Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனின் செவ்வியும் ஊடகங்களும்

Featured Replies

விக்னேஸ்வரனின் செவ்வியும் ஊடகங்களும்
கே. சஞ்சயன் /

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. கூட்டமைப்புத் தலைமைக்கும், அவருக்கும் இடையிலான பனிப்போர், தீவிரம் பெற்ற பின்னர், அவர், விரிவாகப் பல விடயங்களைப் பேசிய ஒரு செவ்வியாக இது இருந்தது.  

அந்தச் செவ்வி வெளியானதுமே, அதைத் தமிழ் மொழியாக்கம் செய்து, முதலமைச்சரின் செயலகம், பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது.தமிழ் ஊடகங்களும் அப்படியே வெளியிட்டிருந்தன.  

அதுதான் பல்வேறு ஊடகங்களைச் சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் வெளியான செவ்வியின் மூலத்திலிருந்து, தமிழ் மொழியாக்கத்தில் சில மாறுபட்ட கருத்துகள் இடம்பெற்றிருந்தன.  

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் அணுகுமுறைகள் தொடர்பாக உங்களின் கருத்து என்ன?” என்பது ஆங்கில மூலத்தில் இருந்த வினா?  

அதற்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன், “எமது மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள், தேவைகளில் இருந்து அவர்கள் விலகியே நிற்கிறார்கள். அவர்களிடம் விடப்படுமானால், எமது அடிப்படை அரசியல் அபிலாஷைகளை விட்டுக்கொடுக்கும் நிலை ஏற்படும். எமது மக்களின் உண்மையான அரசியல் நிலையைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை என்பது கவலைக்குரியது. தவறான தமது கருத்துகளே, சரியானவை என்ற மனோநிலையில் இருக்கிறார்கள்” என்று பதிலளித்திருந்தார்.  

ஆனால், முதலமைச்சரின் செயலகத்தால் அனுப்பப்பட்ட மொழியாக்கத்தில், இந்தக் கேள்விக்கு, “ எமது மக்களின் எதிர்பார்ப்புகள், தேவைகள், அவசியங்களில் இருந்து எட்டியே நிற்கிறார்கள் அவர்கள். அவர்களைத் தொடர்ந்து இருக்கவிட்டால், அடிப்படைக் கோரிக்கைகளில் இருந்து சறுக்கி விடுவோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  

இது சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரைத் தொடர்ந்து இருக்க விடக்கூடாது என்ற தொனிப்பட அமைந்திருந்தது. அதற்கே தமிழ் ஊடகங்களும் முக்கியத்துவம் அளித்திருந்தன. பல தலைப்புச் செய்தியாகவும் வெளியிட்டிருந்தன.  

ஒரு செவ்வியில் வேறுபட்ட அர்த்தங்களை உருவாக்க முயன்றதன் மூலம், முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் ஊடகங்களுக்கு ஒரு முகத்தையும் ஆங்கில ஊடகங்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்ட விரும்புகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.  

பொதுவாகவே, முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் ஊடகங்களுக்கு விரிவான செவ்விகளை அளிப்பதைத் தவிர்த்து வருகிறார். அவ்வப்போது குறுகிய நேரம் செய்தியாளர்களுடன் உரையாடுவதை விட, விரிவாகப் பேசக் கூடிய விடயங்களுக்கு அவர் தயக்கம் காட்டுகிறார். அது முன்னெச்சரிக்கையான விடயம் என்றாலும், இந்தச் செவ்வி விடயத்தில், சில கேள்விகள் எழுகின்றன.  

ஊடகங்களுக்கும் தனக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதியாக இருக்கிறார். ஊடகங்களில் இருந்து விலகி விட்டால், தாம் மறக்கப்பட்டுப் போவோம் என்பது அவருக்குத் தெரியும்.  

அதனால் அவர், முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் பாணியைக் கையில் எடுத்துக் கொண்டு, கேள்வி - பதில் அறிக்கைகளை, அவராகவே தயாரித்து ஊடகங்களுக்கு அனுப்பத் தொடங்கினார்.  

செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு என்றே, முதலமைச்சர் பதில் அனுப்புவார். ஆனால், அவர் பதிலளிக்க விரும்பும் கேள்விக்கு மாத்திரம், தாம் பதிலளிக்க விரும்பும் வகையிலேயே அது அமைந்திருக்கும் - அமைக்கப்பட்டிருக்கும்.  

