Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கையில்லா பிரேரணை சட்டரீதியாயின் பதவி விலகுவேன் – மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-3-720x450.jpg

நம்பிக்கையில்லா பிரேரணை சட்டரீதியாயின் பதவி விலகுவேன் – மஹிந்த

நாடாளுமன்றம் இன்றளவில் நாடக கூடமாக மாறிவிட்டதாகவும், சட்டரீதியான வகையில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமாயின் பதவியை துறந்துவிட்டு செல்லத் தயார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (வௌ்ளிக்கிழமை) கசாகல விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது எதிர்ப்புகளை வௌிப்படுத்துவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை, எனினும், நாடாளுமன்றத்திற்கு கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் எடுத்து வரப்பட்டமை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இருந்த போதும் இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கையோ, ஒழுக்காற்று நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்திற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாவிட்டால், அதனை பொதுமக்களிடம் ஒப்படைக்குமாறு அவர் கோரியுள்ளார்.

அவ்வாறன்றி சட்டவிரோதமாக அவர்கள் செயற்படுவார்களால் தமது தரப்பினரும் உரிய வகையில் பதில் வழங்குவார்கள் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ எச்சரித்துள்ளார்.

http://athavannews.com/சட்டரீதியான-நம்பிக்கையி/

அடம்  பிடிக்கிறான் ஐயா...  
அதுகும்... சொறி லங்காவுக்கு நல்லது. 
நீங்கள்... நடத்துங்கள்  உங்கள் நாடகத்தை.
நாங்கள்... உன்னிப்பாக,  அவதானிக்கின்றோம். 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் இந்த சனநாயக விரோத சர்வாதிகாரப் போக்கு புதிதல்ல.

ஆனால்.. எதிர்கட்சி தலைவராக இருக்கவே முடியாத சம்பந்தன்.. அதனை இவ்வளவு காலமும் அலங்கரிக்கும்.. சனநாயக விரோதம் என்பது.. மகிந்தவுக்கு அவர் சளைத்தவரல்ல.. என்பதையும் சொல்லிச் செல்கிறது. 

இவர்கள் எல்லோரும் மக்கள் விரோதிகள். துரோகிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனை எதிர்கட்சி தலைமையில் இருத்தியதன் மூலம் தமிழ்கூட்டணி கட்சிகளை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சிகளாக்கியதன் தார்ப்பரியத்தையும் பின்னணியையும் இன்றுவரைக்கும் புரிந்துகொள்ளாமல் போலி ஜனநாயக ஆட்சியை சிறிலங்காவில் நடத்தும் சிங்கள அரசுக்கு முண்டுகொடுத்து சர்வதேச அரங்கில் காப்பாற்றிக்கொண்டிருப்பது ஜனநாய துரோகம் மட்டுமல்ல இனத்துரோகமும்கூட.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.