Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''இலங்­கையின் அடுத்த ஜனா­தி­பதி வந்­துள்ளார்''

Featured Replies

''இலங்­கையின் அடுத்த ஜனா­தி­பதி வந்­துள்ளார்'' 

 

 
 

மஹிந்த ராஜபக்ஷ “இலங்­கை யின் முன்னாள் ஜனா­தி­பதி என்­ப­து டன், எதிர்­கால ஜனா­தி­ப­தி­யாக வர­வுள்­ளவர்” என்று இந்­திய பார­திய ஜனதா கட்­சியின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தெரி­வித்­துள்ளார்.

mahinda.jpg

மஹிந்­தவின் புது­டில்லி விஜயம் குறித்து அவர், தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளி­யிடும் போதே இவ்­வாறு குறிப்­பிட்­டுள் ளார். 

இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­ப­தியும், அடுத்த ஜனா­தி­ப­தி­யா­கவும் வர உள்­ளவர், விராட் இந்­துஸ்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் கலந்­து­கொள்ள புது­டில்லி வந்­துள்ளார். நாளை பொதுக்­கூட்­டத்தில் உரை யாற்றவுள்ளார்” என அவர் குறிப் பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/40127

  • தொடங்கியவர்

புதுடெல்லியில் கருத்துக் கூற மறுத்த மகிந்த

 

mahinda-swamy-delhi-1-300x200.jpgராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளமை குறித்து கருத்து வெளியிட, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மறுப்புத் தெரிவித்துள்ளார்.

சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில், மூன்று நாட்கள் பயணமாக, புதுடெல்லியை நேற்று வந்தடைந்த அவரிடம், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு அவர், “இது இந்திய அரசாங்கம் முடிவு செய்ய வேண்டிய விடயம், நான் இதுபற்றிக் கருத்துச் சொல்ல விரும்பவில்லை, இது ஒரு சட்ட விவகாரம்” என்று கூறிவிட்டு நழுவியுள்ளார்.

நேற்று புதுடெல்லி சென்றடைந்த மகிந்த ராஜபக்ச மற்றும் குழுவினரை, சுப்ரமணியன் சுவாமி மற்றும் இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.

சிறிலங்கா அதிபருடன் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்டவர்களும் புதுடெல்லி சென்றுள்ளனர்.

mahinda-swamy-delhi-1.jpgmahinda-swamy-delhi-2.jpg

http://www.puthinappalakai.net/2018/09/11/news/32821

  • தொடங்கியவர்

ஆட்சிக்காலத்தில் இந்து ஆலயங்கள் உடைப்பு – நாளை டில்லியில் இந்து இந்துஸ்தான் சங்கம் கூட்டத்தில் உரையாற்றும் மகிந்த!

 

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

mahinda-in-delhi-1.jpg?resize=767%2C527

 

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி வந்துள்ளார் என்று கூறி  இந்­திய பார­திய ஜனதா கட்­சியின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தெரி­வித்­துள்ளார்.  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் டில்லி விஜயம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில்  சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 
 
முன்னாள் ஜனாதிபதியும் எதிர்காலத்தில் ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச இந்துஸ்தான் சங்கம் நடாத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, பொதுக்கூட்டத்தில் உரையாடவுள்ளதாகவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டதுடன் அங்கு பௌத்த சிலைகள், விகாரைகள் என்பன  அமைக்கப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளளன.
 
இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச இந்துஸ்தான் சங்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவது மிகவும் வேடிக்கையானது என்று தமிழகத்தை சேர்ந்த அரசியல் விமர்சகர் ஒருவர் கூறிப்பிட்டுள்ளார். இதேவேளை மகிந்த ராஜபக்ச  சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பிலேயே அங்கு  சென்றுள்ளார்.

