Jump to content

அங்கணாக்குழியும் எழுத்தாளர் நாறும்பூநாதனும்! - செம்மொழிப் புதையல்-1


Recommended Posts

பதியப்பட்டது

அங்கணாக்குழியும் எழுத்தாளர் நாறும்பூநாதனும்! - செம்மொழிப் புதையல்-1

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

 

புகழ்பெற்றத் தமிழ் எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களின் எழுத்துக்கள் பெரும்பாலும் "மக்கள் வாசிப்பு" சார்ந்தவை. தமிழ் எழுத்துலகின் படைப்பாளிகளைக் குறித்து நாம் அறிந்திராத அரிய செய்திகளை, 'இவர்' 'அவர்'களை 'வாசித்ததன்' பின்புலத்தில் மண்ணின் மணம் கமழ, சுவையுடன் படைப்பது இவரின் தனித்துவம்.

விளையும் பயிர்!

மாணவப்பருவத்திலேயே தம் படைப்புகளைத் தொடங்கிவிட்ட  "எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களை"ப் உயர்நிலைப்பள்ளி நாட்கள் தொட்டு வாசித்துவரும் எனக்கு அண்மையில் அவர் தமிழ் மரபு அறக்கட்டளையின் "மண்ணின் குரல்" வலைத்தளத்தில், "வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 1"ல் விரிவாகப் பேசியுள்ளதைத் தற்செயலாகக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது; வாசிப்பின் இறுதியில் வியப்பின் விளிம்புக்கே சென்றது என் மனம். ( http://voiceofthf.blogspot.com/2017/02/1.html)

தமிழ் மரபை அழித்தே தீர்ப்பது என்ற தீராப்பகையுடன் வடமொழியும், சமற்கிருதமும் இடைவிடாமல் மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தியும், அசராமல், இன்னும் தொன்மைத் தமிழ்மரபு மாசுபடாமல், நெல்லை மண்ணின் குரல் வியப்பூட்டும் வகையில் சங்ககாலத் தமிழ்மணம் கமழ உயிர்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதை அவர் பேச்சு உணர்த்தியது.

எழுத்தாளர் நாறும்பூநாதனின் பங்களிப்பு - நெல்லை மண்வாசனையில் வாழும் சங்கத்தமிழ்!   

நெல்லை மண்வாசனை குறித்து எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் பதிவிட்டுள்ள செய்திகள் தமிழியல் மற்றும் தமிழ் மரபு ஆய்வாளர்களுக்கான மிக முக்கியமான ஆய்வுத் தரவுகளாகும். அதிலிருந்த 'அங்கணக் குழி' என்னும் சொல்லாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

கம்பனைச் சாட்சிக்கு அழைத்துப் பரிமேலழகரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற உதவிய எழுத்தாளர் நாறும்பூநாதன்!

நாறும்பூநாதன் அவர்கள் 'அங்கணகுழி' குறித்துச் சொன்ன செய்திகள் மிகவும் தமிழக வரலாற்றுப் பார்வையில் மிக முக்கியத்துவம் கொண்டது! கம்பனைச் சாட்சிக்கு அழைத்துப் பரிமேலழகரைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த எனக்கு மிகவும் உதவியது அவ்விளக்கமே! சரி, நேராக விஷயத்துக்கு வருவோம்.

நெல்லையின் அங்கணாக்குழி!

நெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய வீடுகளில் கடைசி அறையாக இருப்பது சமையலறை. சமையல் அறையிலிருந்து புறவாசல் செல்ல ஒரு கதவு இருக்கும். சமையலறையின் ஓர் மூலையில் சுமார் இரண்டடி சதுர அளவுப் பரப்பு தாழ்வான வாட்டத்துடன்  சமையலறைக் கழிவுநீர் வெளியேறும்   துளையுடன் அமைந்திருக்கும் பகுதி 'அங்கணாக்குழி' அல்லது 'அங்கணக்குழி' என்றழைக்கப்படுகின்றது.

ஏழைப்பெண்களின் குளியலறையாக அங்கணாக்குழி!

