Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்மானம் 30/1 மற்றும் தீர்மானம் 34/1 தீர்மானங்களை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்!

Featured Replies

தீர்மானம் 30/1 மற்றும் தீர்மானம் 34/1 தீர்மானங்களை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்!

 

நக்கீரன்

காக்கையை கங்கையில் குளிப்பாட்டினாலும் நிறம் மாறாது. கருப்பு கருப்புத்தான். சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் அப்படித்தான். மனிதர் மாறவில்லை.

சனாதிபதியாக சிறிசேனா பதவியேற்ற காலம் தொட்டு அவர் எல்லா இடங்களிலும் க சொல்லிவரும் வாசகம் ஒன்று இருக்கிறது. “போரில் வெற்றிவாகை சூடிய எமது இராணுவ வீரர்களை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றமோ அல்லது உள்நாட்டில் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளையும் உள்ளடக்கிய நீதிமன்றமோ விசாரணை செய்ய நான் அனுமதிக்கப் போவதில்லை” என தொடர்ந்து சூளுரைத்து வருகிறார்.

கடந்த திங்கட்கிழமை இராணுவ பாதுகாப்பு தலைமை அதிகாரி இரவிந்திரா விஜயகுணரத்தின மெக்சிக்கோ நாட்டில் நடைபெறும் மாநாடொன்றில் கலந்து கொள்ள நாட்டைவிட்டு பயணம் செய்துள்ளார். ஆனால் இவர் போர்க்காலத்தில் (2008 -2009) கொழும்பிலும் அதன் சுற்றுப் புறத்திலும் காணாமல் போன தமிழ் இளைஞர்கள் தொடர்பான சந்தேக நபர் சந்தான பிரசாத் கெட்டியாராச்சி தப்பிப் போக உரூபா 500,000 அரச பணத்தைக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இவரிடம் இருந்து புலனாய்வு பொலிஸ் ஒரு வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்ள அதே நாள் (திங்கட்கிழமை) அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரசாத் கெட்டியாராச்சி நா.உறுப்பினர் இரவிராஜ் கொலைவழக்கிலும் ஒரு சந்தேக நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இரவிராஜ் அவரது மெய்ப்பாதுகாப்பாளர் லொக்குவெல்லமுறாகே சாந்தா இலக்ஸ்மன் லொக்குவெல இருவரும் கொழும்பில் வைத்து நொவெம்பர் 10, 2006 அன்று கொல்லப்பட்டார்கள். இதில் கடற்படை உளவுப் பிரிவு அதிகாரிகள் மூவரும் கருணா குழுவைச் சேர்ந்த இருவரும் சந்தேக நபர்கள் ஆவர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளரும் ஆன சுமந்திரன் குறித்த கடற்படை அதிகாரி சனாதிபதி சிறிசேனாவுக்குத் தெரியாமல் நாட்டைவிட்டு வெளியேறி இருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

Six-Sri-Lankan-Ministers-Quit-President-

“கொழும்பில் 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் உட்பட சில விடயங்களில் உண்மையான நீதி விசாரணைகளை நடத்துபவர்கள் போல அரச தரப்பினர் வெளிப்பார்வைக்குப் பாசாங்கு காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால், குற்றவாளிகள் அடையாளம் காணப்படும் போது தப்ப விடப்படுகின்றனர் என்பதை இப்போதைய சம்பவங்கள் நிரூபிக்கின்றன. படையினருக்கு எதிரான விடயங்களை வெளிப்படுத்த வேண்டாம் என நாட்டின் தலைவரே உயர் புலன் விசாரணை அதிகாரிகளை அழைத்து எச்சரித்தது மட்டுமல்லாமல் மிகவும் கடுமையாகக் கடிந்து கொண்டார் என்ற தகவலை சிங்கள ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. நடக்கின்ற சம்பவங்கள், குற்றமிழைத்த படையினரைக் காப்பாற்றுவதில் அரச தரப்பு கங்கணம் கட்டி நிற்கின்றமை உள்ளக நீதிப் பொறிமுறை மீது முழு நம்பிக்கையின்மையைத் திரும்பவும் உறுதிப்படுத்தி வருகின்றன. இந்தப் பின்னணியில் உள்ளூர் பொறிமுறையில் தமிழருக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதற்கு இடமேயில்லை. ஆகவே, சர்வதேச பங்களிப்புடனான நீதிமுறையில் அன்றிப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவே மாட்டாது என்பதை ஐ.நா. பொதுச் செயலாளர் வரை மிகத் தெளிவாக எடுத்துரைப்போம்” என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