இந்தப் பாணியை வேறு மொழியிலாவது, எந்த அரசியல்வாதியேனும் கையாண்டார்களா தெரியாது. ஆனால், தமிழில் இதை அறிமுகப்படுத்தியவர் மு.கருணாநிதி தான். தினமும், அவரது, கேள்வி -பதில் அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பப்படும். பக்கம் நிரப்பச் சிரமப்படும் மாலை நாளிதழ்களுக்கு, அது மிகவும் வரப்பிரசாதமாகவும் இருக்கும்.  

கருணாநிதியின் கேள்வி - பதில் அறிக்கையை அவர் மாத்திரமன்றி, அவரது தனிப்பட்ட செயலாளர் சண்முகநாதனும் தயார்படுத்துவது வழக்கம். அதற்காகக் கருணாநிதி ஒருபோதும், ஊடகங்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கத் தயங்கியதோ - தவறியதோ இல்லை. இதையும் ஒரு தனித்துவமான ஆயுதமாகவே அவர் கையாண்டார்.   

கருணாநிதி நோயுற்ற பின்னரும், அவரது பெயரில் அறிக்கைகளும் கேள்வி - பதில் அறிக்கைகளும் வெளியாகின. அதை, கருணாநிதியின் தனிப்பட்ட செயலாளர் சண்முகநாதனே தயாரித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மு.க. ஸ்டாலின் அதை நிறுத்தி விட்டார். இயலாமல் இருக்கும் போது, கருணாநிதியின் பெயரில் அறிக்கைகள், பேட்டிகள் வெளியாவது அபத்தம் என்பதால், அதை நிறுத்தி விட்டதாக அவர் கூறியிருந்தார்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இந்த அறிக்கையை வேறு யாரேனும் தயாரித்துக் கொடுக்கிறார்களோ அல்லது அவரே தயாரித்துக் கொள்கிறாரோ தெரியவில்லை. ஆனால், அவர் ஊடகங்களுக்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்ப்பதற்காகவே, இதைப் பயன்படுத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை.  

அவ்வாறு அவர் அனுப்பியதையெல்லாம் அப்படியே வெளியிட்டுப் பழகிப் போன தமிழ் ஊடகங்களுக்கு, ஆங்கில மொழியில் வெளியான மூலச் செவ்விக்கும், இதற்கும் வேறுபாடு இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டிருக்கவில்லை. முதலமைச்சரின் செயலகமே அனுப்பிய மொழிபெயர்ப்பு என்பதால், பிழையிருக்காது என்ற நிலைப்பாட்டில், அவர்களும் பிரசுரித்து விட்டனர்.  இந்த நிலையில், எதற்காக, முதலமைச்சரின் செயலகம் மாறுபட்ட அர்த்தங்களைக் கொடுக்கும் வகையில், மொழியாக்கத்தை அனுப்பியது என்ற கேள்வி எழுகிறது.  

அதாவது, ஆங்கிலத்தில் அந்தச் செவ்வியில் இடம்பெற்ற விடயங்களில் மென்மைத் தன்மையையும் தமிழில் அது கடினத்தன்மையையும் கொண்டதாக இருக்கிறது.  

‘சம்பந்தன், சுமந்திரனை விட்டு வைக்கக்கூடாது’ என்ற தொனி மொழியாக்கப் பிரதியில் தெரிகிறது. அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒருவித கோபம் அதில் தெறிக்கிறது.  

அதிலும் “இவர்களைத் தொடர்ந்து இருக்கவிட்டால்” என்று கூறப்படும் வசன நடைக்கு, தமிழில் பல்வேறு அர்த்தங்களை அவரவரே போட்டுக் கொள்ளவும் முடியும். அதில் ஆபத்தான - அபத்தமான விடயங்களும் உள்ளன. சிலவேளைகளில் ஆங்கிலத்தில் சற்று அழுத்தமில்லாமல் கூறிய விடயத்தை, தமிழில் அழுத்திக் கூற முதலமைச்சர் விரும்பியிருக்கலாம்.  