 

இதுவேளை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிப்பது தொடர்பில் மகிந்தவிடம் ஊடகவியலாளர்கள் கருத்துக் கேட்டபோது, இது இந்திய அரசின் முடிவின்பாற்பட்டது என்றும் சட்டவிவகாரத்தில் கருத்துக் கூற விரும்பவில்லை என்றும் மறுப்புத் தெரிவித்தார்.

 mahinda-in-delhi-3.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/95241/

  • தொடங்கியவர்
 
 
மஹிந்த ராஜபக்ஸவே அடுத்த ஜனாதிபதி: சுப்ரமணியன் சுவாமியின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு

மஹிந்த ராஜபக்ஸவே அடுத்த ஜனாதிபதி: சுப்ரமணியன் சுவாமியின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு

 

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரும் பிரதிநிதிகளும் தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்வரும் 19 ஆம் திகதி இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.

இந்தியாவிற்கான மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு புது டெல்லி விமான நிலையத்தை சென்றடைந்த மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினரை பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான கலாநிதி சுப்ரமணியன் சுவாமி வரவேற்றார்.

மஹிந்த ராஜபக்ஸவை வரவேற்ற சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் தளத்தில்,

 
 

Today Fmr President of Sri Lanka and probably the next President is arriving in New Delhi at the invitation of Virat Hindustan Sangam(http://www.vhsindia.org ). He will address a public meeting (admission by invitation ) on 12th on “Indo-Srilanka Relations : The Way Forward”.

 

விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் அழைப்பினை ஏற்று இன்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதி புது டெல்லி நகரை வந்தடைந்தார். அவர் 12 ஆவது இந்திய – இலங்கை உறவுகள் மற்றம் எதிர்கால நோக்கு தொடர்பிலான பகிரங்க கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

என பதிவிட்டுள்ளார்.

 

மஹிந்த ராஜபக்ஸ பெரும்பாலும் மீண்டும் ஜனாதிபதியாகலாம் என கூறும் சுப்ரமணியன் சுவாமி யார்.

பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவரான சுப்ரமணியன் சுவாமி சட்ட அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமியை நரேந்திர மோடி ஆட்சியின் முக்கிய சூத்திரதாரியாக இந்திய அரசியல் விமர்சகர்கள் அழைக்கின்றனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், அவரது தோழி சசிகலா உள்ளிட்டவர்களுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிட்ட சொத்துக்குவிப்பு வழக்கை சுப்ரமணியன் சுவாமியே தாக்கல் செய்திருந்தார்.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2G அலைக்கற்றை மோசடி தொடர்பில் அவர் நீதிமன்றத்தை நாடினார்.

இதன் காரணமாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்தனர்.

இவரது செயற்பாடுகள் காரணமாக தென்னிந்திய அரசியலில் மாத்திரம் அல்லாது இந்தியாவின் தேசிய அரசியலிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இத்தகைய பின்புலத்தைக் கொண்ட சுப்ரமணியன் சுவாமி தற்போது மஹிந்த ராஜபக்ஸவை இந்தியாவிற்கு அழைத்து, அவர் பொரும்பாலும் அடுத்த ஜனாதிபதியாகலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இது இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடா?

இத்தகைய கருத்தை வௌியிடுவதன் மூலம் அவர் சுயாதீன நாடு ஒன்றின் ஜனாதிபதி பதவி தொடர்பில் யாருடைய துணை கொண்டு அழுத்தம் பிரயோகிக்கின்றார்?

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் South China Morning Post பத்திரிகைக்கு கருத்து வௌியிட்ட மஹிந்த ராஜபக்ஸ, தமது தோல்விக்குப் பின்னால் இந்தியாவின் ரோ அமைப்பு இருப்பதாகக் கூறினார்.

இந்த செய்தி இந்திய பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டது.

இந்தியா தம்மை தோற்கடித்ததாகக் கூறி வந்த மஹிந்த ராஜபக்ஸ தற்போது இந்தியாவுடன் செய்து வருகின்ற கொடுக்கல் வாங்கல் என்ன?

மஹிந்த ராஜபக்ஸ மாத்திரம் அல்லாது இலங்கை பாராளுமன்றத்தின் முக்கிய பதவிகளில் உள்ள பலர் தற்போது இந்தியாவில் இருக்கின்றனர்.

