Jump to content

அப்புக்குட்டி 


Recommended Posts

பதியப்பட்டது

 

அப்புக்குட்டி 

முன்பொரு காலத்தில் ஒரு புல்லாங்குழல் தயாரிப்பவர் தன் மனைவியுடனும், தனது ஏழு மகன்களுடனும் வாழ்ந்து வந்தார். அவ்வேழு மகன்களில் முதல் மகனுக்குப் பத்து வயது, கடைசி மகனுக்கு 7 வயது.

அந்தக் குடும்பம் ஏழ்மையில் வாழ்ந்து வந்தது. அதனால் அந்த ஏழு மகன்களுக்கும் உணவளிப்பது கடினமாக இருந்தது. கடைசி மகன் மிகவும் பலவீனமாக இருந்தான். அவனால் சரியாகப் பேசவும் முடியாது. அதனால் அவனை அனைவரும் கேலி செய்து மகிழ்ந்தனர். அவன் பிறந்த பொழுது மிகவும் சிறியவனாக, அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அப்பு கமலைவிட குள்ளமாக ஒருவருடைய கட்டைவிரல் அளவிற்குதான் இருந்தான். அதனால் அவனை அனைவரும் அப்புக்குட்டி என்றே அழைத்தனர். அதனையும் சுருக்கி அப்பு என்றே அழைத்தனர்.

அப்புவை அனைவரும் அடிமை போல் நடத்தினர். அவன் எது செய்தாலும் அவன் மீது பழி சுமத்தி அவனைக் கேலி செய்தனர். இருப்பினும் அப்பு அவனது சகோதரர்களைவிட புத்திசாலி. சிறிதளவு பேசினாலும் கருத்தாகப் பேசுவான். நல்ல சிந்தனையாளனாகவும் இருந்தான். சுருங்கக் கூறினால் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தான்.

ஒரு வருடத்தில் அவர்கள் வசித்த நாடு முழுவதும் பஞ்சம் தலைவிரித்தாடியது. அதனால் அப்புவின் பெற்றோர் தங்களது ஏழு குழந்தைகளையும் எங்காவது கண்காணாத இடத்தில் விட்டுவிட நினைத்தனர். ஒரு நாள் அவ்வேழு பிள்ளைகளும் தூங்கிய பிறகு அப்புவின் தந்தையும் தாயும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்புவின் தந்தை மனதில் பாரத்துடனும் கண்ணில் கண்ணீருடனும் இருந்தான்.

“நம்மால் நமது குழந்தைகளைக் காப்பாற்ற முடியாது, நமக்குப் போதிய வருமானம் இல்லை, நாட்டிலும் பசி பஞ்சம் என்று இருக்கிறது. ஒரு வேளை சோற்றுக்கே நாம் அல்லல்படுகிறோம். எனது குழந்தைகள் எனது கண் முன்னே இறப்பதை என்னால் காண இயலாது. அதனால் அவர்களைக் கண்காணாத காட்டில் கொண்டு சென்று விட்டுவிடுவோம். அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு மூங்கில் காட்டிற்குச் சென்று அங்கு புல்லாங்குழல் செய்ய மூங்கில் மரங்களைப் பறித்து வருவோம் என்று கூறுவோம். அவர்கள் மூங்கில்களை சேகரித்துக் கொண்டிருக்கும்ப் பொழுது அவர்களறியா வண்ணம் நாம் திரும்பிவிடுவோம்” என்றார் அப்புவின் தந்தை.

பெருங்குரலெடுத்து அழுதாள் அப்புவின் தாய். “உங்கள் மனது என்ன கல்லா? நமது குழந்தைகளை இப்படித் தனித்துவிட எப்படி உங்களுக்கு மனது வருகிறது?” என்று அழுதாள்.

அவள் அழுத அழுகையெல்லாம் வீணாய்ப் போனது. என்னதான் அந்த ஏழு குழந்தைகளின் தாய் என்றாலும் வறுமையால் அவளது கணவன் பேச்சிற்கு மறுபேச்சும் பேச முடியவில்லை. தன் கண் முன்னரே தனது குழந்தைகள் இறப்பதை விட காட்டில் சென்று இறந்தாள் தனது துக்காமாவது குறையும் என்றெண்ணி அழுது கொண்டே தூங்கச் சென்றாள்.

அப்பு தன் பெற்றோர்கள் ஏதோ தங்களது வணிகம் சார்ந்து பேசுகின்றனர் என்றெண்ணி மெதுவாக எழுந்து பூனை போல் நடந்து தனது தந்தையின் இருக்கை அருகே இருந்துக் கொண்டு அவர்கள் பேசுவதனைத்தையும் அவர்களறியாது ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். தந்தையும் தாயும் தூங்கியதும் அவனும் தனது படுக்கைக்குச் சென்றான். புரண்டு புரண்டு படுத்தாலும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தான். அதிகாலையிலேயே எழுந்து ஒரு வற்றிய ஆற்றின் அருகே சென்று அங்கிருந்த கூழாங்கற்களைத் தனது கால்சட்டைப்பை முழுவதும் நிரப்பிக் கொண்டு தன் வீட்டிற்குத் திரும்பினான். எல்லோரும் அன்று காலைவேளையில் காட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்பு தமக்கும் தனது சகோதரர்களுக்கும் என்ன நடக்கப்போகிறது என்பதைத் தெரிவிக்காமல் அமைதியாகவே அவர்களுடன் ஏதுமறியாப் பாலகனாய் பயணித்தான்.