இவ்வாறான சிக்கல்கள் வரும் போது, பொதுவாகவே அரசியல்வாதிகள், ஊடகங்களின் மீது பழியைப் போடுவது வழக்கம். “செவ்வி எடுத்தவர் தவறாக விளங்கிக் கொண்டார்; எனது கருத்தை மாற்றி விட்டார்” என்று குத்துக்கரணம் அடிப்பார்கள்.  

ஆனால், ஆங்கிலத்தில் செவ்வி எடுத்தவர், தனது கருத்தை மாற்றி விட்டார் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலகுவாகக் குற்றம்சாட்ட முடியாது. அவர் ஆங்கிலச் செவ்விகளையும் கூட, பொதுவாகவே மின்னஞ்சலில் கேள்விகளைப் பெற்று, தானே, அதற்கு எழுத்து மூலம் பதிலளிப்பது  வழக்கம். மொழியாக்கப் பிரதியும் கூட, அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் மொழி நடையில் தான் தயாரிக்கப்பட்டிருந்தது. எனவே, இது முதலமைச்சருக்குத் தெரியாத விடயம் என்று கூறமுடியாது.  

எவ்வாறாயினும், ஓர் ஆங்கிலச் செவ்வியின் மொழியாக்க விடயத்தில், ஊடகங்களைத் தவறாக வழிநடத்த முயன்றிருந்தால் அது தவறான அணுகுமுறை. முதலமைச்சர் தனது கருத்து இதுதான் என்று உணர்ந்திருந்தால், தாராளமாகவே, அவரது கேள்வி - பதில் பாணி அறிக்கையில் மிகத் தெளிவாக அதைக் கூறியிருக்கலாம். அதுதான் அறமும் கூட.  

முதலமைச்சர் கொடுக்கும் அறிக்கைகளை அப்படியே போட்டுப் பக்கங்களை நிரப்பிப் பழக்கப்பட்டுப் போன ஊடகங்கள் இப்போது, தெரிந்தோ தெரியாமலோ, தாம் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதையிட்டு வெட்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.  

இது என்ன பெரிய பிரச்சினை என்று யாரேனும் கருதலாம். மிகப்பெரிய பிரச்சினையோ பிழையோ இல்லைத் தான்.   

ஆனால், ‘முதலமைச்சர் கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு அளித்த செவ்வியில் இவ்வாறு கூறியிருக்கிறார்’ என்ற குறிப்புடன் அதைப் பிரசுரித்த ஊடகங்களுக்குத் தான் இது பெரிய பிழை.  
ஏனென்றால், ஆங்கிலச் செவ்வியின் மூலம், அவ்வாறு இருக்கவில்லை. எனவே, ‘ஆங்கிலச் செவ்வியின் மொழியாக்கம்’ என்று அதைக் குறிப்பிடுவது அறமாகாது.  

அரசியல் தலைவர்களின் இதுபோன்ற செவ்விகள், அவர்களின் ஊடகப் பிரிவுகளால், மொழியாக்கம் செய்யப்பட்டு வழங்கப்படுவது வழக்கம் தான். அவர்கள், தம்மைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்கோ, சில விடயங்களை அழுத்திச் சொல்வதற்கோ தான், அவர்கள் இவ்வாறு செய்வது வழக்கம்.  

அதுவே பிரச்சினையாக வெடித்தால், சில வேளைகளில் அரசியல்வாதிகள் ஊடகங்களைப் பலிக்கடா ஆக்கி விட்டும் தப்பித்துக் கொள்வார்கள்.  

இந்த நிலையில், பிரதியெடுத்துப் பிரசுரிக்கும் வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம், தமிழ் ஊடகங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை முதலமைச்சரின் செவ்வியும் மொழியாக்கமும் உணர்த்தி விட்டிருக்கின்றது. 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விக்னேஸ்வரனின்-செவ்வியும்-ஊடகங்களும்/91-221804

  • தொடங்கியவர்

ஒரு சைக்கிள் பிடிபட்ட வழக்கில் கூட நீதிமன்றத்தில் தோன்றி வாதாட வல்லமை இல்லாதவர்கள் நிலாவைப் பார்த்து குக்கல்கள் குரைப்பது போல சுமந்திரனைப் பார்த்துக் குரைக்கிறார்கள்!

b5aa8ed46c64eb5ac312bb4e4042301e?s=48&d=

நக்கீரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களான சம்பந்தன் ஐயா, சுமந்திரன் இருவர் மீதும் அரசியல் எதிரிகள் கல் வீசுகிறார்கள். இதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முதல் இடத்தில் இருக்கிறார். முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைப்பது போல அரசியலி்ல் கற்றுக்குட்டியான விக்னேஸ்வரன் சுமந்திரன் அவர்களை மட்டுமல்ல அரசியலில் பழமும் தின்று கொட்டையும் போட்ட தலைவர் சம்பந்தனையும் சாடுகிறார்.