தனியாகக் குளியலறை இல்லாத வீடுகளில், இந்த அங்கணக்குழிகளே பெண்களின் குளியலறை. காபி அல்லது டீ போட்டு முடித்தவுடன், காபித்தூள்-டீத்தூள் கழிவுகள் இந்த அங்கணாக் குழிகள் வழியாகவே சாக்கடையில் சங்கமிக்கும்.

காபி நன்றாக இல்லை என்றால், 'அங்கணாக் குழில கொட்டறத என் வயிற்றில கொட்டக் குடுத்திருக்க!" என்று கோபமுகம் காட்டுவார் நெல்லை மண்ணின் குடும்பத் தலைவன்.

திருக்குறளில் அங்கணாக்குழி!

இருக்கட்டும். 'அங்கணம்' என்ற சொல்லை உவமையாகக் கொண்டு ஒரு திருக்குறள் படைத்துள்ளார் வள்ளுவர்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர்
அல்லார்முன் கோட்டிக் கொளல். - திருக்குறள் 720

கேட்கும் சான்றாண்மையற்றத் தகுதியற்றவர்கள் முன்பு அறிவார்ந்த நல்ல கருத்துக்களை விதைப்பது அங்கணத்துக்குள் அமிழ்தத்தை ஊற்றுவதைப் போன்றது என்று வள்ளுவர் சொல்லும் திருக்குறள், சங்கத் தமிழ் வாழும் நாற்றங்காலாக நெல்லை மாவட்டத்தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதற்குச் சான்று.

பத்தாம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு உரையெழுதிய மணக்குடவர், 'அங்கணம்' என்ற சொல்லுக்கு 'அங்கணம்' என்றே பொருள் உரைத்துள்ளார் என்பது பத்தாம் நூற்றாண்டில் அச்சொல் தமிழகமெங்கும் பேச்சுவழக்கில் இருந்திருக்கிறது என்பதற்குச் சான்று.

கம்பராமாயணத்தில் அங்கணாக்குழி!

கி.பி. 1180-1250களில் வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தி கம்பன் கம்பராமயணத்தில்

வரி சிலை ஒருவன் அல்லால், மைந்தர் என் மருங்கு வந்தார்
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ? அரசுக்கு ஏற்ற
அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும்
நரியொடும் வாழ்வது உண்டோ -நாயினும் கடைப்பட்டோ னே! கம்பரா-யுத்தகாண்டம்-மாயாசனகப்படலம்-6"

என்று சீதையின் கூற்றாக முழங்கியதிலும் 'அங்கணம்' என்ற சொல்லாடல் உண்டே! கம்பனுக்குப்பின் பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்\ தோன்றிய வைணவரான பரிமேலழகருக்கு கம்பனின் 'அங்கணத்து அழுக்குத் தின்னும் நரி' என்ற உவமை உறுதியாகத் தெரிந்திருக்கவே செய்யும்!

பரிமேலழகர் ஏன் அங்கணாகுழியை மூடினார்?

திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் பின் ஏன் 'அங்கணம்' என்ற சொல்லுக்கு 'முற்றம்' என்று மாற்றுப் பொருள் ஏன் சொல்லவேண்டும்? வடமொழிப் பற்றாளரான பரிமேலழகர் தமிழர் மரபுகளும், தத்துவங்களும் தன்னகத்தே கொண்ட திருக்குறளிலிருந்து அவற்றை முற்றிலுமாக நீக்கி, திருக்குறளுக்கு ஆரியச் சாயம் பூசும் முழுமுனைப்பும் கொண்டவர் என்பதை 'அறம் என்பது மனுதருமம் சொல்வதை செய்வதும்,   மனுதருமம் மறுத்ததை விலக்குவதும்தான்' என்று சொல்லும் இடத்திலேயே தொடங்கிவிடுகின்றது.

பரிமேலழகரைப் பின்பற்றியே, கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் மு.வரதராசனார் உள்ளிட்ட பல உரையாசிரியர்களும் இப் பொருளையே உரைத்துள்ளார்கள் என்பதுதான் வியப்பு.

கூடுதல் கொசுறு: வண்ணநிலவன் எழுத்திலும் அங்கணாக்குழி!

