Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிபொறிமுறைக்கு அப்பால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு காரணிகள் இருந்தால் கூறுங்கள்: தலதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபொறிமுறைக்கு அப்பால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு காரணிகள் இருந்தால் கூறுங்கள்: தலதா

Thalatha-720x450.png

நீதிபொறிமுறைக்கு அப்பால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு காரணிகள் இருந்தால் தமிழ் அரசியல்வாதிகள் எமக்கு கூறலாம். அது சாத்தியமென்றால் கைதிகளை விடுதலை செய்ய முழுமையான ஆதரவை வழங்குகின்றோமென நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“பாரதூரமான மனித படுகொலைகள் செய்தவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை கொலை செய்தவர்கள் எவ்வாறு அரசியல் கைதிகளென கூறுகின்றீர்கள். எம்மைப்பொறுத்தவரை நாட்டில் அரசியல் கைதிகளென எவரும் சிறையில் இல்லை.

பெரும்பாலும் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களே அதிகமானவர்கள் உள்ளனர். அதிலும் ஒருவர் மீது பல வழக்குகள் காணப்படுகின்றது. இந்நிலையில் அவ்வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு அதற்கு ஏற்றவாறு தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற நிலைமை காணப்படுகின்றது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளது. அவற்றுக்கு ஏற்றவாறே நாம் செயற்பட்டு வருகின்றோம்.

அந்தவகையில் சிறையிலுள்ள கைதிகளில் சரியான சாட்சியங்களின் அடிப்படையில் தண்டைனை வழங்கப்பட்டவர்கள் மற்றும் மரண தண்டனை கைதிகளும் உள்ளனர்.  இவர்களை விடுதலை செய்வதற்கு எமக்கு எந்ததொரு அதிகாரமும் இல்லை.

ஆகையால் இவ்விடயத்தில் நீதிமன்ற தீர்ப்பை மீறி எம்மால் எந்ததொரு செயற்பாட்டையும் மேற்கொள்ள முடியாது” என தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/நீதிபொறிமுறைக்கு-அப்பால/

 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளது. அவற்றுக்கு ஏற்றவாறே நாம் செயற்பட்டு வருகின்றோம்

.

பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக வரவுள்ள சட்ட மூலம் ஆபத்தானது- JVP

 

jvp..

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் போர்வையில் அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய சட்ட மூலம் அதனை விடவும் ஆபத்தானது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட மூலத்தை தோல்வியடையச் செய்வதற்கு அடுத்து வரும் நாட்களில் செயற்படப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

http://www.dailyceylon.com/170713

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.