Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.தே.க.வுக்கு கூட்டமைப்பு ஆதரவு இல்லை: துரைராசசிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.தே.க.வுக்கு கூட்டமைப்பு ஆதரவு இல்லை: துரைராசசிங்கம்

கூட்டமைப்பு ஜனநாயகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளதே தவிர ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக இல்லையென கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு இலங்கை தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது,

“நாம் ஒத்த கருத்தோடு மாத்திரம் செயற்படுகின்றோமே ஒழிய ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்பட வேண்டிய அவசியமில்லை.

மேலும் கூட்டமைப்பை பொறுத்தவரை அரசியலமைப்பில் 19ஆவது திருத்தச் சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீறப்பட்டுள்ளது.

ஆகையால் ஜனநாயகத்துக்கு முரணாக இத்தகைய செயற்பாட்டுக்கு குரல் கொடுத்து ஜனநாயகத்தை பாதுகாப்பது மாத்திரமே எமது கொள்கையாகும்.

அந்தவகையில் நாடாளுமன்றத்தில் பழைய நிலைமைமை மீண்டும் கொண்டு வருவதற்கு ஏற்றவாறு சிறந்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டுமென்றே பெரும்பாலான கட்சிகள் வழக்கு தாக்கல் செய்துள்ளன.

அதேபோன்று நாமும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம்.

மேலும் குறித்த வழக்கினை விசாரணை செய்யும் நீதிபதி, நாட்டின் அரசியல் நிலைமையை சீராக்கும் வகையிலும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலும் தீர்ப்பை வழங்குவாரென நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதற்காக கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதாக கூறும் கருத்துக்களில் எந்ததொரு உண்மையும் இல்லை” என துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/கூட்டமைப்பு-ஐ-தே-க-வுக்கு/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஐ.தே.க.வுக்கு கூட்டமைப்பு ஆதரவு இல்லை: துரைராசசிங்கம்

ஜனநாயகத்தை பாதுகாப்பது மாத்திரமே எமது கொள்கையாகும்.

ஐயா! துரைராசசிங்கம் அவர்களே! இலங்கையில் சனநாயகம் இல்லை என்பது அகிலத்திற்கே தெரியும். இல்லாத சனநாயகத்தை நீங்கள் எப்படி பாதுகாக்கப் போகிறீர்கள்...??

9 hours ago, கிருபன் said:

கூட்டமைப்பு ஜனநாயகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளதே தவிர ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக இல்லையென கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மிகவும் மோசமான அயோக்கியர் ஒருவரால் இப்படி அப்பட்டமாக பொய் கதைக்க முடியும்!

கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளை கையாண்ட விதம், மற்றவர்களுடன் கலந்துரையாடாமல் சம்-சம் கும்பலின் அடாவடித்தனங்கள், போன்றவற்றின் மூலம் ஜனநாயகம் என்றால் என்னவென்று அறவே தெரியாத கும்பலே தமிழரசுக் கட்சியில் உள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.