Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்து -திருமண மண்டபங்களும்- உணவுகளும்!!

Featured Replies

யாழ்ப்பாணத்து -திருமண மண்டபங்களும்- உணவுகளும்!!

 
 
death-after-eating-meat.jpg

 

 

இந்­தக் கட்­டு­ரையை வாசிப்­ப­தற்கு முன்­ப­தாக நீங்­கள் ‘றற் ராட்­ரூய்லி’ என்­கிற கர்ட்­டூன் திரைப்­ப­டத் தைப் பார்த்­தி­ருக்­க­வேண்டும். அந்­தப் படத்­தைப் பார்த்­தி­ருந்­தால் இந்த விட­யத்­தைப் புரிந்து கொள்­வது மிக­வும் சுல­ப­மாக இருக்­கும். ‘பிரட் பேர்ட்’ இயக்கி, 2007 ஆம் ஆண்­டில் வெளி­யான இந்­தத் திரைப் ப­டத்­துக்­குச் சிறந்த அசை­வூட்­டத் திரைப்­ப­டத்­துக்­கான ஒஸ்­கார் விருது கிடைத்­தி­ருந்­தது.

குப்பை கூளங்­க­ளைக் கிள­றி­யும், களவு செய்­தும், மனி­தர்­கள் கழித்­து­விட்ட உண­வு­களை உண்­கின்ற எலி­க­ளுக்கு மத்­தி­யில் அதற்­கெல்­லாம் அப்­பாற்­பட்­டுச் சுவை­யான உணவை உண்­ண­வேண்­டும் என்று நினைக்­கி­றது இந்­தப் படத்­தின் முதன்­மைக் கதா­பாத்­தி­ர­மான ‘ரெமி’ என்ற எலி.

இறந்­து­விட்ட சமை­யல்­கா­ரர்(செவ்) வூஸ்­தோ­வி­னு­டைய ‘எவ­ரும் சமைக்­க­லாம்’ என்­கிற கூற்­றுக்கு அமை­வாக அந்த எலி சமைக்க முற்­ப­டு­கி­றது. சமை­யல் கலை­யில் பிர­சித்­தி­பெற்ற வூஸ்­தோ­வின் சமை­யல் திற­னில் குறை­கண்டு பிடித்து அவ­ரு­டைய உண­வ­கத்­தைத் தரம் தாழ்த்தி எழு­தி­யி­ருந்­தார் பத்­தி­ரிகை எழுத்­தா­ளர் ஒரு­வர்.

மன­மு­டைந்த வூஸ்தோ இறந்­து­விட்­டார். வூஸ்­தோ­வின் உண­வ­கத்­திலே சமை­ய­லா­ளி­யா­கப் பணி­பு­ரி­கின்ற ஒரு சிறு­வ­னுக்­குச் சமிக்­ஞை­கள் கொடுப்­ப­தன் ஊடக அந்த எலி­யின் சமை­யல் திறன்­கள் வெளிப்­ப­டு­கின்­றன. சிறு­வன் அணிந்­தி­ருக்­கின்ற நீண்ட தொப்­பிக்­குள் இருந்­த­படி சிறு­வ­னைக் கொண்டு தனது சமை­யல் வேலை­யைச் செய்­து­வ­ரு­கி­றது எலி. வூஸ்தோ இறந்­த­பின்­னர் பொலி­வி­ழந்து போயி­ருந்த அந்த உண­வ­கத்­தின் பெயர் பிர­ப­ல­மடையத் தொடங்­கு­கின்­றது.

வூஸ்­தோவை விஞ்­சிய அந்­தச் சமை­யல் நிபு­ணர் யார்? என்­பதை அறி­வ­தற்­கா­கக் கறார் விமர்­ச­க­ரான முன்­னைய பத்­தி­ரி­கை­யா­ளர் உண­வ­கத்­துக்கு வந்து, உண­வ­ருந்தி வியக்­கி­றார். சமை­யல் பகு­திக்­குச் சென்று பார்த்­த­போது எலி சமைப்­பது அவ­ருக்­குத் தெரி­ய­வ­ரு­கின்­றது. ஆனால், அவர் அதை வெளிப்­ப­டுத்­த­வில்லை. எலி­யின் சமை­யல் திற­னால் பின்­னா­ளில் அந்த உண­வ­கம் பிர­ப­ல­மா­கின்­றது.

