Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவிடம் தாவும் ஐதேக அமைச்சர்கள் ஆனந்த அளுத்கமகே, வசந்த சேனநாயக்க

Featured Replies

Ananda-Aluthgamage-300x200.jpgஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டு அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்தவருமான ஆனந்த அளுத்கமகே, சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேயின் நெருங்கிய உறவினரான இவர், சற்று முன்னர் ஊடகங்களிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் ஐதேகவைச் சேர்ந்த பலர் மகிந்தவுக்கு ஆதரவளிக்கவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கூட்டு அரசாங்கத்தின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த வசந்த சேனநாயக்கவும், மகிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், அவருடன் இணைந்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை, ஐதேகவைச் சேர்ந்தவர்கள் கட்சி தாவப் போவதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை என்று பிரதி அமைச்சர் அஜித் பெரேரா மறுத்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் மகிந்த- மைத்திரி கூட்டு அரசாங்கத்தில் இணையவுள்ளதாக ஊகங்கள் பரவியுள்ளன.

எனினும், அந்தச் செய்திகளில் உண்மையில்லை என்று ஐதேக அமைச்சர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/10/26/news/33721

  • தொடங்கியவர்

பிரதமரானார் மகிந்த ராஜபக்ச; ரிஷாட் பதியுதீன் வெளியிட்ட கருத்து!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதிவியேற்றுள்ள நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சற்று முன்னர் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/108102?ref=rightsidebar-manithan

  • தொடங்கியவர்

அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக நாமே – ரவூப் ஹக்கீம்

Rauf-hakeem.jpg

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றுள்ள நிலையில், அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் கட்சியாக தமது கட்சி இருக்கும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பதவியேற்பு அதிர்ச்சியான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நீருபிப்பதற்கான ஒரு சாத்தியப்பாடு இல்லாமல் பதவியேற்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறதா என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா சென்றுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக எமது கட்சியே இருக்கும் என்றும் அது இந்த புதிய கட்சிதானா என்பது தொடர்பில் கட்சி தீர்மானிக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்

http://athavannews.com/அடுத்த-ஆட்சியைத்-தீர்மான/

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது: ஆனந்தசங்கரி

இலங்கையில் மாற்றமொன்று ஏற்பட வேண்டிய நேரம் வந்துள்ளதென்றும், அதன் பிரதிபலிப்புகளை பொறுத்திருந்தே பார்க்க வேண்டுமென்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை முதல் மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ஆனந்த சங்கரி, அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1970ஆம் ஆண்டுமுதல் தான் மஹிந்தவின் நண்பர் என்றும் அந்தவகையில் வாழ்த்து தெரிவிப்பதற்காகவே கொழும்பு வந்ததாகவும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மாற்றமொன்று அவசியமென குறிப்பிட்டுள்ள ஆனந்த சங்கரி, புதிய ஆட்சியாளர்கள் அதனை நிறைவேற்றுவார்களென நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/மாற்றத்திற்கான-நேரம்-வந்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.