Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலையில் சிக்கிய பல்சுவை பதிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லங்குகள் பற்றித் தெரியுமா?

10.jpg

ஆர்மடில்லோ பற்றி:

1. ஆர்மடில்லோ எனும் பாலூட்டி நாம் பெரும்பாலும் கேள்விப்படாத விலங்கு; ஆர்மடில்லோவின் தமிழ்ப்பெயர் “நல்லங்கு”.

2. பாலூட்டிகளில், உடல் முழுவதும் கடினமான ஓட்டால் மூடப்பட்டிருக்கும் ஒரே மிருகம், நல்லங்கு.

3. நல்லங்குகள் பெரும்பாலும் அமெரிக்காவில்தான் அதிகம் காணப்படுகின்றன; ஒரே ஒரு இனம் வடஅமெரிக்காவிலும், 19 இனங்கள் தென்அமெரிக்காவிலும் வாழ்கின்றன.

4. அவற்றின் நீளம் 5 முதல் 60 அங்குலம்வரை இருக்கலாம்.

5. நல்லங்குகளின் எடை 3 முதல் 120 பவுண்ட் வரை மாறுபடும்.

6. நல்லங்குகள் பிங்க் நிறம், அடர் பிரவுன் நிறம், கறுப்பு நிறம், சிகப்பு நிறம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.

7. ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணி நேரங்கள் வரை அவை உறங்குகின்றன.

8. நல்லங்குகளின் இனப் பெருக்கம் மிகவும் வித்தியாசமானது; ஜூலை மாதம்தான் அவற்றின் இனப் பெருக்கக் காலம் என்றாலும், நவம்பரில்தான் அவை கருத்தரிக்கின்றன. இதைத் தாமதிக்கப்பட்ட கருவுறுதல் (delayed implantation) என்று சொல்வார்கள். காலநிலை சரியாக அமையும் வரை அவற்றால், கருத்தரிப்பைத் தள்ளிப்போட முடியும். ஒரு முட்டையிலிருந்து நான்கு நல்லங்குக் குட்டிகள் பிறக்கின்றன.

9. நல்லங்குகள் பிறக்கும்போது அவற்றின் தோல் மிகவும் மிருதுவாக இருக்கும். சில வாரங்களுக்குப் பிறகே ஓடுகளாக அவை மாறும்.

10. காடுகளில் 4-7 ஆண்டுகள் வரையிலும், பிடித்து அடைத்து வைத்து வளர்த்தால் 12-15 ஆண்டுகள் வரையிலும் வாழக்கூடியவை நல்லங்குகள்.

- ஆஸிஃபா

 

https://minnambalam.com/k/2018/10/12/10

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துகள்களின் அடிப்படை குணங்கள்

 

higgs-1024x576.jpg

ஒரு பொருளின் அடிப்படைத்தன்மையை அறிவது எப்படி? உப்பு எப்படி உப்பாகிறது, அதே அணு மற்றும் பிற துகள்கள் கொண்ட அமைப்பு எப்படி சர்க்கரையாகிறது? அறிவியலாளர்கள் பல காலமாக பொருட்களின் அடிப்படை கட்டுமானத்தை ஆராய்ந்து வருகிறார்கள். ரெண்டு ஹைட்ரஜன் மற்றும் ஒரு ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்தால் நீராகிறது. ஆனால் அடிப்படையில் ஹைட்ரஜனுக்கும் ஆக்ஸிஜனுக்கும் இடையே அணுவின் கட்டமைப்பு எப்படி வேறுபடுகிறது. குவாண்டம் இயற்பியலின் படி ஒவ்வொரு துகளும் சிறு மேகப்பொதி அலை எனும்போது அதன் அடிப்படை குணமான துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு, வெள்ளை, சிவப்பு போன்றவை எங்கு ஒளிந்துள்ளது? துகள்களின் சுழல் மாற்றத்தின்படி குணங்கள் வேறுபடுகின்றது என்பதால் புகழ்பெற்ற மெண்டெலெவ்வின் அட்டவணையை துகள்பொதியின் அலைவரிசைபடி மாற்றி அடுக்கியிருக்கிறார்கள். கடந்த 2015 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஹிக்ஸ் அப்படிப்பட்ட ஒரு அடிப்படை துகளாகும். ஒரு துகளையும் அதன் குணத்தையும் இரு வேறு நிகழ்தகவுகளாக மாற்ற முடியுமா? இருவேறு பாதை பிரியும் இடத்தில் நிற்கும் ஒருவன் ஒரு வழியையும் அவனது குணங்ங்கள் மற்றொரு வழியையும் தேர்ந்தெடுக்க முடியுமா? துகள்கள் அப்படி செய்ய முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அப்படி ஹிக்ஸ் துகளின் அடிப்படை குணத்தை மாற்றியமைத்து அதிகடத்தியை (super conductor) உருவாக்க முடியுமா என்பதை கட்டுரையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

https://www.quantamagazine.org/elusive-higgs-mode-created-in-exotic-materials-20180228/

 

https://solvanam.com/2018/03/மகரந்தம்-175/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மர்ம நகரம் – எங்கு இருக்கின்றது என தெரியுமா?

01-720x450.jpg

துருக்கி நாட்டில் அமைந்துள்ள ஓர் மர்ம நகரம் தான் டெரிகியு. இந்த இடம் பல அறைகளைக்கொண்ட நிலக்கீழ் நகரமாகும்.

தரையில் இருந்து சுமார் 80 மீற்றர் ஆளமுடையதாக இது காணப்படுகிறது. அத்தோடு சுமார் 20 ஆயிரம் மனிதர்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய வசதியும் இது கொண்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

1963 ஆம் ஆண்டு துருக்கியின் டெரிகியு நகரில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ந்ததில் அது ஒரு மிகப்பெரும் பாதாள உலகம் என்பது கண்டறியப்பட்டது.

கி.பி 8 ஆம் நூற்றாண்டில் இது அமைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அல்லது ரோமானியர் காலத்தில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது.

இருப்பினும் எரிமலையின் மென்மையான பாறைகளைக் கொண்டு இது அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காற்று உட் செல்ல சுவர்களில் ஆங்காங்கே துளைகள் இடப்பட்டிருப்பதாகவும், இந்த பாதாள உலகத்திற்குள்ளே உணவு மற்றும் நீர் கிடைப்பதாலும் இவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் வெளி உலகத்திற்கு வருவதில்லை என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதில் சுவாரஸ்யமான விடயம் யாதெனில் இந்த நகரை சுற்றியுள்ள ஊர்களிலுள்ள பண்டைய கதைகளில் கூட இந்த நகரம் பற்றிய எந்தக்குறிப்பும் இடம்பெறவில்லை.

இருப்பினும் இந்த நகரில் வாழ்ந்தவர்கள் எங்கே என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான விளக்கமோ, விடையே கிடைக்கவில்லை.

இந்த கேள்விக்கான விடை தொடர்பில் ஆய்வாளர்கள் இன்றும் ஆராய்ந்து வருகின்றனர்.

02-2.jpg03.jpg

 

 

http://athavannews.com/மர்ம-நகரம்-எங்கு-இருக்கி/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிலிப்பைன்ஸ் என்ற பெயர் வந்தது எப்படி?

 
philippines-fact.jpg

தென்கிழக்காசியாவில் மலேசியா, இந்தோனேசியா நாடுகளுக்கு வடக்காக அமைந்திருக்கும் பிலிப்பைன்ஸ் நாடு, ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

தென் சீனக் கடலுக்கும் மேற்கு பசுபிக் சமுத்திரத்திற்கும் இடையே அமைந்துள்ள  பிலிப்பைன்ஸிற்கு சொந்தமாக 7,641 தீவுகள் உள்ளன.

பசிபிக் எரிமலை வளையம் (Pacific Ring of Fire) எனப்படும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை கொந்தளிப்பு ஏற்படும் பகுதியிலே பிலிப்பைன்ஸ் தீவுகள் அமைந்திருப்பதால் அங்கே அடிக்கடி நில அதிர்வுகளும் சூறாவளிகளும் ஏற்படுவதுண்டு.  இந்தப்பகுதியில் அமைவிடத்தைக் கொண்டுள்ள காரணத்தினால் துன்பத்தில் அதிர்ஷ்டமாக அதிகளவான கனிமவளத்தையும் பிலிப்பைன்ஸ் தன்னகத்தே கொண்டுள்ளது.