அவர்கள் ஒரு அடர்ந்த காட்டிற்குச் சென்றனர். பத்தடிக்கு அப்பால் உள்ளவரைக் கூட அந்தக் காட்டில் யாரும் காண முடியாதளவிற்கு அடர்ந்த காடு அது. அப்புவின் தந்தை மூங்கில்களை வெட்டி தனது குழந்தைகளிடம் கொடுத்தார். அவர்களும் அவற்றை வாங்கிச் சேகரித்தனர். குழந்தைகள் மும்முரமாக மூங்கில் குச்சிகளைச் சேகரிப்பதைக் கண்ட அப்புவின் தாயும் தந்தையும் அப்பச்சிளம் பாலகர்கள் அறியாவண்ணம், மெதுவாக அக்காட்டில் அவர்களைத் தவிக்கவிட்டு அகன்றனர். ஓட்டமும் நடையுமாக இருவரும் தங்களது இல்லத்திற்கு வந்துவிட்டனர்.

தாயையும் தந்தையையும் காணாமல் பாலகர் அனைவரும் பயந்தனர். காட்டின் பல இடங்களில் தேடியும் அவர்கள் இல்லாத காரணத்தால் அழுது புரண்டனர்; கதறினர்; கரைந்தனர். அப்பு மட்டும் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் வழி தெரியும். அவன் தன் வசமிருந்த கூழாங்கற்களை ஒவ்வொன்றாக வீட்டிலிருந்து தொடர்ச்சியாகக் காடு வரை போட்டுக் கொண்டே வந்திருந்தான்.

சகோதரர்கள் அனைவரும் அழுது முடிந்து அயற்சியடைந்ததும், அப்பு “சகோதரர்களே! கவலை கொள்ளாதீர்கள். தாயும் தந்தையும் நம்மைத் தனியாக இங்கே தவிக்கவிட்டுச் சென்றுவிட்டனர். எனக்கு வீட்டிற்குச் செல்லும் வழி தெரியும். என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள்”, என்று கூறி கூழாங்கற்களைக் கண்டவாறே தனது வீட்டிற்குத் தன் சகோதரர்களோடு வந்து சேர்ந்தான். அதற்குள் இரவு வந்திருந்தது.

வீட்டிற்கு வந்தாலும் வீட்டிற்குள் நுழையாமல் வீட்டின் வாயிற்கதவருகே அனைவரும் நின்று தங்களது பெற்றோர்கள் என்ன பேசுகின்றனர் என்று ஒட்டுக்கேட்டவாறே இருந்தனர்.

அப்புவின் தந்தையும் தாயும் வீட்டிற்கு வந்த மறுகணம், அரசர் முன்பொரு காலத்தில் அப்புவிடம் வாங்கிய புல்லாங்குழலுக்காக 10 வராகன்களைத் தனது பணியாளர் வசம் கொடுத்து அனுப்பியிருந்தார். அரசர் அந்தப் பத்து வராகன்களைத் தருவார் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை அப்புவின் தந்தை. அந்தப் பத்து வராகன்களைக் கொண்டு புதிய வாழ்க்கை வாழலாம், இத்தனை நாள் பட்டினி இருந்தது போதும் இன்றிரவு நன்றாக விருந்துண்ண வேண்டும் என்று நினைதார் அப்புவின் தந்தை. தனது மனைவியை அழைத்துக் கறி சாப்பிட்டு எத்தனை நாட்கள் ஆகிவிட்டது, நீ கறிக்கடைக்குச் சென்று நல்ல ஆட்டுக்கறி வாங்கி வா என்று கட்டளையிட்டார். மனைவியும் நிறைய ஆட்டுக்கறியுடன் வாங்கி வந்து இரவு விருந்துண்டனர். பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அவர்கள் பசியாறிய பின்புதான் அப்புவின் தாய்க்குத் தனது குழந்தைகள் பற்றிய எண்ணமே வந்தது.

அப்புவின் தாய் அழத்தொடங்கினார். “ஏதுமறியா என் பச்சிளம் குழந்தைகள் எங்கே? அவர்கள் இங்கிருந்தால் அவர்களுக்கும் நல்ல விருந்து கிடைத்திருக்கும், அவர்கள சாப்பிட்டார்களோ இல்லையோ? என்ன செய்கிறார்களோ? அந்தக் காட்டில் எப்படி அல்லாடுகிறார்களோ? உன்னால்தான் எல்லாம். இந்த வீட்டில் எல்லாமே உங்களது விருப்பப்படிதான் நடக்க வேண்டும், எங்களுக்கு எல்லாம் உணர்ச்சிகளே இருக்கக் கூடாது. அவர்கள் மீது சிறிது கரிசனம் கூட உங்களுக்கு இல்லை. அங்கே காட்டிலுள்ள நரிகளும் நாய்களும் எனது குழந்தைகளைக் கொன்று உண்டிருக்கும். நீ மனிதனே அல்ல. எனது குழந்தைகளை இப்படித் தொலைத்துவிட்டாயே”, என்று புலம்பினாள்.

“உங்களுக்கு நமது குழந்தைகள் மீது கொஞ்சம் கூட இரக்கமே இல்லை. இரக்கமே இல்லாத கல் நெஞ்சக்காரனடா நீ” என்று இருபது முறைக்கு மேல் கூறிவிட்டாள் அப்புவின் தந்தை. அவனது தந்தைக்கு ஆத்திரம் வர “வாயை மூடு”, என்று கூறி அவளை அடிப்பதற்குக் கையை ஓங்கினார். அப்புவின் தந்தைகுக்கும் அவரது குழந்தைகளைப் பிரிந்த துக்கம் நிறையவே இருந்தது. ஆனாலும் அவளை வாயை மூடி அமைதியாக இருக்குமாறு கூறினார்.