சுவை­யான உண­வைச் சமைத்­தெ­டுப்­பது என்­பது ஒரு கலை உரு­ வாக்­கச் செயற்­பாடு என்­ப­தா­க­வும், அதைச் சுவைத்து உண்­ப­தி­லுள்ள அலா­தி­ய­னு­ப­வத்­தைக் கலையை நுக­ரும் போது இர­சி­கர்­கள் அல்­லது பார்­வை­யா­ளர்­க­ளுக்­குக் கிடைக் கின்ற நுகர்­வ­னு­ப­வ­ மா­க­வும் குறிப்­பிட்­டுச் செல்­கின்­றது, குழந்­தை­களை மையப்­ப­டுத்­தித் தயா­ரிக்­கப்­பட்ட குறித்த கார்ட்­டூன் படம்.

தூய்­மை­யான உணவை உண்­ண­வேண்­டும் என்­ப­தற்கு ஒரு­ப­டி­மேலே போய் சுவையே உணவு உண்­ப­தைத் தீர்­மா­னிக்­க­வேண்­டும் என்­ப­தைப் பற்­றி­யும் பேசு­கின்­றது படம். அண்­மைக்­கா­ல­மா­கப் பத்­தி­ரி­கைச் செய்­தி­கள் மூலம் அறி­யக் கிடைத்த யாழ்ப்­பா­ணத்­துத் திரு­மண மண்­ட­பங்­க­ளின் உண­வுத் தரத்­தில் கண்­ட­றி­யப்­பட்ட குறை­பா­டு­கள் பற்றி வாசித்­த­றிந்­த­போது, இந்­தப் படம் ஞாப­கத்­துக்கு வந்­து­போ­னது.

சமன் என்­கிற சிங்­கள நண்­பர் கழுத்­து­றை­யைச் சேர்ந்­த­வர். அவர் தனது உண­வக அனு­ப­வம் ஒன்­றைப் பகிர்ந்து கொள்­கி­றார்.

‘‘நான் ஜப்­பா­னில் உண­வ­கம் ஒன்­றில் வேலை பார்த்­து­விட்டு நாட்­டுக்­குத் திரும்­பி­ய­போ­து, கழுத்­து­றை­யில் ஓர் உண­வ­கத்தை நிறு­வும் எண்­ணத்­து­டன் வந்­தேன். ஆனால், உள்­ளூர்ச் சமை­யல் காரர்­க­ளின் சமை­யல் தரம் நான் நடத்­த­வி­ருக்­கின்ற உண­வ­கத்­துக்­குப் போது­மா­ன­தாக இருக்­க­வில்லை. முன்­ன­ணிச் சிங்­க­ளப் பத்­தி­ரிகை ஒன்­றில் சமை­யல்­கா­ரர் தேவை என விளம்­ப­ரப் படுத்­தி­னேன்.

ஆறு­பேர் வரையில் வந்­தார்­கள். அவர்­க­ளது சமை­யல் முன்­ன­னு­ப­வத்தை வைத்து இரு­பது ஆயி­ரம் ரூபா வரை­யில் சம்­ப­ளம் கேட்­டார்­கள். அப்­போது (1980ஆம் ஆண்டு காலப்­ப­குதி) அதி­கூ­டிய சம்­ப­ள­மாக ஒரு சமை­யல் கார­ருக்கு 15ஆயி­ரம் ரூபாவே வழங்­கப்­ப­டு­வ­தாக இருந்­தது.

