Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டிஷ் Channel 4 TV யின் naked attraction நிகழ்வு (Program)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு விபத்தாக இந்த நிகழ்வினைப் பார்த்து அதிர்ந்து போனேன். இங்கே எல்லோரும் வளர்ந்தவர்கள் ஆகையால் இது குறித்து பகிர நினைத்தேன்.

பொதுவாக ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் பிடிப்பது முக அழகு முதலிடத்தினையும், ஆடை அணிந்த நிலையில் தெரியும் உடல் அழகு (figure) இரண்டாவது இடத்தினையும் பிடிக்கிறது.

முன்னர் ITV TV யில், Blind date எனும் நிகழ்வினை Shiela Black என்னும் தொகுப்பாளர் நிகழ்த்துவார். ஆண் ஆயின் 3 பெண்களுடனும், பெண்ணாயின் 3 ஆண்களுடனும் முகம் பாராது கேள்விகள் கேட்டு ஒருவரை தெரிவு செய்வார். ஒரு மாதம் டிவி காரர் செலவில் ஊர் சுத்திய பின்னர் தனக்கு சரியானவர் தான் என்றால் சேர்ந்து போவார். இல்லாவிடில் பிரிந்து போவர். 

இந்த naked attraction நிகழ்வில் நிர்வாண உடலைப் பார்த்து தமது தெரிவை மேற்கொள்கிறார்கள்.

முதலில் கீழ் பாதியும் பின்னர் மேல்பாதியும் இறுதியாக முகத்தினையும் காட்டுகிறார்கள்.

ஒவொரு முறையும் ஒருவர் நீக்கப்பட கடைசியில் இருவர் மிஞ்சுவார்கள். அந்த நேரத்தில் தேர்வு செய்பவர் நிர்வாணமாகி இருவரில் ஒருவரை தெரிவார்.

இதில் நீக்கப்படுவதற்கு கூலாக சொல்லும் காரணம் ஒரு அருவருப்பு ரகம். தெரிவாளர் ஆணாக இருந்தால், கால் முதல், பெண் உறுப்பு வரையும், பெண்ணாக இருந்தால் கால் முதல் ஆணுறுப்பு வரை விமர்சனம் செய்கின்றனர். பின்னர் மேல்பாதி குறித்த விமர்சனம். அது அப்படி இருப்பதால் பிடிக்கவில்லை. அங்கே பச்சை குத்தி இருக்கிறது, இங்கே piercing செய்திருக்கிறது பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை என 'பச்சையாக' சொல்கிறார்கள்.

இதிலே ஓரின சேர்க்கையாளர்கள் கூட வருகிறார்கள். என்னத்தை சொல்வது.

நேற்று நடந்த நிகழ்வில் முன்பாதி ஓரின சேர்க்கையாளர்கள் தெரிவு. பின் பாதி ஆண், பெண்ணை தெரிவு செய்கிறார்.

எதிர்பார்த்தது போலவே, ஒரு அழகான, எல்லாம் சரியாக அமைந்த பெண்ணை தெரிவு செய்கிறார். அவர் நிராகரித்த பெண்களில் முதலாவது 50 வயது, இரண்டாவது 42, 43, 45 வயது. முக்கியமாக அவர் தேர்வு செய்தது 48 வயது பெண். ஆனாலும் 30 வயது பெண் போல் உடலமைப்பும், முக அழகும். 

ஆரம்பத்திலேயே இவரைத்தான் தெரிவு செய்வார் என ஊகிக்கக் கூடியதான உடலமைப்பும், முக அழகும்..

எனினும் 3 வாரங்களுக்கு பின்னர், இருவரும் ஒத்துவராது என்று பிரிந்து போகின்றனர்.

இந்த நிகழ்வு சொல்ல வருவது... உடலமைப்பும், முக அழகும் இல்லை... மன அழகு தான் இறுதியில் வெல்லும்...

ஆனாலும் இந்த mainstream TV நிகழ்வு ஒரு அதிர்சியினையும், அருவருப்பினையும் தருகின்றது. கூகிளில் விசாரித்து போது தெரிந்தது, 2016 முதல் நடக்கும் இந்த நிகழ்வு குறித்து பலரும் இதே அபிப்பிராயத்தினைக் கொண்டுள்ளார்கள். 

ஆயினும் பலர் பார்ப்பதால், விளம்பர வருமானம் வருவதால் தொடர்கிறது. உலகம் தறி கேட்டுத்தான் போகிறது...

https://www.channel4.com/programmes/naked-attraction

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.