மனதில் பாரத்தோடு அழுது கொண்டே, “எங்கே எனது குழந்தைகள்? ஏதுமறியாப் பச்சிளம் பாலகர்கள் அவர்கள்”, என்று கூக்குரலிட்டாள் அப்புவின் தாய். அவளது கூக்குரல் வாயிற்கதவருகே இருக்கும் பாலகர்களுக்கும் கேட்டது.

“நாங்கள் இங்கிருக்கிறோம். இங்கிருக்கிறோம்”, என்று கூறியவாறே அனைத்து குழந்தைகளும் அழுதுகொண்டே வந்து சேர்ந்தனர்.

அப்புவின் தாய் அனைத்துக் குழந்தைகளையும் உள்ளே அழைத்து அரவணைத்துப் பாசமழை பொழிந்தாள்.

“உங்களைக் கண்டபின்புதான் எனக்கு உயிரே வந்தது. இப்பொழுதுதான் எனக்கு ஆனந்தமாக இருக்கிறது.  நீங்கள் அனைவரும் அயற்சியோடும் பசி மயக்கத்திலும் இருப்பீர்கள். உங்கள் உடலெல்லாம் சேறாக இருக்கிறது.  உங்களைக் குளிப்பாட்டி உணவளிக்கிறேன்”, என்றாள் அப்புவின் தாய்.

அவர்கள் குளித்து முடித்து உணவருந்த அமர்ந்தனர். அவர்கள் உணவருந்தும் பொழுதே அவர்கள் காட்டில் அச்சத்துடன் உலவியதையும் துயரத்தில் உழன்றதையும் தங்களது தாய் தந்தையிடம் கூறினர். அவர்கள் அனைவரும் ஒன்றாக ஆனந்தமாக வாழ்ந்தனர். ஆனால் அந்த ஆனந்தம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. பத்து வராகன்கள் விரைவிலேயே தீர்ந்து போனது, மீண்டும் வறுமை வாட்டியது. மீண்டும் குழந்தைகளைக் காட்டில் விட்டுவிட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார் அப்புவின் தந்தை. இந்த முறை கண்டிப்பாகத் தொலைதூரத்தில் கொண்டு சென்றுவிட வேண்டும் என்றெண்ணினார் அப்புவின் தந்தை.

இந்த முறையும் தாயும் தந்தையும் ரகசியமாகப் பேசியதை அப்பு ஒட்டுக்கேட்டுவிட்டான். இந்த முறையும் கடந்த முறை போன்றே திட்டம் தீட்டி வந்துவிட வேண்டும் என்று நினைத்தான் அப்பு. அதிகாலையில் எழுந்து மீண்டும் கூழாங்கற்களை எடுத்து வர எழுந்தான். ஆனால் கதவின் தாழ்ப்பாள் இந்த முறை கீழும் மேலுமாக இரண்டிலும் போடப்பட்டிருந்தது. அப்புவால் உயரத்தில் உள்ள தாழ்ப்பாளைத் திறக்க முடியவில்லை. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனது தந்தை அனைவருக்கும் சாப்பிட ரொட்டிகளைக் கொடுத்தார். அப்பு கூழாங்கல்லிற்குப் பதிலாக ரொட்டியைப் பயன்படுத்த எண்ணினான். ரொட்டியைத் தூளாக்கித் தனது கால்சட்டைப்பையில் நிரப்பிக் கொண்டான். அப்புவின் பெற்றோர் மிக அடர்ந்த காட்டின் நடுப்பகுதி வரை குழந்தைகளோடு சென்றுவிட்டனர். அப்புவிற்கு அக்காட்டினைக் கண்டோ அல்லது தனது தந்தை காட்டின் மையப்பகுதிக்குக் கொண்டு சென்றது பற்றியோ கவலை இல்லை. அவன் எப்படியும் வீட்டை, தான் தூவி வந்த ரொட்டித் துண்டுகள் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தான். அவனது பெற்றோர்கள் இவனைத் தனித்துவிட்டுச் சென்றதும், அவன் திரும்பும் வழியைத் தேடினான். சிறிது தூரத்திலேயே அவனால் வீட்டிற்குச் செல்லும் வழியை அறிய முடியவில்லை. அவனது ரொட்டித் துண்டுகள் அனைத்தினையும் பறவைகளும் எறும்புகளும் கடத்திச் சென்றுவிட்டன.