வண்ணநிலவன் கதைகள் தொகுப்பில் எட்டாவதாக வரும் "அழைக்கிறார்கள்" கதையில் பிரிவுறாத நெல்லை மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் என்ற ஊரில் நிகழ்வாக, அங்கணத்தைக் குறித்துப் பின்வரும் ஓர் உரையாடல் வருகின்றது:

"குடும்பன் விசுவாசம் மிக்கவன். கஸ்தூரியின் வீடு இடிந்துவிட்டது தெரியும் அவர்களுக்கு. வீட்டடி மனையை வாங்கின குலசேகரப்பட்டணத்து சாயபு வீட்டை அடியோடு இடித்து மட்டமாக்கி புதுவீடு கட்ட ஆரம்பித்திருந்ததும் அப்போதுதான். குடும்பன் ஒதுங்கி நின்று சொன்னது வேதம். அவனும் கூலிக்கு வீடு இடித்தானாம். புறவாசல் அங்கணத்தை இடிக்கும்போது, அவர் போட்டுப் போட்டுத் துப்பின வெற்றிலை எச்சில் காவி இன்னும் அங்கணத்து மூலையில் இருந்ததைப் பார்த்தேஞ்சாமி என்றானே."

மேற்கண்ட வரிகள் அழகாகச் சொல்லும் 'அங்கணம்' என்பது புறவாசலில் உள்ள ஒன்று என்று. பண்டையத் தமிழர்களின் இல்லங்களில் முற்றம் என்பது வீட்டின் முன்னேயுள்ள பகுதி என்பதால் அது எப்போதும் தூய்மையாக வைக்கப்படுவது அனைவரும் அறிந்த செய்தி. முற்றம் என்பது முன்றில் என்றும் அழைக்கப்பட்டது.

சீரிளமைச் சங்கத்தமிழ் வாழும் நெல்லை!

'ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதையாத சீரிளமையோடு இன்றும் விளங்கும் தமிழ்மொழியின் தொன்மைப் பெயர்ச்சொல்லாடல்கள் இன்றும் தென்மாவட்ட மக்கள் மொழியாக செம்மையாக வாழ்ந்து வருகின்றது. அத்தகைய சொற்களைப் பாதுகாக்க நம்மிடையே மக்கள் வாசிப்பாளரரும், எழுத்தாளருமான நாறும்பூநாதன் போன்ற படைப்பாளிகளை எம் தமிழன்னை தொடர்ந்து பெறும் பேறு பெற்றவள்! அவளின் சீரிளமையும் குன்றாத வளமையுடனும் மாறாத செழுமையுடன் என்றும் பொலிந்து ஒளிரும்!

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலி னால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