Philippines-map-428x279.png

வடக்கு முதற்கொண்டு தெற்கு வரையான பிலிப்பைன்ஸின் நிலப்பரப்பை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கின்றனர். லுசோன், விஸயாஸ் மற்றும் மின்டனாவோ ஆகியனவே அம்மூன்று பிரிவுகளாகும். 300, 000 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவுகொண்ட பிலிப்பைன்ஸ் நாடு சுமார் பத்துக் கோடிக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்டதாகும்.கத்தோலிக்க மக்களை பெரும்பான்மையாகக்கொண்ட பிலிப்பைன்ஸ் ஆசிய நாடுகளில் சனத்தொகை அதிகம் கொண்ட நாடுகள் வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளதுடன் உலகளவில் 12வது இடத்தில் உள்ளது.

இன்முகத்தோடு விருந்தோம்பும் பண்புமிக்க பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் உலகிலே அதிகமாக விரும்பப்படும் தாதியர்கள் பணிப்பெண்களாக உலகெங்கும் பரந்துள்ளனர். பிலிப்பைன்ஸிற்கு வெளியே சுமார் பத்து மில்லியன் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் வாழ்கின்றனர்.

வரலாற்றிற்கு முற்பட்ட காலப்பகுதியில் நிக்ரிடோஸ் என்ற மக்கள் கூட்டம் ஆரம்பத்திலேயே பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு வந்துகுடியேறியதாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து ஒஸ்ரோ நேசியன் இனக்கூட்டத்தைச் சேர்ந்தமக்கள் வருகை தரஆரம்பித்தனர். பின்னர் சீனர், மலேயர், இந்தியர் மற்றும் இஸ்லாமியருடனான இனக்கலப்புப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.

நாடுகாண் பயணத்தில் ஆர்வம்கொண்ட போர்த்துக்கல் நாட்டுக் கடலோடி பேர்டினற் மகலன் தலைமையிலான ஸ்பெயின் படகு 1521ம் ஆண்டில் கிழக்கு சமர் பகுதியிலுள்ள ஹொமொன்கொன் என்ற இடத்தில் வந்து சேர்ந்து அதிலிருந்தவர்கள் தரையிறங்கியதையடுத்தே ஸ்பெயின் காலனித்துவ ஆட்சி ஸ்தாபிக்கப்படத்தொடங்கியது.

images-2-1.jpg

போர்த்துக்கேயரான பெர்டினன்ட் மெகல்லன் (Ferdinand Magellan ) கதை சுவாரசியமானது.  போர்த்துக்கேயய கடற்படையில் சேர ஆசைப்பட்டு விண்ணப்பித்தார். ஆனால், அரசர் இமானுவேல் அதை நிராகரித்து விட்டார்.

அந்தக் கோபத்தில் நாட்டை விட்டு வெளியேறி, ஸ்பெயினில் குடியேறினார் பெர்டினன்ட் மெகல்லன். ஸ்பெயின் அரசனின் உதவியோடு 1519 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள், மெகல்லனும் அவனுடைய 270 சகாக்களும் ஸ்பெயினிலிருந்து ட்ரிடினினாட், கொன்செப்சியன், சான் அன்டோனியோ, விக்டோரியா, சன்டியாகோ ஆகிய 5 சிறிய படகுகளில் உலகினைச் சுற்றப் புறப்பட்டனர். கொலம்பஸ்ஸைப் போல புதிய நாடுகளை கண்டறிவதே இந்த கடற் பயணத்தின் நோக்கமாக இருந்தது.

 

1521 ஆம் ஆண்டு மார்ச் மாதம். தற்போது பிலிப்பைன்ஸ் என்ற அழைக்கப்படும் தீவின் ஒரு பகுதியான ‘மெகல்லன் ஜலசந்தி’யை ( Strait Of Magellan ) அடைந்தனர். பிலிப்பைன்ஸ் தீவில் காலடி வைத்த முதல் ஐரோப்பியன் மெகல்லன் தான். அந்த நாட்டை தனக்கு உதவிய ஸ்பெயின் நாட்டு மன்னரின் ஆளுகைக்கு கீழ் கொண்டு வர முற்பட்டான். அப்போது, அந்த தீவில் வசித்த மக்களுடன் ஏற்பட்ட கைகலப்பில், ஒரு மூங்கில் ஈட்டி குத்தியதால் தன் நாற்பத்தி ஓராவது அகவையில் மரணத்தைத் தழுவினான். பசிபிக் பெருங்கடலில் பிரயாணம் செய்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையும் மெகல்லனைச் சேரும்.

அதற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகுஇ 1542 ஆம் ஆண்டு ஸ்பெயினில் இருந்து வந்த ருய் லோபெஸ் டி வில்லலோபோஸ் ( Ruy López de Villalobos) என்பவர்இ பலத் தீவுகளைக் கொண்டு ஒரு பெரிய தீவுக்கூட்டமாக விளங்கும் அந்தப் பகுதிக்கு, தனது மன்னன் பிலிப் ஐ (King Philip II) கௌரவபடுத்தும் விதமாக, பிலிப்பைன்ஸ் தீவுகள் என்றுப் பெயரிட்டார்.

 

 

http://athavannews.com/category/weekly/பயணங்கள்/

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நார்வே என்னும் நாடு!

15.jpg

 

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் வாய்ந்தது. பல தனித்தன்மைகளைக் கொண்ட நார்வேயைப் (Norway) பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்:

1. நார்வேயின் இயற்பெயர் (formal name) Kongeriket Norge.

2. நார்வேயை முதலில் Nordweg என அழைத்தனர்.

3. நார்வேயின் தேசியச் சின்னம், சிங்கம்.

4. நார்வேயின் மொத்தப் பரப்பளவு 125,021 சதுர மைல்கள்.

5. உலகின் மிக நீளமான சாலை சுரங்கப் பாதை நார்வேயில் இருக்கிறது: Laerdal Tunnel; அதன் நீளம் ஏறத்தாழ 15 மைல்கள்.

6. நார்வேயில், விமோனோபொலட் (Vimonopolet) எனும் கடையில் மட்டும்தான் மதுபானங்களை வாங்க முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு கடைகள் மட்டுமே இருக்கும்.

7. சால்மன் (Salmon) எனும் மீனை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு நார்வே.

8. Jan Mayen தீவிலுள்ள Beerenberg எனும் எரிமலை Norwegian Sea என்னும் கடலில் உள்ளது. அது மட்டும்தான் நார்வேயிலுள்ள செயலிலுள்ள எரிமலை.

9. நார்வேயில் ஒரு தொலைக்காட்சி வைத்திருந்தால் ஆண்டுதோறும் உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும்.

10. ஐநா சபையை நிறுவிய நாடுகளில் நார்வேயும் ஒன்று.

- ஆஸிஃபா

 

https://minnambalam.com/k/2018/10/15/15

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்.16: உலக மயக்கவியல் தினம்!

66.jpg

வலியில்லா அறுவை சிகிச்சைக்கு வித்திட்ட மார்ட்டினை, நாம் நினைவுகூர வேண்டும். காரணம், இன்று (அக்டோபர் 16) உலக மயக்கவியல் தினம் ஆகும்.

அறுவை சிகிச்சையின் முதுகெழும்பாக மயக்கவியல் நிபுணர்கள் திகழ்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் வலி என்பது பொதுவானது. அதைத் தாங்கிக்கொள்வதில் தான் பெரியவர்கள், சிறியவர்கள் என்ற வேறுபாடு தேவைப்படும். சாதாரணமாக, ஊசி என்றாலே பெரும்பாலானோருக்குப் பயம். காரணம் வலி. அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் வலி, மரணத்தின் வாயிலுக்கு நம்மைக் கூட்டிச் செல்லும். அப்படிப்பட்ட வலியை வெல்ல, வலியில்லா அறுவை சிகிச்சைக்கான தீர்வு தேவைப்பட்டது.

இந்த வலியில்லா அறுவை சிகிச்சைக்கு முதன்முதலில் வித்திட்டவர் டபிள்யூ.ஜி.மார்ட்டின். இவர், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவர். 1846ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதியன்று, மாஸாசேட் ஜெனரல் மருத்துவமனையில் எட்வர்ட் கில்பர்ட் என்ற நோயாளியின் கழுத்தில் இருந்த ரத்தக்கட்டியை அகற்ற, ‘ஈதர்’ என்ற மயக்க மருந்தை முதன்முதலில் இவர் பயன்படுத்தினார். நோயாளியை மயக்க நிலைக்கு உட்படுத்தி, அறுவை சிகிச்சையை வலி இல்லாமல் செய்து காட்டினார்.