குழந்தைகள் அனைவரும் இப்பொழுது சிக்கலில் மாட்டிக்கொண்டனர். காட்டிற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தனர். காட்டினை விட்டு வெளியேறும் வழியை அவர்களால் கண்டறியமுடியவில்லை. இரவு வரை தேடியும் எந்த வழியும் தெரியவில்லை. காற்று பலமாக ஓலமிட அவர்களுக்குப் பயம் அதிகமானது. அனைத்துத் திசைகளிலும் ஓநாய்கள் ஓலமிட அவர்களை நோக்கிதான் ஓநாய்கள் வருவதாக நினைத்தனர். தலையைத் திருப்பி ஓலமிடும் சத்தம் வரும் திசையில் பார்க்கக் கூட பயம் கொண்டனர். மூச்சுவிடக் கூட பயந்தனர். சிறுது நேரத்திற்கெல்லாம் மாமழை காட்டில் பொழிந்தது. மழையில் அவர்கள் உடல் முழுவதும் நனைந்துவிட்டது. குளிர் அவர்களது எலும்பையே உருக்கும் அளவிற்கு மழை குளிர்ச்சியைத் தந்தது. காட்டில் அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சகதியில் சறுக்கியது. சறுக்கிச் சறுக்கிச் சகதியில் விழுந்து புரண்டனர். உடை, கை, கால்கள் என உடலின் அனைத்துப் பகுதியிலும் சகதியானது. அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அப்பு அங்கிருந்த ஒரு உயரமான மரத்தில் குரங்கைப் போன்று வேகமாக ஏறினான். மரத்தின் உச்சியிலிருந்து ஏதாவது வழி தெரிகிறதா என்று பார்த்தான். அனைத்துத் திசைகளிலும் நோக்கியதில் தொலைதூரத்தில் ஒரு சிறிய மெழுகுவர்த்தியின் ஒளியைக் கண்டான். மரத்திலிருந்து வேகமாகக் கீழிறங்கி வந்தான். இப்பொழுது அவனால் எந்த ஒளியையும் காண முடியவில்லை. ஆனால் அவன் ஒளி வந்த திசையை அறிந்திருந்த காரணத்தால் தனது சகோதரர்களுடன் ஒளி வரும் திசை நோக்கி அவர்களைக் கவலையுடன் அழைத்துச் சென்றான். சிறிது நேரத்தில் ஒளி வந்த பகுதியைக் கண்டு கொண்டான், காட்டினை விட்டு வெளியேறிய காரணத்தால் ஒளி வரும் திசை தெளிவாகத் தெரிந்தது.

ஒளி வரும் திசையை வைத்தே நடக்க ஆரம்பித்தனர்.. ஆற்றில் விழுந்த எறும்பிற்கு ஒரு சிறு இலை உயிர் பிழைக்கும் வாய்ப்பை அழித்தது போன்று இந்த ஒளியை தங்களது உயிர் பிழைக்கும் ஒரு வரமாகக் கருதி பயமேதுமின்றி அந்த ஒளி வந்த வீட்டிற்கே வந்து விட்டனர். அந்த வீட்டில் இந்த இரவு மட்டும் தங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். வீட்டின கதவைத் தட்ட ஒரு அழகிய கருணையுள்ளம் கொண்ட பெண் வந்து கதவைத் திறந்து பார்த்தார். அங்கே ஏழு குழந்தைகள் இருப்பதைக் கண்டு கவலையுடன் அவர்களைப் பார்த்தார். “குழந்தைகளே, எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த வீடு யாருடையது என்று தெரியுமா? குழந்தை நரமாமிசம் சாப்பிடும் எனது கணவனின் வீடு. அவன் பச்சிளங்குழந்தைகளை உண்பவன்”, என்று கவலையோடு கூறினார்.

“அப்படியா அம்மா”, என்று கேட்டான் அப்பு. அனைவரும் உடம்பில் குளிரோடும் மனதில் துயரோடும் அங்கே நின்றிருந்தனர். “இப்பொழுது என்ன செய்வது? நீங்கள் எங்களுக்கு உங்களது இவ்வீட்டில் அடைக்கலம் தரவில்லையென்றால் காட்டில் இருக்கும் இரக்கமற்ற ஓநாய்கள் எங்களைக் கொன்று உண்டுவிடும். அதற்குப் பதிலாக உங்களது கணவர் எங்களை உண்டால் பருவாயில்லை. குறைந்தபட்சம் நீங்கள் உங்களது கணவரிடம் பேசி எங்களைக் காப்பாற்ற வழியுண்டு, ஆனால் ஓநாய்களுடன் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது, அவற்றிடமிருந்து கருணையையும் எதிர்பார்க்க முடியாது. எங்களுக்காக உங்களது கணவரிடம் இறைஞ்சுங்கள்”, என்றான் அப்பு.

அப்பெண் தனது நரமாமிசக் கணவரிடம் இருந்து இவர்களைக் காப்பாற்ற எங்காவது ஒளித்துவைக்க வேண்டும் என்றெண்ணினாள். காலை வரை இவர்களை மறைத்து வைத்துவிட்டால் இவர்களைக் காப்பாற்றிவிடலாம் என்று கூறி அவர்களை வீட்டிற்குள் அழைத்தாள். தீமூட்டி அதில் குளிர்காயச் சொல்லி உடல்களையும் காய வைக்கக் கூறினாள் அப்பெண். தனது கணவருக்காக ஒரு முழு ஆட்டை வெட்டிச் சமைத்து வைக்க வெட்டிக் கொண்டிருந்தாள்.

அப்பு தன் சகோதரர்களுடன் குளிர் காயும் பொழுதே, யாரோ வரும் ஒலி கேட்டது. கதவினை மூன்று நான்கு முறை தட்ட, வந்திருப்பது அந்த நரமாமிச மனிதன் என்பதை அறிந்து கொண்டார்கள். அவசர அவசரமாக, அப்பெண் அப்புவையும் அவனது சகோதரர்களையும் ஒரு படுக்கைக்குள் மறைத்து வைத்துவிட்டு கதவினைத் திறக்க ஓடினாள். கதவைத் திறந்தவுடன், சாராயப்புட்டியுடன் நுழைந்த அவளது கணவன், “இரவு உணவு தயாரா?” என்று கேட்டவாறே உணவருந்தும் மேசைக்குச் சென்றான். ஆட்டுக்கறி சமைக்கப்படாமல பச்சையாக இருந்தது, ஆட்டுக்கறியின் மாமிச வாடை அவனது பசியை அதிகமாக்கியது.