சனாதிபதி சிறிசேனா முப்படையினரையும் விடுவிக்கும் பிரகடனம் ஒன்றை இந்த மாதம் 25 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் விடுக்கப் போவதாகக் கூறிவருகிறார். ஐநா ம.உரிமைப் பேரவை நிறைவேற்றிய 30/1 34/1 தீர்மானங்களை நடைமுறைப் படுத்தல் தொடர்பில் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளல், நாட்டின் சுயாதீன தன்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கும் முப்படையினரின் நன்மதிப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுதல் அந்த முன்மொழிவுகளில் அடக்கப்பட்டுள்ளதாம்.

1979 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேன இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் மாவட்ட செயலாளராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989 ஆம் ஆண்டில், பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 1994 தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதன் பின்னர் இவர் மகாவலி அபிவிருத்தித் துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஆற்றுப் பெருநிலம் மற்றும் இரஜரட்டை அபிவிருத்தி அமைச்சராகவும், விவசாய அபிவிருத்தி, வேளாண் சேவைகள் அமைச்சராகவும், இறுதியில் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் 2014 நவம்பர் 21 வரை பதவியில் இருந்தார்.

96900873_gettyimages-144659492.jpg

2015 இல் சரி, 2017 இல் சரி அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் 30/1 மற்றும் 34/1 இரண்டுக்கும் இலங்கை அரசு அனுசரணை வழங்கியிருந்தது. ஆனால் சனாதிபதி சிறிசேனா அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அவரது கருத்துப்படி போர்க் காலத்தில் சிங்களப் படை வீரர்களில் ஒருவரேனும் போர்க் குற்றங்கள் எதனையும் இழைக்கவில்லை என்கிறார். முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்சா இராணுவம் சண்டை பிடிக்கவில்லை என்றும் வி.புலிகளின் பிடியிலுள்ள தமிழ் மக்களை விடுவிக்கவே மனிதநேய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார். போரில் யாருமே கொல்லப்படவில்லை என்றார்! அவரது பாணியில்தான் சனாதிபதி சிறிசேனா பேசிவருகிறார்.

எனவே சிங்கள மொழி, பவுத்த மதம் என்று வரும்போது சிறிசேனாவின் சிந்தனையும் மகிந்த இராசபக்சாவின் சிந்தனையும் ஒரே கோட்டில் சந்திக்கின்றன. மகிந்த இராசபக்சா கூறுவது போலவே சனாதிபதி சிறிசேனாவும் இலங்கையின் அரசியல் யாப்பு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கவில்லை என்கிறார். இருவரும் போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்கின்றனர். இருவரும் இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டின் ஒரு பகுதியை இராணுவம் மீட்டுள்ளது. அவர்கள் போர் வீரர்கள் எனச் சிலாகிக்கின்றனர்.

“கலந்துரையாடல் இடம்பெறலாம் ஆனால் நான் சனாதிபதியாக இருக்கு மட்டும் இந்த நாட்டில் வெளிநாட்டு நீதிபதிகள் செயற்பட அனுமதிக்க மாட்டேன். நாட்டின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு எதிராக எதனையும் அனுமதிக்க மாட்டேன்” என பவுத்த தேரர்கள் மத்தியில் பேசிய சனாதிபதி சிறிசேனா குறிப்பிட்டார்.

