதே ஆகும். இரண்டு பேரும் உடலை வெட்டுகின்றனர் என்பதற்காக, ஒரே தொழில் என்று சொல்லிவிட முடியுமா என்ன?

  • தொடங்கியவர்

அதாவது புத்தன் நீங்கள் சொல்ல வாரது தீய்மை என்று தெரிந்து கொண்டு ஒருவன் ஈனச்செயலைச் செய்ய விடக்கூடாது என்பதற்கு சரி. இதில் இரண்டையும் சேர்க்க முடியாது தான்.

அதாவது

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை, மறத்தல் அதனினும் நன்று.

இது என்னைபோல குருக்கால போன குணங்களுள்ள ஒரு தனி மனிதனுக்கு பொருந்தும். நீங்கள் என்னை எப்படியாயினும் மன்னித்து ஏற்றுக்கொள்ளவே வேண்டும் என்கிறது குறள். காரணம் நான் வேண்டுமென்று தீங்கு செய்யும் எண்ணத்தோடு செய்யவில்லை.

அவசரத்தில் கீழே குணிந்து பார்க்க கிடைத்த கல்லால் என்னை தற்காக்க எடுத்த கொடிய கல்.

அனால்

"என்னை முன் நில்லமின் தெய்விர் பலர் என்னை

முன்நின்று கல்நின் றவர்"

இதற்கு சிங்களவனின் கொடூர போர்க்குணங்களுக்கு நாம் சொல்லலாம்..

எடேய் சிங்கள இராணுவ வீரர்களே, எங்கள் மாபெரும் தலைவன் முன்னே நின்று, குண்டு பட்டு வீழ்ந்து அழிந்த வர்கள் பலர், ஆகவே உயிர் மேல் ஆசை இருந்தால் அவர் கோபத்தின் முன் நிற்காது ஓடி விடுங்கள் என்பது சரியான பதம்.

இங்கே திருகுறள் வித்தியாசமாக பார்க்கப்படவேண்டும்.

  • தொடங்கியவர்

ஒற்றன் வெட்டுவது என்ற ஒரு வேலையினை எடுத்து அதில் போக்கஸிங் பண்ணி யார் எதை செய்கிறார்களோ, அது வெற்றி பெரும்.

அது வைத்தியராக இருக்கட்டும், கொலைகாரணாக இருக்கட்டும் அல்லது தலைமயிர் சவரம் செய்பவராக இருக்கட்டும்.

மூன்று பேர்களுமே வேலை என்ற நோக்கத்தில் செய்கிறார்கள். வெற்றி வரவேண்டும் என்று எதிபார்த்து செய்கிறார்கள். இப்படித்தான் குரளின் பொருளை அதன் மெயின் ஒப்ஜெக்டீவ் இனை எடுத்து அலசவேண்டும்.

  • தொடங்கியவர்

பொறையுடைமை குறள் 3

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள், வன்மை மடவார்ப் பொறை.

அதாவது, வறுமையினும் வறுமை எது என்றால்

என்னைப்போல வரும் கள உறுப்பின விருந்தாளிகளை ஆதரிக்காமல் அன்னியப்படுத்தி விடுவது,

அதேபோல் வலிமையிலும் வலிமை என்னைப்போல மூடர் செய்யும் செயலை பொருத்துக்கொள்வது. :lol:

வந்து ஒரு கலக்கு கலக்குங்க கறுப்பி. உங்கள் போலிங் அவுஸ்திரேலியா பிரெட்லி மாதிரி இருக்கட்டும். :(

  • கருத்துக்கள உறவுகள்

பொறையுடைமை குறள் 3

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள், வன்மை மடவார்ப் பொறை.

அதாவது, வறுமையினும் வறுமை எது என்றால்

என்னைப்போல வரும் கள உறுப்பின விருந்தாளிகளை ஆதரிக்காமல் அன்னியப்படுத்தி விடுவது,

அதேபோல் வலிமையிலும் வலிமை என்னைப்போல மூடர் செய்யும் செயலை பொருத்துக்கொள்வது. :lol:

வந்து ஒரு கலக்கு கலக்குங்க கறுப்பி. உங்கள் போலிங் அவுஸ்திரேலியா பிரெட்லி மாதிரி இருக்கட்டும். :(

எடுக்க நினைத்த திருக்குறளே பெண்களைப்பற்றியது. அதை எடுத்து இங்கு விளாசினால் தொடரும் வாக்கு வாதங்கள்.