இறு­தி­யாக ஓர் இளை­ஞன் வந்­தான். தான் படித்­தி­ருந்த சமை­யல் பயிற்சி நெறிச் சான்­றி­தழ்­க­ளைக் காட்­டி­னான். அவ­னது நடத்தை எனக்­குப் பிடித்­துக்­கொண்­டது. அவனை வேலைக்கு அமர்த்­த­லாம் என்று முடி­வெ­டுத்­தேன். ஒரு லட்­சம் ரூபா சம்­ப­ள­மும்இ ஒரு காரும் வேண்­டும் என்­றான். எனக்­குத் தலை சுற்­றி­யது. மயக்­கம் வரும்­போல இருந்­தது.

உங்­க­ளுக்­குச் சம்­ம­தம் என்­றால் தொடர்­பு­கொள்­ளுங்­கள் என்­று­கூறி தனது வில­ாசத்­தைத் தந்­து­விட்­டுப் போய்­விட்­டான். ஒரு வார­மா­க, இரவு பக­லா­க,அவ­னது சம்­ப­ளத்­தைப் பற்­றியே யோசித்­தேன். இறு­தி­யில் ஒரு முடி­வுக்கு வந்­தேன். என்­னி­டம் ஒரு புதிய மாரு­திக் கார் இருந்­தது. அதை­யும் கொடுத்து ஒரு மூன்று மாதங்­க­ளுக்கு அந்த நபரை வேலைக்கு அமர்த்­திப் பார்ப்­போம் என முடி­வெ­டுத்­தேன். அவ­ரி­டம் அப்­படி என்­ன­தான் இருக்­க­மு­டி­யும் என்­ற­றி­வதே எனது நோக்­கம்.

அவனை அழைத்து எனது முடிவை அறி­வித்­தேன். அவ­ரும் உடன்­பட்­டான். அதி­காலை 5.30மணிக்­குக் காரைக் கொண்டு உண­வ­கத் தரிப்­பி­டத்­தில் வந்து நிறுத்­தி­விட்­டுத் தனது சமை­யல் வேலையை ஆரம்­பிப்பான். இரவு பதி­னொரு மணிக்­குக் காரில் வீட்­டுக்­குச் செல்வான். அந்­தக் கார் வேறு தேவை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.(நான்­கூட அந்­தக் காரை அப்­ப­டிப் பக்­கு­வ­மா­கப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை).

தனது வேலைக்கு நேரம், போக்­கு­வ­ரத்­து, மழை, வெயில் என எவை­யும் தடை­யாக இருக்­கக்­கூ­டாது என்­ப­தில் அவர் கவ­ன­மாக இருந்­தான். நான் ஐந்து வரு­டங்­கள் அந்த உண­வ­கத்தை நடத்­தி­னேன். மாதாந்­தம் பல லட்­சம் ரூபாய்­க­ளைச் சம்­பா­தித்­தேன். சகல வித­மான இறைச்­சி­கள், மரக்­க­றி­கள், அரி­சி,மா,சீனி போன்ற அவ­னால் தரப்­பட்ட பட்­டி­ய­லின்­படி சமான்­களை வாங்கி வைப்­பது மட்­டும் தான் எனது பொறுப்பு.

எந்­த­வொரு பொரு­ளும் குறை­யக்­கூ­டாது என்­பது அவ­னது எதிர்­பார்ப்பு. அவன் தயா­ரிக்­கின்ற தேநீ­ரைக் குடிப்­ப­தற்­கா­கப் 10கிலோ மீற்­றர்­கள் தூரத்­தி­லி­ருந்­கூ­டக் காரில் வாடிக்­கை­யா­கப் பலர் வந்­து­போ­வார்­கள்’ என்று அவர் தனது உண­வ­கத் தொழில் அனு­ப­வத்­தைக் கூறி முடித்­தார்.

கன­டா­வைச் சேர்ந்த ஒரு­வர் இப்­ப­டிக் கூறு­கி­றார்

கன­டா­வில் ‘செவ்’ ஆகப் பல வரு­டங்­க­ளா­கப் பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கும் யாழ்ப்­பா­ணத்­த­வர் ஒரு­வர் யாழ்ப்­பா­ணத்­துக்கு வந்­தி­ருந்த சம­யம் திரு­மண மண்­ட­பம் ஒன்­றுக்கு ஒரு நிகழ்வுக்­குப் போய்­வந்­தி­ருக்­கி­றார். பிறி­தொரு நாள் என்­னைச் சந்­தித்­த­போது அது­பற்றி உரை­யா­டி­யி­ருந்­தார்.