மாமிச வாடையை மோப்பம் பிடித்துத் திரியும் பூனை போன்று தனது தலையை இடமும் வலமும் அசைத்து, “எனக்கு நல்ல மாமிச வாடை அடிக்கிறது” என்றான்.

ஒரு வேளை குழந்தைகள் இருப்பதை அறிந்து கொண்டானோ என்ற பயத்துடன் “என்ன மாமிச வாடை. இப்பொழுதுதான் ஒரு முழு ஆட்டை வெட்டி சமையல் செய்ய அடுப்படியில் வைத்திருக்கிறேன்” என்றாள் அவனது மனைவி.

“நான் திரும்பவம் கூறுகிறேன், எனக்கு நல்ல மாமிச வாடை வருகிறது” என்று கூறி தன் மனைவியை எரிக்கும் கண்களோடு கண்டான். “இந்த மாமிச வாடை வேறு, அது இங்கு எப்படி வருகிறது என்பது எனக்குத் தெரியவில்லை”, என்றான்.

பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவன் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து சட்டென்று படுக்கையறை நோக்கிச் சென்றான்.

“ஓ! நீ என்னை ஏமாற்ற நினைக்கிறாயா? நான் ஏன் உன்னையும் இவர்களோடு சேர்த்துச் சாப்பிடக்கூடாது? இது எனக்கு அத்தனை கடினமான காரியமாக இருக்கப் போவது இல்லை”, என்று தனது மனைவியைப் பார்த்துக் கூறினான்.

“இதுதான் உங்களுக்கான பரிசு. எனது நரமாமிச நண்பர்கள் மூவர் இன்றோ நாளையோ இங்கு வருவார்கள், அவர்களுக்கு உங்களை உணவாக்குகிறேன்”, என்றான் அந்த நரமாமிசம் உண்ணும் மனிதன்.

ஏழு குழந்தைகளையும் ஒருவர்பின் ஒருவராக படுக்கையின் மறைவிலிருந்து வெளியிலெடுத்தான். அனைத்துக் குழந்தைகளும் அவனது காலடியில் விழுந்து மன்றாடின. ஆனால் காட்டில்விட்ட தங்களது தந்தையினும் கொடியவனாக இருந்தான் அவன். சிறிதும் இரக்கமின்றி நடந்து கொண்டான். உங்கள் மீது இரக்கம் காட்ட முடியாது என்றான். அவர்களை உண்டே தீர்வது என்ற முடிவில் உறுதியாக இருந்தான். தனது மனைவியிடம், இவர்கள் அனைவரையும் நல்ல சுவையாக சமைத்து, அதன் மீது குழம்பு ஊற்றி வை என்றான்.

கூறியதோடு நில்லாமல் ஒரு பெரிய கத்தியை எடுத்துக் கொண்டு குழந்தைகளருகே வந்தான். கத்தியை அங்கிருந்த ஒரு உரைகல்லில் உரசிக் கூர்மையாக்கினான். அப்புவின் சகோதரர்கள் ஒருவனைக் கையிலேந்தினான்.

“என்ன செய்யப் போகிறீர்கள்? எதற்கு இத்தனை அவசரம்? அவர்களை நாளை நானே வெட்டி சமைக்கிறேன். உங்களது நண்பர்களை அழையுங்கள்”, என்றாள் அவனது மனைவி.

“உனது பிதற்றலை நிறுத்து, என் நண்பர்களுக்கு நல்ல மாமிசக் கறி வேண்டும்” என்றான்.

“ஆனால் ஏற்கனவே இங்கு நிறைய மாமிசம் உள்ளது, ஒரு இளங்கன்று, இரண்டு ஆடுகள், ஒரு பன்றி. இவை இன்றைக்கு உங்களது பசிக்குப் போதுமானதாக இருக்கும்”, என்றாள் அவனது மனைவி,.

“அதுவும் சரிதான். சரி இவர்களுக்கு நல்ல உணவளி, ஆனால் அவர்கள் சாப்பிட்டே குண்டாகிவிடக் கூடாது. சாப்பிட பின்பு அவர்களை இங்கு படுக்க வை” என்றான் அவன்.

அவனது மனைவிக்கு மிக்க மகிழ்ச்சி, அந்த ஏழு குழந்தைகளுக்கும் நல்ல உணவளித்தாள். ஆனால் அக்குழந்தைகள் பயத்தில் நடுங்கின. அதனால் சரியாக உண்ணவில்லை. நரமாமிச மனிதன் குடிக்க ஆரம்பித்தான். தனது நண்பர்களை நாளை விருந்துக்கு அழைக்கவிருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் இருந்தான். மகிழ்ச்சி மிகுதியால் அளவுக்கதிமாகவே போதை தலைக்கேறும் வரை குடித்தான். அதன் பிறகு தனது படுக்கையறைக்குச் சென்று படுத்தான்.