புதையல் வேட்டை தொடரும்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நானும் சைக்கிளும் (சிறுகதை)   நான் எட்டாவது படிக்கிறவரை சைக்கிள் ஓட்டக்கத்துக்கல. இது எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்துச்சு. காரணம் பழக ஒருத்தரும் சைக்கிள் குடுக்கல. எங்க அப்பா சைக்கிள தொடைச்சி வைக்கிற உரிமை மட்டும்தான் எனக்குத்தந்திருந்தாரு. ஓட்டக்கேட்டா ஒதைதான் விழும்...   வாடகைசைக்கிள் கடைக்கிப்போனா சின்னபசங்களுக் கெல்லாம் சைக்கிள் கெடையாதுன்னு வெரட்டுவாரு எங்க தெருவில வாடகைசைக்கிள் வைச்சிருந்த ஒரு அண்ணன் ரவி. அவர்கடையில புத்தம் புது சைக்கிள் வரிசையா நம்பர் போட்டு நிறுத்தியிருப்பாரு. பளபளன்னு தொடச்சி ஆயில் கிரீஸ் எல்லாம் போட்டு நிப்பாட்டி இருப்பாரு. மணிகணக்கில் வாடகை நாள் வாடகை உண்டு...   சின்னபசங்க போனா தரமாட்டாரு. கீழபோட்டு வண்டி பாழாயிடும் போங்கடா ந்னு வெரட்டுவாரு . இதுக்கு நடுவில அம்மாயி வீட்டுக்குப்போனப்ப அங்க ஒரு வாடகைச்சைக்கிள் கடை இருந்துச்சு.   அம்மாயிகிட்ட அழுது அடம் பிடிச்சி காசு வாங்கிட்டு அங்க போனேன். சின்ன சின்ன சைக்கிள் எல்லாம் இருந்துச்சு. அங்கபோய் சைக்கிள் கேட்டா யாரு நீ புதுபையனா இருக்க தெரியாத பயலுகளுக்கெல்லாம் தரமுடியாதுன்னு சொன்னாரு. நான் அம்மாயி பேர் சொல்லி அவங்க பேரன்ன்னு சொன்னவன்ன யாரு மூத்த மக பேரனான்னு கேட்டுட்டு சரி இந்தத்தெருவுக்குள்ளயே ஓட்டுன்னு குடுத்தாரு. ஆனா சின்ன சைக்கிள்னா ஓட்டிடலாம்ற கனவு ஓட்டிப்பாத்தப்ப தகர்ந்துருச்சு..... சிறுசானாலும் பெருசானாலும் பழகுனாத்தான் ஓட்டமுடியும் ந்னு தெரிஞ்சிக்கிட்டேன் சைக்கிள் கடைக்காரு நான் படுற பாட்டைப்பாத்துட்டு மூணுசக்கர சைக்கிள் குடுத்தாரு. இது ஈசியா இருக்கும் ஓட்டலாமுன்னு சொன்னாரு. ஆனா அது எனக்குப்பிடிக்கல. என் லட்சியம் என்னா ஆகுறது....   இதுமாதிரி நான் இருந்தப்ப எனக்குக் கெடைச்ச வந்தான் மோகன். அவன் சகல கலா வல்லவன் அப்பயே சைக்கிள் ஓட்டுவான். அவங்க மாமா வைச்சிருந்த ஸ்கூட்டர் ஓட்டுவான். அவன் சொன்னான் நான் ஒனக்குக்கத்துத் தாறேன்ன்னு காசுகொண்டா நான் கேட்டால் ரவி அண்ணன் சைக்கிள் குடுப்பாரு. நான் கத்துத்தாறேன்னான். ரொம்ப சந்தோசமாப்போச்சு. அம்மாகிட்ட காசு கேட்டு கிடைக்காத்துனால அய்யா கிட்ட வேலை செஞ்சு காசு சம்பாதிச்சி 2 ரூ எடுத்துக்கிட்டு மோகன் கிட்டப்போனேன் அவனும் சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கிட்டு வந்தான். அவன் சொன்னான் மொதல்ல கொரங்கு பெடல் போட்டுப் பழகு. நான் பிடிச்சிக் கிறேன்னு சொல்லி சைக்கிள்ல ஏத்தி விட்டான் அது மேல ஏறாம பார்குள்ள காலை விட்டு ஓட்டுறது. அவன் பிடிச்சிக்கிட்டு பின்னாடி ஓடி வருவான். இது ஒரு வாரம் ஓடிச்சி. இடையில் கைய விட்டு என்னத் தனியா ஓட்டவிட்டான். ஓரளவு பேலன்ஸ் பண்ணுறது கைவசம் வந்துச்சு. இதுக்கு சாயங்காலம் அவனுக்கு டி, ஆர் டீ க்கடையில பஜ்ஜி வாங்கித்தரணும்.... அடுத்தவாரம் பார்மேல ஏறி ஓட்டச் சொல்லிக் குடுத்தான். அந்தசைக்கிள்ல கால் சீட்டுல ஒக்காந்தா எட்டாது அதுனால உயரமான எடத்துல கொண்டு போய் சைக்கிள நிறுத்தி அதுல ஏறிக்கிட்டு பார்மேல ஒக்காந்து ஓட்டனும்.   