எதற்குங்க இதெல்லாம் எண்டு விட்டுட்டன்.

இன்னொரு சமயம் பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

இதுமுடிய நான் அடுத்தடுத்து தொடர்ந்து முழுகுறளினையும் கதைக்கப்போறன் . உங்க சப்ரருக்கு கட்டாயம் வருவன் அப்ப வந்து பாஸ்டா போல் பண்ணுங்க. அதுக்காக இதில கருத்து எழுதாம விட்டுறாதீங்க ஆமா சொல்லிப்போட்டன். :lol:

  • தொடங்கியவர்

பொறையுடைமை குறள் 4

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை, போற்றி ஒழுகப் படும்.

அதாவது

அறிவுச் செல்வம் தன்னை விட்டு விலகாமல் இருக்க வேண்டுமானால், பொறுமை என்னும் செல்வத்தினை போற்றிக்காப்பது அவசியமாகிறது.

இது இப்ப இன்றைக்கு எமக்கு தேவையான் ஒரு குறள். தமிழீழ மாணவர்கள் பொறுமை என்ற செல்வத்தினை போற்றிக்காப்பது, தமிழன் அறிவில் உயர்ந்தவன் என்ற எமது பாரம்பரியத்தினை விலகாமல் சிங்களவனால் சூறையாடப்படாது இருக்க வெண்டிய அவசியத்தினை எடுத்து உரைக்கிரது.

பிற்குறிப்பு: அறிவே இல்லாத பண்டிதருக்கு இது விதிவிலக்கு.

  • தொடங்கியவர்

பொறையுடைமை குறள் 5

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர், பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

இங்கே சொல்லப்படுவது யாதெனில்,

ஒருவன் செய்த தீமையைப்பொறுக்காமல் ,பதிலுக்கு பதிலாக பெரும் தீமை செய்பவனை இந்த உலகத்தில் உள்ள யாருமே விரும்பமாட்டார்கள். ஆனால் இப்படியான் சந்தர்ப்பங்களில் பொறுத்துகொள்ளபவர்களினை அதே மக்கள் பொன்போல நெஞ்சில் நிறுத்தி போற்றுவர்.

அதாவது இங்கே தான் உலகத்தமிழ்ர்களில் பலர் இதை துணிந்து அறிவின்றி செய்வதால், அவன் திருக்குறளின் படி தமிழராக இருக்க லாயக்கில்லை. உதாரணமாக எனக்கு என்று ஒரு தமிழ்க்கரக்ரரை நான் இங்கு வலிந்து உங்கள் மனங்களில் ஏற்படுத்திவிட்டு தான் இங்கு இப்போது ஒரு கள உறுப்பினராக நிற்கிறேன்.

ஆரம்பத்தில் பண்டிதர் என்னைக்கொச்சப்படுத்தினார் ஆனால் நான் பதிலுக்கு பதில் கடதங்கள் அவரின் செஞ்சினை தாக்கக் கருதி எழுதினேன். ஆனால் அதன் பின்பு திருகுறளின் இந்த கருத்துக்கு அமைய பின்பு அவரை நான் மதித்து அவரின் திறமைகளுக்கு மதிப்புக்கொடுத்து ஒதுங்கி இருந்தேன். மன்னித்தேன், மறந்தேன்.

ஆனால் நான் திருகுறளிற்கமைய நடக்கும் போது அவர் மீண்டும் நஞ்சைக்கக்கினார். இதைத்தான் காலம் காலமாக தமிழர்களில் பலர் தமது அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திக்கொண்டு ஒற்றுமை இல்லாது சண்டை பிடித்துக்கொண்டு வாழ்கின்றார்கள்.

ஆனால் புலிகள் அமைப்பிற்குள் எல்லோரும் திருகுறளில் சொல்லப்பட்டு வந்ததுக்கமைய வாழ்ந்து வருவது தான் உலக தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நிலையில் இருப்பதற்கு காரணம்.

