Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ”பொங்கு தமிழ்” பிரகடன நினைவுத்தூபி திறந்து வைப்பு

Featured Replies

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ”பொங்கு தமிழ்” பிரகடன நினைவுத்தூபி திறந்து வைப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ”பொங்கு தமிழ்” பிரகடன நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தூபி இன்னு திங்கட்கிழமை காலை துணைவேந்தர் விக்னேஸ்வரனால் திரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

IMG_8619.jpg?resize=800%2C450IMG_8620.jpg?resize=800%2C450IMG_8621.jpg?resize=800%2C450IMG_8622.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/95962/

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நினைவு தூபி: காரணம் என்ன?

இலங்கை: தமிழர்களின் கோரிக்கைளை வலியுறுத்தி நினைவு தூபி திறப்பு

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத் தூபியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் இன்று திங்கள் கிழமை திரைநீக்கம் செய்து வைத்தார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி சர்வதேச சமூகத்தின் கவனத்தை தமிழர் தேசத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை அமைக்கப்பட்டிருந்தது. அந்த பிரகடனத்தை தூபியாகப் புனரமைக்கும் பணியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டிருந்தது.

இலங்கை: தமிழர்களின் கோரிக்கைளை வலியுறுத்தி நினைவு தூபி திறப்பு

அவ்வாறு மாணவர் ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்ட தூபியே இன்று திங்கட்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மங்கள விளக்கேற்றி தூபியைத் திறந்து வைத்தார். நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை: தமிழர்களின் கோரிக்கைளை வலியுறுத்தி நினைவு தூபி திறப்பு

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் எழுச்சி பாடல்களான ''நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா '' மற்றும் ''ஒருதலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எங்கள் தலைவன் பிறந்தான்'' பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டிருந்தன

https://www.bbc.com/tamil/sri-lanka-45546629

2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத் தூபி புனருத்தாரணம் செய்யப்பட்டு மீளத் திறக்கப்பட்டது மகிழ்ச்சியான நிகழ்வு.

தமிழ் மாணவர்களின் முயற்சி பாராட்டுக்கு உரியது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.