Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுவா நல்லாட்சி? இதுக்காகவா நல்லாட்சி அரசை உருவாக்கினோம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுவா நல்லாட்சி? இதுக்காகவா நல்லாட்சி அரசை உருவாக்கினோம்?

October 17, 2018

1 Min Read

சொந்த நிலத்தில் வாழ வேண்டும் – குளோபல் தமிழ்ச் செய்தியாயளர்…

Kanchurammoddai2.jpg?resize=800%2C600

சொந்த நிலத்தில் நின்மதியாக வாழ வழியில்லாமல் இரவு நேரங்களில் பெண்கள் ஒன்றாகவும், ஆண்கள் ஒன்றாகவும் உறங்கி மழையிலும், வெயிலிலும் அவல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதுவா நல்லாட்சி? இதுக்காகவா நல்லாட்சி அரசை உருவாக்கினோம்? என காஞ்சிரமோட்டை மக்கள் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராம மக்கள் 28 வருடங்களின் பினன்ர் தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறிவரும் நிலையில் வனவள திணைக்களம் மீள்குடியேற்றத்தை தடுத்து வருகின்றது.

இந்நிலையில் மக்களுடைய நிலமைகளை நேரில் அவதானித்து அவற்றை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் 12 மாகாணசபை உறுப்பினர்கள் இன்று காஞ்சிரமோட்டை கிராமத்திற்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போதே மக்கள் மாகாணசபை உறுப்பினர்களிடம் கண்ணீர்மல்க மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில். 1983ம் ஆண்டு யுத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் காஞ்சிரமோட்டை கிராமத்தில் இருந்த 3 பேர் கடத்தி செல்லப்பட்டனர்.

Kanchurammoddai4.jpg?resize=800%2C600

அவர்களின் நிலை இன்றளவும் தெரியாது. இந்நிலையில் தொடர்ந்தும் கிராமத்தில் இருக்க இயலாமல் 1983ம் ஆண்டு தொ டக்கம் 1990ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாம் எமது கிராமத்தை விட்டு வெளியேறினோம். பின்னர் இந்தியாவிலும், வடமாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் எமது சொந்த நிலத்தில் நாங்கள் மீள்குடியேறிய நிலையில் வனவள திணைக்களம் எமது மீள்குடியேற்றத்திற்கு தொடர்ச்சியாக தடைகளை விதித்து வருகின்றது.

குறிப்பாக மீள்குடியேற்றத்திற்கு வந்திருக்கும் 38 குடும்பங்களுக்கும் அரை நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான நிதி கிடைத்துள்ளபோதும் வனவள திணைக்களம் அந்த நிதி எமக்கு கிடைக்காத வண்ணம் தடைகளை விதித்து வருகின்றது. இடப்பெயர்வுக்கு முன்னர் சுமார் 300 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கே வாழ்ந்து வந்தோம். பலர் இப்போதும் தங்கள் சொந்த நிலத்திற்கு வருவதற்கு ஆசையாக உள்ளார்கள்.

ஆனாலும் அச்சம் காரணமாக அவர்கள் வர தயங்குகிறார்கள். நாம் எமது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வீடுகளை கட்டி நின்மதியாக வாழவேண்டும். அதற்கு ஆவண செய்யவேண்டும். மீள்குடியேற்றத்திற்கு வந்து 4 மாதங்களாகும் நிலையில் வீதி சீரமைத்து தரப்படவில்லை. மின்சாரம் தரப்படவில்லை. கிணறு அமைக்க அனுமதி தரப்படவில்லை. இவ்வாறான நிலையில் எங்களுடைய பிள்ளைகள் சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் நடந்து பாடசாலைகளுக்கு சென்று வருகின்றார்கள். 3 கிலோ மீற்றர் தூரம் நடந்து வைத்தியசாலைக்கு சென்று வருகின்றோம்.

நாம் எங்களுடைய சொந்த நிலத்தில் வாழவேண்டும். அதற்கு ஆவண செய்யுங்கள் என மக்கள் கண்ணீர்மல்க மேலும் கேட்டுள்ளனர்.

 

http://globaltamilnews.net/2018/99687/

  • கருத்துக்கள உறவுகள்

”இலங்கையில் வாழும் இந்திய மரபினர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்”

 

”இலங்கையில் வாழும் இந்திய மரபினர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்”

இலங்கையின் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராமத்துக்கு வடக்கு மாகாணசபை அவைத்ததலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையிலான மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்துள்ளனர்.

வவுனியா வடக்கில் மிக பழைய கிராமமான காஞ்சிரமாட்டை கிராமத்தில் வாழ்ந்த சுமார் 300 குடும்பத்தினர் நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவிற்கும் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெயர்ந்திருந்தனர்.

இந் நிலையில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இக் கிராம மக்களுடன் உள் நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.

எனினும் அவர்கள் அங்கு வாழ்வதற்கு இலங்கையின் வன இலாகாவினர் அனுமதி மறுத்து வந்திருந்ததுடன் குறித்த பகுதி வன வளத்திணைக்களத்திற்குரிய பகுதி என தெரிவித்து குடியேறிய மக்களுக்கு தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்தி வந்திருந்தனர்.

இதன் காரணமாக அம் மக்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களும் இடைநடுவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

"இலங்கையில் வாழும் இந்திய மரபினர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்"

குறித்த விடயம் தொடர்பாகவும் வவுனியாவில் வனவளதிணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக நேரில் வந்து ஆராயவேண்டும் என மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கடந்த 133 வது வடக்கு மாகாண சபை அமர்வில் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தார்.

அதற்கமைவாகவே மாகாணசபை உறுப்பினர்கள் குழு இன்றையதினம் காஞ்சூரமோட்டைக்கு விஜயம்செய்ததுடன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் கேட்டு அறிந்ததுடன் அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வட மாகாணசபையின் அவைத்தலைவர் சி. வி. கே. சிவஞானம் தலைமையில் வடக்கு விவசாய அமைச்சர் க. சிவநேசன், உறுப்பினர்களான சபா. குகதாஸ், எம். கே. சிவாஜிலிங்கம், இ. ஜெயசேகரன், அ. பரஞ்சோதி, ப. அரியரட்ணம், கே. தர்மலிங்கம், வ. கமலேஸ்வரன், ஆ. புவனேஸ்வரன், து. ரவிகரன், சு. பசுபதிப்பிள்ளை,ஜி.ரி.லிங்கநாதன் ஆகிய உறுப்பினர்கள் அடங்கிய குழு குறித்த பகுதிக்கு வருகைதந்து நிலைமைகளை பார்வையிட்டிருந்தனர்.

இதன்போது அப்பகுதியில் இடிந்து போயுள்ள நாவலர் பண்ணை அரசினர் கலவன் பாடசாலையினையும் பார்வையிட்டிருந்ததுடன் அதனை மீள் இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பது தொடர்பாகவும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துரையாடினர்.

இதன்போது கருத்து தெரிவித்திருந்த வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் குறித்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பல அடையாளங்கள் உள்ளது. எனினும் வன வளத்திணைக்களம் மக்களை இங்கு குடியேற தடை விதித்து வருகின்றனர். இது தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்தி இந்தியாவில் இருந்து வந்த மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக இந்தியாவின் கவனத்திற்கும் கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-45896196

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.