நமக்கு பிடித்த சில திருக்குறள்கள்...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் ............ தலைவன்

பிறப்பென்னும் பேதைமை நீங்க

சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு .... சித்தர்

ஒழுக்கம் விழுப்பம் தரலான்

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்... தமிழர்படை

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர் .....

எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

இதன் கருத்து எல்லோருக்குமே புரியக் கூடிது.

  • தொடங்கியவர்

அதாவது முதலாவது குறளை எடுத்து அலசுவோமானால்

வள்ளுவர் இல்லரவாழ்க்கை எப்படி உண்மையில் அமையவேண்டும் என்பதினை

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் ............ தலைவன்

அதாவது

வையகத்தில் வாழவேண்டிய நெறிப்படி வாழ்பவனை, வான் உலகில் இருக்கிற தெய்வம் என்ற உயர்ந்த மனிதனுக்குச் சமமாக எண்ணி மக்கள் போற்றுவர். அகவே எமது தலைவரின் பாசறையில் நெறியாக வாழவேண்டும் என்பது அன்று தொட்டு இன்று வரை இருந்துவரும் ஒரு செயல். உலக வாழ்க்கையில் ஈடுபட்டு சிதைந்து 40 வயதிற்குப்பின் லோ லோ என்று புலம்பாது வீரனாக ஒழுக்க சிந்தனைகளுடன் தலைவரின் பாசறையில் வாழும் எமது உறவுகளுக்கு என் வணக்கங்கள். ரொம்ப கடினமான் வாழ்க்கை. இந்தவீரம் செறிந்த போராட்டம் என்பது ஒரு நெருப்பு என்ற நெறி கொண்ட வாழ்க்கையின் மேல் நடக்கும் துறவு என்பதினை மறுக்க முடியாத உண்மை.

இரண்டாவது குறள்

பிறப்பென்னும் பேதைமை நீங்க

சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு .... சித்தர்

அதாவது இப்படிப்பட்ட ஒவ்வொரு மனிதபிறவிக்குமான் அடிப்படைக்காரணமான் நிலையின்மை, அறிவில்லாத மனிதத் தன்மைகளில் இருந்து முற்றாக விலகி, சிறப்புக்குறிய தலைவரின் பாதையில் விவேகமாக் வாழ்ந்து போராடி உண்மையான் வாழ்க்கை வாழ்ந்து இறைவனைக்காண்பது மெய்யறிவாகும்.

மூன்றாவது குறள்

ஒழுக்கம் விழுப்பம் தரலான்

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்... தமிழர்படை

அதாவது நற்குணங்கள் கொண்டு வாழும் மேலே சொன்ன மனிதருக்கு எம்மாலான உயர்வினைக்கொடுத்து, அவர்களின் அந்த நல்ல குணம்களினை எமது உயிரினும் மேலாக மதித்து என்ன விலைகொடுத்தும் பாதுகாக்கப்படவேண்டும்.

நாலாவது குறள்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர் .....

அதாவ்து இப்படி நல்லவைகளினை அறிந்து, படித்து உலக மாயையில் இருந்து தெளிவு பெற்றவரையே கண்ணுள்ளவர் என்பர். அறியாதவர்கள், தெரியாதவர்கள், விளங்காதவர் போல நடிக்கும், நடக்கும் எமது மக்களில் ஒரு பகுதியினர் நாறிய புண்களுக்கு சமம்.

என்பதை மாப்பிள்ளை சொல்லாமல் எனக்கு ஒரு பரீட்சையும் வைத்து என்னூடு எழுத வைத்துள்ளார். அவருக்கு எனது நன்றிகள்.

  • தொடங்கியவர்

மன்னிக்கவும் இறைவன் ஒரு சிறு திருத்தம் இங்கு செய்கிறேன்.

