Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் எங்கே போய்விட்டார், தைதான் முதல் மாதம் என்று நான் 2 கட்டுரை ஆதாரத்துடன் இணைத்துள்ளேன், எங்கே உமது பதில் :rolleyes:

வணக்கம் வானவில்

1வது கட்டுரை கனடாவில் உள்ள நக்கீரன், என்பவர் எழுத கட்டுரை என நினைக்கின்றேன். பின்னர் யாரோ அதை வலைப்பதிவில் இணைத்திருக்கின்றார்கள். அதில் எச் சந்தர்ப்பதிலும், தைப்பொங்கல் எவ்வாறு, தமிழர் புத்தாண்டாக மாறியது என்பது பற்றி எவ்வித ஆதாரமும் அவரால் சொல்லமுடியவில்லை. சித்திரை வருடப்பிறப்பில், ஆரியம் கலந்ததைப் பற்றித் தான் அவரால் சொல்லமுடிகின்றதே தவிர, சென்ற இரு நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியங்களில் இருந்து ஒரு ஆதாரத்தையும் தைப்பொங்கல் தொடர்பாகக் காட்டக் கூட முடியவில்லை.

இதற்காக நான், தைப்பொங்கல் புராதன காலத்தில் இருந்து வந்தது என்பதை மறுக்கவில்லை. வெறுமனே, கிடைத்த புராதன சுவடிகளையும், கிடைத்த கல்வெட்டுக்களையும் வைத்து இப்படி ஒரு முடிவை எடுக்க கூடாது என்பது தான் என் கருத்து. ஏனென்றால், இது தான் முடிவு என்று எழுதுகின்ற அளவுக்கு தெளிவான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை.

மகாவம்சத்தை வைத்து, ஈழத்து வரலாற்றையும், இராமயணத்தை வைத்து, இராவணன் பற்றியும் கதைத்துக் கொண்டு, அதை வைத்து, இந்து சமயத்தைக் கேவலப்படுத்துகின்ற கதை தானே நடக்கின்றது. அதை விட, இப்படித் தான் நடந்தார்கள் என்று அடித்து எழுதுவதன் மூலம், இவர்கள் எதிர்காலத்தில் இப்படித் தான் வரலாறு என்று மாற்றம் செய்யவும் முயல்கின்றார்கள். இது பற்றி இந்து சமயப்பெரியார்கள் சிந்திப்பது நல்லது. அசட்டையீனமாக இருந்துவிடலாகாது.

விஞ்ஞானத்தில் கடவுள் மறுப்பு என்பது ஏற்காமைக்கு காரணம், எந்தவொரு பாரம்பரிய விடயங்களையும் நிராகரிக்கின்றபோது, அதற்குத் தக்க ஆதாரங்களைக் காட்ட வேண்டும் என்பது தான்." கடவுள் சக்தி உள்ளவரா, இல்லையா, என்பதையோ, அல்லது மரணம், பிறப்புத் தொடர்பான முடிவுகளை எடுக்கின்ற சக்தி தொடர்பாக மனிதனுக்கு என்னும் முழுமையான வெற்றி கிடைக்காததால் இன்று வரைக்கும் கடவுள் இல்லை என்று விஞ்ஞானம் சொல்லவில்லை. விஞ்ஞானிகளும் சொன்னதில்லை. அவர்களுக்கே கடவுள் பக்தி உண்டு என்பது வேறு விடயம்.

இப்படியான நிலையிருக்கின்றபோது, படிப்பறிவே இல்லாதவர்கள் போல, நியாயப்படுத்தல் இல்லாமல், தமிழ் தேசியம் இது என்று வரைவு கொடுப்பவர்களுக்கு எப்படிப் பதில் சொல்வது? எந்தவொரு விடயத்தையும் தமிழ் தேசியம், திராவிடத்துவம் என்று வரைவு கொடுத்தாலோ, அல்லது அவை குறித்தான அசிங்கங்களை முக்கியத்துவம் செய்தாலோ, மக்கள் மனங்களில் மாற்றங்களினை ஏற்படுத்தி விடலாம் என்பது தான் இவர்கள் நினைப்பு.

2. சபேசனின் கட்டுரைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதாக நானில்லை. அவர் அப்படித் தான் என்பது தெரிந்தவொன்றே.