அண்மைக் காலமாக சுமந்திரன் சொல்லாததை சொன்னதாகவும் சொல்லியதைத் திரித்தும் அவரது அரசியல் எதிரிகள் கோபலஸ் பரப்புரை செய்கிறார்கள்.

அண்மையில் விக்னேஸ்வரன் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு ஏட்டுக்குக் கொடுத்த நேர்காணலில் அவரிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது.

Q: How do you view the attitude and political aspirations of the TNA Leader R. Sampanthan and MP Sumathiran?

A: They are divorced from the aspirations, needs and wants of our people. If left to them we would have to compromise on our fundamental political aspirations. It is sad that the political reality among our people is not recognized by both of them. They believe only in their judgment which is sadly faulty.

இந்த நேர்காணலை தமிழில் மொழிபெயர்த்து முதலமைச்சரின் அலுவலகம் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது. இந்தக் கேள்வி பின்வருமாறு மொ(மு)ழிபெயர்க்கப்பட்டிருந்தது.

“அவர்களைத் தொடர்ந்து இருக்கவிட்டால் எமது அடிப்படைக் கோரிக்கைகளில் இருந்து சறுக்கி விடுவோம்.” – என மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கின்றது.

சும்மாவே தமிழ்த் தேசயக் கூட்டமைப்புக்கு எதிராக, குறிப்பாக தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக புழுதி வாரித் தூற்றுபவர்களுக்கு இது வாய்ப்பாய் போய்விட்டது. விக்னேஸ்வரனை ஆண்டவனின் அவதாரம் தமிழர்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என நாளும் பொழுதும் திருப்புகழ் பாடி கன்னத்தில் போட்டுக்கொள்ளும் அடியார்களில் காலைக்கதிர் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் ஒருவராகும்.

download-4.jpg

விக்னேஸ்வரன் அனுப்பிய நேர்காணலை உடனே காலைக்கதிர் (09-09-2018) பதிப்பில் முன்பக்கத்தில் கொட்டை எழுத்தில்,

சம்பந்தன், சுமந்திரன் நீடித்தால் தமிழர் கோரிக்கை சறுக்கி விடும்

விசனிக்கிறார் விக்கி

என்று தலைப்பிட்டு பிரசுரித்தார்.

இந்த மொழிபெயர்ப்பு பிழை என ஒரு மூத்த அரசியல்வாதி வித்தியாதரனுக்கு சுட்டிக் காட்டியுள்ளார்.

அவர்களை அவர்கள் பாட்டில் விட்டால் நாங்கள் எங்கள் அடிப்படை அரசியல் அபிலாசைகளையிட்டு நாம் சமரசம் செய்ய வேண்டி வரும் என்பதே ‘If left to them we would have to compromise on our fundamental political aspirations’ சரியான மொழிபெயர்ப்பாகும்.

இப்போது வித்தியாதரனே எழுதுகிறார் “அந்த மொழிபெயர்ப்பை அந்தச் சாரப்படவே தலைப்பிட்டு பிரசுரித்தமை மூலம் சம்பந்தன், சுமந்திரனை நீடிக்க விடக்கூடாது என முதல்வர் கூறியமை போன்ற கருத்து நிலைப்பாட்டை நாம் ஏற்படுத்தி விட்டோம். ஒரு விவகாரத்தை கையாளும் விடயத்தை ஒரு தரப்பிடம் விடக் கூடாது என்பதற்கும் அத்தரப்பையே நீடிக்க விடக்கூடாது என்பதற்கும் அர்த்தங்களில் ஆயிரம் வேறுபாடு உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறோம். மொழி பெயர்ப்பை மூல ஆங்கிலப் பேட்டியுடன் ஒப்பிட்டு பார்க்காமல் – குறைந்த பட்சம் தலைப்புக்கு எடுத்த விடயத்தையாவது ஒப்பிட்டுப் பார்க்காமல் – பிரசுரித்தமை தவறு தான். அசெளகரியங்களுக்கு வருந்துகிறோம். சுட்டிக்காட்டிய அந்த மூத்த அரசியல்வாதிக்கு நன்றிகள்.”