‘இங்­குள்­ள­வர்­கள் ஒரு நிகழ்­வுக்கு அழைப்­ப­வர்­க­ளுக்கு எத்­த­கைய தர­மான உணவை வழங்­க­வேண்­டும் என்று நினைப்­ப­தில்லை. மண்­ட­பத்­தி­னர் கோவில் அவி­யல் சாப்­பாட்­டைக் கொடுத்தே அதிக பணம் சம்­பா­திக்­கின்­ற­னர். நிகழ்வை ஒழுங்கு செய்­ப­வர்­க­ளின் முழுக்­க­வ­ன­மும் வீடியோ எடுப்­ப­தில் தான் தங்­கி­யி­ருக்­கி­றது. அழைத்­த­வர்­க­ளுக்கு சுவை­யான சுத்­த­மான உணவு வழங்­க­வேண்­டும் என்­பது பற்றி அவர்­கள் கரி­சனை கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை’ என்­றார்.

திரு­மண நிகழ்­வொன்­றின்­போது அத்­த­கை­தொரு மண்­ட­பத்­தில் சந்­தித்த நண்­பர் ஒரு­வர் தனது அனு­ப­வத்தை இவ்­வாறு கூறி­னார்.’ எனக்கு இண்­டைக்கு மூன்று திரு­மண வைப­வங்­க­ளுக்­குச் செல்­ல­வேண்­டி­யி­ருந்­தது. நான் முத­லில் எடுத்த முடி­வு, அன்று எந்த மண்­ட­பத்­தில் சாப்­பி­டு­வது என்­ப­து­தான்.

இரண்டு மண்­ட­பங்­க­ளின் சாப்­பாடு மோசம் என்று ஏற்­க­னவே எனக்­குத் தெரிந்­தி­ருந்­த­த­தால் அதி­லி­ருந்து தப்­பிக்­கொண்­டேன். பலர் இப்­ப­டி­யான சாப்­பாட்­டைத் தவிர்ப்­ப­தற்­காக வைப­வங்­க­ளுக்கு வந்து உரி­ய­வர்­க­ளுக்கு முகத்­தைக் காட்­டி­விட்­டுச் சாப்­பி­டா­மல் வெளி­யே­று­கின்­ற­னர். அதற்­குக் கார­ணம் அந்­தந்த மண்­ட­பங்­க­ளின் சாப்­பாட்­டுத் தரம்’ என்­றார்.

உண­வக முகா­மைத்­து­வம் அறி­யாத
யாழ்ப்­பா­ணத்து மண்­ட­பங்­கள்

யாழ்ப்­பா­ணத்­தில் திரு­மண மண்­ட­பங்­களை அமைத்­துள்ள பல­ருக்கு ‘ஹொட்­டேல் மனேஜ்­மன்ற்’ என்­கிற விட­ய­மோ, கொழும்­பு, இந்­தி­யா, சிங்­கப்­பூர் போன்ற நாடு­க­ளில் திறம்­பட இயங்கி வரு­கின்ற மண்­ட­பங்­க­ளின் செயற்­பாட்டை முன்­மா­தி­ரி­யா­கக் கொண்ட அனு­ப­வமோ இல்லை. மண்­ட­பத்­தில் பொருத்­தப்­பட்­டுள்ள குளி­ரூட்­டிச் சாத­னங்­கள் ஐம்­பது பேருக்­கு­மட்­டுமே போது­மா­ன­தாக இருக்­கின்­றன.

ஆனால். ஐந்­றூறு பேருக்கு மேல் விருந்­தி­னர்கள் உள்­ள­டக்­கப்­ப­டு­கி­றார்­கள். இத­னால், சுவா­சம் அத­னால் ஏற்­ப­டும் மணம் தொற்­று­நோய்ப் பர­வல் சடங்­கு­ க­ளின்­போது வெளி­யா­கும் புகை என்­ப­வற்­றால் தலை இடி எற்­ப­டு­கின்­றது. ஒவ்­வா­மை­கள் ஏற்­ப­டு­கின்­றன.

