Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து உதவி மறுக்கப்படுகிறது: யோகேஸ்வரன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

seeni-720x450.jpg

கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து உதவி மறுக்கப்படுகிறது: யோகேஸ்வரன்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களில் ஒரு சிலரே தமது சொந்த பிரதேசங்களுக்கான உதவிகளை செய்து வருவதாகவும், பெரும்பாலானோரது உதவி மறுக்கப்படுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – பண்டாரியாவெளி அறிவாலயம் அமைப்பின் அனுசரணையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்கிழமை) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”புலம்பெயர்ந்து வாழ்கின்ற வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மட்டக்களப்பு மக்களுக்கு பல வகையான உதவிகளைச் செய்கின்றார்கள்.

ஆனால் மட்டக்களப்பிலிருந்து புலம்பெயர்ந்த ஒருசிலரே தமது பிரதேசத்திற்கான உதவிகளை செய்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மேற்கு வலயத்தைப் பொறுத்தவரை பல தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் எமக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி போதாமல் உள்ளதுடன் பாடசாலைகளுக்கு பொருள் கொள்வனவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது எனவும் சுற்றுநிருபம் அனுப்பியுள்ளார்கள். இதனால் எங்களால் நிதி ஒதுக்கீடு மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது.

சட்டம், விஞ்ஞானம் மற்றும் கணிதத்துறைகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் அவர்களின் பல்கலைக்கழக கல்விக்கு முடிந்தவரை உதவுவதற்கு தயாராக உள்ளேன். கலை மற்றும் வர்த்தகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட வறிய நிலையிலுள்ள மாணவர்களும் தொடர்பு கொண்டால் அவர்களின் கல்விக்காகவும் உதவுவதற்கு தயாராக உள்ளோம்’ எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/கிழக்கிலிருந்து-புலம்பெ/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

”புலம்பெயர்ந்து வாழ்கின்ற வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மட்டக்களப்பு மக்களுக்கு பல வகையான உதவிகளைச் செய்கின்றார்கள்.


வடமாகாண்த்தான் நல்லவன்.. இருந்தால் கொஞ்சம் கொடுப்பான்...புலம் பெயர்ந்தபின்பு அவனிடம் பணப்புலக்கம் இருக்கு கொடுக்கிறான்...

வடமாகாணத்தானுக்கு ஒரு பாராட்டை போட்டால் குறைஞ்சே போய்விடியள்....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களில் ஒரு சிலரே தமது சொந்த பிரதேசங்களுக்கான உதவிகளை செய்து வருவதாகவும், பெரும்பாலானோரது உதவி மறுக்கப்படுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் உரை தவறாக பிரசுரிக்கப்பட்டுட்டள்ளதா இல்லை உண்மையிலேயே அவர் இப்படி கூறினாரா?

இது கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களின் உதவிகள், எதோ ஓர் வகையில் பிரிக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவதாகவே கருத்து உள்ளது.

உதவிகள் கேட்கும் போதோ அல்லது வரும்போதோ, எந்த மாகாணம் என்று தெரிந்தெடுக்கப்பட்டா ஏற்றுக்கொள்ளப்படுகிறது?

"பெரும்பாலானோர் உதவி செய்ய மறுப்பதாகவும்", என்பதே அவர் சொல்ல வந்தது என்றே தென்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.