Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியின் தீர்மானம் நாட்டின் நன்மை கருதியது என்கிறார், பிரபு நசெபி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Lord-Baron-Naseby-met-srilankan-president-720x450.jpg

மைத்திரியின் தீர்மானம் நாட்டின் நன்மை கருதியது என்கிறார், பிரபு நசெபி!

இலங்கை பிரதமரை மாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானதல்லவென பிரித்தானிய பிரபு பாரொன் நசெபி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டின் நன்மை கருதியே அவர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனின் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நீக்கப்பட்டு புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமை வழக்கத்திற்கு மாறான செயலென குறிப்பிட்ட பிரபு நசெபி, ஆனால் அது அரசியலமைப்பிற்கு முரணானது அல்லவென குறிப்பிட்டார். வழக்கத்திற்கு மாறான செயற்பாடுகள் பிரித்தானியாவிலும் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரி தீர்மானம் எடுத்துள்ளார் என்றும், அது நாட்டிற்காகவே என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தான் ஜனாதிபதி மைத்திரியை பல சந்தர்ப்பங்களில் சந்தித்ததாக குறிப்பிட்ட பிரபு நசெபி, அவர் தூரநோக்குடையவர் என்றும் நாட்டின் நன்மைக்காக செயற்படும் தலைவர் என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு உட்பட்டதா இல்லையா என்பதை தீர்மானிப்பது வெளிநாடுகள் அல்லவென்றும் பிரபு நசெபி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தவரே பிரபு நசெபி. குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தில் வெறும் 8000 பேரே உயிரிழந்தனர் என கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மைத்திரியின்-தீர்மானம்-ந/

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு தீவிர வலதுசாரி பழமைவாதக் கட்சியைச் சார்ந்தவர். மகிந்தவுக்கு மிகவும் நெருக்கமானவ்ர்.

2009 இல் போர் முடிவுற்றபோது, ஐ. நா வினால் முன்வைக்கப்பட்ட 40,000 வரையிலான பொதுமக்கள் கொலைகளை கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், இவ்வெண்ணிக்கை புலிகளின் அமைப்புகளாலும், தமிழ்நெட் போன்ற இணையத்தளங்கினாலும் முன்வைக்கப்படும் எண்ணிக்கையென்றும் தொடர்ந்தும் வாதாடி வந்தவர்.
மிஞ்சி மிஞ்சிப் போனால், வெறும் 7,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தனக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள் மூலம் அறியக் கிடைத்ததாகக் கூறும் இவர், இக்கொலைகளுக்கு புலிகளே பெரும்பாலும் பொருப்பானவர்கள் என்று கூறியிருக்கிறார்.

இலங்கை தொடர்பான இங்கிலாந்து பாராளுமன்றக் குழுவின் தலைவராக செயற்பட்ட இவர் பலமுறை மகிந்த தலைமையிலான அரசின் தலைவர்களுடன் தொடர்பிலிருந்தவர் என்பதோடு, இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விவாதத்தின்போது, இலங்கைக்கு மிகவும் சாதகமான முறையில் வாதங்களை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல், ஐ. நா வில் இலங்கை மீது கொண்டுவரப்படும் தீர்மானங்களை மேற்குநாடுகள் நிராகரிக்கவேண்டுமென்றும், இலங்கை மீதான அனைத்து அழுத்தங்களும் நீக்கப்பட்டு, அவர்கள் சுதந்திரமாக செயலாற்ற அனுமதிக்கப்படவேண்டுமென்றும் விவாதித்தவர்.

தமிழ்த்தேசியத்தை 1975 ஆம் ஆண்டிலிருந்து எதிர்த்துவரும் இவர், தமிழர் மீதான போரின்போது ராணுவ நடவடிக்கைகளை ஆதரித்ததோடு, இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் இலங்கையின் குரலாக ஒலித்தவர்.

அதேபோல, சர்வதேச அழுத்தங்களைச் சமாளிக்க இலங்கை அரசால் அமைக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறியும் குழுவின் பரிந்துரைகளை உண்மையென்று வாதாடியதுடன், தமிழர்களைக் கொல்லவேண்டும் என்கிற தேவை சிங்கள அரசில் உள்ள எவருக்கும் இல்லையென்று வாதாடியதுடன், கொல்லப்பட்ட தமிழர்கள் சிவிலுடையிலிருந்த புலிப்பயங்கரவாதிகள் தானென்றும் வாதாடியிருக்கிறார்.

ஆகவே, இப்படியான ஒருவர், இன்று மகிந்தவுக்கும்  அவரின் போர்க்குற்றப் பங்காளியான மைத்திரிக்கும் மிகவும் நெருக்கமான ஒருவரின் இன்றைய கருத்துக்கள் பற்றி நாங்கள் ஆச்சரியப்படுதற்கு எதுவுமில்லை.

இவரது இங்கிலாந்துப் பாராளுமன்ற விவாத உரை பற்றி மேலும் அறியவேண்டுமென்றால், என்னால் அதனை இங்கே இணைக்க முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ragunathan said:

இவரது இங்கிலாந்துப் பாராளுமன்ற விவாத உரை பற்றி மேலும் அறியவேண்டுமென்றால், என்னால் அதனை இங்கே இணைக்க முடியும்.

ரகுநாதன்... அதனை இணைத்து  விடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இணைத்துவிடுவது பெரிய விடயமல்ல. இதனை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல எவர் முன்வருவர்.....? தமிழர் தலைமை என்று இன்று சம் சுங் தவிர யாருளர்....??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.