இவர்களைப் பொறுத்தவரைக்கும், தமிழ் உணர்வு என்பதற்கு அப்பால், ஆரிய வெறி என்பதே மூலப்பொருளாகும். அதைத் தமிழர்களிடம் பரப்புவதற்குத் தமிழ் தேசியம் என்ற சொல் எடுகோளாகப் பாவிக்கப்படுகின்றது. தைப்பொங்கலில் சூரிய வழிபாடு தான் முக்கியத்துவம் பெறுவதாலும், இப்போது தமிழர்களிடம் சூரியவழிபாடு முக்கியத்துவம் குறைந்து விட்டதாலும், அதை மதச்சார்பற்ற சின்னமாகக் கருதுகின்றார்கள். எனவே தான் தங்களின் கடவுள்மறுப்புக் கொள்கைக்கு சூரியவழிபாட்டை புத்தாண்டாகக் குறிக்க எண்ணுகின்றார்கள்.

மற்றும்படி, தைப்பொங்கலிலும், இந்துசமய வழிபாடு இருந்தாலோ, அல்லது சூரியக் கடவுள் தற்காலத்தில் இந்து சமயத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தாலோ, அதைக் கூட, ஆரிய வெறி என்றும், அதற்கும் ஒரு பாலியல் கதை ஒன்றை இணைத்து பெருமிதப்பட்டிருப்பார்கள்.

ஆனால், சிவ வழிபாடு அனைத்து இந்தியாவிலும் பரவியிருக்கின்ற நிலமையில், அதை ஆரியக் கடவுள் என்று நிராகரிக்கின்ற இவர்கள், ஆனால் தமிழ்நாட்டில் சூரியவழிபாடு முக்கியத்துவம் குறைந்து, வடஇந்தியாவில் மட்டும் நிலைத்து நிற்கின்ற நிலமையில், அதைத் தமிழர் வழிபாடாக இனம் கண்டது எப்படி என்று தெரியவில்லை.

இப்போதும் கங்கையில் மூழ்கி சூரிய வழிபாடு செய்பவர்களும், தமிழ்நாட்டில் காலைவிடிய எழுந்து சூரியவழிபாடும், துளசி வழிபாடு செய்பவர்களும் பார்ப்பானர்கள் மட்டும் தான்.

இப்போது சொல்லுங்கள். இவர்களின் நியாயப்படுத்தால் படி பார்த்தால் தைப்பொங்கல் யாருக்கு உரித்தானது? இவர்களின் நியாயங்களைக் கேட்கப் போய், கடைசியில் சிறு துண்டு கூட உங்களுக்கு மிஞ்சாது. பெரியார் காலத்தில் இருந்து உங்களின் வரலாற்றை ஆரம்பிக்க வேண்டி வரும்.

தூயவன்!

இரண்டாவது கட்டுரை மெல்போர்ண் சபேசன் எழுதியது.

நீங்கள் தைப்பொங்கலையும் சூரிய வழிபாட்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். இது பற்றி ஏற்கனவே தெளிவாக எழுதியுள்ளேன்.

ஆரியர்களும் பார்ப்பனர்களும் வழிபடுவது ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் "பூமியை வலம் வருகின்ற" சூரிய தேவனை. அதற்கு கோயில்கள், பூசைகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள்.

தமிழர்கள் தமது தைத்திருநாள் புத்தாண்டில் இயற்கையில் ஒரு அங்கமான வானத்தில் தெரிகின்ற சுடரிக்கு நன்றி செலுத்துவார்கள்.

இரண்டும் ஒன்று அல்ல. இந்த வித்தியாசத்தை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

April 14 is the Tamil New Year and not Sinhalese!

By: Lakruwan de Silva, Colombo

Courtesy: TamilCanadian

The Sinhalese Buddhists are heirs to an old hydraulic civilization. We were the sole custodians of Theravada Buddhism after it had ebbed in India and transmitted it to Myanmar and Thailand. It is interesting therefore that we now celebrate the Hindu solar New Year as our new year. We have forgotten our own lunar calendar.

April 14 does not mark the Sinhalese New Year! It is the Tamil Hindu New Year instead. Our new year falls on the new moon of the lunar month of Bak. This happened to be on 19th March, 2007 this year. Let me refer you to the traditional Sinhalese almanac i.e. the Lipa.