இந்தக் குழுவில் அடங்குகின்ற சபாநாயகர் கரு ஜயசூரிய இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, கயந்த கருணாதிலக்க , மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா , விஜித ஹேரத் ஆகியோரும் இந்தியாவிற்கு சென்ற இலங்கை பிரிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

நாட்டின் உயர் மட்ட அரசியல்தலைவர்கள் இந்தியாவுடன் இவ்வாறு செயற்பட்டு வருகின்ற நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனம் தொடர்ந்தும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விட கூடுதல் விலைக்கு பெட்ரோலை விறபனை செய்து வருகின்றது.

நேற்று (10) இரவு மேற்கொள்ளப்பட்ட விலைத் திருத்தத்திற்கு அமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரை லங்கா IOC நிறுவனம் ஒரு ரூபா அதிகமாக விற்பனை செய்கின்றது.

யூரோ ஃபோ பெட்ரோல் ஒரு லிட்டரையும் அவர்கள் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விட 3 ரூபா அதிகமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போது, விலை சூத்திரத்துடன் தாம் தொடர்புபடவில்லை என அதன் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய, சந்தை விலையை நிர்ணயித்துக் கொள்வதாகவும் இந்திய எண்ணெய் நிறுவனம் சுட்டிக்காட்டியது.

இத்தகைய மோசமான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டு எண்ணெய் சந்தைக்குள் ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்தியாவிற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்குமாயின், எதிர்காலத்தில் நாட்டின் எரிசக்தி சந்தையை நிர்வகிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு கிடைக்கப் போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

ஏற்கனவே இயற்கை திரவ வாயு மத்திய நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட பிரமாண்டமான எரிசக்தி விநியோக சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு இந்தியா தயாராகி வருகின்றது.

இலங்கை இந்த பின்புலத்தில் இருக்கும் போது, நேபாளம் இந்தியப் பிடியில் இருந்து விடுபடுவதற்கான மூலோபாயங்களைப் பின்பற்றி வருகின்றது.

இதுவரைக் காலமும் நேபாளத்தின் பிரதான விநியோகப் பாதை இந்தியா ஊடாவே அமைந்திருந்தது.

தற்போது அவர்கள் இந்தியாவை விடுத்து நான்கு சீன துறைமுகங்களைப் பயன்படுத்தி தமது விநியோகப் பாதையை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஒரு புறம் நாட்டின் அரசியலுக்கும் மறுபுறம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் அழுத்தம் பிரயோகிப்பதற்கான சந்தர்ப்பத்தை வேறு ஒரு நாட்டிற்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமா?

 

https://www.newsfirst.lk/tamil/2018/09/மஹிந்த-ராஜபக்ஸவே-அடுத்த/

  • கருத்துக்கள உறவுகள்

சுப்ரமணியன் சுவாமி: மஹிந்த ராஜபக்ஸ பெரும்பாலும் மீண்டும் ஜனாதிபதியாகலாம்.

மஹிந்த ராஜபக்ஸ: நீஙக வேற தம்பி, அதை ஞாபகப் படுத்திக்கிட்டு...... வேணாம், அப்புறம் அழுதிருவன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ ஒன்றை மூடிமறைக்க சுப்ரமணியசாமி படாதபாடுபடுகின்றது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

தர்மம் தூங்கும் எழும் ஏனெனில் அதற்கு மடியில் கனம் இல்லை.

ஆனால்....

அதர்மமத்திற்கு அப்படியல்ல மடி முழுவதும் பஞ்சமாபாதகம் எனும் பாரம் . ஒரு கணம் அயர்ந்தாலும் அவர்களுக்கு அத்தனையும் நாசம்....

  • தொடங்கியவர்

சுப்ரமணியன் சுவாமிக்கு நாமல் புகழாரம் !

 

இந்தியா சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி சுப்ரமணியன் சுவாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

namal2.jpg

விராத் ஹிந்துஸ்தான் சங்கம் ஏற்பாட்டில்  பாரதிய ஜனதா கட்சி எம்.பி சுப்பிரமணியன் சுவாமியின் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றவுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே நாமல் ராஜபக்ஷ எம்.பி. மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் புதுடெல்லிக்கு சென்றுள்ளனர். 

namal3.jpg

முன்னாள் ஜாபதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எனக்கும் நல்ல வரவேற்பை வழங்கிய பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்ரமணியன் சுவாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் நாமல் ராஜபக்ஷ எம்.பி பதிவிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/40240

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.