Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வருக்கு மனசாட்சி இல்லை – அவைத்தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதல்வருக்கு மனசாட்சி இல்லை – அவைத்தலைவர்

October 23, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

cvk-sivaganam.jpg?resize=576%2C432

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இருக்கும். என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவருக்கு மனச்சாட்சி என்பதே இல்லை. என்பதை அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் ஊடாக அவர் வெளிப்படுத்திவிட்டார் என அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

வடமாகாணசபையின் இறுதி அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தனது நிறைவுரையை ஆற்றும்போதே அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியில் நான் பல விடயங்களுக்குத் தடையாக இருக்கிறேன். என முதலமைச்சர் கூறியுள்ளார். அதற்கு சில தினங்களுக்கு முன்னர் நான் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் முதலமைச்சர் என்னை தவறாக விமர்சிக்க மாட்டார். அவருக்கு மனச்சாட்சி இருக்கிறது. அதனை நான் நம்புகிறேன். என கூறியிருக்கின்றேன்.

ஆனால் முதலமைச்சர் தனக்கு மனச்சாட்சியே இல்லை. என்பதை தனது பிரத்தியே செவ்வி ஊடாக வெளிப்படுத்திவிட்டார். வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட சகல நியதிச்சட்டங்களும் பாரிய பிழைகளுடன் வந்தன.  அத்தனை நியதிச்சட்டங்களையும் இரவு, பகலாக பல்வேறு நெருக்கடிகள், துன்பங்களுக்கு மத்தியில் படித்து திருத்தியமைத்தவன் நான்.  2013ம் ஆண்டு வடமாகாணசபை பொறுப்பேற்று கொஞ்ச நாட்களில் 2014ம் ஆண்டுக்கான பாதீடு ஆளுநரின் அங்கீகாரத்துடன் வந்தது.

மோசமான பிழைகளுடன் அந்த பாதீடு தயாரிக்கப்பட்டிருந்தது. அப்போது இந்த சபையை குழப்ப ஒரு குழு இயங்கிக் கொண்டிருந்தது. அதனை அறிந்து நான் பிரதம கணக்காளர் பத்தமநாதனை அழைத்து அந்த பாதீட்டில் இருந்த பாரியமோசமான பிழைகளை திருத்தியமைத்தேன். பாதீடு சபையில் அங்கீகரிக்கப்பட்டது.  அதற்குப் பின்னர் நவம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் முதலமைச்சர் பாதீட்டில் வோறன்ட் கையொப்பம் இடவேண்டும். ஆனால் முதலமைச்சர் கொழும்பு சென்றுவிட்டார்.

உடனடியாகவே நான் எனது சொந்த வாகனத்தில் கொழும்புக்கு சென்று அதில் கையொப்பம் பெற்றுக் கொண்டு வந்து சமர்பித்தேன். மோசமான விளைவுகளை அன்று நான் தடுத்தேன்.

இதற்காக எனக்கு முதலமைச்சர் கொடுத்த கௌரவமே  நான் பல விடயங்களுக்கு தடையாக இருந்தேன் என்ற கருத்து. நான் இந்த சபையில் அவை தலைவர் ஆசனத்தில் அமர்ந்தபோது எனக்கு கஸ்டமாக இருக்கவில்லை. காரணம் எனக்கு நடைமுறைகள், ஒழுங்குகள் அனைத்தும் தெரிந்திருந்தது.

ஒருகாலத்தில் முக்கியமான இயக்கம் ஒன்றின் தலைவரால் வடகிழக்கு இணைந்த சபைக்கு தலைவராக பிரேரிக்கப்பட்டவன் நான். மாகாணசபை முறமை எனக்கு புதியதல்ல என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வடக்கு முதல்வருக்கு மனசாட்சி இல்லை – அவைத்தலைவர்

ஒருகாலத்தில் முக்கியமான இயக்கம் ஒன்றின் தலைவரால் வடகிழக்கு இணைந்த சபைக்கு தலைவராக பிரேரிக்கப்பட்டவன் நான். மாகாணசபை முறமை எனக்கு புதியதல்ல என்றார்.
 

'வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க 

நன்றி பயவா வினை' - குறள்

 

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது, நன்மை தராத செயலைத் தான் விரும்புவதும் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.