The Theravada Buddhist calendar is a lunar one. Each month starts with the new moon, peaks at the full moon and then wanes until the next new moon which signifies the start of the succeeding month. The first month of the Buddhist lunar year is "Bak". The first day of the lunar month of Bak fell this year on 19th March, 2007. 14 April this year happens to be the 27th of Bak! It is clearly not the start of the Sinhalese calendar! Further the 17th of April marks the first day of the lunar month of Vesak - the second month in the Sinhalese calendar.

The Hindu solar calendar by contrast follows the signs of the traditional zodiac and commences when the sun enters the sign of Mesha or Aries on the 14th of April each year.

It is ironic that the Sinhalese now observe the Hindu solar calendar where the first day of the first solar month i.e. "Chitterai" falls each year on 14 April. This is the Tamil New Year! The Tamil Hindu calendar is a solar one. This explains the auspicious times, the punya kala, the precise time that the traditional new year dawns, the head annointing ceremony with herbal oil, the ganu-denu/kaivishesham etc which have more to do with Hindu tradition than Buddhism. Buddhism has no concept of auspicious times - all times in fact are auspicious for the Dharma.

14 April is also observed as the traditional New Year in Assam, Bengal, Orissa, Kerala, Nepal and Punjab. This is in keeping with their solar Hindu traditions.

It is ironic that the Sinhalese people celebrate the New Year on 14 April and failed to observe 19 March this year as the start of the lunar calendar.

It is evident that the Hindu solar calendar, not the Buddhist lunar calendar, is now used to calculate the Sinhalese New Year. The Sinhalese seem to get more enthusiastic about the traditional Tamil New Year in a manner that even Wesak does not witness. I explain this with reference to the Nayakkar interlude in the Kandyan kingdom that commenced in 1739 AD when the Sinhalese people adopted South Indian customs and traditions wholesale. The Nayakkars had their origins in Tanjore in South India. This could also be due to South Indian influence during the time of Gampola dynasty when Generals like Alakeshwara who had their origins in Kerala fought the Kingdom of Jaffna between 1396 and 1408 AD. This led to considerable Dravidian influence on the Sinhalese cultural matrix.

It is time to acknowledge the Tamil Hindu roots of the current Sinhalese festivities be it the traditional New Year on April 14, the Kandy Esala Perahera (Adi Vel) and the Aluth Sahal Mangalya (Pongal).

Published: Apr 07, 2007 13:19:09 GMT

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிலும், வடஇந்தியாவிலும் சூரியனை வழிபட்டதற்கான ஆதாரம் இது. வடஇந்தியாவில் வழிபட்ட விதத்திற்கும், இதற்கும் எவ்வித வேறுபாடுமில்லை. அதை விடத் சோழமன்னர்களின் தலைநகரில் தான் இது இருக்கின்றது என்பதையும் கவனிக்க

தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்ட த்தில் உள்ளது சூரியனார் திருக்கோவில். இக்கோயிலை குறிக்கும் விதமாக சூரியனார் கோயில் ஊர் என்று அழைக்கப்பட்டது. சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார் கோயில். தெற்கே இந்த சூரியனார் கோயில். கோனார்க்கில் உள்ள கோயிலில் உருவ வழிபாடு கிடையாது.

l-31-03-2007-1.jpg

ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது. இங்கு சூரிய பகவான் திருமணக்கோலத்தில் இரண்டு மனைவியரோடு காட்சி அளிப்பது மேலும் சிறப்பு. கருவறையில் சூரிய பகவான் மேற்கு முகமாக பார்த்தபடி இடது புறத்தில் உசா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யுசாதேவி எனும் சாயாதேவியுடனும் நின்றபடி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார். சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார்.

பொதுவாக சூரியனுக்கு உக்கிரம் அதிகம் அதன் வீச்சை யாராலும் தாங்க முடியாது என்று சொல்லப்படுகிறது. ஆகவே அவரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு குருபகவான் எதிரில் உள்ளார். அதனால்தான் சூரியபகவானை வழிபட முடிகிறது. மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை இருக்கிறது. சிவலிங்கத்துக்கு முன்னே நந்தி இருப்பது போல இங்கு சூரிய பகவானுக்கு எதிராக குதிரை இருக்கிறது.

உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருவதால் இத்திருத்தலத்திற்கு தோஷம் உள்ளவர்கள் வணங்கினால் நல்லது என்று கூறப்படுகிறது. நவக்கிரக தலங்களில் சூரிய தலம் முதன்மையானது என்பதால் இங்கு பக்தர்கள் பெருமளவில் வருகை புரிந்து தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பல்வேறு கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். இங்குள்ள கோயிலில் நாடி பரிகாரம் செய்வது விசேஷமாக கருதப்படுகிறது. நவக்கிரக ஹோமம், சூரிய அர்ச்சனை, சர்க்கரைப் பொங்கல் அபிஷேகம், நவக்கிரக தோசம், நவகிரக அர்ச்சனை ஆகியவை நடைமுறையில் இருந்து வருகிறது. நவக்கிரக அபிஷேகம் தவிர அர்ச்சனை துலாபாரம், கோதுமை,வெல்லம், விளைச்சல் ஆகியவற்றை பக்தர்கள் இக்கோயிலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

ஞாயிற்றுக் கிழமைகளில் இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரப்படுகிறது. இக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானது. சங்க காலத்தில் பூம்புகாரில் இருந்த உச்சிக்கிழான் கோட்டம் என்ற சூரியன் கோயில் கடல்கோளால் அழிந்து விட்டபோதிலும் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயில் இன்றும் பொலிவுடன் விளங்கி வருகிறது. சூரியனார் கோயில் எனும் இத்தலம் தொன்மைச் சிறப்பாலும் புராணவரலாற்றுச் சிறப்பா லும் நவக்கிரகங்களுக் கென தனித்தமைந்த கோயிற்சிறப்பாலும் தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வரும் சிறப்பாலும் புகழ் வாய்ந்த தலமாகும்.

l-31-03-2007-2.jpg

இக்கோயில் எவ்வாறு உருவானது என்று புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது. அதன்படி காலவ முனிவர் என்பவருக்கு தொழுநோய் ஏற்பட்ட போது தன் நோய் குணமடையும் வரம் வேண்டி நவக்கிரகங்களை வேண்டி வழிபட்டார். நவக்கிரக நாயகர்களும் அவர் கேட்டுக்கொண்டபடி வரமளித்தனர். இதனை அறிந்த பிரம தேவன் கோபம் கொண்டார்.

சிவபெருமானின் ஆணைப்படி எல்லா உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களை மட்டுமே கொடுக்குமாறு கட்டளை யிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் கீழ்ப்படியாமல் வரம் தரும் அளவுக்கு மீறிச் செயல்பட்டுவிட்டீர்கள். எனவே நீங்கள் பூலோகத்தில் தொழுநோய் பீடித்து உழல்வீர்களாக என சாபமிட்டார். அதன்படி பூலோகத்தில் வெள்ளை எருக்கு வனத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தனர். அவர்கள் முன் சிவபெருமான் தோன்றி இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கும்.பல்வகைத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் அனுக்கிரகம் செய்வீர்களாக என அருளினார் என்பதையே இத்தலத்தின் வரலாறு கூறுகிறது.

ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி ஜென்மச் சனியால் தொடரப்பட்டவர்களும் வேறு பிற நவக்கிரக தோஷமுள்ளவர்களும் சூரியனார் கோயிலுக்கு வந்து பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமை காலம் வரை தலவாசம் செய்து வழிபட வேண்டும். அதாவது குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து தொடர்நது பன்னிரெண்டாவது ஞாயிற்றுகிழமை முடிகிற வரை சுமார் இரண்டரை மாத காலம் (78 நாட்கள்) இத்தலத்திலே தங்கியிருந்து நாடோறும் நவதீர்த்தங்களிலும் நீராடி உபவாசமிருந்து திருமங்கலகுடி பிராணநாதரையும் மங்கள நாயகியையும் இத்தலத்து நாயகர்களையும் முறைப்படி வழிபட்டு வரவேண்டும்.

தத்தமது தோஷத்துக்கான பரிகாரங்களையும் செய்து வரவேண்டும். இப்படி செய்து வந்தால் மேற்படி தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்று நம்பப்படுகிறது.

மற்ற கிழமை நாட்களை விட ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் இத்தலத்திற்கு அதிகமாக வருகை தருகின்றனர். சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை, சூரிய தோஷங்கள் உள்ளவர்கள். இங்கு வந்து ஞாயிறு தோறும் வழிபடுகின்றனர். இங்கு வந்து வழிப்பட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்றும் நல்ல காரியங்கள் தடைபடாமல் நடக்கும் என்றும் பக்தர்களால் நம்பப்ப டுகிறது. சூரிய பகவான் கோயின் திருத்தலத்திற்கு மக்கள் குடும்பத்தோடு வருகை தருகின்றனர். கும்பகோணம் நகரில் தங்கி கோயிலுக்கு வந்கு தரிசனம் செய்யலாம்.