சம்பந்தன் ஐயா, சுமந்திரன் இருவர் மீதும் பூசிய கறை கறைதான். இருந்தும் வித்தியாதரன் தவறை பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் ஏனைய ஊடகங்கள்? ஆங்கில அறிவு அறிவே இல்லாத ஊடக ஆசிரியர்கள் விக்னேஸ்வரன் கொடுத்த மொழிபெயர்ப்பையே பிரசுரித்திருப்பார்கள். ஆங்கில மூலத்தோடு ஒப்பிட்டு இருக்க மாட்டார்கள்.

இன்று சம்பந்தன் ஐயாவை விட சுமந்திரன் அவர்களே ஊடகங்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறார். அவர் எதைச் சொன்னாலும் அதனைத் திரித்து அல்லது தேய்த்துப் பொருள் கொள்கிறார்கள். அரசியல் யாப்பு வரைவில் சமஷ்டி அல்லது ஒற்றையாட்சி என்ற சொற்பதங்கள் இருக்காது என அவர் ஆவா ஏவா காலத்தில் இருந்து சொல்லி வருகிறார்.

இடைக்கால அறிக்கை வெளிவந்த போது அது ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுள்ளது என்று வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்தார்கள். வழக்கம் போல தமிழர்களைச் சுமந்திரன் சிங்களவர்களுக்கு விற்றுவிட்டார் என வாயிலும் வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைத்தார்கள். ஆனால் உண்மை என்ன?

இடைக்கால அறிக்கையின் முன்மொழிவுகளில் சமஷ்டி என்ற சொல் இடம் பெறவில்லை. அது போலவே ஒற்றையாட்சியும் இடம் பெறவில்லை. அதாவது அதில் சமஷ்டி – ஒற்றையாட்சி என்ற பலகை இருக்கவில்லை. இதையிட்டு சுமந்திரன் தேர்தலுக்கு (2015) முன்னரும் அதன் பின்னரும் விளக்கம் கொடுத்து வருகிறார். பல மேடைகளில், பல நேர்காணல்களில் மிகத் தெளிவாகச் சொல்லி வருகிறார்.

z_p01-Rajapakshe.jpg

ஒரு மனிதர் ஒரு விடயத்தை எத்தனை முறை திருப்பித் திருப்பிச் சொல்வது? இதில் வேடிக்கை என்னவென்றால் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கும் இது புரியவில்லை.

சும்மாவே ஆடுகிற பேய்கள் சாம்பிராணிப் புகையைக் கண்டால் விட்டு விடுமா? கடந்த செப்தெம்பர் மாதம் காலியில் நடந்த ஒரு நல்லிணக்க பரப்புரைக் கூட்டத்தில் சிங்களத்தில் பேசிய சுமந்திரன் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் “அப்படியானால் சமஷ்டி அரசியலை மட்டுந்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?” என்று சிங்களத்தில் கேட்டார். அதுதான் அந்தக் கேள்வி. “நான் வழமையாக சொல்கிற பதிலைத்தான் இங்கேயும் சொல்லியிருந்தேன். ‘சமஷ்டி’ என்ற பெயர்ப் பலகை எங்களுக்குத் தேவையில்லை. ஆனால் பெயர்ப்பலகை தேவையில்லை என்று சொன்னதைத் திரித்து இன்றைக்கு எல்லாப் பத்திரிகைகளிலும் “சமஷ்டி தேவையில்லை” என்ற தலைப்புப் போட்டு பிரசுரித்திருக்கிறார்கள்.