இதற்கு முன்பு, அறுவை சிகிச்சையின்போது வலி தெரியாமல் இருக்க, நோயாளிக்கு அதிக அளவில் மது கொடுப்பது வழக்கமாக இருந்தது. நோயாளியின் மயக்கம் தெளிவதற்குள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சையைச் செய்து முடிப்பர். இந்த நிலையை மாற்றி, மயக்க மருந்து மூலம் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்டியவர் மார்ட்டின். அவர் மயக்க மருந்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டிய அக்டோபர் 16ஆம் தேதியை, உலக மயக்கவியல் தினமாக நாம் கடைப்பிடித்து வருகிறோம்.

அறுவை சிகிச்சையின்போது, பொதுவாக மூன்று வகையில் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. முதல் வகையில் ‘ஸ்பைனல் அனேஸ்தீசியா’ எனப்படும் முதுகுத்தண்டில் ஊசி குத்தி மூளைத் தண்டுவட திரவத்தில் மயக்க மருந்து செலுத்துவது. அடிவயிறு, தொடை மற்றும் கால் பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளை வலியின்றி மேற்கொள்ள இம்முறை உதவுகிறது.

இரண்டாவது, நரம்புச் செயலிழப்பு முறை. அதாவது அறுவை சிகிச்சை செய்யப் போகும் பாகத்திற்கான வலி உணர்வை உண்டாக்கும் நரம்புகளை மட்டும் மரத்துப் போகச் செய்தல். பெரும்பாலும் தோள்பட்டை மற்றும் கைகளுக்கான அறுவை சிகிச்சைகள் இம் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த இரண்டு முறைகளிலும் நோயாளி சுயநினைவுடன் இருப்பார்.

மூன்றாவது, முழுமயக்கம் கொடுத்தல். இம்முறையில் தலை, கழுத்து மற்றும் பெரிய நீண்ட நேர அறுவை சிகிச்சைகள் மற்றும் லேப்ராஸ்கோப் எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சையின்போது இந்த வகை மயக்க மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையில், நோயாளிக்குச் சுயநினைவு இருக்காது.

 

https://minnambalam.com/k/2018/10/16/66

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோய்களை விரட்டும் நன்மரம்!

24.jpg

தினப் பெட்டகம் – (17.10.2018)

நம் உணவிலும், மருந்திலும் முக்கியமான பொருட்களில் ஒன்று வேம்பு. வேப்பிலை மரத்தின் பொருட்களை வைத்துப் பல நோய்களைச் சரிசெய்துவிட முடியும்.

1. வேப்பிலை மரம் இந்தியா, மியான்மர், வங்காளம், மலேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தோன்றியது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2. இந்தியாவில் தோன்றிய ஆயுர்வேத மருத்துவ முறையில் மிகவும் முக்கியமான மருந்து, வேப்பிலை.

3. வேப்பிலையின் அறிவியல் பெயர்: Azadirachta Indica.

4. வேப்ப மரம் மிக வேகமாக வளரக்கூடிய மரம். 50 முதல் 150 அடிகள் வளரக்கூடிய மரம்

5. வேம்பு 500க்கும் அதிகமான பூச்சிகள், வண்டுகள், பேன் ஆகியவற்றுக்குச் சிறந்த மருந்து.

6. வேப்ப மரம் எந்த வகையிலான மண்ணிலும் வளர்ந்துவிடும் மரம்.

7. வேப்ப மரம் எந்தவொரு வெப்ப நிலையிலும் வாழும். ஆனால், நான்கு டிகிரிக்கும் குறைந்தால், அவற்றால் தாக்குப்பிடிக்க முடியாது.

8. ஒரு வேப்ப மரத்தின் சராசரி வாழும் காலம், 150 முதல் 200 ஆண்டுகள்.

9. வேப்பம்பழத்தை நன்றாகக் காய வைத்து அதிலிருந்துதான் எண்ணெய் எடுக்கப்படும்.

10. கொசுத் தொல்லைக்கு மிக மிகச் சிறந்த தீர்வு வேப்பெண்ணெய்.

- ஆஸிஃபா

 

https://minnambalam.com/k/2018/10/17/24

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப உணர்வு கொண்ட விலங்கு!

9.jpg

தினப் பெட்டகம் – 10 (18.10.2018)

ஓநாய்கள் பற்றி:

1. நாய்க் குடும்பத்தில் (Dog Family) மிகப் பெரிய உயிரி ஓநாய்.

2. ஓநாய்கள் ஒரு சமூக அமைப்பாக வாழக்கூடியவை. வேட்டையிலும் ஆபத்திலும் தங்கள் எல்லைக்கு ஆபத்து நேரும்போதும், இந்தச் சமூக அமைப்பின் வலிமை வெளிப்படுகிறது.

3. ஓநாய் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது ஓநாயின் ஊளைதான். தனியான ஓநாய், தன் கூட்டத்தை அழைத்தல், ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்திற்குத் தகவல் அனுப்புதல், சும்மா பக்கத்திலுள்ள ஓநாயைப் பார்த்துத் தானும் ஊளையிடுதல் எனப் பல காரணங்களாக ஓநாய்கள் ஊளையிடுகின்றன.

4. ஓநாய்களின் கர்ப்ப காலம் 65 நாட்கள்.

5. ஓநாய்க் குட்டிகளுக்குக் கண்ணும் தெரியாது, காதும் கேட்காது; பிறக்கும்போது அவற்றின் எடை வெறும் ஒரு பவுண்ட்தான்.

6. ஒரு கூட்டத்திலிருந்து விரட்டப்பட்ட ஓநாய், தனித்த ஓநாய் (Lone Wolf) என்றழைக்கப்படுகிறது. அந்த ஓநாய் வேறு கூட்டத்துடன் இணையவோ, ஊளையிடவோ செய்யாது.

7. ஓநாய்கள் மிக நெருக்கமான குடும்ப உறவுகள் கொண்டவை. குடும்ப உறுப்பினர்கள் மீது அதீதமான அன்பைக் காட்டும்; தேவைப்பட்டால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற உயிரைக்கூடத் தியாகம் செய்யும்.

8. ஓர் ஓநாய் தன் இணையைத் தேர்ந்தெடுத்துவிட்டால், பெரும்பாலும் மரணம் வரை சேர்ந்தே இருக்கும்.

9. ஓர் ஓநாயால், ஒரு முறையில் 9 கிலோ வரை இறைச்சி சாப்பிட முடியும்!

10. ஓநாய்கள் எல்லைகளை வகுத்துக்கொண்டு அதற்குள்ளேயே வாழக்கூடியவை. இரையைப் பொறுத்தும், தன் கூட்டத்தைப் பொறுத்தும் இந்த எல்லைகளின் அளவு மாறுபடும்.

- ஆஸிஃபா

 

https://minnambalam.com/k/2018/10/18/9

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புற்களில் இத்தனை விதங்களா?

7.jpg

தினப் பெட்டகம் – 10 (21.10.2018)

புற்களைப் பற்றி:

1. நெல், கோதுமை, சோளம், ஓட்ஸ், கரும்பு ஆகியவை புல் குடும்பத்தைச் சார்ந்தவைதான்.

2. விளையாட்டு மைதானங்கள், வீட்டுத் தோட்டங்கள் ஆகிய இடங்களில் தேவைப்படும் புற்களின் காரணமாக, புல் தொழில்துறை (Grass producing industry) மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்று.

3. மூங்கிலும் ஒரு வகையான புல்தான்.

4. அநேகமான மதுபானங்களில் ஏதோ ஒரு வகை புல் கலந்திருக்கும்.

5. பூமிப் பரப்பில் 20%க்கும் அதிகமாகப் புற்கள்தான் வளர்கின்றன (Grasslands).

6. உலகில் 10,000க்கும் அதிகமான புல் வகைகள் இருக்கின்றன

7. பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் பழைமையான உயிரினங்களில் ஒன்று, புல்.

8. 2,00,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வகை seagrass மத்தியத் தரைக்கடலில் கிடைத்துள்ளது.

9. புற்கள் மற்ற செடிகள் போலல்லாமல், வேரடியில்தான் வளர்ந்துகொண்டே இருக்கும், நுனி மேயப்பட்டாலும், வெட்டப்பட்டாலும், எரிந்துபோனாலும், அப்புல் மீண்டும் வளரும்.