நன்றி: வீரகேசரி

மேலும், சூரிய சந்திர வழிபாடும், அதைப் பெண்கள் தங்களின் கணவர்மார்களாகச் சித்தரித்த விதத்தினை மகாபாரதத்தில் இருந்தே பெற்றுக் கொள்ளமுடியும்.

சூரிய வழிபாட்டை, இனம் பிரித்து அறியக் கூடிய நிலையில் இருந்த இவர்கள், சைவவழிபாட்டை வடஇந்தியர்களிடம் இருந்து பிரித்தறிய முடியாமல் இருந்தார்கள் என்பது நம்பக் கூடியதாகவா இருக்கின்றது.

----------------------------------

மற்றும்படி தைப்பொங்கல் குறித்து ஒன்றுமே தெரியாமல் நான் எழுதவில்லை. வானத்தில் இருக்கின்ற சுடர் என்ற அர்த்தம் என்ன? சூரியனைத் தான் குறிக்கின்றது என்பதை வெளிப்படையாகச் சொல்லி விடலாமே.

Edited by தூயவன்

ஆம், சூரியனார் கோயில் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆகவே தமிழர்கள் தொன்று தொட்டு சூரிய தேவனை வணங்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் மசூதிகளும் தேவாலயங்களும் நிறைய இருக்கின்றன. தமிழர்கள் யேசுவையும் அல்லாவையும் தொன்று தொட்டு வணங்கியுள்ளார்கள்.

கோயில் இருந்தால் அது தமிழர்கள் தொன்று தொட்டு அதை வழிபட்டதற்கு சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

அந்தக் கோயில் எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. அப்படித்தானே??!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், சூரியனார் கோயில் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆகவே தமிழர்கள் தொன்று தொட்டு சூரிய தேவனை வணங்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் மசூதிகளும் தேவாலயங்களும் நிறைய இருக்கின்றன. தமிழர்கள் யேசுவையும் அல்லாவையும் தொன்று தொட்டு வணங்கியுள்ளார்கள்.

கோயில் இருந்தால் அது தமிழர்கள் தொன்று தொட்டு அதை வழிபட்டதற்கு சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

அந்தக் கோயில் எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. அப்படித்தானே??!!!

விடுதலைப்புலிகள் பற்றிய குற்றச்சாட்டு ஒன்று பற்றிக் கேட்டால், நான் கருணாவைக் காட்டி நியாயப்படுத்த மாட்டேன் என்று ஏற்கனவே நீங்கள் விட்ட பஞ்ச் ஒன்று தான் இப்போது எழுதியிருப்பதைப் பார்க்க ஞாபகம் வருகின்றது.

ஆரியம் எம் வழிபாட்டு முறையை ஏற்று, உள்வாங்கிய போதும், நாங்கள் தடுக்கி விழுந்ததும் துன்பகரமானது. ஆனால் எம் வழிபாட்டு முறையை விட்டுவிட்டு ஒதுங்க வேண்டும் என்ற தேவையில்லையே.

சைவவழிபாடு ஆரியரில் இருப்பதால் அதைக் காட்டி, சைவத்தை கேவலப்படுத்தலாம் தப்பில்லை. ஆனால் தைப்பொங்கல் பற்றிய உங்களின் நியாயத்தை அதே பாணியில் செய்தால் தான் தப்பு. இது எப்படி நியாயம்??

சூரியக் கடவுள் வழிபாட்டு முறை அனைத்து சமூகத்திலும் இருந்தது. அது தான் உண்மை. ஆனால் தமிழரின் தேசியம் என்று கதைக்க வெளிக்கிட்டால், நிறைய ஆதாரமற்ற நிலைகளுக்கு நீங்கள் மாற வேண்டி வரும்.

தைப்பொங்கல் கிறிஸ்தவ தேவலயங்களில் கொண்டாடுகின்றார்கள். அதனால் அது மதச்சார்பின்மை என்று நீங்கள் முன்பு செய்த விவாதம் ஞாபகமிருக்கின்றதா? இப்போது உங்களுக்கு என்னுமொன்றையும் சொல்கின்றேன். சிங்களவர்களும் தைப்பொங்கல் கொண்டாடுகின்றார்கள். ஆனால் அதை விவசாயிகள் மட்டும் தான் கொண்டாடுவார்கள். அதற்கு ஒரு பெயர் வேறு ... விரைவில் சொல்கின்றேன். தமிழர்களும் முன்பு அப்படித் தானே விவாசாயிகள் மட்டும் தானே கொண்டாடினார்கள்.