நரமாமிசனுக்கு ஏழு பெண் குழந்தைகளிருந்தனர். அவர்களும் பச்சிளங்குழந்தைகளே. ஒவ்வொரு குழந்தையும் சிவப்பு நிறத்தில், தலையில் மகுடம் சூடி, கருவிழிகளுடனும், கிளி மூக்குடனும், செவ்விதழ்களுடனும், நீண்ட கூர்மையான பற்கள் வாயின் வெளியில் தெரியும் வண்ணம் இருந்தனர். அவர்கள் நரமாமிசம் சாப்பிடும் அளவிற்குப் பயிற்சி பெறவில்லை. ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறு குழந்தைகளைக் கடித்துச் சுவைக்க ஒரு முறை தங்களது தந்தையால் பழக்கப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவ்வேழு பெண் குழந்தைகளும் ஒரே படுக்கையில் ஒன்றாகப் படுத்துறங்கினர். இந்த ஏழு பெண் குழந்தைகள் படுத்துறங்கும் படுக்கையும், அப்புவும் அவனது ஆறு சகோதரர்களும் உறங்கும் படுக்கையும் ஒரே மாதிரியானவையாக இருந்தன. ஏழு பெண் குழந்தைகளையும், ஏழு சகோதரர்களையும் படுக்கையில் படுக்கவைத்து உறங்குமாறு கூறிவிட்டு நரமாமிசனின் மனைவி தன் படுக்கைக்குச் சென்றுவிட்டான்.

அப்பு அவ்வேழு பெண் குழந்தைகளின் தலையில் இருக்கும் மகுடத்தினைக் கண்டுகொண்டான். அப்பு பயந்து கொண்டே இருந்தான், ஒரு வேளை நடுநிசியில் எழுந்து நரமாமிசன் தங்களைக் கொன்று உண்டுவிட்டாள் என்ன செய்வது என்றஞ்சினான். அப்பு நடுநிசிக்கு முன்னரே எழுந்து கொண்டான். தனது சகோதரர்கள் அணிந்திருந்த குல்லாவை எடுத்துக் கொண்டு மெதுவாக பூனை போல் நடந்து, நரமாமிசனின் பெண் குழந்தைகள் இருந்த அறைக்குச் சென்றான். அக்குழந்தைகளின் மகுடத்தினை மெதுவாகக் கழற்றிவிட்டுத் தான் கொண்டு வந்திருந்த குல்லாக்களை அவர்களுக்கு அணிவித்துவிட்டான். மகுடங்கள் அனைத்தினையும் தனக்கும் தனது சகோதரர்களின் தலையிலும் அணிவித்துவிட்டுத் தூங்கிவிட்டான். ஒருவேளை, நரமாமிசன் விழித்துக் கொண்டால் கூட தங்களைக் கொல்லாமல், அவனது குழந்தைகளைத்தான் கொல்வான் என்று கணக்கிட்டான்.

அப்பு எண்ணியது போலவே, நரமாமிசன் நடுராத்திரியில் எழுந்து கொண்டான், எதற்காக நாளை வரை காத்திருக்க வேண்டும், இப்பொழுதே அவ்வேழு பாலகர்களையும் கொல்ல வேண்டும் என்று கூறி தனது படுக்கையிலிருந்து தாவிக் குதித்தான். ஒரு பெரிய கத்தியை எடுத்துக் கொண்டு பாலகர்கள் இருந்த அறைக்குச் சென்றான்.

“அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறேன், அந்த ஏழு குட்டி குறும்பர்காளும் என்ன செய்தாலும் கவலையில்லை, அவர்களைக் கொல்வது தவிர்த்து இப்பொழுது வேறெந்த வேலையும் இல்லை”, என்று கூறியவாறே அவர்கள் அறையை அடைந்தான்.

அவர்கள் அடையை அடையும் பொழுது அப்பு விழித்துக் கொண்டான். அவனது சகோதரர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். அப்பு மட்டும் பயத்துடனே படுத்திருந்தான். நரமாமிசன் அப்புவின் அறைக்கு வந்ததும் அவனது இதயம் தாறுமாறாய்த் துடித்தது. அவனது தலையிலிருக்கும் மகுடத்தினையும் தனது சகோதரர்களின் தலையிலிருக்கும் மகுடங்களையும் ஒருமுறை ஓரக்கண்ணால் சரி பார்த்துக் கொண்டான்.

நரமாமிசன் வந்து மகுடங்களைப் பார்த்தான். “என்ன ஒரு அருமையான மகுடங்கள். நான் இவற்றை இன்னும் அழகாக அற்புதமாகச் செய்திருக்க வேண்டும். எனக்குப் போதை அதிகமாகிவிட்டது. அதனால்தான் படுக்கையறை மாறிவந்துவிட்டேன்”, என்று புலம்பியவாறே, தனது மகள்கள் உறங்கும் அறை நோக்கிச் சென்றான்.

அங்கே அப்புவின் சகோதரர்களுடைய குல்லாவை அணிந்தவாறு அவனது மகள்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

“ஓ! இங்குதான் சுகமாகத் தூங்குக் கொண்டிருக்கிறீர்களா எனதருமை ருசியான உணவுகளே? உங்கள் கதையை முடிக்கிறேன்” என்று கூறி முடித்த மறுகணம் அவனது கத்தியால் அனைத்து மகள்களையும் ஒரே வெட்டால் கொலை செய்தான்.

நரமாமிசனின் அலறல் சத்தம் கேட்டதும், ஒரு போர்வைக்குள் அப்பு தனது சகோதரர்களை ஒளியுமாறு கூறி தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு கூறினான். திருட்டுத்தனமாக அன்னம் போல் நடந்து, பூனை போன்று மதிலேறி அங்கிருந்து ஏழ்வரும் தப்பிச் சென்றனர். அவ்விரவு முழுவதும் தலைதெறிக்க ஓடினர். எங்கு ஓடுகிறோம் எதற்கு ஓடுகிறோம் எத்திசைக்குச் செல்கிறோம் என்று தெரியாமல் ஏழ்வரும் ஓடினர்.