அதாவது குறள்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

அதாவது

வாழ்க்கையில் வழி தவறி தன் அறியாமையினால் பிழைகள் விட்ட, நெறி தவறி நடந்து, பெரிய அறங்களையெல்லாம் கெடுத்த என்னைப்போன்ற ஆட்களுக்கு கூட அப்பாவத்தினின்று தப்பிக்க உபாயங்கள் இவ் உலகில் உண்டு, ஆனால் ஒருவன் எமக்கு பொருத்த நேரத்தில் செய்த உதவியினை மறந்து அலட்ச்சியப்போக்கிலே செல்பவர்கள் எவ்விதத்திலும் அப்பாவச்செயல் களிலும் இருந்து தப்பில்ல வழியே இல்லை. அதாவது இலங்கைப்பிரச்சையை சாட்டாக வைத்து நானோ, நீங்களோ இங்கால வந்து சுகம்களினை அனுபவித்துக்கொண்டு எம்மை காக்க அன்று புறப்பட்டு அன்று நாம் உயிருடன் மானத்துடன் வாழ உதவிய எம் தலைவனை மறந்து அவர் தமிழீழ கொள்கைகளினை மேலும் எடுத்துச் செல்ல உதவாது மறுத்து நழுவும் மீன்கள் போல வாழுபவர்களுக்கு இது ஒரு அறிவார்ந்த மான குறள் என்றால் மிகையில்லை.

நன்றிகள்

எண்ணித் துணிக கருமம் முடிந்தபின்

எண்ணுவோமென்பதிழுக்கு.

எந்த ஒரு செயலைத் தொடங்கும் போதும் அந்தச் செயல் பற்றிய நிறைந்த அறிவுடன் அதில் ஈடுபடுதல் வேண்டும். அவ்வாறின்றி அச் செயலைத் தொடங்கியபின்னு அதுபற்றிச் சிந்திக்கலாமென்றால் அதைச் செவ்வனே முடிப்பதற்கு முடியாததாகிவிடும்.

அதாவது ஏன் இன்னமும் தாக்குதல் நடத்தவில்லை. இறுதியுத்தம் எப்போது தயாரிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது என்ன நடக்கிறது என அங்கலாய்ப்பவர்களுக்காக.

  • தொடங்கியவர்

ஆகா எங்கே மேலும் எடுத்து விடுங்கள்.....

ஒரே ஒரு டபுட்டு இதில

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவோமென்பதிழுக்கு.

துணிந்த என்று வருமா அல்லது முடிந்த என்று வருகிறதா திருக்றளில்....

அதாவது நீங்க சொல்ல வாரதை மேலும் இப்படி சொல்ல வெளிக்கிட்டா....

உலகத்திலே எனி வரப்போகின்ற எந்த பிரச்சைகளுக்கும் எப்படி முகம் கொடுப்பது என்பதினை ஆழமாக எண்ணி தெளிந்து விடைகண்ட பின்னால் செயலில் இறங்கி கட்டுநாயக்காவின் மேல் தாக்குதல் செய்யப்பட்டது

செயலில் இறங்கிவிட்ட பின்பு இதைப்பற்றி நாம் ஆராய்ந்து நேரத்தினை வீனாக்குவதிலும் பார்க்க நாம் பார்க்க வேண்டிய அடுத்த வேலையைக்கவனித்தல் சிறப்பு .

  • தொடங்கியவர்

பொறையுடைமை குறள் 6

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொருத்தார்க்குப், பொன்றுந் துணையும் புகழ்.

அதாவது துன்புறுத்தியவரை மீண்டும் துன்பப்படுத்தினால் ஒரு நாளைக்குத்தான் இன்பம், ஆனால் அத்துன்பத்தினை பொருத்துக்கொள்ளுபவருக்கோ இந்த உலகம் மறையும் வரையிலும் பெருமை இருந்து கொண்டே இருக்கும்.

அதாவது சிங்கள ஆமி எத்தனையோ தடைவைகள் யுத்தநிறுத்தத்தினை மீறி எமது மக்களை கொன்று குவித்தபோதும் பொறுமை காத்ததானது, பிளேனினை வைத்துக்கொண்டு சிங்கள் மக்களினை பழிக்குப்பழி என்று போகாது பொருமைகாத்த தமிழ்மக்களை இந்த உலகம் இருக்கும் வரை இந்த உலகமே பெருமையுடன் விழிஉயர்த்திப்பார்க்கும்.

பொருட்பால்

நட்பு

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு. :P

இடுக்கண் வருங்கால்நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்பது இல்.