விருந்­தி­னர்­க­ளின் தொகை அதி­க­மாக இருக்­கின்­றது என்­றால், இருக்­கை­களை(கதி­ரை­களை) அதற்­கேற்ப அடுக்கி விடு­கி­றார்­களே தவி­ர, ஏனை­யவை பற்­றிச் சிந்­திப்­ப­ தில்லை. இதை­விட இந்த மண்­ட­பங்­க­ளில் ஆபத்து வேளை­க­ளில் வெளி­யே­று­வ­தற்­கான கத­வு­கள் போதி­ய­ள­வுக்கு இல்லை.

அவ­சர வேளை­யில் விருந்­தி­னர்­கள் வெளி­யேற முடி­யாது இறு­குப்­பட்­டுச் சாவ­டைய வேண்­டிய நிலை ஏற்­ப­டும். பல மண்­ட­பங்­க­ளில் மல­ச­ல­கூட வச­தி­கள், கழி­வ­கற்­றும் வச­தி­கள் என்­பவை போதா­மல் உள்­ளன. சில மண்­ட­பங்­க­ளில் உண­வ­ருந்­தும் இடங்­க­ளில் இலை­யான்­கள் மொய்க்­கின்ற நிலை­யும் காணப்­ப­டு­கின்­றது. சில மண்­ட­பங்­கள் குளி­ரூட்­டப்­ப­டா­மல் மின் விசி­றி­யைப் பாவிப்­பது என்ற வகை­யில் இயங்­கு­கின்­றன.

தேர்ச்சி பெற்ற சமை­யல்­கா­ரர் இருப்­ப­தில்லை

பெரும்­பா­லான மண்­ட­பங்­க­ளில் ‘ஹொட்­டல்’ முகா­மைத்­து­வம் படித்த ‘செவ்’ எனப்­ப­டு­கின்ற தொழில் ரீதி­யான தேர்ச்சி பெற்ற சமை­யற்காரர்­கள் இருப்­ப­தில்லை. அவர்­கள் பல இலட்­சம் ரூபாக்­கள் சம்­ப­ளம் கேட்­பார்­கள் என்­ப­தால், கோவில் சமை­யல்­கா­ரர்­கள் மற்­றும் உள்­ளூர்ச் சமை­யற்காரர்­களை வைத்து ஒரே வகை­யான உணவை மட்­டும் வழங்­கு­கின்­ற­னர்.

வித்­தி­யா­ச­மான உண­வு­க­ளைத் தயா­ரிப்­ப­தற்கு இந்­தச் சமை­யல்­கா­ரர்­க­ளால் முடி­வ­தில்லை. அதற்­கென்­று பிரத்­தி­யோ­க­மா­கப் படித்­த­வர்­க­ளால் மட்­டுமே உண­வுப் பட்­டி­ய­லின்­படி(மெனு) பல்­வேறு வகை­யான உண­வு­க­ளைத் தயா­ரிக்க முடி­யும். அத்­தோடு உண­வின் தரத்­தில் ஏதா­வது குள­று­ப­டி­கள், தரக்­கு­றை­வான நிலை இருந்­தால், சுகா­தா­ரப் பரி­சோ­த­க­ருக்கு (பி.எச்.ஐ) உட­ன­டி­யாக அறி­விக்­கும் ஒரு தொலை­பேசி இலக்­கத்­தை­யும் அவர்­க­ளது விலா­சத்­தை­ யம் எல்­லாத் திரு­மண மண்­ட­பங்­க­ளின் உணவு பரி­மா­றும் இடத்­தில் காட்­சிப்­ப­டுத்­து­வது அவ­சி­யம். இத­னு­டாக உணவு ஒவ்­வாமை மற்­றும் சுத்­த­மின்மை தொடர்­பான விட­யங்­களை பொது­மக்­கள் உரி­ய­வர்­க­ளுக்கு அறி­விக்க முடி­யும்.