ஏன் தைப்பொங்கல் போன்று, சூரியனுக்கு நன்றி செலுத்தும் பழக்கம் எகிப்தியர்களுக்கு கூட இருந்தது. அதற்காக அதை எகிப்தியர் கலாச்சாரமாக ஆக்கிட முடியுமா?

கோயில் இருந்தால் அது தமிழர்கள் தொன்று தொட்டு அதை வழிபட்டதற்கு சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

சூரியக்கோவில் சோழர் காலத்தில் இருந்ததை நான் அடையாளம் காட்டுகின்றேன்.( கிட்டதட்ட 1000 வருடங்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள்) ஆனால் உங்களால் தமிழர் முன்பு சூரியனை வழிபட்ட விதமிருந்தது என்பது குறித்து உங்களால் ஒரு ஆதாரத்தைக் காட்டமுடியுமா? தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட நால்வகைத் தெய்வவழிபாட்டில் கூட அது இல்லை. முடிந்தால் 300 ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலாவது தைப்பொங்கல் குறித்து ஏதும் பாடல்கள் இருந்தால் ஆதாரப்படுத்துங்கள்.

தைப்பொங்கலே தமிழ்நாட்காட்டி வடிவத்தில் தான் கொண்டாடப்படுகின்றது. அதில இனம் பிரிப்பது ரெம்பவே நகைச்சுவை.

சிலபேர் வேணுமென்றால் எழுதலாம். இளவெனில் காலத்தில் தமிழ்மக்கள் களியாட்டம் செய்தார்கள் என்று. அது புலம்பெயர்நாட்டு ஆராட்சியாளர்களின் முழுக்கற்பனை. புலத்தினைப் போல, குளிர்காலங்களில் வீட்டுக்குள் அடங்கியிருந்தும், இளவெனில் காலத்தில் மக்கள் கூடுவிட்ட பறவைகள் போலவும் தமிழ்மக்கள் முன்பு சுத்தியிருக்கமாட்டார்கள்.

தமிழ்மண்ணில் இவ்வாறன பருவவேறுபாடு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாது. மழை என்பது சுறுண்டு வீட்டுக்குள் அடங்கிக் கிடக்கின்ற பருவம் அல்ல. எனவே முதலில்உங்களின் சூழலை வைத்துத் தமிழன் எப்படி இருந்திருப்பான் என்று கற்பனை பண்ணுவதை நிறுத்துங்கள்.

சம்பிர்தாயங்களும், கொண்டாட்டங்களும் நமக்கு அவசியமானவை. இன்று புலத்தில் ஒன்றுகூடல் வருடாவருடம் நடத்துவது என்பது எல்லாம், நம் மக்களின் நெருக்கத்தை அதிகரிப்பதற்காகத் தான். மாவீரர்நாள், தேசிய தினம்(எதிர்காலத்தில்) கொண்டாடப்படுவது என்பது எல்லாம் தமிழன் மற்றய சமூதாயத்தில் இருந்து தனித்துவமானவன் என்பதை அடையாளப்படுத்த நிச்சயம் உதவும்.

அவ்வாறு தான், தைப்பொங்கல், வருடப்பிறப்பு, என்று இருக்கின்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதில் என்ன தப்பு? அது ஆரம்பிக்கப்பட்டது என்னவாகவும் இருக்கட்டும். ஆனால் இன்றைய காலத்தில் அதன் தேவை மிகமிக முக்கியம்.

இஸ்லாமியர் முன்பு ஒன்று கூடுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஹாஜ் யாத்திரை இன்று ஒரு மதவழிபாட்டு முறையாக ஏன் மாறியது என்றால் இஸ்லாமிய இனம் ஒரு தனித்துவமான கொள்கை கொண்டவர்கள் என்பதை வலியுத்துவதற்கே. அது இன்று ஒரு வெற்றி நிலையை அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு தானே இருக்கின்றது.