துன்பத்தின்போது தன்னைத்தானே தேற்றிக்கொள்வதற்கு துன்பத்தை அசட்டை செய்து சிரித்தலே பொருந்தும் அதைத் தவிர வேறில்லை என்கிறார் வள்ளுவர்.

துன்பத்தின் போது அதற்கேற்பத் தாக்கமடையும் மனநிலை எல்லோருக்கும் பொதுவானதுதான். உண்மையில் அங்கு பெருத்த அவலமே நடைபெறுகிறது. இதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணமென்பது எவ்வாறு பொருந்தும். அது விடுதலைப் புலிகளின் பிரதேசமாக இருப்பின் நாம் மட்டுமல்ல மற்றைய உலக நாடுகளும் கேள்விகளை எழுப்பியிருக்கும். ஆனால் இவை நடப்பதெல்லாம் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில். அதுவும் இராணுவத்திற்குத் துணைபோகும் ஒட்டுக்குழுக்களே இவ்வாறான செயல்களுக்கு வழிகாட்டுகின்றன. இதிலிருந்து தமிழர்களைக் காப்பதற்கு உள்ள ஒரேயொரு தரப்பு விடுதலைப்புலிகள் மட்டுந்தான். அவர்கள் நாடியுள்ள உபாயங்கள் எவ்வாறானதாக அமையப் போகின்றதென்பதைப் பொறுமையுடனும் காத்திருப்புகளுடனும் எதிர்பார்த்திருக்கத்தான் வேண்டும்.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

எந்த விடயத்திலும் செயற்றிறன் மிக்க தன்மையோடும் அந்த விடயத்தில் நிறைந்த அறிவோடும் ஈடுபடுதல் வேண்டும். அதன்போதே வெற்றி புகழ் என்பன வந்தடையும். அவ்வாறில்லாமல் குறை அறிவுகளுடன் ஈடுபடுபவர்கள் அந்த விடயத்தில் ஈடுபடாதிருத்தல் நன்று.

இறுதி யுத்தமென்ற ஒன்று ஆரம்பிக்கப்படுவது அந்த யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கமுடையது. அது வெல்லப்படுவதற்கான நிறையேற்பாடுகளுடனேயே அது ஆரம்பிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் அந்த யுத்தத்தில் ஈடுபடுதல் தற்கொலைக்கு ஒப்பானதாகும் .

  • தொடங்கியவர்

சபாஸ். மேலும் போடுங்க. தமிழரின் வீரம் செறிந்த போராட்டத்தினுடு திருகுறளை படிக்கும் போது வள்ளுவர் எப்படிப்பட்ட மக்கள் தமிழர்கள் என்று எழுதி வைத்துவிட்டு போயுள்ளார். அதற்கு எமது தலைவனின் வாழ்க்கை அதனிடன் பின்னிப்பிணைந்த போராட்டம். அப்பாசறையில் ஏற்படுத்தி பேணி பாதுகாக்கப்படும் ஒழுக்கம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடுகள். " காம்பாலா" என அழைக்கப்படும் கடினமான பணிகளின் ஊடே தமிழ் மறவர்களின் கடின உழைப்பு, அதினூடு மாபெரும் வெற்றிகள் இவைகள் தான் திருகுறளிற்கு மதிப்பை கொடுக்கின்றதே அல்லாது.

வள்ளுவன் வாழ்ந்தான் ஏதோ எழுதினான் நமக்கென்ன ஆட்ச்சி செய்து விட்டு போனா காணும் என்று தமிழ் பேசும் நாடுகளில் வள்ளுவருக்கு கட்டிடம் கட்டி மக்களை ஏமாற்றும் கூட்டத்திற்கு இப் பகுதி ஒரு திருகுறளை செயப்படுகின்ற ஒரு போராட்டத்தினூடு ஒப்பிட்டு படிக்கும் ஒரு வகுப்பறையாக இருக்க வேண்டும் என்பதே எனது லட்ச்சியம். அதற்கு உங்கள் பங்குகள், கலந்துறையாடல்கள் மிக அவசியம்.

எங்கே நீங்கள். எடுங்கள் உங்கள் வாளினை புறப்படுங்கள் கருத்தாட......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.