10. புற்களின் அதிகபட்ச உயரம் 120 மீட்டருக்கும் மேல்.

- ஆஸிஃபா

 

https://minnambalam.com/k/2018/10/21/7

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபாயத்தில் இருக்கும் அழகான கரடிகள்!

17.jpg

தினப் பெட்டகம் – 10 (22.10.2018)

பாண்டா கரடிகள் (Panda) எல்லோருக்கும் விருப்பமான மிருகங்களில் ஒன்று. பாண்டா பற்றி:

முழுதாக வளர்ந்த ஒரு பாண்டா கரடியின் எடை 450 கிலோவுக்கும் அதிகமாக இருக்கும்.

ஒரு பாண்டா கரடியின் சராசரி உயரம், 15 மீட்டர்கள்.

பாண்டா கரடிகள் பிறந்த ஏழு மாதங்கள் முதல் நன்றாக மரம் ஏறத் தொடங்கிவிடும்.

ஒரு பாண்டா, ஒரு நாள் குறைந்தபட்சம் 14 மணி நேரம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்.

ஒரு நாளில், ஒரு பாண்டா 12 முதல் 38 கிலோ வரை மூங்கிலைச் சாப்பிடும்.

பாண்டா கரடியின் அறிவியல் பெயர்: Ailuropoda Melanoleuca.

பாண்டா கரடிகள் அழிவின் விளிம்பில் உள்ளன. இப்போது உலகம் முழுவதிலும் மொத்தமே 1000 பாண்டா கரடிகள் மட்டுமே உயிருடன் இருக்கின்றன.

பாண்டா கரடிகளின் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள்.

பெண் பாண்டா கரடிகளால், ஒரு ஆண்டில் மூன்று நாட்கள் மட்டுமே கருத்தரிக்க முடியும்!

பாண்டா கரடிகள் தங்கள் வாழ்நாளில் 55%க்கும் அதிகமாக மூங்கில்கள் சேகரிப்பதிலும் சாப்பிடுவதிலுமே கழிக்கின்றன.

- ஆஸிஃபா

 

https://minnambalam.com/k/2018/10/22/17

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு நூடுல்ஸ் பிடிக்குமா? அது குறித்த சுவையான 10 விஷயங்கள் இதோ...

நூடுல்ஸ்Getty Images நூடுல்ஸ்

நூடுல்ஸ் - இதை பிடிக்காதவர்கள் மிகவும் குறைவு. வேக வைத்து, அல்லது சூப்பில் கலந்து அல்லது பொறித்து, என எப்படி வேண்டுமானாலும் இதனை சாப்பிடலாம். 

ஒன்று மட்டும் நிச்சயம்: நூடுஸ்சை எப்படி சமைத்தாலும் சாப்பிடுவோம். உலகில் பரவலாக விரும்பி உண்ணக்கூடிய உணவு இது என்பதை நம்மால் மறுக்க முடியாது. 

நூடுல்ஸ் குறித்த 10 சுவையான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்...

1. 4000 ஆண்டுகள் பழமையானது

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்Getty Images

4000 ஆண்டு பழமையானதாக கருதப்படும் நூடுல்ஸ் நிறைந்த கிண்ணம் ஒன்று சீனாவில் சிங்ஹாய் மாகாணத்தில் 2002ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. லஜியாவில் உள்ள தொல்பொருள் தளத்தில் அங்கிருந்த படிவங்களுக்கு மூன்று மீட்டருக்கு அடியில் மண் பாண்டத்தில் அது புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லஜியா, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்ட இடமாகும். 

இதற்கு முன்னதாக, கிபி 25 மற்றும் 220க்குள் சீன கிழக்கு ஹன் வம்சாவளியினர் வாழ்ந்தபோது எழுதப்பட்ட புத்தகத்தில் நூடுல்ஸ் பற்றிய குறிப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. 

2. உலகப்பசியை போக்க இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்Getty Images இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்

தோல்வியை சந்தித்த தாய்வான்-ஜப்பானிய தொழிலதிபர் மொமொஃபுக்கு அண்டோ, ஜப்பானில் போருக்கு பின் மக்கள் பசியுடன் இருந்ததை பார்த்து அவர்களுக்கு உணவளிக்க ஒரு வழியை கண்டுபிடிக்க முனைந்தார். போதுமான அளவு உணவு இருந்தால்தான், உண்மையான அமைதி பிறக்கும் என்று அவர் நம்பினார். 

எனவே இதற்காக ஒசாகாவில் உள்ள தனது குடிசையின் பின்புறத்தில் ஒரு வருடம் ஓயாமல் உழைத்தார் அண்டோ. அப்போது அவர் கண்டுபிடித்ததுதான், உலகில் தற்போது பிரபலமாக உள்ள உணவான சிக்கன் ரேமன் இன்ஸ்டன்ட் நூடுல்ஸாக உருவாகியுள்ளது. 

1958ஆம் ஆண்டு முதன்முதலில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் விற்பனைக்கு வந்தது. அப்போதில் இருந்து சிறு சிறு மாற்றங்களையும் இந்த உணவு சந்தித்துள்ளது. 

3. தினமும் கோடிக்கணக்கான மக்களால் உண்ணப்படுகிறது

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்Getty Images

உலக இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அமைப்பின் கூற்றுப்படி, உலகெங்கிலும் நாள் ஒன்றுக்கு சுமார் 270 மில்லியன் மக்களால் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உண்ணப்படுகிறது. 

கடந்த ஆண்டு மட்டும் உலகில் நாம் 100 பில்லியன் கிண்ணம் நூடுஸ்ஸ் உட்கொண்டுள்ளோம். இதில் 38 பில்லியன் கிண்ணங்கலை சீனப் பெருநிலப் பரப்பில் இருந்து வாங்கி உண்டுள்ளனர். சீனப் பெருநிலப்பரப்பு நூடுல்சுக்கான உலகின் முதல் பெரிய சந்தையாகும். 

4. ஜப்பானில் 3 பிரத்யேக நூடுல்ஸ் அருங்காட்சியங்கள்

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்Getty Images

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்தான், இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த கண்டுபிடிப்பு என ஜப்பானியர்கள் நம்புகின்றனர். 

ஆம். நீங்கள் படித்தது சரிதான். அதிவேக ரயில்கள், மடிக்கணிணிகள் இதெயெல்லாம் தாண்டி இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்தான் சிறந்த கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. 

3 பிரத்யேக இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அருங்காட்சியங்கள் ஜப்பானில் உள்ளன. இங்கு விதவிதமான நூடுல்ஸ் உண்ணக் கிடைக்கும். அத்தோடு, ரேமன் நூடுல்ஸின் வரலாறு மற்றும் வகைகள் போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். 

5. ஜப்பானில் நூடுல்ஸை சத்தமாக சாப்பிடலாம்

நூடுல்ஸ் ருசியாக இருக்கிறது என்று அதனை சமைத்தவர்களுக்கு கூறுங்கள்Getty Images நூடுல்ஸ் ருசியாக இருக்கிறது என்று அதனை சமைத்தவர்களுக்கு கூறுங்கள்

பொதுவாக சத்தமாக சாப்பிட்டால் பல இடங்களில் தவறாகப் பார்ப்பார்கள். ஆனால், நீங்கள் ஜப்பானில் அமர்ந்து சாப்ஸ்டிக்ஸ் மூலம் நூடுல்ஸ் சாப்பிடுகிறீர்கள் என்றால், நன்கு சத்தம் வரலாம். 

நூடுல்ஸ் ருசியாக இருக்கிறது என்று அதனை சமைத்தவர்களுக்கு கூறுகிறீர்கள் என்பது இதன் அர்த்தம்.

6. அமெரிக்க சிறைகளில் நூடுல்ஸ் வர்த்தகம்

நூடுல்ஸ் அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகிறதுGetty Images

அமெரிக்க சிறைகளில் சிகரெட்டுகளை விட, நூடுல்ஸ் அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. 

சிறைகளின் செலவுத் திட்டம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான கைதிகளுக்கு சட்டப்படி தேவையான குறைந்தபட்ச கலோரி உணவுகளே வழங்கப்படுகின்றன. 

ஆகவே, விலை குறைவான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்களே சிறை ஆணையர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன. 