அன்னிக்கி ரெண்டு மணிநேரம் வாடகைக்கு எடுத்துக்கிட்டுப்போனோம். ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டிக்கிட்ட பயிற்சி. அப்ப எல்லாம் பஸ்டாண்டு அங்க வரல. ரொம்ப பஸ் வராது. ஃப்ரீயா இருக்கும். அங்க சைக்கிள் மேல என்னை ஏத்திவிட்டு ஓட்டச்சொல்லி பின்னாடி பிடிச்சிகிட்டு அவன் ஓடிவந்தான்.   கொரங்கு பெடல்ல இருந்து பார்ல ஏறி ஓட்ட ஆரம்பிச்ச வன்ன சைக்கிள் ரொம்ப வேகமா ஓட்ட முடிஞ்சது. ஆனா அவனால ஓடி வரமுடியல விட்டுட்டான். இது தெரியாத நான் படுவேகமா ஓட்டினேன்... அப்புறம்தான் தெரிஞ்சது பின்னாடி மோகன் இல்லைன்றது...   கைகால் நடுங்க ஆரம்பிச்சிருச்சு. அது ஒரு இறக்கம் அதுனால சைக்கிள் வேகமா ஓடிச்சி பிரேக் புடிக்கனும் ன்னு தோணல....   கைகால் நடுக்கம் வேற நேர போய் ஒக்காந்துருந்த ஒரு பாட்டிமேல போய் மோதி சைக்கிள் கீழ விழுந்து டைனமோ நொறுங்கிப்போச்சி நெறையா தேய்ப்பு வேற. பாட்டி பாவம் குய்யோ மொறையோன்னு கத்துச்சு. அதுக்குள்ள மோகன் ஓடியாந்து என்னை தூக்கி விட்டு சைக்கிள் எடுத்தான் அதுஹேண்ட் பார் முறுக்கிக்கிடுச்சு அதை நேராக்கி என்னையும் ஏத்திக்கிட்டு தப்பிச்சி வந்துட்டோம்... இன்னும் நேரம் இருந்துச்சு.   எனக்கு மொழங்காலு கைமூட்டு எல்லாம் தேய்ஞ்சு ரத்தம் ஒழுகுச்சு.. அதுல குல வழக்கப்படி மண்ணை அள்ளி தேய்ச்சிட்டு சைக்கிள் கடைக்கிப்போனோம் . அங்க ரவி அண்ணகிட்ட எதுவும் நடக்காதமாதிரி சைக்கிள நிப்பாட்டுனோம் அண்ணே போதும் சைக்கிள் விட்டுட்டோம் நோட் பண்ண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டு நழுவினோம்...   அவர் எப்புடியோ கண்டுபிடிச்சிட்டாரு. கொஞ்சம் இருங்கன்னு சொல்லிட்டு எந்திரிச்சி வந்து வண்டியபாத்தாரு. இதுக்குத்தான் சின்னபசங்களுக்கு நான் சைக்கிள் குடுக்குறதில்ல. சைக்கிள் டேமேஜ் ஆயிடுச்சு 50 ரூ ஆகும் டைனமோ நொறுங்கிப்போச்சு. பார் வளைஞ்சிடுச்சு போக்கஸ் கம்பி ரெண்டு கட்டாயிடுச்சு சைக்கிள்ள பெயிண்டு போயிடுச்சு. ஒழுங்கா 50 ரூ குடுங்கன்னாரு எனக்கு ஆடிபோச்சு உசிறுஅஞ்சு ரூ கேட்டாலே ஆயிரம் கேள்விகேக்கும் அப்பாவை எப்புடிச்சமாளிக்கிறதுன்னு தெரியல அதுக்குள்ள ரவி அண்ணன் சட்டையக் கழட்டிக்குடுத்துட்டு போ. காசைகொண்டாந்து குடுத்துட்டு சட்டைய வாங்கிட்டுப்போன்னாரு. நான் சட்டையக் கழட்டிக் குடுத்துட்டு ( இருக்குறதே ரெண்டு சட்டைதான்) ஒண்ணும் தெரியாத மாதிரி வீட்டுக்குப் போய்ட்டேன் அம்மா கிட்ட 50 ரூ கேட்டேன் எதுக்குன்னு கேட்டாங்க. விவரம் சொன்னேன்..   