உரி­மம் அளித்­த­வர்­க­ளின்
பொறுப்­பற்ற தன்மை

குளி­ரூட்­டப்­பட்ட ஒரு மண்­ட­பத்­தி­லோ அறை­யிலோ அதி­கம் காற்­றோட்­டம் இருப்­ப­தில்லை. அதற்­கேற்ப ஜன்­னல்­கள் போடப்­பட்­டி­ருப்­ப­தில்லை. சில மண்­ட­பங்­க­ளில் ஒரு பக்­கம் அல்­லது இரண்டு பக்­கங்­கள் மூடப்­பட்ட சுவர்­க­ளாக உள்­ளன. அவற்­றில் ஜன்­னல்­கள் இல்லை. அரு­கில் வேறு கட்­ட­டங்­கள் இருப்­ப­தால் அதில் ஜன்­னல்­கள் வைப்­ப­தற்கு அனு­ம­திக்க மாட்­டார்­கள்.

இந்த நிலை­யில்­தான் பிர­தேச சபை­க­ளும் மாந­கர சபை­க­ளும் அவ்­வி­டங்­க­ளில் திரு­மண மண்­ட­பங்­க­ளைக் கட்­டு­வ­தற்கு அனு­ம­தித்­தி­ருக்­கின்­றன. பல மண்­ட­பங்­க­ளில் வாக­னத் தரிப்­பி­டம் இல்லை. பலாலி வீதி, காங்­கே­சன்­து­றை­வீ­தி, யாழ். நக­ர­மத்­தி­யில் அமைக்­கப்­பட்­டுள்ள மண்­ட­பங்­க­ளின் நிகழ்­வு­க­ளுக்கு வரு­கின்ற பல­ரது வாக­னங்­கள் முதன்மை வீதி­யின் இரு­ம­ருங்­கும் நிறுத்தி வைக்­கப்­ப­டு­கின்­றன.

குறித்த மண்­ட­பங்­க­ளில் வாக­னத் தரிப்­பிட வச­தி­கள் இல்லை. அல்­லது போது­மா­ன­தாக இல்லை. இது விட­யத்­தில் மண்­ட­பங்­க­ளைக் கட்­டு­வ­தற்கு அனு­மதி வழங்­கிய உத்­தி­யோ­கத்­தர்­க­ளின் திறமை இன்­மை­யும் ஊழ­லுமே வெளித்­தெ­ரி­கி­றது.

வச­தி­கள் பர­வ­லாக்­கப்­பட வேண்­டும்

துணி துவைப்­ப­தற்­கு, சுத்­தி­க­ரிப்­ப­தற்­கு,பழுது பார்ப்­ப­தற்­கு, கொள்­வ­னவு செய்­வ­தற்­கு, உண­வு­களை வெளி­யில் வழங்­கு­வ­தற்­கு, சமைப்­ப­தற்­கு, பரி­மா­று­வ­தற்­கு, வர­வேற்­ப­தற்கு பாவ­னை­யா­ளர்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­தும் வகை­யில் அவர்­க­ளது பிரச்­சி­னையை என்ன என்று கேட்டு உத­வு­வ­தற்­கு, பாது­காப்பு வழங்­கு­வ­தற்கு எனத் தனித்­த­னி­யான ஊழி­யர்­கள் நிய­மிக்­கப்­பட்டு அதற்­கான மாதாந்­தச் சம்­ப­ளம் வழங்­கும் நிலை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் எந்­தத் திரு­மண மண்­ட­பங்­க­ளும் இல்லை.

இது­வி­ட­யத்­தில் மருத்­து­வர்­க­ளும் சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­க­ளும் பரி­சீ­லித்து அந்த மண்­ட­பம் இத்­த­னை­ பே­ரைத்­தான் உள்­ள­டக்­கக்­கூ­டி­யது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­கின்ற விளம்­ப­ரப் பலகை ஒன்றை மண்­ட­பத்­தின் முன்­ப­கு­தி­யில் காட்­சிப்­ப­டுத்­து­வது அவ­சி­யம். அந்­தத் தொகைக்கு மேல­தி­க­மாக மக்­களை உள்ளே அமர்த்தினால் அதற்­கான சட்ட நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சி­யம்.