மறுநாள் அதிகாலையில் எழுந்த நரமாமிசன் தனது மனைவியை அழைத்து, “மேல்மாடிக்குச் சென்று நேற்று நமக்கு விருந்தாக வந்த அந்த ஏழு குட்டி குழந்தைகளையும் (உணவாய்) அலங்காரம் செய்து எடுத்து வா”, என்று கட்டளையிட்டான். கணவரது பேச்சுக்கு மறுப்பேதும் கூறாமல் மேல்மாடிக்குப் படியேறினாள் அவனது மனைவி. படியேறும் பொழுதே அவர்களை எப்படி அலங்கரிப்பது என்பதைச் சிந்தித்தவாறு சென்றாள். அவள் அவர்களுக்கு அழகான ஆடை அணிவித்து அலங்காரமாகக் கூட்டி வரவேண்டும் என்றே எண்ணினாள். மேல்மாடிக்குச் சென்றதும் தனது ஏழு மகள்களும் இறந்து கிடப்பது கண்டு மூர்ச்சையடைந்தாள்.

அப்படியே மயங்கி விழுந்தவள் வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. தனது மனைவி ஏன் இத்தனை நேரம் எடுத்துக் கொள்கிறாள் அவர்களைச் சமைத்து அலங்காரம் செய்ய என்று சந்தேகம் கொண்டு அவனும் மேல்மாடிக்குச் சென்றான். அவனுக்கும் அவனது மகள்களின் நிலைகண்டு தலை சுற்றியது.

“ஓ! நான் என்ன செய்துவிட்டேன்? நான் செய்த பாவத்திற்கு இத்தனை விரைவில் எனக்குத் தண்டனை கிடைக்க வேண்டுமா?” என்று அழுதான்.

அவனது மனைவியின் முகத்தில் நீர் தெளித்து அவளை எழுப்பி, அவளது முகத்தருகில் சென்று, “எனது காலணியை எடுத்துவா, நான் அந்த ஏழ்வரையும் உடனே பிடித்து வருகிறேன்”, என்று கோபத்தோடு கூறினான். அக்காலணியைப் பயன்படுத்தி ஒரு அடி எடுத்து வைத்தால், ஒரு மைல் தூரம் செல்ல முடியும்.

அவன் காட்டுப்பகுதியிலிருந்து கிளம்பி அருகிலிருந்த கிராமம் முழுவதும் தேடினான். அனைத்துத் திசைகளிலும் தேடினான். அவனது ஒரே தாவலில் ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்குத் தாவினான். ஒரே பாய்ச்சலில் ஒரு நதியினைக் கடந்தான். இறுதியாக அந்தக் குழந்தைகள் வசித்த வீட்டருகே வந்தான். அந்த வீட்டிற்கும் அவனுக்கும் நூறடிதான் தூரம் இருந்தது. அப்பு அவனது வீட்டருகே இருந்த ஒரு பாறை அருகே தனது சகோதரர்களை மறைத்து வைத்திருந்தான்.

மிகதூரம் கடந்து வந்த பயணக் கலைப்பால் அவன் ஓய்வெடுக்க எண்ணினான். அப்பு மறைந்திருந்த பாறையருகேதான் நரமாமிசனும் வந்தமர்ந்தான். அவனது கலைப்பாலும் அவனுக்கு அதிக பசி எடுத்ததாலும், அப்படியே தூங்கிவிட்டான், சிறிது நேரத்திற்கெல்லாம் படுத்துறங்க ஆரம்பித்தான். பயங்கரமாக குறட்டையும் விட்டான். அவனது குறட்டைச் சத்தம் கேட்ட குழந்தைகள் பயந்தனர். அவனது குறட்டையை விட அவனது கையிலிருந்த கத்தியைக் கண்டுதான் அதிகமாகப் பயம் கொண்டனர். அந்தக் கத்தியால் தங்களைக் கொன்றுவிடுவான் என்றஞ்சினர். அப்புவும் அவனது சகோதரர்கள் போன்றே பயந்திருந்தான். அப்பு தன் சகோதரர்களிடம், “இவன் தூங்கியதும் உடனே ஒரே ஓட்டமாக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்” என்றான். அவன் தூங்கியதும், அப்பு கூறியவாறே ஒரே ஓட்டமாக அவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

அப்பு மட்டும் மெதுவாக நரமாமிசன் அருகே சென்று அவனது காலணியை மெதுவாக கழற்றித் தனது கால்களில் அணிந்து கொண்டான். அவனது கால்களுக்கு அது மிகப் பெரியதாக இருந்தது. ஆனால் அந்தக் காலணிக்கு ஒரு சிறப்பு உண்டு, யார் அணிகிறார்களோ அவர்களது கால் அளவிற்கு ஏற்றவாறு அது மாறிக் கொள்ளும். அதனால் சிறிது நொடியில் அப்புவின் காலிற்கு ஏற்றவாறு காலணி மாறி அவனது காலிற்கே தனித்துவமாகத் தயாரித்த மாதிரி இருந்தது. அப்பு ஒரே தாவலில் நரமாமிசனின் வீட்டிற்குச் சென்றான். அங்கே நரமாமிசனின் மனைவி தன் குழந்தைகள் இறந்த துக்கத்தில் அழுது கொண்டிருந்தாள்.