7. சீனாவில் நூடுல்ஸ் என்பது நீண்ட ஆயுட்காலத்தை குறிக்கிறது

பெரும்பாலும் சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது "மிக நீளமான நூடுல்ஸ்" கிடைக்கும்Getty Images பெரும்பாலும் சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது "மிக நீளமான நூடுல்ஸ்" கிடைக்கும்

சீனாவில் நூடுல்ஸ் என்பது நீண்ட ஆயுட்காலத்தை குறிக்கிறது. நீளமான நூடுல்ஸ் இருந்தால், சீன பாரம்பரியப்படி நீண்ட ஆயுள் இருக்கிறது என்று அர்த்தம். 

"மிக நீளமான நூடுல்ஸ்" - அதாவது சாதாரணமாக உள்ள நூடுல்ஸைவிட சற்று நீளமாக இருக்கும் நூடுல்ஸ் வறுக்கப்பட்டோ அல்லது சாறில் வேகவைக்கப்பட்டோ பெரும்பாலும் சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கிடைக்கும். 

நீண்ட நூடுல்ஸை வெட்டுவது, துரதிஷ்டவசமாக கருதப்படும். 

8. கொரியர்களுக்கு விருப்பமான நூடுல்ஸ் எது?

கொரியர்களுக்கு விருப்பமான நூடுல்ஸ் எது?Getty Images

ஓக் மரக் (Oak tree) கொட்டையில் இருந்து செய்யப்படும் நூடுல்ஸ் வகை ஒன்று கொரியாவில் பிரபலாமானது. 

இந்த ஓக் கொட்டையில் இருந்து செய்யப்படும் மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து நூடுல்ஸ் தயாரிக்கப்படும். 

சிவப்பு மற்றும் வெள்ளை ஓக் மரக் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் மாவுக்கு தனித் தனி சுவை. 

9. மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்ட நூடுல்ஸ்

மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்ட நூடுல்ஸ் சீனாவில் தயாரிக்கப்பட்டதுGetty Images மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்ட நூடுல்ஸ் சீனாவில் தயாரிக்கப்பட்டது

உலகின் நீளமான நூடுல்ஸ் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது, சீன உணவு நிறுவனம் ஒன்று. அது தயாரித்த ஒரே ஒரு நூடுலின் நீளம் 3,084 மீட்டர்கள் ஆகும். 

சிங்க்னைன் உணவு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர், 17 மணி நேரம் செலவிட்டு அந்த நூடுலை பாரம்பரிய ரேமன் செய்முறைபடி தயாரித்தார். 

அதற்கு பயன்படுத்தப்பட்டவை: 40 கிலோ ரொட்டி மாவு, 26.8 லிட்டர் தண்ணீர், 600 கிராம் உப்பு. அது ஒரேயொரு நூடுல் மட்டும்தானா என்பதை கண்காணித்த ஒருவர், அதில் பல நூடுல்கள் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளதா என்று சோதனையிட்டார். இதற்கு அவருக்கு 3 மணி நேரங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது. 

10. "நூடுல்" என்பது ஜெர்மன் வார்த்தை

"நூடுல்"Getty Images

செவயன், மக்கரோ, ஒன்யே ஒன்யோகொன்யோ, எரிஸ்டே, மி, வெர்மிசிலி, ஃபிடு, சொபா, ஸ்பெகெட்டி, டம்பி, உடொன், நுவொல், மியன் டியோ… இதெல்லாம் பல்வேறு மொழிகளில் உள்ள 'பாஸ்தா'வுக்கான பெயர்கள். 

ஆனால், நூடுல் என்ற ஒற்றை வார்த்தை அனைத்து மொழிகளிலும் நன்கு அறியப்பட்டிருக்கிறது. 

உண்மையிலேயே "நூடுல்" என்ற வார்த்தை ஜெர்மன் மொழியை சேர்ந்தது. 

'நூடுஸ்'(nodus) என்ற லத்தீன் மொழி சொல்லின் பொருள் 'முடிச்சு'. 

 

 

https://www.bbc.com/tamil/global-45942364

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்டைத் தூய்மையாக்கும் பறவை!

17.jpg

தினப் பெட்டகம் – 10 (27.10.2018)

கழுகுகள் (Vulture) பற்றிய சில தகவல்கள்:

1. காடுகளில் இறந்து போகும் மிருகங்களைக் கழுகுகளே சாப்பிடுகின்றன. கழுகுகள் இல்லையென்றால், காடுகள் முழுவதும் துர்நாற்றமாகவே இருக்கும்.

2. கழுகுகளின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் எவ்விதமான இடைஞ்சல்களும் இருக்காது. அவை இறைச்சியைச் சாப்பிடும்போது மேலே ஓட்டிக்கொள்ளாமல் இருக்க, இப்படியாக அவற்றின் உடல்கள் அமைந்துள்ளன.

3. அழுகிய இறைச்சியைச் சாப்பிட்டாலும் கழுகுகளுக்கு எப்பிரச்சனையும் வராது. கழுகுகளுக்கு எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகம்.

4. கழுகுகளுக்கு அகலமான இறக்கைகள். நீண்ட நேரம் காற்றில் மிதந்துகொண்டே அவற்றால் இரையைத் தேட முடியும்.

5. ஆஸ்திரேலியா, அண்டார்ட்டிக்கா தவிர உலகின் அனைத்து பாகங்களிலும் கழுகுகள் வாழ்கின்றன.

6. உலகில் 23 கழுகு இனங்கள் வாழ்கின்றன.

7. தென்னமெரிக்காவில் வாழும், Andean Condor என்ற கழுகுதான் உலகத்தில் மிகப் பெரிய கழுகு. அதன் இறக்கைகளை விரித்தால், 10-11 அடி வரை இருக்கும்!

8. Hooded Vulture எனப்படும் கழுகுதான் உலகில் மிகவும் சிறியது. அவற்றின் இறக்கைகளின் அளவு 5 அடிக்கும் குறைவு.

9. கழுகுகளின் வயிற்றில் மிகவும் வலுவான இரசாயனங்கள் இருக்கும். அவை சாப்பிடும் இறைச்சியை செரிமானம் செய்வதற்காகவும், எலும்புகள் எதையேனும் உட்கொண்டால், அவற்றை உடைப்பதற்காகவும் பயன்படுகின்றன.

10. கழுகுகள் இறந்துபோன மிருகங்களை மட்டுமல்லாது, இறந்துகொண்டிருக்கும், அல்லது உடல்நிலை சரியில்லாத மிருகங்களையும் உட்கொள்கின்றன.

-ஆஸிஃபா

 

https://minnambalam.com/k/2018/10/27/17

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருந்தே வடிவாய் ஒரு பழம்!

11.jpg

தினப் பெட்டகம் – 10 (28.10.2018)

சீத்தாப்பழம் (Custard Apple) -ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது-    பற்றி:

1. சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகம். மேலும், பொட்டாசியம், மக்னிசியம், வைட்டமின் ஏ, கால்சியம், நார்ச்சத்து மற்றும் பாஸ்பரஸ் சத்துகளும் உள்ளன.

2. சீத்தாப்பழம் இதயம், சருமம், எலும்புகள் மற்றும் ரத்த அழுத்தத்தைச் சீர்செய்ய நல்லது; சீத்தாப்பழ மரத்தின் இலை புற்றுநோய்க்கு நல்லது; அம்மரத்தின் கிளை பற்களுக்கு வலிமை சேர்க்கும்.

3. சீத்தாப்பழங்கள் பழுப்பதற்கு முன்பே பறிக்கப்படுகின்றன.

4. சீத்தாப்பழம் முதன்முதலில் அமெரிக்காவின் நடுப்பகுதியில் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5. சீத்தாப்பழ மரத்தின் உயரம் 10 அடிகள் முதல் 20 அடிகள் வரை இருக்கும்.

6. சீத்தாப்பழ மரத்தின் அறிவியல் பெயர் Annona Squamosa.

7. சீத்தாப்பழங்கள் வட்டமாக இதயவடிவத்தில் இருக்கும்; அவற்றின் விட்டம் 5 முதல் 15 செ.மீ வரை இருக்கலாம்.

8. சீத்தாப்பழம் 100 கிராம் முதல் 3 கிலோ வரை எடையுடையதாக இருக்கும்.

9. ஒரு சீத்தாப்பழத்தில் 20 முதல் 40 விதைகள் வரை இருக்கும்.

10. சீத்தாப்பழத்தின் காயைப் பொடியாக்கி, தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தேய்த்து குளித்தால், பேன் பிரச்சனை தீருமாம்!