கொழும்­பில் பிர­ப­ல­மான உண­வ­கங்­கள் தமது வியா­ப­கத்தை யாழ்ப்­பா­ணத்­தில் ஏற்­ப­டுத்­தும்­போது தற்­போ­துள்ள திரு­மண மண்­ட­பங்­கள் பல அவற்­று­டன் போட்­டி­போட முடி­யாத நிலை அல்­லது மிகக் குறைந்த பதி­வு­க­ளைச் செய்­ய­வேண்­டிய நிலை ஏற்­ப­டும்.

மண்­ட­பங்­க­ளின் இந்த நிலை நீடித்­தால்
மக்­க­ளின் நாட்­டம் வெகு­வா­கக் குறை­யும்

யாழ்ப்­பா­ணத்து மண்­ட­பங்­க­ளின் இத்­த­கைய நிலை நீடித்­தால், சந்­நி­திக் கோவில்­போல ஒரே நேரத்­தில் பல தம்­ப­தி­யர் திரு­ம­ணம் செய்­கின்ற மிக எளி­மை­யான திரு­மண முறை­யும், திறந்த வெளி­க­ளில், வீடு­க­ளில் கொண்­டாடி மகிழ்­கின்ற நிலை­யும் ஏற்­ப­டும். இத­னால் தற் போதுள்ள பல திரு­மண மண்­ட­பங்­கள் பொலி­வி­ழக்க வாய்ப்­புண்டு.

மண்­ட­பங்­க­ளைப் பதிவு செய்­வ­தில் சிர­மம் இருப்­ப­தா­கச் செயற்­கை­யான ஒரு தட்­டுப்­பாட்டை இந்த மண்­டப உரி­மை­யா­ளர்­களே ஏற்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கின்­ற­னர். இந்­தத் தட்­டுப்­பாட்­டைக் கார­ணம் காட்­டியே தரம் குறைந்த மண்­ட­பங்­க­ளை­யும் மக்­கள் நாட­வேண்­டி­யுள்­ளது.

வெளி­யான இடங்­க­ளி­லும் மர நிழல்­க­ளி­லும் பச்­சைப் புல் தரை­க­ளி­லும் இயற்­கை­யாக இந்த வைப­வங்­களை நடாத்­து­கின்ற நிலை ஏற்­ப­டும்­போ­து, இயற்­கை­யான நிழ­லை­யும், பசு­மை­யை­யுமே மக்­கள் விரும்­பு­வர். ஒரு பெரு விருட்­சத்­தின் கீழ் அம­ரும்­போது கிடைக்­கின்ற சுவாத்­தி­யம் அடைக்­கப்­பட்­டுக் குளி­ரூட்­டப்­பட்ட கட்­ட­டத்­துக்­குள் கிடைக்­காது.

ஆக, யாழ்ப்­பா­ணத்து மண்­ட­பங்­கள் களுத்­து­றைச் சம­னைப்­போல ஒரு பயிற்­று­விக்­கப்­பட்ட சமை­யல்­கா­ர­ர­ரை­யோ, பரா­ம­ரிப்­புக்கு எனத் தனி­யான நபர்­க­ளையோ வேலைக்கு அமர்த்­தித் தமது சேவை­க­ளைத் திருத்­திக் கொள்­ளாத பட்­சத்­தில், எதிர்­கா­லத்­தில் இந்த மண்­டப விழாக் கலா­சா­ரம் மக்­க­ளின் மனங்­க­ளில் இருந்து புற­மொ­துங்­கி­வி­டும் என்­ப­தில் ஐய­மில்லை.

https://newuthayan.com/story/09/யாழ்ப்பாணத்து-திருமண-மண்டபங்களும்-உணவுகளும்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.