ஒன்றரை மணித்தியாலம் நீடித்த இந்த நேர்காணலில் அடுக்கடுக்காகக் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சுமந்திரன் சளைக்காது பதில் அளித்தார். ஒற்றை வரிக் கேள்விக்கு ஒற்றைவரியில் பதில் அளித்தார். அப்போது சமஷ்டி என்றால் என்ன ஒற்றையாட்சி என்றால் என்ன இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன, 13 ஏ திருத்தம் பற்றி ஒன்பது நீதிபதிகள் அளித்த தீர்ப்பென்ன? 13 ஏ சட்ட திருத்தம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை மீறுகிறது என்று ஐந்து நீதிபதிகளும் இல்லை மீறவில்லை என்று நான்கு நீதிபதிகளும் முதலில் தீர்ப்பளித்தார்கள்.

அரசியல் யாப்பை சட்ட திருத்தம் 13 ஏ மீறுகிறது என்று தீர்ப்பளித்த நீதிபதி இரண்டு விடயங்களைச் சுட்டிக் காட்டி அதனை அரசாங்கம் திருத்தினால் சட்ட திருத்தத்தை ஆதரிக்கத் தயார் என்றார். அரசாங்கம் அந்தத் திருத்தங்களை செய்தது. அதன் பின்னர் ஐந்து நான்கு என்று நிராகரிக்கப்பட்ட திருத்தம் நான்கு ஐந்து என்ற முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே 13ஏ திருத்தம் ஒரு நூலிழையில்தான் தப்பியது.

மாகாண சபை முறைமையை சில திருத்தத்தோடு ஏற்றுக் கொண்டுள்ளீர்களே என்று கேட்டதற்கு சுமந்திரன் அளித்த பதில் யாப்பு வரைவில் இரண்டு அம்சங்கள் இப்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. (1) இப்போது ஆளுநரிடம் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் கையளிக்கப்படும். (2) மாகாண சபைக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களில் மத்தி தலையிடக் கூடாது.

சமஷ்டி – ஒற்றையாட்சி என்ற சொற்களுக்கு இன்று பொருள் மாறிவிட்டது. சமஷ்டி என்று எழுதப்பட்ட யாப்பில் ஒற்றையாட்சிமுறைதான் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஒற்றையாட்சி என்று எழுதப்பட்ட யாப்பில் சமஷ்டி அரசியல் அமைப்பைவிட கூடுதலான அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு நல்ல எடுத்துக் காட்டு பிரித்தானியா. ஸ்கொட்லாந்து விரும்பினால் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து அது பிரிந்து தனிநாடாகப் போகலாம்.

சுமந்திரன் மீது அம்புகள் எய்யும் எதிரணியினர் மா மரத்துக்குப் பின்னால் இருந்து கொண்டு வாலி மீது அம்பெய்து கொன்ற சுக்கீரிவன் போல ஒளிந்து கொண்டுதான் அம்புகள் விடுகிறார்கள்.

இன்றைய இக்கட்டான கால கட்டத்தில் சுமந்திரன் போன்ற ஒரு திறமையான சட்டவாதியை தமிழினம் பெற்றிருப்பது தமிழ்மக்கள் செய்த புண்ணியம். அப்படித்தான் நான் பார்க்கிறேன். இது பலருக்கு விளங்குதில்லை. அல்லது விளங்கியும் விளங்காதது போல நடிக்கிறார்கள்.

மறைந்த துரையப்பா போல ஒரு சைக்கிள் பிடிபட்ட வழக்கில் கூட நீதிமன்றத்தில் தோன்றி வாதாட வல்லமை இல்லாதவர்கள் நிலாவைப் பார்த்து குக்கல்கள் குரைப்பது போல சுமந்திரனைப் பார்த்துக் குரைக்கிறார்கள்!

http://www.newsuthanthiran.com/2018/09/12/ஒரு-சைக்கிள்-பிடிபட்ட-வழ/

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நவீனன் said:

மறைந்த துரையப்பா போல ஒரு சைக்கிள் பிடிபட்ட வழக்கில் கூட நீதிமன்றத்தில் தோன்றி வாதாட வல்லமை இல்லாதவர்கள் நிலாவைப் பார்த்து குக்கல்கள் குரைப்பது போல சுமந்திரனைப் பார்த்துக் குரைக்கிறார்கள்!

செம்பு தூக்கினது காணும் சுமத்திரனுக்கு கொள்ளி வைப்பதுக்கு முல்லைத்தீவில் நெருப்பு போட்டு விட்டாங்கள் அணைக்கிற வழியை புதிய சுமத்திரன் மன்னிக்கவும் சுதந்திரன் பார்க்கட்டும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.