- ஆஸிஃபா

 

 

https://minnambalam.com/k/2018/10/28/11

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரபணு என்னும் மாபெரும் கிடங்கு!

24.jpg

தினப் பெட்டகம் – 10 (31.10.2018)

மரபணுக்கள் (DNA) பற்றிய முக்கியத் தகவல்கள்:

1. ஓர் உயிரினத்தை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் மரபணுக்களில் (DNA) உள்ளன.

2. DNA என்பது நான்கு blockகளால் மட்டுமே அமைந்துள்ளது - சைடோஸின் (cytosine - C), தைமின் (thymine - T), குவானின் (guanine - G) மற்றும் அடெனின் (adenine - A).

3. மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் எட்டு வைரஸ்கள் பழைமையான காலத்தில் இருந்தன. இப்போது, மனிதனின் மரபணுக்கள் இந்த எட்டு வைரஸ்களால் ஆனவை!

4. மனிதனின் மரபணுக்கள் சிம்பன்ஸியின் DNAவுடன் 95% ஒத்துப்போகின்றன.

5. ஒரு கிராம் மரபணுவில் 700 டெராபைட்ஸ் தகவல்களைச் சேமிக்க முடியுமாம்.

6. மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் மரபணு இருக்கிறது.

7. ஒரு DNAவின் நீளம் 1.8 மீ. ஆனால் அது, வெறும் 0.09 மைக்ரோ மீட்டர் அளவில் சுருங்கிக் கிடக்கிறது.

8. உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் 99.9% மரபணுக்கள் ஒத்துப்போகும். மீதமுள்ள 0.1%தான் நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளுக்குக் காரணம்.

9. பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையில் 99.5% DNA ஒத்துப்போகும்.

10. DNA முதன்முதலில், 1869ஆம் ஆண்டு ஃப்ரெட்ரிக் மெய்ஷர் (Friedrich Miescher) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

- ஆஸிஃபா

 

https://minnambalam.com/k/2018/10/31/24

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று முத்து, இன்று எரிபொருள்!

12.jpg

தினப் பெட்டகம் – 10 (03.11.2018)

கத்தார் நாட்டைப் பற்றி:

1. திரவ இயற்கை வாயு முன்னணியில் இருக்கும் பத்து தயாரிப்பாளர்களில், கத்தார் நாடும் ஒன்று.

2. ஹமத் சர்வதேச விமான நிலையம் 2014ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 50 மில்லியன் மக்கள் அதைப் பயன்படுத்துகின்றனர்.

3. உலகில் ஒன்பதாவது பெரிய விமான நிலையம், ஹமத் சர்வதேச விமான நிலையம்.

4. 2022ஆம் ஆண்டு நடக்கவுள்ள FIFA உலகக் கோப்பை போட்டியை கத்தார்தான் வழங்கவுள்ளது.

5. கத்தாரில் 180க்கும் அதிகமான நாட்டைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள்.

6. இப்போது வரை, முத்தெடுக்க கடலுக்குச் செல்கின்றனர் சில கத்தார் நாட்டு மக்கள். ஒரு காலத்தில், ஏறத்தாழ அனைத்து மக்களின் வாழ்வாதாரமுமே முத்தெடுப்பதிலிருந்துதான் கிடைத்திருக்கிறது.

7. கத்தார் நாட்டின் உணவில் இந்தியா மற்றும் இரான் நாட்டின் தாக்கம் இருக்கிறது. கத்தாரின் பிரபலமான உணவுகளாக, Ghuzi, Motabel, Hummus ஆகியவற்றைச் சொல்லலாம்.

8. Machbous எனும் உணவு, கத்தாரின் மிக முக்கியமான பாரம்பரிய உணவு. இறைச்சி அல்லது மீன், அரிசி ஆகியவற்றைக் கலந்து செய்யப்பட்ட உணவு.

9. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு மூலம் ஈட்டப்படும் வருமானம் காரணமாக, கத்தார் மக்கள்தான் உலகிலேயே இரண்டாவது அதிகம் பணம் சம்பாதிக்கும் மக்களாக இருக்கின்றனர்.

10. கத்தார் மக்கள் சாப்பிடுவதற்கு கரண்டிகளை, ஸ்பூன்களைப் பயன்படுத்துவது கிடையாது. ஒரு பெரிய பாத்திரத்தில் கொடுக்கப்படும் உணவை, அனைவரும் அவர்களின் ரொட்டிகளை வைத்து எடுத்துச் சாப்பிடுவார்கள்.

-ஆஸிஃபா

https://minnambalam.com/k/2018/11/03/12

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை சொல்லும் நாட்டியம்!

5.jpg

தினப் பெட்டகம் – 10 (04.11.2018)

கதக் (Kathak) நாட்டியம் குறித்த சில தகவல்கள்:

1. கதக் நாட்டியம் முதலில் கோயில்களில் மட்டும் ஆடப்படும் நடனமாக இருந்தது. அதன் பிறகு, முகலாய, பெர்சிய அரசுகளின் தாக்கத்தால் அரசவைக்கு வந்தது.

2. ‘கதக்’ எனும் சொல் “கதா” எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து தோன்றியிருக்கிறது.

3. இந்த நாட்டியத்தின் நோக்கம் கதை சொல்லல் ஆகும்.

4. 15ஆம் நூற்றாண்டில், முகலாய நடனம் மற்றும் இசை, கதக் நாட்டியத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

5. கதக் நடனமும் இந்துஸ்தானி இசையும் பிரிக்க முடியாதவை.

6. பரதம் போன்ற நாட்டியங்களில், கையில் காட்டும் முத்திரைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். கதக்கில் காலின் அசைவுகளுக்கே முக்கியத்துவம் அதிகம்.

7. கதக் மூன்றாவது அல்லது நான்காவது நூற்றாண்டில் தோன்றியிருக்க வேண்டும் என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

8. இந்தியாவிலுள்ள எட்டு செவ்வியல் நடன வகைகளுள் ஒன்று கதக்.

9. முகலாயர் காலகட்டத்தில்தான் கதக் அரசவைகளுக்குள் நுழைந்தது; அப்போதுதான் பிற நடன வடிவங்களிலிருந்து சில பகுதிகளை கதக் எடுத்துக்கொண்டது. கால்களை நேராக வைத்து ஆடுவதும், வேகமாகச் சுழன்று ஆடுவதும் பெர்சிய நடனங்களால் ஏற்பட்ட தாக்கம்.

10. கதக்கிற்கும் ஸ்பெயின் நாட்டின் நடனமான Flamencoவுக்கும் ஒற்றுமை இருப்பதாகக் கூறப்படுகிறது.

- ஆஸிஃபா

 

https://minnambalam.com/k/2018/11/04/5

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென் நதி குறித்த சில ஆச்சரியமான தகவல்கள்!

aaaaaaaaaaaaaaaaaaaaaaaa-720x450.jpg

சென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.

777 கிலோமீட்டர்கள் நீளம் கொண்ட சென் நதியில் இரண்டு தீவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டுமே பரிசுக்குள் தான் உள்ளன.

ஒன்று செயற்கையாக அமைக்கப்பட்ட, Ile de la Cité. இரண்டாவது Ile Saint-Louis தீவு. இது பரிஸ் நான்காம் வட்டாரத்தில் உள்ளது. மொத்தம் நான்கு பாலங்கள் இந்த தீவை கரையோடு இணைக்கின்றன.

கிழக்கு பரிசில் இருந்து மேற்கு பரிஸ் நோக்கி சென் நதி பாய்கிறது. பாரிசுக்குள் மொத்தம் 13 கிலோமீட்டர்கள் பயணிக்கின்றது.

பரிசுக்குள், கடல் மட்டத்தில் இருந்து 27 மீட்டர்கள் உயரத்தில் பாய்கிறது சென் நதி. பரிசுக்குள் சென் நதி அதிக பட்ச ஆழமாக 31 அடி உள்ளது. (9.5 மீட்டர்கள்)

பரிசுக்குள் பாயும் சென் நதியின் மேல் ஊடறுக்கு மேம்பாலங்களின் மொத்த எண்ணிக்கை 37.

அதேபோன்று, பரிசுக்குள் சென் நதியை ஒட்டி இருக்கும் மிக பழமையான கட்டிடம் Pont Neuf. 1578 இல் இருந்து 1607 வரையான காலப்பகுதிக்குள் கட்டப்பட்டது.

 

http://athavannews.com/சென்-நதி-குறித்த-சில-ஆச்ச/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை??

சிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை??

சிலந்திகள் எப்பொழுதும் தன் பின்னிய வலையில் மாட்டிக்கொள்ளாது இதற்கு பின்னணியில் உள்ள ரகசியம் பற்றி தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்…

ஒவ்வொரு சிலந்தியும் தனக்கே உரிதான பாணியில் பிரத்யேகமாக வலையைப் பின்னும். இது மற்ற பூச்சிகளை தனக்கு இரையாக்க வலை பின்னும்.

சிலந்தி தன் வலையில் மற்ற பூச்சிகளை சிக்க வைக்க சில கண்ணிகளை வைக்கும். இவை வலைபின்னிய சிலந்திகளுக்கு மட்டுமே தெரியும். இதனால் இவைதான் பின்னிய வலையில் சிக்காது.

ஆனால், ஒரு சிலந்தி மற்ற சிலந்தி பின்னிய வலையில் சிக்கிக்கொள்ளக்கூடும்.

 

http://akkinikkunchu.com/?p=67901

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழிவின் விளிம்பிலுள்ள துருவக்கரடிகள் பற்றிய சுவாரசிய தகவல்!

gettyimages-97852899_0-720x450.jpg

தற்போது முன்னர் அறியப்பட்டிராத துருவக்கரடிகளின் (Ursus Maritimus) குடித்தொகையொன்று ஆர்ட்டிக்கின் சில பகுதிகளில் வாழ்ந்துவருகின்றமை உயிரியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அலஸ்கா மற்றும் ரஷ்யாவுக்கிடைப்பட்ட “Chukchi Sea” எனப்படும் பகுதியிலேயே இந்த துருவக்கரடிகள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்விலேயே இவை தொடர்பான விடயங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர் Eric Regehr கூறுகின்றார்.

இவற்றின் குடித்தொகை 25 ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்டதிலும், கடந்த 2008 – 2016 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் நல்ல ஆரோக்கிய நிலையில் காணப்பட்டிருந்ததாக ஆய்வாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

இந்த கரடிகள் கிட்டத்தட்ட ஒரு மாத காலப்குதியை கடல் பனி மீது கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த வாழிடம் வேட்டையாடுவதற்கும், இனம்பெருகுவதற்கும், இடம்பெயர்வதற்கும் துருவக்கரடிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.

மிக அண்மையாகப் பெறப்பட்டிருந்த தகவல்களின்படி கிட்டத்தட்ட 3,000 தனியன்கள் இந்த உப குடித்தொகையில் அறியப்பட்டிருக்கின்றன.

உலகளவில் மொத்தமாக 26,000 துருவக்கரடிகளும், 19 உப குடித்தொகைகளும் உள்ளன. இந்த துருவக்கரடிகள் IUCN செந்தரவுப் புத்தகத்தில் ஆபத்துக்குள்ளான விலங்குகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

http://athavannews.com/அழிவின்-விளிம்பிலுள்ள-து/

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கழுதையை இழிவுபடுத்தலாமா?

13.jpg

தினப் பெட்டகம் – 10 (2.12.2018)

‘கழுதை’ என்ற சொல் வசைச் சொல்லாகவே மாறிவிட்டது. சோம்பேறியாக இருப்பவரையோ, மெதுவாகச் சிந்தித்து செயல்படுபவர்களையோ கழுதை என்றே அழைக்கிறோம். கழுதைகள் அப்படித்தானா? பார்க்கலாம்!

1. மற்ற எந்த நாடுகளையும்விட சீனாவில் அதிகமான கழுதைகள் உள்ளனவாம்.

2. கழுதைகள் ஆப்பிரிக்க மற்றும் மத்தியக் கிழக்கு பகுதிகளில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களால் அடக்கப்பட்டுவிட்டன.

3. கழுதைகளின் கனைப்பு பல விநாடிகளுக்கு நீடிக்கும்!

4. ஒரு செயல் பாதுகாப்பற்றது என்று தெரிந்தால், கழுதை அதில் ஈடுபடாது.

5. 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்ற ஓர் இடத்தையோ, சந்தித்த பிற கழுதைகளையோ ஒரு கழுதை நினைவில் வைத்திருக்குமாம்.

6. முறையான பராமரிப்பில், ஒரு கழுதை 40 ஆண்டுகள் வரை வாழும்.

7. கழுதைகள் அடிப்படையில் பாலைவன மிருகங்கள். பாலைவனத்தில் 60 மைல்களுக்கு அப்பால் வரை ஒரு கழுதையின் குரலை இன்னொரு கழுதையால் கேட்க முடியுமாம். அவற்றின் பெரிய காதுகள் அதற்குத்தான் பயன்படுகின்றன.

8. குதிரைகளுடன் ஒப்பிடுகையில், கழுதைகளால் சுதந்திரமாகச் சிந்திக்கவும், தங்கள் பாதுகாப்பைக் கருதி செயல்படவும் முடியும்.

9. கழுதைகள் உண்ணும் உணவில் 95%-ஐ அவற்றின் உடல் எடுத்துக்கொள்ளுமாம். காரணம், பாலைவனங்களில் உணவோ, நீரோ குறைவாகவே கிடைப்பதால், அவற்றின் உடல் அதற்கேற்றாற்போல் தகவமைக்கப்பட்டுள்ளது.

10. தனியாக விடப்பட்டால், கழுதைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுமாம். அதனால்தான் அவை கூட்டமாக வாழ்கின்றன. பிற கழுதைகள் இல்லாதபட்சத்தில் ஆடுகளுடனோ, மனிதர்களுடனோ கழுதைகள் நட்பை உருவாக்கிக் கொள்கின்றன.

- ஆஸிஃபா

 

https://minnambalam.com/k/2018/12/02/13

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாகம் தீர்க்கும் மலைகள்!

47.jpg

தினப் பெட்டகம் – 10 (11.12.2018)

இன்று சர்வதேச மலைகள் தினம் (International Mountains Day). மலைகள் பற்றிய சில தகவல்கள்:

1. ஒரு குன்று எவ்வளவு உயரமாக இருந்தால் அது மலை என்று அழைக்கப்படுகிறது என்ற பொதுவான வரைமுறை எதுவுமே கிடையாது. சில இடங்களில் 1000 அடிகள் என்றும் சில இடங்களில் 2000 அடிகள் என்றும் சொல்வார்கள்.

2. ஹவாய் நாட்டிலுள்ள கியே மலைச் சிகரத்தை (Mount Kea) கடலின் அடியிலிருந்து அளந்து பார்த்தால், எவரெஸ்ட் சிகரத்தை விட 4000 அடி உயரமாக இருக்கும்.

3. டெக்டானிக் தட்டுகளின் இயக்கம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் எவெரெஸ்ட் சிகரம் ஏறத்தாழ 4 மி.மீ அளவிற்கு வளர்கிறது.

4. ஐ.நா. பொதுச் சபை 2003ஆம் ஆண்டில், டிசம்பர் 11ஆம் தேதியை சர்வதேச மலை தினமாக அறிவித்தது. மலைகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்கான வாய்ப்பை இந்நாள் அமைத்துத் தந்தது.

5. பூமியின் நிலப்பரப்பில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு மலைகள்தான்.

6. உலக மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கு மக்கள் மலைகளில் வாழ்கின்றனர்.

7. பூமிக்குக் கிடைக்கும் சுத்தமான தண்ணீரில் ஏறத்தாழ 80% மலைகளிலிருந்து கிடைக்கிறது. உலகின் மிகப் பெரிய முக்கியமான ஆறுகள் அனைத்துமே மலைகளில்தான் தோன்றுகின்றன.

8. நம் பிரபஞ்சத்திலேயே மிகப் பெரிய மலையானது செவ்வாய்க் கிரகத்தில் (Mars) உள்ள ஒலிம்பஸ் மோன்ஸ் (Olympus Mons) எனப்படும் பெரிய எரிமலையாகும்.

9. நம் உணவுப் பயிர்களில் மிக முக்கியமான 20 பயிர்களில் 6 பயிர்கள் மலைகளில் தோன்றின இப்போதும் தோன்றுகின்றன. அவை: உருளைக்கிழங்கு, சோளம், பார்லி, Sorghum, ஆப்பிள்கள், தக்காளி.

10. உலகச் சுற்றுலாவில் ஏறத்தாழ 15 முதல் 20 % வரை மலைகளே ஈர்க்கின்றன.