“உங்கள் கணவர் பெரும் ஆபத்தில் இருக்கிறார். உங்கள் கணவரை ஒரு திருடர்கள் கூட்டம் கடத்திச் சென்றுவிட்டது. அந்தத் திருட்டுக் கூட்டம் உங்களிடம் இருக்கும் தங்க வெள்ளி நகைகளைத் தரவில்லையென்றால் உங்கள் கணவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்காள். அதைக் கேட்ட மறுகணம், உங்களது கணவர் என்னிடம் அவரைக் காப்பாற்றுமாறு கெஞ்சினார். அவரது நிலைமையை உங்களிடம் எடுத்துக் கூறி, உங்கள் வீட்டிலிருக்கும் அனைத்து நகை சொத்துக்களை வாங்கி வருமாறு கூறினார். சீக்கிரம் கொடுங்கள். இல்லையென்றால் இரக்கமின்றி அத்திருட்டுக் கூட்டம் உங்கள் கணவரைக் கொன்றுவிடுவார்கள். இது மிக மிக அவசரம் என்பதால் அவரது காலணியை எனக்குக் கொடுத்தார். அதைத்தான் எனது கால்களில் அணிந்திருக்கின்றேன். இதோ பாருங்கள். நான் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. உங்களுக்கு உங்களது கணவனைக் காப்பாற்றும் எண்ணம் இருந்தால் மட்டும் கொடுத்தனுப்புங்கள்”, என்றான் அப்பு.

பயந்து போன நரமாமிசனின் மனைவி, தனது வசமிருந்த அனைத்தையும் கொடுத்தனுப்பினாள், என்னதான் சிறு குழந்தைகளைக் கொன்று புசித்தாலும் எனது கணவர் மிக நல்லவர். அப்பு நரமாமிசனின் வீட்டிலிருந்த அனைத்து நகை பணங்களையும் சுருட்டிக் கொண்டு தனது தந்தை வீட்டிற்குச் சென்றான். அவன் கொண்டு வந்த சொத்துக்களைக் கண்டு அவனது வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

ஆனால் அப்பு திருடி வந்ததாகப் பலரும் குற்றம் சுமத்தினர். அவன் திருடியது தவறு என்று கூறினர். அப்பு தான் நரமாமிசனிடம் இருந்து எதுவும் திருடவில்லை தான் திருடியது அந்தக் காலணி மட்டும்தான், அக்காலணியை வேறு எதற்காகவும் பயன்படுத்தவில்லை, எனது சகோதரர்களைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் கொண்டுவர மட்டும் பயன்படுத்தினேன் என்றான். ஆனால் அவனைக் குற்றம் சாட்டிய அனைவரும் தனது தந்தையுடன் குடித்துக் கும்மாளமிட்டு தன் தந்தையின் சொத்துக்களைக் காலி செய்தவர்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து அப்பு நரமாமிசனின் காலணியைத் திருடினான் என்று கூறி நீதிமன்றத்திற்கு அனுப்பினர். அந்தக் காலணி பற்றி நீதிமன்றத்தில் அப்பு எடுத்துக் கூறினான். அவர்கள் தங்களுக்கு ஒரு ராணுவத்தினால் தொல்லை இருக்கிறது. அவர்கள் 200 மைல் தொலைவில் இருக்கிறார்கள். அவர்களை உன்னால் வெல்ல முடியமா என்று கேட்டனர். அப்பு நீதிமன்றத்திலிருந்து அரசனிடம் சென்றான். நான் விரும்பினால் அந்த ராணுவத்தினை அழித்த செய்தியை இன்று இரவில் கூறுவேன் என்று கூறினான்.

அரசன் அந்த ராணுவத்தினை அழித்தால் நிறைய பணம் தருகிறேன் என்றார். அப்பு அன்றிரவே அந்த ராணுவத்தினை அழித்த செய்தியோடு வந்தான். அப்பு அவன் விருப்பத்திற்கு அதிகமாகவே பணங்களை ஈட்டினான். அரசனும் தொல்லை கொடுத்த ராணுவத்தினை அழித்த காரணத்தினால் அதிக பணமளித்தான். பல காதலர்கள் தங்களது காதலர்களுக்கு தூது அனுப்ப அப்புவைப் பயன்படுத்தினர். அவனும் அக்காலணியைக் கொண்டு வெகு விரைவாக செய்தியைக் கொண்டு சேர்த்தான். அதனால் அவனுக்கு அதிக வருமானம் கொட்டியது. சில நேரங்களில் வணிகம் சார்ந்த செய்திகளுக்கும் தூதனுப்பிய காரணத்தால் அவனுக்கு அதிக சொத்துக்கள் கிடைத்தது. அந்த சொத்துக்களையெல்லாம் தனது தந்தைக்குக் கொடுத்தான். அவர்களது குடும்பமே ஆனந்தமாக இருந்தது. அவனது சகோதரர்களுக்கும் பல வீடுகளைக் கட்டிக் கொடுத்து அவர்களை ஆனந்தமாக வாழவைத்தான். எல்லாருக்கும் ஆனந்தம் அளித்துவிட்டு அவனும் வெற்றிகரமாக தனது வாழ்க்கையை வாழ்ந்தான்.

https://tamilkanithan.wordpress.com/2018/03/25/அப்புக்குட்டி-ஐரோப்பிய/

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.