அம்புட்டுகாசுக்கு நான் எங்க போறது.. அப்பாகிட்டகேள் ந்னு சொன்னாங்க. அவர்கிட்டப்போனா முதுகுதோல உரிச்சிடுவாரேன்னு நடுங்கிட்டு இருந்தேன்..... அதுக்குள்ள அப்பா வந்தாரு. அவர் கையில என் சட்டை இருந்துச்சு.. அதைப்பாத்ததுமே குலை நடுங்க ஆரம்பிச்சது... அவர் மூஞ்சி கடும் கோவத்துல இருந்துச்சு.... பட படத்துச்சு நெஞ்சு இன்னிக்கி முதுகுத்தோல் உரியப்போகுதுன்னு தெரிஞ்சி போச்சு ஏன்னா அவர் மூஞ்சில அம்புட்டு கோவம்... என்னக்கூப்புட்டாரு. எங்க போட்ட இந்த சட்டையன்னாரு. நான் முளிச்சேன்.... அடி கிடி பட்டதான்னு கேட்டாரு. நான் கைகால காமிச்சேன் அம்மாவை கூப்புட்டு அதுல தேங்கா எண்ணை தடவச்சொன்னாரு.... இனிமே அவன் கிட்ட சைக்கிள் எடுக்காத என் சைக்கிள் தாறேன் ஒழுங்காப்பழகிக்கோ அவன் திருட்டுப்பய ஓவராக்காசு கேட்டான் மிரட்டிடு 20 ரூ குடுத்திட்டு வந்தேன்.இனிமே என்சைக்கிள் எடுத்து ஓட்டிப்பழகுன்னாரு. யார் இது நம்ம அப்பாவா முதுகுத் தோல் உரியும் நு இருந்தப்ப அவர் யாருன்னு காட்டிட்டாரேன்னு கண்ணு கலங்கிடுச்சு. அவர்தான் "அப்பா என்ற குலசாமி" அ.முத்துவிஜயன் All reacti
    • இந்த அதானி குழுமம் ஒரு இந்தியாவின் பினாமி போல திகழ்வதற்கு  உதாரணமாக இந்திய அண்டை அதானி குழுமம் நாடுகளில் ஏற்படுத்திய வர்த்தக ஒப்பந்தங்களை பின்னர் அந்த நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையே ஏற்படும் இராய தந்திர போர்களில் ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்படுகின்றமை பொதுவான இயல்பாக காணப்படுகின்றது. அதானி குழுமம் ஒரு Public listed ஆக இருந்தும் பங்குதாரர்களின் நலனை கருத்திற்கொள்ளாமல் இவ்வாறு இந்திய அரசுக்கு ஆதரவாக செயற்படுவதனை கேள்விக்குள்ளாக்கமல் இருக்கிறார்கள். இந்த அதானி குழுமத்துடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதனை அந்தந்த நாட்டு மக்கள் ஊழல் நடவடிக்கையாகவே பார்க்கவேண்டும்.  
    • முன்னர் ஐரோப்பியர்களிடையே கூட சாம்ராஜித்திற்கு மேலாக (சிற்றரசு, அரசு, பேரரசு என்பவற்றிற்கு மேலாக) போப் இருந்தது போல இலங்கையில் பெளத்த மதம் தற்காலத்திலும் உள்ளது, பொதுவாக மதங்களின் பிற்போக்குவாதம் ஒரு நாட்டை சீரழித்த நல்ல உதாரணமாக இலங்கை இருந்துள்ளது, அது இந்த இடது சாரி என கூறிக்கொள்ளும் இந்த அரசிலும் நிகழ்வதுதான் வேடிக்கையாக உள்ளது. ஆனால் இந்த நிலை எப்போதும் மாறும்? எப்போது இலங்கை உருப்படும்?
    • மக்கள் நிராகரித்தாலும் சாணக்கியனுக்கு மொழிபெயர்ப்பாளராகச் சென்று படம் பிடிக்கலாம்
    • ஆரிய கூத்தாடினாலும் காரிய கூத்தாக இருக்க வேண்டும் என கூறுவார்கள், சிறுபான்மையினர் இந்த இலங்கையர்கள் எனும் மாயையில் சிக்கி சீரழியாமல், இலங்கையிலுள்ள அவர்களது உள்வீட்டு பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடாமல் (அவர்கள் சிறுபான்மையினரின் நாடாக இலங்கையினை கருதுவதே இல்லை என்பதே யதார்த்தம்) எமது பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதனை மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என கருதுகிறேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.