சமூகக் கட்டமைப்பைக் குலைக்கின்ற போது அதற்கு ஒரு நல்ல தீர்வு, அல்லது வழிகாட்டி ஏதும் இருக்க வேண்டும். உங்களிடம் என்ன இருக்கின்றது. புலிகள் கூட இவ்வாறு சமூதாயக் கட்டமைப்பைக் குழப்பி நட்டாற்றில் விட்டதில்லை. விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தும், ஏன் இன்று கூட அரசாங்க உத்தியோகம் தொடர்பாகவோ, மக்களின் தேவைகளைச் சிங்கள அரசிடம் இருந்து பெறுவது குறித்தோ கடுமையான முடிவை எடுக்கவில்லை.

ஏனென்றால் எல்லோரையும் அவ்வாறு செய்யச் சொல்லி விட்டு, அத்தனை பேரையும் காப்பற்றுவதற்குச் சக்தி வேண்டும். அந்த நிலை ஏற்படும் வரை அதைக் குழப்பியடித்தது கிடையாது. ஆனால் நீங்கள் என்னவென்றால், மக்களைக் குழப்பியடித்து விட்டுக் காணாமல் போய்விடுவீர்கள். உங்களை நம்பி வந்தவர்கள்,தலையில் துண்டப் போட வேண்டியது தான்.

தமிழ் மக்கள் மத்தில் சூரிய வழிபாடு இருந்தது என்பதற்கு பிற்காலத்தில் கட்டப்பட்ட சூரியர் கோயிலை ஆதாரமாக காட்ட முடியாது என்பதற்காகத்தான் மசூதி, தேவாலயம் போன்ற உதாரணங்களை எழுதினேன். அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

கால, பருவ மாற்றங்கள் தமிழர்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களின் காரணமாகத்தான் அவர்கள் ஒவ்வொரு பருவத்தையும் பிரித்து கணித்து வைத்திருந்தார்கள். ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு காலத்தையும் சொந்தம் என்றும் எழுதி வைத்துள்ளார்கள்.

பருவ மாற்றங்கள் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தாதவைகளாக இருந்திருந்தால், அப்படி எல்லாம் உருவாக்கி இருக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மத்தில் சூரிய வழிபாடு இருந்தது என்பதற்கு பிற்காலத்தில் கட்டப்பட்ட சூரியர் கோயிலை ஆதாரமாக காட்ட முடியாது என்பதற்காகத்தான் மசூதி, தேவாலயம் போன்ற உதாரணங்களை எழுதினேன். அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

கால, பருவ மாற்றங்கள் தமிழர்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களின் காரணமாகத்தான் அவர்கள் ஒவ்வொரு பருவத்தையும் பிரித்து கணித்து வைத்திருந்தார்கள். ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு காலத்தையும் சொந்தம் என்றும் எழுதி வைத்துள்ளார்கள்.

பருவ மாற்றங்கள் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தாதவைகளாக இருந்திருந்தால், அப்படி எல்லாம் உருவாக்கி இருக்க மாட்டார்கள்.

என்னிடம் இருக்கின்ற சூரிய வழிபாடு பற்றிய ஆதாரம் அது மட்டுமே. உங்களிடம் மறுப்பளிக்க வேறு இருந்தால் சொல்லுங்கள். ஏற்றுக் கொள்ளலாம்.

காலப்பருவங்கள் பற்றி நான் சொன்னது என்னவென்றால் ஐரோப்பாவில் குளிர்காலத்தில் மக்கள் வீட்டுக்குள் அடைபட்டுக் கொண்டிருந்தது போல, தமிழகத்தில் மழை அவ்வாறான நிலையை ஏற்படுத்தாது என்பது தான். ஐரோப்பியா போன்று மழைகாலத்தில் வீட்டினுள் அடங்கியிருந்து விட்டு, வெயிலுக்காகத் தவம் கிடந்த நிலையில் எம் மக்கள் இல்லை.

எனவே இளவேனில் காலத்தில் மக்கள் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது ஏற்க முடியாத ஒன்று. அனைத்துப் பருவங்களும் எம் மக்களுக்கு பொதுவான ஒன்றே

மற்றும்படி கச்சான் காற்று, வாடைக்காற்று என்று இப்போதும் கூட நமக்குள் புலக்கமிருக்கின்றது. அதை வைத்துத் தான் முன்பு கடற்பயணங்களைக் கூட மேற்கொண்டிருந்தனர்.

எனவே, பருவங்களின் பங்களிப்பு என்பது அவற்றுக்கும் உதவுவன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.