Jump to content

ஜெசிந்தாக்கும் எனக்கும் டும் டும் டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜெசிந்தாக்கும் எனக்கும் டும் டும் டும்

கஜரதன்-நாகரத்தினம்

என்ர பக்கத்தில இருந்த பெடியன் ஓட பக்தி கதைகளில இருக்கிற ஆழமான சிந்தனைகள் பற்றி ஒரு கீதை ஒன்னு அவனுக்கு குடுத்திட்டு இருந்தன். அவனுக்கு புரியுதோ இல்லையோ அப்பியோடா உண்மையாவா என்டு ரியாக்சன் குடுத்துக்கொண்டு நின்டான். மத்த பெடியங்கள் பெட்டைகள் அவையவை அவையவைக்கு தெரிஞ்சத அலம்பிட்டு இருந்தாங்கள். அப்ப வகுப்பே எங்கட சாகவச்சேரி சந்தை போல அவளவு அமைதியா இருந்திச்சு (ஹீ ஹீ ). ஒருத்தன் சந்தோசமா இருந்திட கூடாதே அடுத்தவனுக்கு வயிறு எரிஞ்சுடுமே அப்பிடி பக்கதில கணித பாடம் எடுத்த சேர் ஒராலுக்கு எரிஞ்சுட்டு போல…. எங்கட வகுப்புக்கு வந்து உங்கட்வகுப்பு மிஸ் வராட்டி அவாண்ட பாட புத்தகத்தை எடுத்து எல்லாரும் படியுங்கோ என்டுட்டு அவர் பாட்டுக்கு கணக்கு பண்ண மீன் பாடமெடுக்க போயிட்டார் .

நாமளும் எவளவு நேரம் தான் படிக்கிற மாதிரியே நடிக்கிறது . அப்ப தான் ஒரு அழகான அறிவான பெரியன் எழும்பி … (எழும்பின பெடியன காணல என்டு தேடாதிங்க நான் எழும்பனாலும் ஒசரம் அவளவு தான் இருப்பன் ஹீ ஹீ ) நாங்க எல்லாம் ஒரு கேம் விளையாடுவம் என்டு சொன்னான் … சரி சத்தம் போடாம என்ன கேம் விளையாலாம் என்டு பெடியங்களும் பெட்டைகளும் புசு புசுனு கதைக்க வெளிக்கிட்டுதுகள்… அதுவே பெரிய சத்தமாய் போச்சு . அப்ப ஒரு பையன் அவன் ஒரு முற்போக்கு வாதி இப்ப பிரான்ஸ் ல இருக்கான் ராகுலன் என்டு அவன் கல்யாணம் பண்ணி விளையாலாம் என்டுட்டான் . எனக்கு உடம்பெல்லாம் வேத்து போச்சு அது எப்பிடி ஒரு பையனும் பையனும் கல்யாணம் பண்ற என்டு (இப்ப இதெல்லாம் நல்லா நடக்குது . நம்ம ஆபிசிலையும் இனம் மொழி கடந்து ஒரு காதல் கதை ஓடுது) பிறகு இல்லடா பொண்ணதான் என்ட உடன தான் எனக்கு நிம்மதியா போச்சு .

ஆனாலும் இதே போல நாலாம் ஆண்டு படிக்கிற அண்ணா மார் போன கிழமை விளையாடினவை என்டு ஸ்கூல் புல்லா கதைச்சவை அதுக்கப்புறம் அதிபர் ஆக்களை பிடிச்சு அடி பின்னிட்டார் . எனக்கு சின்ன பயம் வந்துட்டு அதிபர் கிட்ட மாட்டுறது இல்லை நாம இப்ப இரண்டாம் ஆண்டு தானே இது கல்யானம் பண்ற வயசா இல்ல இரண்டு வருசம் வெயிட் பண்ணனுமே என்டு சின்ன பயம் .

ஆனாலும் பறவால்ல நான் கல்யானத்துக்கு ரெடி பா பொண்ண கூப்பிடுங்க என்ற போல நான் நிக்க ஒரு குண்ட தூக்கி போட்டானுங்கள். பெயர் எழுதி குலுக்கி போடுவாங்களாம் அதில ஆற்ற பெயர் வருதோ அவைக்கு தானாம் கல்யாணம் மிச்ச எல்லாரும் சும்மா தான் நிக்கனுமாம் .. அட என்னடா கொடுமையா போச்சு என்டு சரி பெயரை எழுதி போட்டு தொலைங்கடா என்டு நா பாத்துட்டு நின்டன் .. ஆனா நம்ம பசங்க இருக்காங்களே கஜனை எழுத விடுவம் அவன் தான் வடிவா எழுதுவான் கள்ள வேலையும் பண்ண மாட்டான் என்டு பொறுப்பு என் பக்கம் வந்திச்சு …

 

இப்ப ஐஞ்சு பேரின்ட பெயரை எழுதனும் அத மேசையில போட்டு ஒரால எடுக்க விடுவாங்க பெயர் வாற ஆளுக்கு கலியாணம் இது தான் லூல்ஸ் அன்ட் றெகுலேசன் .
நான் எழுதிட்டு இருக்கேக்க என் பேரை இரண்டு பேப்பறில எழுதிட்டு சுத்தி வச்சுட்டன் . நம்ம பெயர் வாறதுக்கு சான்ஸ் அதிகம் இருக்கு இப்ப ….

