Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு பக்கங்களிலும் கால்வைத்து பயணிக்க முயற்சிக்கிறது இந்தியா :

Featured Replies

இரண்டு பக்கங்களிலும் கால்வைத்து பயணிக்க முயற்சிக்கிறது இந்தியா :

City-Page-01-colorGMGPage1Image0013-c5ed31d351f4d16de0e69686e09edf2f9ca39b31.jpg

 

(ஆர்.யசி)

அமைச்சர் மனோ கணேசன் விசனம்

இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென தெளிவாக தெரிந்துவிட்டது. இரண்டு பக்கங்களிலும் கால்வைத்து பயணிக்கவே இந்தியா எத்தனிக்கின்றது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.  

இலங்கையின் ஆட்சியையோ ஜனாதிபதியையோ - பிரதமரையோ தீர்மானிப்பது நாமே தவிர இந்தியா அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டதுடன் அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புகளை முன்னெடுத்திருந்த நிலையில் இந்த விவகாரம் இலங்கையில் அரசியல் கட்சிகள் இடையில் மாறுபட்டு பல விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இது குறித்தும் ஏனைய அரசியல் காரணிகள் குறித்தும் அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது

முன்னாள் ஜனாதிபதி இந்தியாவுக்கான விஜயத்தை முன்னெடுத்திருந்தார். இதுவரை விமர்சனங்களை முன்வைத்தவர்கள் இன்று இந்தியாவுக்கு செல்லும் நிலைமை உருவாகியுள்ளது. இந்திய அரசாங்கதின் நிலைப்பாடு என்ன என்பது இப்போது எமக்கு தெளிவாக தெரிந்துவிட்டது. இந்தியா இரண்டு பக்கமும் கால் வைத்து பயணிக்கின்றது. இரு கரங்களையும் பிடித்து கொண்டுள்ளது. எமது அரசாங்கத்தை தமது தேவைக்காக பயன்படுத்த முயற்சிப்பது அவர்களுக்கு ஒரு முயற்சி மட்டுமேயாகும். ஆனால் நாம் மிகத் தெளிவாகவும் அவதானமாகவும் இந்தியாவை கையாண்டு வருகின்றோம். இந்த நாட்டின் ஜனாதிபதி யார், பிரதமர் யார், எவரை அரசாங்கமாக்குவது என்பதை நாமே தீர்மானிப்போம், எமது மக்களே தெரிவு செய்வார்கள் மாறாக இந்தியா அல்ல.

 இதே மஹிந்த ராஜபக் ஷ கூட்டணிதான் எமது அரசாங்கம் இந்தியாவுடன் கூட்டணி வைத்து செயற்பட்டு வருவதாக கூறினார்கள். இந்தியாவே ஆட்சி மாற்றத்துக்கு உதவியும் செய்தது எனவும் , அவர்களின் தேவைக்காக இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்ற கதைகளையும் கூறினார்கள். அவ்வாறு கூறியவர்கள் இப்போது இந்தியாவிற்கு சென்று, தோசை சாப்பிட்டு, வடை சாப்பிட்டு, பலூடா குடித்து, கை குலுக்கி, வாக்குறுதிகளையும் கொடுத்துவிட்டு வருகின்றனர். இது முகவும் வேடிக்கையாக உள்ளது. இரட்டை வேடம் யார் போடுகின்றனர் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 அடுத்த தேர்தலில் பொது வேட்பாளர் என்ற நோக்கம் இல்லை, ஐக்கிய தேசிய முன்னணியாக எமது அணியை பதிவு செய்ய வேண்டும் என்ற தீர்மானமே எம்மிடத்தில் உள்ளது. இதில் கூட்டணியின் பெயரை மாற்றவும் தீர்மானம் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி என்ற பெயர் இல்லாத பொதுப் பெயர் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இதுவரை இணைந்து செயற்படாத கட்சிகளை இணைத்துக்கொண்டு செயற்படவும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். இதில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இது நல்லாட்சி, அதற்கான அடையாளம் இந்த ஆட்சியில் உள்ளது. எமது தரப்பில் குற்றச்சாட்டுகளில் அடையாளப்படுத்தப்படும் நபர்களும் அதிகாரத்தை பயன்படுத்தி தப்பிக்காது நீதிமன்றம் சென்று, தம்மை நிருபிக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியுள்ளோம். தாம் சுற்றவாளிகள் என்றால் நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும், நிருபிக்க முடியாதவர்கள் சிறைக்கு செல்ல வேண்டும். இதில் எமது தரப்பு ஏனைய தரப்பு என்ற பாகுபாடுகள் எவையும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-17#page-1

17 hours ago, நவீனன் said:

இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென தெளிவாக தெரிந்துவிட்டது. இரண்டு பக்கங்களிலும் கால்வைத்து பயணிக்கவே இந்தியா எத்தனிக்கின்றது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.  

தமிழின விரோத இந்திய அரச பிச்சைக்காரர்களிடம் மனோகணேசன் எதிர்பார்த்த ஏதோ ஒன்று கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தான்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.