- ஆஸிஃபா

 

https://minnambalam.com/k/2018/12/11/47

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடலாக மாறிய ஏரி?

38.jpg

தினப் பெட்டகம் – 10 (19.12.2018)

பால்டிக் கடல் (Baltic Sea) பற்றி:

1. பால்டிக் கடல் வடக்கு ஐரோப்பில் அமைந்துள்ளது.

2. பால்டிக் கடல் உலகிலேயே உப்புத் தன்மை குறைவாக உள்ள மிகப் பெரிய கடல்.

3. பால்டிக் கடலின் அதிகபட்ச ஆழம், 459 மீட்டர்.

4. பால்டிக் கடல் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதி.

5. பால்டிக் கடலின் எல்லையில் இருக்கும் நாடுகள்: ஸ்வீடன், ஃபின்லாந்து, டென்மார்க், ரஷ்யா, எஸ்டோனியா, லத்வியா, லித்துவானியா, போலந்து, ஜெர்மனி.

6. ரோமானியர்கள் காலத்தில் பால்டிக் கடலின் பெயர் Mare Sarmaticum அல்லது Mare Suebicum.

7. பால்டிக் கடல் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

8. பால்டிக் கடலில் பல நன்னீர் மற்றும் கடல் நீர் உயிரினங்கள் வாழ்கின்றன.

9. பால்டிக் கடலின் வடிகால் மட்டத்தில் (drainage basin) ஏறத்தாழ 80 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

10. பால்டிக் கடல் தற்போது இருக்கும் இடத்தில் ஏறத்தாழ ஏழாயிரம் முதல் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏரி இருந்ததாம்!

- ஆஸிஃபா

 

https://minnambalam.com/k/2018/12/19/38

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணை மூடிக்கொண்டு பாயும் பறவை!

33.jpg

தினப் பெட்டகம் – 10 (23.12.2018)

மீன்கொத்திப் பறவையைப் பற்றிய சில தகவல்கள்:

1. ஏறத்தாழ 87 வகைகள் மீன்கொத்திகள் உள்ளன.

2. மீன்கொத்திகள் மூன்று கூட்டமாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன: ஆற்று மீன்கொத்திகள் (river kingfishers), மர மீன்கொத்திகள் (tree kingfishers), நீர் மீன்கொத்திகள் (water kingfishers).

3. மீன்கொத்திகள் சராசரியாக 6 முதல் 10 ஆண்டுகள் வாழக்கூடியவை.

4. மீன்கொத்திகள் 4-18 அங்குல நீளம் இருக்கும்.

5. உலகின் மிகப்பெரிய மீன்கொத்தி ஆஸ்திரேலியாவில் உள்ளது (Australia’s laughing kookaburra).

6. உலகின் மிகச் சிறிய மீன்கொத்தி ஆப்பிரிக்காவில் உள்ளது (African pygmy kingfisher)

7. மீன்கொத்திகளின் முக்கியமான உணவுகள் மீனாக இருந்தாலும், நீர்வாழ்ப் பூச்சிகள், தட்டான்பூச்சிகள் ஆகியவற்றையும் உண்ணும்.

8. பெண் மீன்கொத்திகள் 2 முதல் 10 முட்டைகள் வரை ஒரே நேரத்தில் இடும்.

9. மீன்கொத்திக் குஞ்சுகள் தாய்ப்பறவையுடன் 3-4 மாதங்கள் வரை வாழும்.

10. மீன்கொத்திகளின் பார்வைத்திறன் மிகவும் கூர்மையானது. அவை நீரில் பாயும்போது கண்ணை மூடிக்கொண்டுதான் பாயும், ஆனாலும் குறி தவறாது!

- ஆஸிஃபா

 

 

https://minnambalam.com/k/2018/12/23/33

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியூட்டும் பழம்!

14.jpg

தினப் பெட்டகம் – 10 (30.12.2018)

வாழை பற்றி:

1. வாழையின் அடர்த்தி குறைவு என்பதால் அவை தண்ணீரில் மிதக்கும்!

2. மனிதர்களின் மரபணுவும் வாழையின் மரபணுவும் 50% ஒத்துப்போகின்றன.

3. 1980களில் இருந்ததைவிட இன்று வாழைப்பழத்தின் விலை மிகவும் குறைவு.

4. ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்தில் 15% ஒரு வாழைப்பழத்தில் கிடைக்கிறது.

5. வாழைப்பழம் நம்முடைய மனநிலையைச் சந்தோஷமாக மாற்றக் கூடியது!

6. டெக்னிக்கலாகப் பார்த்தால், வாழைப் பழமல்ல; ஒரு பெர்ரி!

7. அது மட்டுமில்லை, வாழை மரமல்ல; மூலிகை (herb). மரக்கட்டையாக (wood) மாறக்கூடியவைதான் மரம், மற்றவை மூலிகை.

8. வாழைப்பழத்தில் 75% தண்ணீர்.

9. உலகிலேயே வாழை உற்பத்தியில் முதலில் நிற்கும் நாடு, இந்தியா; அடுத்து சீனாவும் பிலிப்பைன்ஸும்!

10. உலகிலேயே பிரபலமான பழங்களில் மூன்றாவது இடத்தில் வாழைப்பழம் இருக்கிறது. முதல் இரண்டு இடங்களை ஆப்பிள்கள் மற்றும் ஆரஞ்சுகள் பிடித்து விட்டன.

- ஆஸிஃபா

 

https://minnambalam.com/k/2018/12/30/14

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினத்துக்கு முன்னோட்டம்...

8.jpg

இன்று (பிப்ரவரி 10) கொண்டாடப்படும் Teddy Dayயின் முக்கியத்துவம் என்ன?

ஆஸிஃபா

பிப்ரவரி 10ஆம் தேதி ஆண்டுதோறும் டெடி தினமாகக் கொண்டாடப்படுகிறது. டெடி தினம் என்றால் என்ன?

வாலண்டைன்ஸ் வாரத்தின் நான்காவது நாளாகக் கொண்டாடப்படுகிறது, ‘டெடி டே’. எந்த ஒரு விழாவானாலும் டெடி பொம்மை கொடுப்பது மிகவும் வாடிக்கையானது. டெடி பொம்மை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது என்றுகூடச் சொல்லலாம்.

டெடி பொம்மைகள் காதல், அதீத அன்பு, மென்மையோடு தொடர்புப்படுத்தப்படுபவை. நம் குழந்தைப் பருவத்தின் ஏதோ ஒரு பகுதியை டெடி பொம்மைகள் ஆக்கிரமித்திருக்கின்றன. நமது குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்துகின்றன. அதற்காகவே இவை பரிசாகப் பரிமாறப்படுகின்றன என்றுகூடச் சொல்லலாம்!

டெடி தினத்தில் காதலர்கள் டெடி பொம்மைகளைப் பரிசளித்துக்கொள்வது வழக்கம்; ஒருவரை ஒருவர் நன்றாகவும் அன்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது இதன் நோக்கம்!

டெடி பொம்மையின் பெயர், முன்னாள் அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்டின் செல்லப் பெயரிலிருந்து வந்தது. மோரிஸ் மிச்டோம் என்பவரும் அவரது மனைவியும் இணைந்துதான் டெடி பொம்மையை முதன்முதலில் உருவாக்கினார்கள்.

டெடி பொம்மைகள் நம்மிடையே ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உள்ளன. டெடி பொம்மை முதன்முதலாக இலக்கியத்தில் தோன்றியது, Goldilocks and the Three bears என்ற கதை மூலமாகத்தான். ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில், teddy bear என்ற சொல் சேர்க்கப்பட்டது 1906ஆம் ஆண்டில்தான்.

டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது, 1912ஆம் ஆண்டில், ஸ்டெய்ஃப் நிறுவனம் கறுப்பு நிறத்திலான டெடி பொம்மைகளைச் செய்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்குப் பரிசளித்தது.

40% டெடி பொம்மைகள் பெரியவர்களாலேயே வாங்கப்படுகின்றன! டெடி பொம்மைகளை சேகரித்து (collector) வைப்பவரின் பெயர் arctophile.

டெடி பொம்மை அன்பு, காதல், வாழ்த்து மற்றும் அக்கறை ஆகியவற்றைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. வாலண்டைன்ஸ் நாள் அன்று கொடுக்கப்படும் பெரும்பான்மையான பரிசுகளில் டெடி பொம்மை இருக்கும்.

https://minnambalam.com/k/2019/02/10/8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.