“There can be discussions at any place but as long as I will be the President I will not allow foreign judges to operate in this country. I will not allow anything against the independence and the sovereignty of this country,” Sirisena said while addressing a gathering of Buddhist monks near here. (https://www.business-standard.com/article/pti-stories/sirisena-says-no-to-foreign-judges-in-lanka-war-crimes-probe-116070801019_1.html)

இந்தக் கோட்பாட்டின் காரணமாகவே சிறிசேனா முப்படை அதிகாரிகளுக்கு எதிரான கொலை, ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைக்கு முட்டுக் கட்டை போடுகிறார். இவை நீதித்துறையில் தலையிட்டு அதன் சுயாதீனத்தை கேள்விக் குறியாக்கும் செயலாகும். மகிந்த இராசபக்சாவின் ஆட்சியிலும் சட்டமா திணைக்களம் அவரின் கீழ் இருந்தது. ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகளின் கோப்புக்கள் தனது மேசையில் இருப்பதாகவும் அதனை எந்த வினாடியும் கையில் எடுக்க முடியும் என்றும் சொன்னார். மகிந்த இராசபக்சாவின் விருப்பப்படி வழக்குகளில் தீர்ப்புக் கூற உச்ச நீதிமன்ற நீதியரசர் மொகான் பீரீஸ் இருந்தார்! பொலீஸ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராச பக்சாவின் கீழ் இருந்தது.

123277-unsc.jpg

ஆனால் ஐ.நா.ம.உரிமைப் பேரவையின் பிடியில் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் அல்ல. அண்மையில் ஐக்கிய இராச்சியம், சிறிலங்கா மையக் குழுவின் (Sri Lanka Core Group) சார்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை (United Nations Human Rights Council) இயற்றிய 30/1 மற்றும் 34/1 தீர்மானங்களை அடுத்து வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் நடைமுறைப்படுத்தும் முயற்சியை துரிதப்படுத்தப்படுத்த வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுள்ளது. இந்த மையக் குழுவில் ஜெர்மனி, மகிடோனியா, மொன்தநீக்றோ மற்றும் ஐக்கிய இராச்சியம் உறுப்பினர்களாக உள்ளன.

“சிறிலங்க அரசாங்கமானது உறுதியான தலைமைத்துவம் மற்றும் தெளிவான வரையறை செய்யப்பட்ட செயல் திட்டத்தோடு பேரவைக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை ஈடுபாட்டோடு நிறைவேற்ற வேண்டும். அப்படிச் செய்யும் போதுதான் சிறிலங்கா நாட்டையும் அதன் மக்களையும் உயர்ந்த இடத்தில் வைத்துக் கொண்டு நீடித்த நல்லிணக்கம் மற்றும் வளமான வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவிக்கலாம்” என ஐக்கிய இராச்சியம் தெரிவித்துள்ளது.

“நாங்கள் காணாமல் போனோர் அலுவலக நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதை மகிழ்ச்யோடு வரவேற்கிறோம். அதன் முன்னேற்றத்துக்கு எல்லோரும் பாடுபட வேண்டும். அல்லது அதன் வேலைப்பாடுகளுக்கு உதவ வேண்டும். அரசாங்கம் வெகுவிரைவாக இழப்பீடு அலுவலகம் ஒன்றை உருவாக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் வடக்கில் மேலும் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். அதுமட்டுமல்ல இராணுவம் தனது பிடியில் வைத்திருக்கும் காணிகளையும் பொதுமக்களுக்கு கையளிக்க வேண்டும்” என எதிர்பார்க்கிறோம்.

மையக் குழுவின் சார்பாக ஐக்கிய இராச்சியம் வெளியிட்டுள்ள அறிக்கை சிறிலங்கா மீதான ஐநாமஉரிமைப் பேரவையின் அக்கறையைக் காட்டுகிறது. காலம் போகப் போக அதன் உறுப்பு நாடுகள் சிறிலங்கா மீதான அழுத்தத்தை குறைத்துவிடும் என சனாதிபதி சிறிசேனா எதிர்பார்த்தால் அது நடக்காது.

ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தீர்மானம் 30/1 மற்றும் தீர்மானம் 34/1 தீர்மானங்களை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றன. அந்தக் கடமையில் இருந்து சிறிலங்கா தப்ப முடியாது. தப்ப நினைத்தால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டி வரும்.

http://www.newsuthanthiran.com/2018/09/15/தீர்மானம்-30-1-மற்றும்-தீர்ம/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.