சரி என்டு ஒரு பையனை கூப்பிட்டு எடுக்க வைச்சாச்சு அவன் பெயரை வாசிச்சான் … நான் இருக்கிற எல்லா தெய்வத்துட்டையும் என் பெயர் வந்தா எனக்கு பிறக்குற குழந்தைக்கு உன் கோயிலுக்கு வந்து மொட்டை போடுறன்டா சாமி என்று நேத்தி கூட வச்சுட்டன் … என்னோட முயற்சியும் கடவுளோட அனுகிரகத்தாலும் நான் போன ஜென்மத்தில செய்த புண்ணியத்தாலையும் கஜன் உன் பெயர் வந்திருக்குடா வாயில சிரிப்பும் வயித்தில நெருப்புமா ராகுலன் சொன்னான் … எனக்கு சரியான வெக்கமா போய்ட்டு நான் போய் மணமகன் இருக்கிற இடத்தில இருக்க அங்காலையும் பெட்டைகள் பக்கம் குலிக்கி போட்டு அலுங்காம குலுங்காம ஜெசிந்தா வை கூட்டுட்டு வருயினம் . நானும் மனசுக்க இவ எத்தின சீட்டில இவ பெயரை எழுதி இருப்பா என்டு யோசிச்சு கொண்டு இருந்தன் …

அப்ப இவங்கள் ஒரு பெட்டையின்ட தலையில இருந்த மஞ்சல் ரிபன கழட்டி அதில பேனை மூடியை கட்டி கச்சிதமா எனக்கி தாலிக்கொடியை செஞ்சுட்டு இருக்காங்க எனக்காக இப்பிடி பாடுபட்ட நண்பர்களை நினைக்கும் போது இப்பவும் கண்ணில ஜலம் நனைக்குது..

வகுப்பறையே வாழ்த்த எனக்கு சீரும் சிறப்புமாக கல்யானம் நடந்திச்சு ….

காலங்கள் உருண்டோடின … இடம்பெயர்ந்தோம் … ஓடினோம் .. தங்க வீடு இல்லாமல் ரோட்டில இருந்த போதும் அம்மா சாப்பாடு தீத்தும் போதும் பக்கத்தில செல் விழுந்து வீடுகளும் பாடசாலைகளும் கோவில்களும் உடைந்த போதும் எங்கட பெற்றோர் எங்களுக்கு புத்தகத்தை மட்டுமே கையில தந்திருந்தாங்க … படிச்சு கொண்டே இருந்தம் .. சண்டை இல்லாம இருந்த காலத்தில நல்ல பள்ளிக்கூடத்தில சேத்தாங்க படிச்சு முடிச்சு…. வெளிநாடு போய் அங்கையும் படிச்சுட்டுட்டு ஊருக்கு போய்….. நியமாவே கல்யாணம் பண்ணலாம் என்டு பாத்தா “இப்ப என்ன அவசரம் 30 வயசுக்கு பிறகு ஆறுதலா பண்ணிக்கலாம் என்டுறாங்க …. 

 

http://www.sirukathaigal.com/குடும்பம்/ஜெசிந்தாக்கும்-எனக்கும்/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தப் பெற்றோர் எப்பவுமே இப்படித்தான் எப்போதும் தங்களை பற்றியே யோசிப்பாங்கள், பொடியின்ர அந்தரம்,அவசரம் பற்றி கண்டுக்கவே மாட்டாங்கள், அதுசரி அந்த பேனாமூடி தாலி இப்பவும் உங்கள் பொக்கட்டில்தானே இருக்கு வாப்பா .....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பள்ளிக் கால  அனுபவங்களை அசைபோடுவதே ஒரு சுகம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெசிந்தாவுக்கும் அவருக்கும்தானே சீரும் சிறப்புமா கலியாணம் முடிஞ்சுதே? பிறகு எதுக்கு 30 வயதிலை இன்னுமொரு கலியாணம். பேசாமல் ஜெசிந்தா எங்கே இருக்கிறாள் என்று தேடச் சொல்லுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.